-
யெகோவா தமக்கென அழகிய பெயரை ஏற்படுத்திக்கொள்கிறார்ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
14 முற்காலங்களில் யெகோவா தங்களுக்குச் செய்த காரியங்களுக்கு மதிப்புக்காட்ட யூதர்கள் தவறினர். ஆகவே, யெகோவா ஏன் அக்காரியங்களையெல்லாம் செய்தார் என்பதை இப்போது ஏசாயா அவர்களுக்கு நினைப்பூட்டுவது பொருத்தமானதே. ஏசாயா இவ்வாறு அறிவிக்கிறார்: “ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து அவருக்குப் புகழ்சாற்றுவேன்; ஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார்; தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார். ஏனெனில், “மெய்யாகவே அவர்கள் என் மக்கள், வஞ்சனை செய்யாத பிள்ளைகள்” என்று அவர் கூறியுள்ளார்; மேலும் அவர் அவர்களின் மீட்பர் ஆனார். அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; துன்பங்கள் அனைத்திலும் அவர்களின் மீட்பர் ஆனார்; தூதரோ வானதூதரோ அல்ல, அவரே நேரடியாக அவர்களை விடுவித்தார்; தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார்; பண்டைய நாள்கள் அனைத்திலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.”—ஏசாயா 63:7-9, பொ.மொ.
-
-
யெகோவா தமக்கென அழகிய பெயரை ஏற்படுத்திக்கொள்கிறார்ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
16 எகிப்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இஸ்ரவேலரை யெகோவா சீனாய் மலைக்கு கொண்டுவந்து இந்த வாக்குறுதியைக் கொடுத்தார்: “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; . . . நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.” (யாத்திராகமம் 19:5, 6) இந்த வாக்கை அளிக்கும்போது யெகோவா அவர்களை வஞ்சிப்பவராக இருந்தாரா? இல்லை, யெகோவா தம்மிடமே இப்படிச் சொல்லிக்கொண்டதாக ஏசாயா தெரிவிக்கிறார்: “மெய்யாகவே அவர்கள் என் மக்கள், வஞ்சனை செய்யாத பிள்ளைகள்.” “பேரரசருக்குரிய அதிகாரத்தை பெற்றிருப்பதாலோ அல்லது முன்னறியும் திறமை இருப்பதாலோ ‘மெய்யாகவே’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை: அன்பினால் விளைந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமே அதற்குக் காரணம்” என ஒரு அறிஞர் கருத்து தெரிவிக்கிறார். ஆம், தம்முடைய ஜனங்கள் முன்னேற வேண்டும் என்ற உள்ளப்பூர்வமான விருப்பத்தாலேயே யெகோவா நேர்மையோடு தம் உடன்படிக்கையை செய்தார். அவர்கள் அடிக்கடி தவறுகிறவர்கள் என்பதை அறிந்திருந்தபோதிலும் அவர்கள்மீது நம்பிக்கை வைத்தார். தம் வணக்கத்தாரிடம் இப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கும் கடவுளை வணங்குவது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! அதேபோல் இன்று மூப்பர்கள், கடவுளுடைய ஜனங்களுக்கு அடிப்படையில் இருக்கும் நற்குணத்தில் நம்பிக்கை வைக்கும்போது, தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருப்போரை அதிகம் பலப்படுத்துகின்றனர்.—2 தெசலோனிக்கேயர் 3:4; எபிரெயர் 6:9, 10.
-