-
மேசியாவின் ஆட்சி—இரட்சிப்பையும் மகிழ்ச்சியையும் அருளும் ஆட்சிஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
-
-
4 ஏசாயாவின் நாட்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, இஸ்ரவேலில் மேசியா தோன்றுவார் என பைபிளின் மற்ற எபிரெய எழுத்தாளர்கள் முன்னறிவித்தார்கள். (ஆதியாகமம் 49:10; உபாகமம் 18:18; சங்கீதம் 118:22, 26) இப்போது யெகோவா, தாம் அனுப்பப்போகும் அந்த உண்மையான தலைவரைப் பற்றி ஏசாயாவின் மூலம் இன்னும் பல விவரங்களை தருகிறார். ஏசாயா எழுதுவதாவது: “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.” (ஏசாயா 11:1; ஒப்பிடுக: சங்கீதம் 132:11, 12ஆ.) “துளிர்,” “கிளை” ஆகிய இரண்டு வார்த்தைகளுமே, ஈசாயின் வம்சத்தில் மேசியா தோன்றுவார் என சுட்டிக்காட்டுகின்றன. இஸ்ரவேலின் ராஜாவாக தைலத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட ஈசாயின் குமாரனான தாவீதின் வம்சத்தில் மேசியா தோன்றவிருந்தார். (1 சாமுவேல் 16:13; எரேமியா 23:5; வெளிப்படுத்துதல் 22:16) தாவீதின் வம்சத்தைச் சேர்ந்த உண்மையான மேசியா வரும் காலமே, “கிளை” செழித்து நன்கு கனிதரப்போகும் காலமாகும்.
5 இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா. இயேசு “நசரேயன்” என அழைக்கப்பட்டது, தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தபடியே நிறைவேறியது என சுவிசேஷ எழுத்தாளர் மத்தேயு குறிப்பிட்டார். அவர் ஏசாயா 11:1-ஐ மனதில் கொண்டே அவ்வாறு குறிப்பிட்டார். ஏனெனில், நசரேயன் என்ற வார்த்தை, ஏசாயா 11:1-ல் “கிளை” என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையோடு சம்பந்தப்பட்டதாகும்.b இயேசு நாசரேத்து ஊரில் வளர்க்கப்பட்டதால் நசரேயன் என அழைக்கப்பட்டார்.—மத்தேயு 2:23, NW அடிக்குறிப்பு; லூக்கா 2:39, 40.
-
-
மேசியாவின் ஆட்சி—இரட்சிப்பையும் மகிழ்ச்சியையும் அருளும் ஆட்சிஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
-
-
b “கிளை” என்பதற்கான எபிரெய வார்த்தை நெட்ஸர் (ne’tser) என்பதாகும். “நசரேயன்” என்பதற்கான வார்த்தை நாட்ஸ்ரை (Nots·riʹ) என்பதாகும்.
-