உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சமாதானம்—அதன் மெய்மை
    காவற்கோபுரம்—1991 | மே 1
    • “[2] கடைசி நாட்களில் கர்த்தருடைய (யெகோவாவுடைய, NW) ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். [3] திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் (யெகோவாவின், NW) பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். [4] அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”

      முதலாவது, நாம் நம் சிருஷ்டிகராகிய யெகோவாவுக்கு “அவருடைய வழிகளைப்” பற்றி நமக்கு போதிக்க அதிகாரம் இருக்கிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும். ஏசாயா பின்னால் பதிவு செய்தபடி ‘அவருடைய வழிகள் நம் வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவை.’ (ஏசாயா 55:9) அநேக ஜனங்கள், விசேஷமாக சுய-முக்கியத்துவம் வாய்ந்த உலக தலைவர்கள், இதை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு கடினமான காரியமாகக் காண்கின்றனர். அவர்களுடைய சொந்த வழிகள் மட்டும் அவர்களுடைய கண்களுக்கு சரியானதாகத் தோன்றுகின்றன. இருந்தாலும், அவர்களுடைய வழிகள் உலக சமாதானத்துக்கும், போராயுதக் குறைப்பிற்கும் வழிநடத்தவில்லையென்ற உண்மை, அப்பேர்ப்பட்ட போக்கை தொடர்ந்து நாடுவது வீணானது என்பதை நிச்சயமாய் காட்டுகிறது.

      இரண்டாவதாக, கடவுளுடைய சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்ற தனிப்பட்ட நபர்களின் ஊக்கமான விருப்பம் தேவைப்படுவதை கவனியுங்கள்: “நாம் அவர் பாதைகளில் நடப்போம்.” அந்த அடிப்படையில் மட்டுமே பூகோள ரீதியில் பட்டயங்கள் மண்வெட்டிகளாகவும், ஈட்டிகள் அரிவாள்களாகவும் அடிக்கப்படும். அப்பேர்ப்பட்ட வாஞ்சிக்கப்பட்ட இலக்கை எவ்வாறு அடைய முடியும்?

      தெய்வீக போதனை

      அநேக ஜனங்களிடம் பைபிளின் ஒரு பிரதி இருக்கிறது, அது யெகோவா தேவனின் போதனைகள் அடங்கிய புத்தகம், அதை வெறுமென வைத்திருப்பதைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. யெகோவாவின் சட்டமும் வார்த்தைகளும் “எருசலேமிலிருந்து” வெளிப்படுகின்றன என்று ஏசாயா சொல்கிறார். அதனுடைய அர்த்தம் என்ன? ஏசாயாவின் நாட்களில், அந்தச் சொல்லர்த்தமான நகரம் எல்லா விசுவாசமுள்ள இஸ்ரவேலர்களும் நோக்கியிருந்த ராஜரீக அதிகாரத்தின் ஊற்றுமூலமாய் இருந்தது. (ஏசாயா 60:14) பின்னர், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களின் நாட்களில், இன்னும் எருசலேம் அந்நகரத்திலிருந்த கிறிஸ்தவ ஆளும் குழுவினிடமிருந்து வந்த போதனைகளுக்கு மையமாக இருந்தது.—அப்போஸ்தலர் 15:2; 16:4.

  • சமாதானம்—அதன் மெய்மை
    காவற்கோபுரம்—1991 | மே 1
    • “கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்” என்று தீர்க்கதரிசி சொல்கிறார். பூர்வ காலங்களில் சில மலைகளும், குன்றுகளும் விக்கிரக வணக்கத்திற்கு இடங்களாகவும், பொய் கடவுட்களின் புகலிடங்களாகவும் இருந்தன. கடல் மட்டத்திற்கு சுமார் 2,500 அடிகளுக்கு மேல் உயரமான சீயோன் மலையின் (எருசலேம்) மேல் தாவீது ராஜா தான் நிறுவின கூடாரத்திற்கு பரிசுத்த பெட்டியைக் கொண்டு வந்தபோது, தெய்வீக வழிநடத்துதலின் பேரில் அவர் செயல்பட்டார் என்பது தெளிவாயிருந்தது. பின்பு, மோரியா மலையின் மேல் யெகோவாவின் பெரிய ஆலயம் கட்டப்பட்டபோது, “சீயோன்” என்ற பதம் ஆலய இடத்தையும் சேர்த்துக்கொண்டது, ஆகையால் ஆலயம், சுற்றுப்புறத்தில் இருந்த புறமத இடங்களின் உயரத்தைவிட ஓர் உயர்நிலையை அனுபவித்தது. எருசலேமே அவருடைய “பரிசுத்த பர்வதம்” என்றும் அழைக்கப்பட்டது; ஆக, யெகோவாவின் வணக்கம் ஓர் உயர்வான நிலையில் வைக்கப்பட்டது.—ஏசாயா 8:18; 66:20.

      ஆகையால் இன்று, யெகோவா தேவனின் வணக்கம் ஓர் அடையாளப்பூர்வமான மலையைப் போல் மிகவும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடைய முக்கியத்துவத்தை எல்லாரும் காண்பதற்காக. ஏனென்றால் எந்த ஒரு மதமும் செய்யமுடியாத ஏதோவொன்றை அது செய்திருக்கிறது. அது என்ன? அது யெகோவாவை வணங்கும் எல்லாரையும் ஒற்றுமைப்படுத்தியிருக்கிறது, அவர்கள் சந்தோஷமாக தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்திருக்கின்றனர், இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. தேசீய மற்றும் இன பிரிவினைகள் அவர்களை இனிமேலும் பிரித்து வைப்பதில்லை. உலகின் தேசங்கள் முழுவதிலும் சிதறி இருந்தாலும், அவர்கள் ஓர் ஐக்கியப்பட்ட ஜனமாக, ஒரு சகோதரத்துவமாக வாழ்கின்றனர்.—சங்கீதம் 33:12.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்