வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கு தயாரிக்க தேவையான தகவல்கள்
மே 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 32-34
“இஸ்ரவேல் தேசம் மறுபடியும் பழைய நிலைமைக்கு திரும்பும் என்பதற்கான அடையாளம்”
(எரேமியா 32:6-9) அதற்கு எரேமியா இப்படிச் சொன்னார்: “யெகோவா என்னிடம், ‘உன் பெரியப்பா சல்லூமின் மகனாகிய அனாமெயேல் உன்னிடம் வந்து, “ஆனதோத்தில் இருக்கிற என் நிலத்தை நீ வாங்கிக்கொள். அதை மீட்கும் உரிமை உனக்குத்தான் முதலில் இருக்கிறது” என்று சொல்வான்’ என்றார்.” யெகோவா சொன்னபடியே என் பெரியப்பா மகனாகிய அனாமெயேல் ‘காவலர் முற்றத்தில்’ இருந்த என்னிடம் வந்து, “பென்யமீன் தேசத்திலே ஆனதோத் ஊரில் இருக்கிற என் நிலத்தைத் தயவுசெய்து வாங்கிக்கொள். அதை வாங்குவதற்கும் மீட்பதற்கும் உனக்குத்தான் உரிமை இருக்கிறது. நீயே அதை வாங்கிக்கொள்” என்று சொன்னார். யெகோவாவின் விருப்பப்படிதான் இது நடக்கிறது என்று உடனடியாகப் புரிந்துகொண்டேன். அதனால், ஆனதோத்தில் இருந்த அந்த நிலத்தை என் பெரியப்பாவின் மகனாகிய அனாமெயேலிடமிருந்து வாங்கிக்கொண்டேன். பதினேழு சேக்கல் வெள்ளியை நான் அவரிடம் எடைபோட்டுக் கொடுத்தேன்.
(எரேமியா 32:15) ஏனென்றால், ‘இந்தத் தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத் தோட்டங்களும் மறுபடியும் விலைக்கு வாங்கப்படும்’ என்று இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்கிறார்” என்றேன்.
it-1-E பக். 105 பாரா 2
ஆனதோத்
எரேமியா ஆனதோத் நகரைச் சேர்ந்தவர்; ஆனால், அவருடைய சொந்த ஜனங்களே அவரை ‘ஒரு தீர்க்கதரிசியாக’ மதிக்கவில்லை. யெகோவா சொன்ன சத்திய வார்த்தைகளைப் பற்றிப் பேசியதற்காக அவரைக் கொல்லப்போவதாக மிரட்டினார்கள். (எரே 1:1; 11:21-23; 29:27) இதன் காரணமாக, அந்த நகரத்தை அழிக்கப்போவதாக யெகோவா முன்னறிவித்தார்; பாபிலோன் எருசலேம்மீது படையெடுத்து வந்த சமயத்தில் அவர் முன்னறிவித்தபடியே நடந்தது. (எரே 11:21-23) எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்னர் எரேமியா ஒரு காரியத்தைச் செய்தார்; ஆனதோத்தில் இருந்த தன் பெரியப்பா மகனின் நிலத்தை மீட்கும் உரிமை தனக்கு இருந்ததால் அதை விலைகொடுத்து வாங்கிக்கொண்டார்; பாபிலோன் சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேலர்கள் நாடு திரும்புவார்கள் என்பதற்கு அடையாளமாக அப்படிச் செய்தார். (எரே 32:7-9) நாடு திரும்பிய முதல் தொகுதியில் செருபாபேலும் ஆனதோத் நகரைச் சேர்ந்த 128 பேரும் இருந்தார்கள்; இஸ்ரவேலர்கள் திரும்பக் குடியேறிய ஊர்களில் ஆனதோத்தும் ஒன்று; இப்படி, எரேமியா சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது.—எஸ்றா 2:23; நெ 7:27; 11:32.
(எரேமியா 33:7, 8) யூதாவிலிருந்தும் இஸ்ரவேலிலிருந்தும் சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன். ஆரம்பத்தில் அவர்களை ஆசீர்வதித்தது போலவே மறுபடியும் ஆசீர்வதிப்பேன். எனக்கு எதிராக அவர்கள் செய்த எல்லா பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்து அவர்களைத் தூய்மையாக்குவேன்.
jr-E பக். 152 பாரா. 22-23
“என்னைப் பற்றி எவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான்!”
22 யாராவது ஒருவர் யோசிக்காமல் தன் வார்த்தையாலோ செயலாலோ உங்கள் மனதைப் புண்படுத்தினால், நீங்கள் யெகோவாவைப் போல் நடந்துகொள்வீர்களா? அவர் பூர்வகால யூதர்களைப் பற்றிச் சொல்லும்போது, அவர்களில் யாரையெல்லாம் மன்னித்தாரோ அவர்களையெல்லாம் ‘தூய்மையாக்குவதாக’ சொன்னார். (எரேமியா 33:8-ஐ வாசியுங்கள்.) எந்த விதத்தில் தூய்மையாக்குவார்? அவர்கள் செய்த தவறைத் தன் பின்னால் தூக்கியெறிந்துவிட்டு, திரும்பவும் தனக்குச் சேவை செய்கிற வாய்ப்பைக் கொடுத்து அவர்களைத் தூய்மையாக்குவார். ஆனால், கடவுளுடைய மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட ஒருவர் வழிவழியாக வந்த பாவத்திலிருந்து தூய்மையாக்கப்படுவதில்லை, அவர் பரிபூரணமானவராக ஆகிவிடுவதில்லை. என்றாலும், மனிதர்களைத் தூய்மையாக்குவதாகக் கடவுள் சொன்ன வார்த்தைகள் நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றன. மற்றவர்கள் செய்கிற தவறுகளை நமக்குப் பின்னால் தூக்கியெறிந்துவிட நாம் கடின முயற்சியெடுக்க வேண்டும்; அப்படிச் செய்வது, அந்த நபரைப் பற்றி நம் மனதில் இருக்கிற கண்ணோட்டத்தைத் தூய்மைப்படுத்துவதற்குச் சமமாக இருக்கும். இதை எப்படிப் புரிந்துகொள்வது?
23 உங்கள் முன்னோர்களின் சொத்தாக இருக்கிற விலைமதிப்புமிக்க ஒரு நகை உங்களுக்கு அன்பளிப்பாகக் கிடைக்கிறதென்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அது ஒருவேளை மங்கிவிட்டால் அல்லது அதில் அழுக்கு படிந்துவிட்டால், அதைத் தூக்கியெறிந்துவிடுவீர்களா? நிச்சயம் மாட்டீர்கள். அதிலுள்ள அழுக்கையோ கறையையோ நீக்குவதற்கு அதைக் கவனமாகச் சுத்தப்படுத்தி வைப்பீர்கள். சூரிய ஒளியில் அது தகதகவென ஜொலிக்கும் அழகைப் பார்த்து ரசிக்க விரும்புவீர்கள். அதுபோலவே, உங்களைப் புண்படுத்திய சகோதரனை அல்லது சகோதரியைப் பற்றி உங்கள் மனதில் தேங்கியிருக்கிற வன்மத்தையோ கோபத்தையோ நீக்கிப்போட நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அவர்களுடைய கசப்பான வார்த்தைகளை அல்லது வேதனையளித்த செயல்களை மனதில் அசைபோட்டுக்கொண்டே இருக்காதீர்கள், அவற்றை அகற்றிப்போட போராடுங்கள். அவற்றை உங்களுக்குப் பின்னால் தூக்கியெறிந்தீர்கள் என்றால், நீங்கள் மன்னித்த நபரைப் பற்றி உங்கள் மனதில் படிந்திருக்கிற உருவத்தையும் நினைவுகளையும் தூய்மைப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். அவரைப் பற்றிய மோசமான எண்ணங்களை உங்கள் இதயத்திலிருந்து அழித்துப்போட்டு சுத்தப்படுத்தினீர்கள் என்றால், அவரோடு திரும்பவும் நெருங்கிய நட்பை உங்களால் அனுபவிக்க முடியும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(எரேமியா 33:15) அந்தச் சமயத்தில், தாவீதின் வம்சத்தில் ஒரு நீதியான தளிரை துளிர்க்க வைப்பேன். அவர் நியாயத்தோடும் நீதியோடும் ஜனங்களை ஆட்சி செய்வார்.
jr-E பக். 173 பாரா 10
புதிய ஒப்பந்தத்திலிருந்து நீங்கள் நன்மையடையலாம்
10 வரவிருந்த மேசியாவைப் பற்றி எரேமியா சொன்னபோது, தாவீதின் வம்சத்தில் வருகிற “ஒரு தளிர்” என்று அவரை வர்ணித்தார். அது பொருத்தமானதே. எரேமியா ஒரு தீர்க்கதரிசியாகச் சேவை செய்துகொண்டிருந்த சமயத்தில், தாவீது ராஜாவின் குடும்ப மரம் (வம்சாவளி) முறிக்கப்பட்டது. ஆனாலும், அதனுடைய அடிமரம் காய்ந்துபோகவில்லை. கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, தாவீது ராஜாவின் வம்சத்தில் இயேசு பிறந்தார். “யெகோவா நம் நீதிக்குக் காரணமானவர்” என்ற பெயரை அவருக்கு நன்றாகவே பொருத்த முடியும்; நீதி என்ற குணத்திற்குக் கடவுள் கொடுக்கிற முக்கியத்துவத்தை அந்தப் பெயர் சிறப்பித்துக் காட்டுகிறது. (எரேமியா 23:5, 6-ஐ வாசியுங்கள்.) யெகோவா தன்னுடைய ஒரே மகனை பூமியில் கஷ்டங்களை அனுபவித்து, இறந்துபோக அனுமதித்தார். அதன்பின்னர்தான், மன்னிப்பு வழங்குவதற்காக தாவீதின் “தளிர்” கொடுத்த மீட்புப் பலியின் மதிப்பைத் தன்னுடைய நீதிக்கு இசைவாக யெகோவாவினால் பொருத்த முடிந்தது. (எரே 33:15) இதன் விளைவாக, மனிதர்களில் சிலர் ‘நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு,’ வாழ்வு பெறத் தகுதியுள்ளவர்களானார்கள்; புதிய ஒப்பந்தத்தில் உட்பட்டிருந்த அவர்கள் கடவுளுடைய சக்தியால் பரலோக வாழ்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்த ஒப்பந்தத்தில் நேரடியாக உட்பட்டிராத மற்றவர்களும் அதிலிருந்து நன்மையடைய முடியும், நன்மையடைந்து வருகிறார்கள்; இது, நீதி என்ற குணத்திற்குக் கடவுள் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற விஷயத்துக்குக் கூடுதலான அத்தாட்சியை அளிக்கிறது.—ரோ. 5:18.
மே 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 35-38
“எபெத்மெலேக்—தைரியமாகவும் அன்பாகவும் நடந்துகொண்டார்.”
(எரேமியா 38:4-6) உடனே, அந்த அதிகாரிகள் ராஜாவிடம் போய், “இந்த மனுஷனைத் தயவுசெய்து கொன்றுவிடுங்கள். இந்த நகரத்தில் மீதியிருக்கிற போர்வீரர்களிடமும் ஜனங்களிடமும் இவன் இப்படியெல்லாம் பேசி அவர்களைப் பயந்து நடுங்க வைக்கிறான். ஜனங்கள் நல்லபடியாக வாழ வேண்டுமென்று நினைக்காமல் அவர்கள் அழிந்துபோக வேண்டுமென்று நினைக்கிறான்” என்று சொன்னார்கள். அதற்கு ராஜா, “அவன் உங்கள் கையில் இருக்கிறான்! ராஜாவால் உங்களைத் தடுத்து நிறுத்தவா முடியும்?” என்று சொன்னார். அதனால் அவர்கள் எரேமியாவைக் கயிற்றில் கட்டி, ராஜாவின் மகனாகிய மல்கீயாவின் கிணற்றுக்குள் இறக்கினார்கள். அந்தக் கிணறு ‘காவலர் முற்றத்தில்’ இருந்தது. அதில் தண்ணீரே இல்லை, வெறும் சேறுதான் இருந்தது. எரேமியா அதில் மூழ்க ஆரம்பித்தார்.
it-2-E பக். 1228 பாரா 3
சிதேக்கியா
சிதேக்கியா ரொம்பவே மன உறுதியற்ற ராஜாவாக இருந்தார். இது நமக்கு எப்படித் தெரியும்? எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட எருசலேம்வாசிகளின் மனோதிடத்தைக் குலைக்கும் விதத்தில் எரேமியா பேசியதாக அதிகாரிகள் அவர்மீது குற்றம்சாட்டி, அவரைக் கொல்ல உத்தரவிடச் சொன்னபோது, “அவன் உங்கள் கையில் இருக்கிறான்! ராஜாவால் உங்களைத் தடுத்து நிறுத்தவா முடியும்?” என்று சிதேக்கியா கேட்டார். ஆனால் பிற்பாடு, எரேமியாவைக் காப்பாற்றும்படி எபெத்மெலேக் கேட்டுக்கொண்டபோது, அதற்கு அனுமதி அளித்தார், உதவிக்காக 30 ஆட்களைக் கூட்டிக்கொண்டுபோகும்படியும் உத்தரவிட்டார். பிற்பாடு, அவர் மறுபடியும் எரேமியாவைத் தனியாகச் சந்தித்துப் பேசினார். அவரைக் கொல்லப்போவதில்லை என்றும், அவரைக் கொல்லத் துடிப்பவர்களின் கையில் அவரை விட்டுவிடப்போவதில்லை என்றும் அவருக்கு உறுதியளித்தார். ஆனால், கல்தேயர்களிடம் மாட்டிக்கொண்ட யூதர்களிடமிருந்து பயங்கர எதிர்ப்பு வருமென்று பயந்தார். அதனால், பாபிலோனிய அதிகாரிகளிடம் சரணடைந்துவிடும்படி கடவுளுடைய தூண்டுதலால் எரேமியா சொன்ன ஆலோசனைக்குச் செவிசாய்க்காமல் போய்விட்டார். அதுமட்டுமல்ல, தான் எரேமியாவைத் தனியாகச் சந்தித்துப் பேசிய விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாமென எரேமியாவைக் கேட்டுக்கொண்டார். அவருடைய பயந்த சுபாவத்திற்கு இதுவொரு அத்தாட்சியாக இருக்கிறது.—எரே 38:1-28.
w12-E 5/1 பக். 31 பாரா. 2-3
தன்னுடைய வணக்கத்தார் எல்லாருக்கும் பலனளிக்கிறவர்
எபெத்மெலேக் யார்? அவர் யூதா ராஜாவாகிய சிதேக்கியாவின் அரசவை அதிகாரியாக இருந்தார். விசுவாசதுரோகிகளாக ஆகியிருந்த யூதா கோத்திரத்தாருக்கு வரவிருந்த அழிவைப் பற்றி எச்சரிப்பதற்காகக் கடவுளால் அனுப்பப்பட்ட எரேமியா வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தார். கடவுள்பக்தி இல்லாத அதிகாரிகள் மத்தியில், அவர் கடவுள்பயமுள்ள அதிகாரியாக இருந்தார், எரேமியாமீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். தேசத் துரோகம் செய்ததாக பொல்லாத அதிகாரிகள் எரேமியாமீது பொய்க் குற்றம்சாட்டி, ஒரு பாழுங்கிணற்றுக்குள் அவரைப் போட்டு சாகடிக்கப் பார்த்தபோது, எபெத்மெலேக் தன்னுடைய நல்ல குணங்களைக் காட்ட வேண்டிய சூழ்நிலையை எதிர்ப்பட்டார். (எரேமியா 38:4-6) அவர் என்ன செய்தார்?
எபெத்மெலேக் தைரியமாகவும் உறுதியாகவும் செயல்பட்டார், மற்ற அதிகாரிகளிடமிருந்து எதிர்ப்பு வருமென்ற பயம் துளிகூட இல்லாமல் செயலில் இறங்கினார். பலருடைய முன்னிலையில் சிதேக்கியா ராஜாவிடம் பேசினார், எரேமியா அநியாயமாக நடத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தார். ராஜாவிடம், “இந்த ஆட்கள் படுபாவிகள்! எரேமியாவைக் கிணற்றில் தள்ளிவிட்டார்கள்!” என்று அந்தப் பொல்லாதவர்களைச் சுட்டிக்காட்டியபடி சொன்னார். (எரேமியா 38:9) எபெத்மெலேக்கின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது; 30 ஆட்களைக் கூட்டிக்கொண்டு போய் எரேமியாவைக் காப்பாற்றும்படி சிதேக்கியா கட்டளை கொடுத்தார், அவரும் அதன்படியே செய்தார்.
w12- E 5/1 பக். 31 பாரா 4
தன்னுடைய வணக்கத்தார் எல்லாருக்கும் பலனளிக்கிறவர்
அதன்பிறகு, எபெத்மெலேக் மற்றொரு அருமையான குணத்தை, அதாவது அன்பை, காட்டினார். “கிழிந்த துணிகளையும் பழைய துணிகளையும் எடுத்து வந்து, கிணற்றிலிருந்த எரேமியாவிடம் கயிறுகளினால் இறக்கினார்.” எதற்காக? கிணற்றிலிருந்து அவரை மேலே தூக்கும்போது, கயிறுகள் அவருடைய தோலை அறுத்துவிடாதபடி அவருடைய அக்குள்களில் வைத்துக்கொள்வதற்காக!—எரேமியா 38:11-13.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(எரேமியா 35:19) அதனால், “என் சன்னிதியில் சேவை செய்வதற்கு ரேகாபின் மகனாகிய யோனதாபின் வம்சம் எப்போதுமே இருக்கும்” என்று இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்கிறார்’ ” என்று சொன்னார்.
it-2-E பக். 759
ரேகாபியர்கள்
ரேகாபியர்கள் மரியாதைக்குரிய விதத்தில் கீழ்ப்படிதலைக் காட்டியது யெகோவாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. தங்களுடைய படைப்பாளரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போன யூதர்களுக்கு நேர்மாறாக ரேகாபியர்கள் தங்களுடைய மூதாதையின் கட்டளைக்கு இம்மிபிசகாமல் அப்படியே கீழ்ப்படிந்தார்கள். (எரே 35:12-16) அதனால், ரேகாபியர்களிடம் கடவுள், “என் சன்னிதியில் சேவை செய்வதற்கு ரேகாபின் மகனாகிய யோனதாபின் வம்சம் எப்போதுமே இருக்கும்” என்ற வாக்குறுதியைக் கொடுத்தார்.—எரே 35:19.
மே 15-21
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 39-43
“ஒவ்வொருவருடைய செயலுக்கு ஏற்றபடி யெகோவா தீர்ப்பு வழங்குவார்”
(எரேமியா 39:4-7) யூதாவின் ராஜா சிதேக்கியாவும் எல்லா வீரர்களும் அவர்களைப் பார்த்தபோது தப்பித்து ஓடினார்கள். ராத்திரியில் ராஜாவின் தோட்டத்து வழியாகப் போய், இரண்டு மதில்களுக்கு இடையிலிருந்த நுழைவாசலைத் தாண்டி, அரபா வழியாகத் தப்பித்து ஓடினார்கள். ஆனால், கல்தேயர்களின் வீரர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு போய், எரிகோவின் பாலைநிலத்திலே சிதேக்கியாவைப் பிடித்தார்கள். அவரை காமாத்திலிருந்த ரிப்லாவுக்குக் கொண்டுபோய் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் முன்னால் நிறுத்தினார்கள். ராஜா அவருக்குத் தண்டனை விதித்தான். அதோடு, ஆட்களை வைத்து சிதேக்கியாவின் கண் முன்பாகவே அவருடைய மகன்களை வெட்டிப்போட்டான். யூதாவின் முக்கியப் பிரமுகர்கள் எல்லாரையும்கூட வெட்டிக் கொன்றான். பின்பு சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
it-2-E பக். 1228 பாரா 4
சிதேக்கியா
எருசலேமின் வீழ்ச்சி: கடைசியாக, (கி.மு. 607), “சிதேக்கியா ஆட்சி செய்த 11-ஆம் வருஷம், நான்காம் மாதம், ஒன்பதாம் தேதியில்” எருசலேமின் மதில் உடைக்கப்பட்டது. ராத்திரி நேரத்தில் சிதேக்கியாவும் அவருடைய ஆட்களும் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். ஆனால், சிதேக்கியா எரிகோவின் பாலைநிலத்தில் பிடிபட்டு, ரிப்லாவில் இருந்த நேபுகாத்நேச்சாரிடம் கொண்டுபோகப்பட்டார். சிதேக்கியாவுடைய மகன்கள் அவருடைய கண் முன்னாலேயே வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அந்தச் சமயத்தில் சிதேக்கியாவுக்கு 32 வயதுதான் ஆகியிருந்தது; அதனால், அவருடைய மகன்களுக்கு அதிக வயது இருந்திருக்க வாய்ப்பில்லை. பிறகு, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். அங்கே, காவல் வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே அவர் இறந்துபோனார்.—2ரா 25:2-7; எரே 39:2-7; 44:30; 52:6-11; ஒப்பிடுங்கள்: எரே 24:8-10; எசே 12:11-16; 21:25-27.
(எரேமியா 40:1-6) காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான் எரேமியாவை ராமாவிலிருந்து விடுதலை செய்து அனுப்பிய பின்பு எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது. நேபுசராதான் எரேமியாவுக்குக் கைவிலங்குகள் மாட்டி அங்கே கொண்டுபோயிருந்தான். பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி பிடித்து வைக்கப்பட்ட எருசலேம் ஜனங்களோடும் யூதா ஜனங்களோடும் எரேமியா இருந்தார். அப்போது, காவலாளிகளின் தலைவன் எரேமியாவைத் தனியாகக் கூப்பிட்டு, “இந்த நகரத்துக்கு வந்திருக்கிற அழிவைப் பற்றி உன் கடவுளாகிய யெகோவா முன்பே சொல்லியிருந்தார். யெகோவா அதை அப்படியே நடத்திக் காட்டியிருக்கிறார். ஏனென்றால், நீங்கள் எல்லாரும் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தீர்கள், அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. அதனால்தான் உங்களுக்கு இந்தக் கதி வந்திருக்கிறது. இப்போது நான் உன்னுடைய கைவிலங்குகளைக் கழற்றி உன்னை விடுதலை செய்கிறேன். என்னோடு பாபிலோனுக்கு வர உனக்கு விருப்பம் இருந்தால் நீ வரலாம். உன்னை நான் கவனித்துக்கொள்கிறேன். உனக்கு அங்கே வர விருப்பம் இல்லையென்றால் வர வேண்டாம். இந்தத் தேசத்தில் எங்கு போக விரும்பினாலும் நீ போகலாம்” என்று சொன்னான். எரேமியா போகாமல் தயங்கிக்கொண்டே இருந்தபோது காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான் அவரிடம், “நீ சாப்பானின் மகனாகிய அகிக்காமின் மகன் கெதலியாவிடம் போய், அவரோடு இருக்கிற ஜனங்களுடன் தங்கு. ஏனென்றால், அவரை யூதாவின் நகரங்களுக்கு அதிகாரியாக பாபிலோன் ராஜா நியமித்திருக்கிறார். அங்கே போக விருப்பம் இல்லையென்றால் நீ வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம்” என்று சொன்னான். பின்பு, அவருக்கு உணவும் அன்பளிப்பும் கொடுத்து அனுப்பி வைத்தான். எரேமியா மிஸ்பாவிலிருந்த அகிக்காமின் மகன் கெதலியாவிடம் போனார். அங்கே இருந்த ஜனங்களோடு தங்கினார்.
w12- E 5/1 பக். 31 பாரா 5
தன்னுடைய வணக்கத்தார் எல்லாருக்கும் பலனளிக்கிறவர்
எபெத்மெலேக் செய்த நல்ல காரியத்தை யெகோவா பார்த்தார். அதற்கு அவர் பலனளித்தாரா? யூதாவின் அழிவு சீக்கிரத்தில் வரப்போவதாக எரேமியா மூலம் தெரிவித்த பிறகு, எபெத்மெலேக்கிடம் அவர் இப்படிச் சொன்னார்: “நான் உன்னைக் காப்பாற்றுவேன். நீ யாரைக் கண்டு பயப்படுகிறாயோ அவர்கள் கையில் உன்னைக் கொடுக்க மாட்டேன். . . . நான் கண்டிப்பாக உன்னைப் பாதுகாப்பேன். நீ . . . வாளுக்குப் பலியாக மாட்டாய். நான் உன் உயிரைக் காப்பாற்றுவேன்.” ஒரு அறிஞர் இந்த வசனங்களைப் பற்றிச் சொல்லும்போது, “ஐந்து முறை கொடுக்கப்பட்ட மீட்புக்கான உத்தரவாதம் இது” என்று குறிப்பிட்டார். எபெத்மெலேக்கைக் காப்பாற்றப்போவதாக யெகோவா ஏன் வாக்குக் கொடுத்தார்? “நீ என்மேல் நம்பிக்கை வைத்ததால்” என்று எபெத்மெலேக்கிடம் அவர் சொன்னார். (எரேமியா 39:16-18) எரேமியாவின் மேலிருந்த கரிசனையினால் மட்டுமல்ல, கடவுளாகிய தன் மேலிருந்த நம்பிக்கையினாலும் விசுவாசத்தினாலும்தான் எபெத்மெலேக் அப்படிச் செயல்பட்டார் என்பதை யெகோவா அறிந்திருந்தார்.
(எரேமியா 40:1-6) காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான் எரேமியாவை ராமாவிலிருந்து விடுதலை செய்து அனுப்பிய பின்பு எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது. நேபுசராதான் எரேமியாவுக்குக் கைவிலங்குகள் மாட்டி அங்கே கொண்டுபோயிருந்தான். பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி பிடித்து வைக்கப்பட்ட எருசலேம் ஜனங்களோடும் யூதா ஜனங்களோடும் எரேமியா இருந்தார். அப்போது, காவலாளிகளின் தலைவன் எரேமியாவைத் தனியாகக் கூப்பிட்டு, “இந்த நகரத்துக்கு வந்திருக்கிற அழிவைப் பற்றி உன் கடவுளாகிய யெகோவா முன்பே சொல்லியிருந்தார். யெகோவா அதை அப்படியே நடத்திக் காட்டியிருக்கிறார். ஏனென்றால், நீங்கள் எல்லாரும் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தீர்கள், அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. அதனால்தான் உங்களுக்கு இந்தக் கதி வந்திருக்கிறது. இப்போது நான் உன்னுடைய கைவிலங்குகளைக் கழற்றி உன்னை விடுதலை செய்கிறேன். என்னோடு பாபிலோனுக்கு வர உனக்கு விருப்பம் இருந்தால் நீ வரலாம். உன்னை நான் கவனித்துக்கொள்கிறேன். உனக்கு அங்கே வர விருப்பம் இல்லையென்றால் வர வேண்டாம். இந்தத் தேசத்தில் எங்கு போக விரும்பினாலும் நீ போகலாம்” என்று சொன்னான். எரேமியா போகாமல் தயங்கிக்கொண்டே இருந்தபோது காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான் அவரிடம், “நீ சாப்பானின் மகனாகிய அகிக்காமின் மகன் கெதலியாவிடம் போய், அவரோடு இருக்கிற ஜனங்களுடன் தங்கு. ஏனென்றால், அவரை யூதாவின் நகரங்களுக்கு அதிகாரியாக பாபிலோன் ராஜா நியமித்திருக்கிறார். அங்கே போக விருப்பம் இல்லையென்றால் நீ வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம்” என்று சொன்னான். பின்பு, அவருக்கு உணவும் அன்பளிப்பும் கொடுத்து அனுப்பி வைத்தான். எரேமியா மிஸ்பாவிலிருந்த அகிக்காமின் மகன் கெதலியாவிடம் போனார். அங்கே இருந்த ஜனங்களோடு தங்கினார்.
it-2-E பக். 482
நேபுசராதான்
நேபுகாத்நேச்சாரின் ஆணைப்படியே நேபுசராதான் எரேமியாவை விடுதலை செய்தான், அவரிடம் அன்பாகப் பேசினான், அவருடைய விருப்பப்படி நடக்க அனுமதித்தான், நன்றாகக் கவனித்துக்கொள்வதாகச் சொன்னான், அவருக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்தான். யூதாவில் மீதியாக இருந்த மக்களுடைய அதிகாரியாக கெதலியாவை நியமிக்கிற விஷயத்தில் பாபிலோன் ராஜாவின் சார்பாக அவன் பேசினான். (2ரா 25:22; எரே 39:11-14; 40:1-7; 41:10) சுமார் ஐந்து வருடங்கள் கழித்து, கி.மு. 602-ல், நேபுசராதான் மற்ற யூதர்களை, அதாவது சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குத் தப்பியோடியிருந்த யூதர்களை, சிறைபிடித்துக் கொண்டுபோனான்.—எரே 52:30.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(எரேமியா 43:6, 7) சாப்பானின் மகனாகிய கெதலியாவிடம் காவலாளிகளின் தலைவனான நேபுசராதான் விட்டுச்சென்ற ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், ராஜாவின் மகள்களையும், அவர்களோடுகூட தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் மகன் பாருக்கையும் கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் எகிப்து தேசத்திலிருந்த தக்பானேஸ் நகரத்துக்குப் போனார்கள்.
it-1-E பக். 463 பாரா 4
காலக்கணக்கு
சிதேக்கியா ராஜாவின் ஒன்பதாம் வருட ஆட்சிக் காலத்தில் (கி.மு. 609) எருசலேமின் கடைசி முற்றுகை ஆரம்பமானது. அவருடைய 11-ஆம் வருட ஆட்சிக் காலத்தில் (கி.மு. 607) எருசலேம் கைப்பற்றப்பட்டது; இது நேபுகாத்நேச்சாரின் 19-ஆம் வருட ஆட்சிக் காலமாக இருந்தது (கி.மு. 625-ல் அவர் ராஜாவான சமயத்திலிருந்து இது கணக்கிடப்படுகிறது). (2ரா 25:1-8) அந்த வருடத்தின் ஐந்தாம் மாதத்தில் (அதாவது, ஜூலை பாதியில் ஆரம்பித்து ஆகஸ்ட் பாதிவரை கணக்கிடப்பட்ட ஆப் மாதத்தில்) எருசலேம் நகரம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது, அதன் மதில்கள் உடைக்கப்பட்டன, நகரவாசிகள் நிறைய பேர் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள். ஆனாலும், ‘பரம ஏழைகள் சிலர்’ அங்கேயே விட்டுவிடப்பட்டார்கள்; நேபுகாத்நேச்சாரால் நியமிக்கப்பட்ட கெதலியா கொலை செய்யப்பட்டபோதோ, அவர்கள் எகிப்துக்குத் தப்பியோடினார்கள்; இதனால், யூதா தேசம் முழுவதும் வெறிச்சோடிப்போனது. (2ரா 25:9-12, 22-26) இது ஏழாம் மாதமான ஏத்தானீம் மாதத்தில் (அதாவது, செப்டம்பர் பாதியில் ஆரம்பித்து அக்டோபர் பாதிவரை கணக்கிடப்பட்ட திஷ்ரி மாதத்தில்) நடந்தது. அப்படியானால், 70 வருடம் தேசம் பாழாய்க் கிடக்கும் என்ற கணக்கு கி.மு. 607, அக்டோபர் 1-ல் ஆரம்பித்து, கி.மு. 537-ல் முடிவடைந்தது. தாயகம் திரும்பிக்கொண்டிருந்த யூதர்களில் முதல் தொகுதியினர் இந்த வருடத்தின் ஏழாம் மாதத்தில்தான் யூதா தேசத்துக்கு வந்துசேர்ந்தார்கள்; அதாவது, தேசம் முழுவதும் பாழாய் விடப்பட்டு 70 வருடங்கள் கழித்து வந்துசேர்ந்தார்கள்.—2நா 36:21-23; எஸ்றா 3:1.
மே 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 44-48
“‘உனக்காகப் பெரிய காரியங்களைத் தேடுவதை’ நிறுத்து”
(எரேமியா 45:2, 3) “பாருக்கே, இஸ்ரவேலின் கடவுளான யெகோவா உனக்குச் சொல்வது இதுதான்: ‘நீ புலம்பிக்கொண்டே, “ஐயோ, யெகோவா எனக்கு வேதனைக்குமேல் வேதனை கொடுத்துவிட்டார். குமுறிக் குமுறியே நான் களைத்துப்போய்விட்டேன். எனக்கு நிம்மதியே இல்லை” என்று சொன்னாய்.’ ”
jr-E பக். 104-105 பாரா. 4-6
‘உங்களுக்காகப் பெரிய காரியங்களைத் தேடிக்கொண்டிருக்காதீர்கள்’
4 பாருக் ஒருவேளை புகழையோ அந்தஸ்தையோ தேடிக்கொண்டிருந்திருக்கலாம். அவர் எரேமியாவின் வார்த்தைகளைப் பதிவு செய்கிறவராக இருந்தாலும், எரேமியாவின் தனிப்பட்ட செயலாளராக மட்டுமே இருந்திருக்க வாய்ப்பில்லை. எரேமியா 36:32-ல் ‘செயலாளர்’ என்று பாருக் குறிப்பிடப்படுகிறார். அவர் அரசவை அதிகாரியாக இருந்திருக்கலாம் என்பதை புதைபொருள் அத்தாட்சி காட்டுகிறது. சொல்லப்போனால், யூதாவின் அதிகாரிகளுடைய பட்டியலில் ‘செயலாளர்’ என்ற அதே பட்டப்பெயர் எலிஷாமாவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால், எலிஷாமாவின் சக வேலையாளாக இருந்த பாருக்குக்கும்கூட “ராஜாவின் அரண்மனையில் இருந்த செயலாளரின் அறைக்கு” போய்வர அனுமதி இருந்திருக்கும் என்று தெரிகிறது. (எரே. 36:11, 12, 14) அப்படியானால், பாருக் ராஜ அரண்மனையில் படிப்பறிவுள்ள உயர் அதிகாரியாக இருந்திருக்க வேண்டும். அவருடைய சகோதரரான செராயா சிதேக்கியா ராஜாவின் அலுவல்களைக் கவனித்துக்கொள்ளும் அதிகாரியாக இருந்தார்; சிதேக்கியா ஒருசமயம் பாபிலோனுக்குப் போனபோது செராயாவும் அவரோடு போயிருந்தார். (எரேமியா 51:59-ஐ வாசியுங்கள்.) ராஜா பயணம் செய்கிற சமயங்களில் அவர் தங்க வேண்டிய இடத்தையும், அவருக்குத் தேவையானவற்றையும் ஏற்பாடு செய்து கவனித்துக்கொள்கிற பொறுப்பு செராயாவுக்கு இருந்தது. இது உண்மையிலேயே ஒரு பெரிய பதவியாக இருந்தது.
5 யூதாவுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு செய்திகளை அடுத்தடுத்து பதிவு செய்வது உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு எவ்வளவு சோர்வூட்டுவதாக இருந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சொல்லப்போனால், பாருக் கடவுளுடைய தீர்க்கதரிசிக்கு ஆதரவாகச் செயல்பட்டது அவருடைய பதவிக்கும் வேலைக்கும் அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம். அதோடு, எரேமியா 45:4-ல் சொல்லியிருக்கிறபடி, யெகோவா தான் கட்டியதை இடித்துப்போட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று யோசித்துப் பாருங்கள். பாருக்கின் மனதில் இருந்த ‘பெரிய காரியங்கள்’—அரசவையில் கூடுதலான அந்தஸ்தைப் பெறுவதாக இருந்தாலும் சரி, நிறைய பொருட்செல்வங்களை அடைவதாக இருந்தாலும் சரி—அதெல்லாமே வீணானதாக இருந்திருக்கும். அழிக்கப்படவிருந்த யூத அமைப்பில் நிலையான ஒரு பதவிக்காக பாருக் ஆசைப்பட்டிருந்தால், அந்த ஆசைக்கு அணைபோட கடவுளுக்கு நல்ல காரணம் இருந்தது.
6 பாருக்கின் மனதில் இருந்த ‘பெரிய காரியங்கள்’ செல்வச் செழிப்பான வாழ்க்கையாகவும் இருந்திருக்கலாம். யூதாவைச் சுற்றியிருந்த தேசங்கள், செல்வத்தின்மீதும் பொருளுடைமைகள்மீதும் ரொம்பவே சார்ந்திருந்தன. மோவாப் தன்னுடைய “சாதனைகளையும் சொத்துகளையும்” நம்பியிருந்தது. அம்மோன் தேசமும்கூட அப்படியே நம்பியிருந்தது. எரேமியா மூலமாக யெகோவா பாபிலோனைப் பற்றிச் சொன்னபோது, “சொத்துகளைக் குவித்து வைத்திருக்கிறவளே” என்று குறிப்பிட்டார். (எரே. 48:1, 7; 49:1, 4; 51:1, 13) ஆனால், உண்மையில் அந்தத் தேசங்களையெல்லாம் கடவுள் கண்டனம்தான் செய்தார்.
(எரேமியா 45:4, 5அ) கடவுள் உனக்குச் சொல்லும் செய்தி இதுதான்: ‘யெகோவா சொல்வது என்னவென்றால், “இதோ, இந்த முழு தேசத்திலும் நான் கட்டியதை இடிக்கப்போகிறேன், நான் நட்டு வைத்ததைப் பிடுங்கி எறியப்போகிறேன். நீயோ உனக்காகப் பெரிய காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறாய். அவற்றைத் தேடுவதை நிறுத்து!”’
jr-E பக். 103 பாரா 2
‘உங்களுக்காகப் பெரிய காரியங்களைத் தேடிக்கொண்டிருக்காதீர்கள்’
2 “ஐயோ, யெகோவா எனக்கு வேதனைக்குமேல் வேதனை கொடுத்துவிட்டார். குமுறிக் குமுறியே நான் களைத்துப்போய்விட்டேன். எனக்கு நிம்மதியே இல்லை” என்று பாருக் புலம்பினார். அவரைப் போலவே நீங்களும்கூட சிலசமயம் வாய்விட்டு அல்லது மனதுக்குள் அப்படிப் புலம்பியிருக்கலாம். பாருக் எப்படிப் புலம்பியிருந்தாலும் சரி, யெகோவா அதைக் கேட்டுக்கொண்டு இருந்தார். பாருக்கின் மனக் குழப்பத்திற்குக் காரணம் என்னவென்று இதயங்களை ஆராய்கிற கடவுளுக்குத் தெரிந்திருந்தது, அதனால் எரேமியா மூலமாக பாருக்கை அன்புடன் திருத்தினார். (எரேமியா 45:1-5-ஐ வாசியுங்கள்.) ஆனால் பாருக் ஏன் அந்தளவுக்குக் களைத்துப்போயிருந்தார்? அவருக்குக் கிடைத்த நியமிப்பினாலா அல்லது அந்த நியமிப்பைச் செய்ய வேண்டிய சூழ்நிலையினாலா? பாருக், தன் இதயத்தின் ஆழத்திலிருந்த உணர்ச்சிகளைத்தான் கொட்டித் தீர்த்தார். பாருக் ‘பெரிய காரியங்களைத் தேடிக்கொண்டிருந்தார்’ என வாசித்தோம் இல்லையா? அவை என்ன? யெகோவாவின் ஆலோசனையையும் அறிவுரையையும் ஏற்றுக்கொண்டால் பாருக்குக்கு என்ன தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார்? பாருக்கின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(எரேமியா 48:13) இஸ்ரவேலர்கள் தாங்கள் நம்பியிருந்த பெத்தேலை நினைத்து எப்படி வெட்கப்படுகிறார்களோ அப்படியே மோவாபியர்கள் கேமோஷை நினைத்து வெட்கப்படுவார்கள்.
it-1-E பக். 430
கேமோஷ்
தீர்க்கதரிசியான எரேமியா மோவாபுக்கு வரவிருந்த தண்டனையைப் பற்றி முன்னறிவித்தபோது, மோவாபின் முக்கியத் தெய்வமான கேமோஷ் சிறைபிடிக்கப்படும் என்றும், அதனுடைய பூசாரிகளும் அதிகாரிகளும் சிறைபிடிக்கப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டினார். கன்றுக்குட்டி வணக்கம் நடைபெற்ற பெத்தேலை நினைத்து பத்துக் கோத்திர ராஜ்யத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்கள் எப்படி வெட்கப்பட்டார்களோ அப்படியே மோவாபியர்கள் கேமோஷின் கையாலாகாத்தனத்தை நினைத்து வெட்கப்படுவார்கள்.—எரேமியா 48:7, 13, 46.
(எரேமியா 48:42) “ ‘மோவாப் யெகோவாவுக்கு எதிராகப் பெருமையடித்தான். அதனால், இருந்த இடம் தெரியாதபடி அழிக்கப்படுவான்.
it-2-E பக். 422 பாரா 2
மோவாப்
மோவாபைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் துல்லியமாக நிறைவேறின என்பதை மறுக்க முடியாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மோவாபியர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டார்கள். (எரே 48:42) மோவாபிய நகரங்களாகக் கருதப்படுகிற நேபோ, எஸ்போன், ஆரோவேர், பெத்-கமூல், பாகால்-மெயோன் போன்ற நகரங்களெல்லாம் இன்றுகூட வெறும் இடிபாடுகளாகக் கிடக்கின்றன. மோவாபின் மற்ற இடங்களைப் பற்றி இன்று யாருக்குமே தெரியாது.
மே 29–ஜூன் 4
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 49-50
“யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆசீர்வதிக்கிறார், கர்வமுள்ளவர்களைத் தண்டிக்கிறார்”
(எரேமியா 50:4-7) யெகோவா சொல்வது இதுதான்: “அந்தக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் ஒன்றாக வருவார்கள். அவர்கள் அழுதுகொண்டே நடந்து வருவார்கள். ஒன்றாகச் சேர்ந்து அவர்களுடைய கடவுளான யெகோவாவைத் தேடுவார்கள். சீயோனுக்குப் போகும் வழியைக் கேட்பார்கள். அந்தத் திசையைப் பார்த்தபடி ஒருவரிடம் ஒருவர், ‘வாருங்கள், என்றுமே மறக்கப்படாத ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை நாம் யெகோவாவுடன் செய்து அவரோடு சேர்ந்துகொள்ளலாம்’ என்று சொல்வார்கள். என்னுடைய ஜனங்கள் காணாமல்போன மந்தையைப் போல ஆகிவிட்டார்கள். அவர்களுடைய மேய்ப்பர்களே அவர்களை மலைகளிலும் குன்றுகளிலும் அலைய வைத்துவிட்டார்கள். அவர்களுடைய தொழுவத்தையே அவர்கள் மறந்துவிட்டார்கள். அவர்களைக் கண்டுபிடிக்கிற எல்லாரும் அவர்களை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்கள். அவர்களுடைய எதிரிகள், ‘எங்கள்மேல் குற்றம் இல்லை. இவர்கள்தான் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்தார்கள். இவர்களுடைய முன்னோர்கள் நம்பியிருந்த நீதியுள்ள கடவுளான யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்’ என்று சொல்கிறார்கள்.”
(எரேமியா 50:29-32) வில்வீரர்களைக் கூப்பிடுங்கள். பாபிலோனைத் தாக்கச் சொல்லுங்கள். அவளைச் சுற்றிவளையுங்கள்; யாரையும் தப்ப விடாதீர்கள். அவளுக்குச் சரியான கூலி கொடுங்கள். அவள் செய்ததையே அவளுக்குத் திருப்பிச் செய்யுங்கள். ஏனென்றால், அவள் யெகோவாவுக்கு எதிராக அகங்காரத்தோடு நடந்துகொண்டாள். இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளுக்குமுன் பெருமையடித்தாள். அந்த நாளில், அவளுடைய வாலிபர்கள் பொது சதுக்கங்களில் விழுந்து கிடப்பார்கள். எல்லா வீரர்களும் அழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். “திமிர் பிடித்தவளே, நான் உன்னைத் தண்டிக்கப்போகிறேன்” என்று உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். “நான் உன்னுடைய கணக்கைத் தீர்க்கப்போகிற நாளும் நேரமும் வரப்போகிறது. திமிர் பிடித்தவளே, நீ தடுமாறி விழுவாய். உன்னைத் தூக்கிவிட யாரும் இருக்க மாட்டார்கள். உன்னுடைய நகரங்களுக்கு நான் தீ வைப்பேன். உன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் அது பொசுக்கிவிடும்.”
it-1-E பக். 54
எதிரி
கடவுளுடைய மக்கள் விசுவாசமற்றவர்களாக நடந்துகொண்ட சமயங்களில், அவர்களுடைய எதிரிகள் அவர்களைக் கொள்ளையடிப்பதற்கும், தோற்கடிப்பதற்கும் கடவுள் அனுமதித்தார். (சங் 89:42; புல 1:5, 7, 10, 17; 2:17; 4:12) ஆனால், அந்த எதிரிகள் தங்களுடைய வெற்றிகளுக்குக் காரணம் தாங்கள்தான் என்று தவறாக நினைத்துக்கொண்டு பெருமையடித்தார்கள், தங்களுடைய தெய்வங்களைப் போற்றிப் புகழ்ந்தார்கள்; அதுமட்டுமல்ல, யெகோவாவின் மக்களை மோசமாக நடத்தினாலும் யெகோவா தங்களைத் தண்டிக்க மாட்டார் என்று நினைத்துக்கொண்டார்கள். (உபா 32:27; எரே 50:7) அதனால்தான், பெருமையோடும் கர்வத்தோடும் நடந்துகொண்ட அந்த எதிரிகளை யெகோவா தண்டித்தார். (ஏசா 1:24; 26:11; 59:18; நாகூ 1:2); தன்னுடைய பரிசுத்த பெயருக்குக் களங்கம் ஏற்படக் கூடாது என்பதற்காக அப்படிச் செய்தார்.—ஏசா 64:2; எசே 36:21-24.
(எரேமியா 50:38, 39) அவளுடைய தண்ணீர் பாழாகிப்போகும்; அது வற்றிப்போகும். ஏனென்றால், அவளுடைய தேசத்தில் எங்கு பார்த்தாலும் சிலைகள்தான் இருக்கின்றன. அவற்றைக் கும்பிடுகிறவர்கள் பயங்கரமான தரிசனங்களைப் பார்த்து பைத்தியக்காரர்கள் போல நடந்துகொள்கிறார்கள். பாலைவன மிருகங்கள், ஊளையிடுகிற மிருகங்களோடு வாழும். பாபிலோனில் நெருப்புக்கோழிகள் தங்கும். இனி ஒருபோதும் மனுஷர்கள் அங்கே குடியிருக்க மாட்டார்கள். எத்தனை தலைமுறை வந்தாலும் ஒருவரும் அங்கே வாழ மாட்டார்கள்.”
jr-E பக். 161 பாரா 15
“யெகோவா தான் நினைத்ததைச் செய்திருக்கிறார்”
15 எகிப்தைக் கைப்பற்றிய பாபிலோன் ராஜ்யத்தின் முடிவைப் பற்றியும்கூட எரேமியா தீர்க்கதரிசனம் சொன்னார். அது நடப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, பாபிலோனின் அந்தத் திடீர் வீழ்ச்சியைப் பற்றி மிகத் துல்லியமாக அவர் முன்னறிவித்தார். எப்படி? பாபிலோனுக்குப் பாதுகாப்பாக இருந்த ‘தண்ணீர் வற்றிவிடும்’ என்றும், பாபிலோன் வீரர்கள் போர் செய்ய மாட்டார்கள் என்றும் கடவுளுடைய தீர்க்கதரிசியான அவர் முன்னறிவித்தார். (எரே. 50:38; 51:30) மேதியர்களும் பெர்சியர்களும் யூப்ரடிஸ் நதியின் தண்ணீரைத் திசை திருப்பிவிட்டு அதை வற்றச் செய்தபோதும்... அந்த ஆற்றுப்படுகையைக் கடந்து, நகரத்துக்குள் திடுதிப்பென்று நுழைந்தபோதும்... அந்தத் தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்ட எல்லா விஷயங்களும் அப்படியே நிறைவேறின. அதோடு, யாருமே குடியிருக்க முடியாதபடி பாபிலோன் பாழாய்க் கிடக்குமென்ற தீர்க்கதரிசனமும் அப்படியே நிறைவேறியது. (எரே. 50:39; 51:26) ஒரு காலத்தில் உலகப் பேரரசாக விளங்கிய பாபிலோன் இன்றுவரை பாழாய்க் கிடக்கிறது; கடவுள் சொன்ன தீர்க்கதரிசனம் எந்தளவு துல்லியமானது என்பதற்கு இது அத்தாட்சி அளிக்கிறது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(எரேமியா 49:1, 2) அம்மோனியர்களைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ? அவனுக்கு வாரிசு இல்லையோ? பிறகு ஏன் காத் நகரத்தை மல்காம் கைப்பற்ற வேண்டும்? மல்காமைக் கும்பிடுகிறவர்கள் ஏன் இஸ்ரவேலின் நகரங்களில் குடியிருக்க வேண்டும்?” “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, காலம் வருகிறது. அப்போது, அம்மோனியர்களுடைய நகரமான ரப்பாவில் போர் முழக்கம் கேட்கும்படி செய்வேன். அவள் வெறும் மண்மேடாக ஆவாள். அவளுடைய சிற்றூர்கள் தீ வைத்துக் கொளுத்தப்படும்.’ யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலைக் கைப்பற்றியவர்களை இஸ்ரவேல் கைப்பற்றும்.’
it-1-E பக். 94 பாரா 6
அம்மோனியர்கள்
மூன்றாம் திகிலாத்-பிலேசர் இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த மக்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோன பிறகு (2ரா 15:29; 17:6), காத் கோத்திரத்திற்குச் சொந்தமான பகுதியில் அம்மோனியர்கள் குடியேறியதாகத் தெரிகிறது; அந்தப் பகுதிக்காகத்தான் முன்பு யெப்தாவோடு அவர்கள் சண்டை போட்டிருந்தார்கள். (சங் 83:4-8-ஐ ஒப்பிடுங்கள்.) அம்மோனியர்கள் அந்தப் பகுதியைக் கைப்பற்றி அங்கு குடியேறியதால் எரேமியா மூலமாக யெகோவா அவர்களைக் கண்டனம் செய்தார்; அவர்களுக்கும் அவர்களுடைய கடவுள் மல்காமுக்கும் (மில்காமுக்கும்) அழிவு வரப்போவதாக எச்சரித்தார். (எரே 49:1-5) யூதா ராஜ்யத்தின் இறுதி ஆண்டுகளின்போது யோயாக்கீம் ஆட்சி செய்த சமயத்தில் அம்மோனியர்கள் தங்களுடைய கொள்ளைக்கூட்டத்தை அனுப்பி யூதாவைக் கஷ்டப்படுத்தினார்கள்.—2ரா 24:2, 3.
(எரேமியா 49:17, 18) “ஏதோமுக்கு வரும் கோரமான முடிவைப் பார்க்கிறவர்கள் கதிகலங்கிப்போவார்கள். அவளுக்கு வரும் எல்லா தண்டனைகளையும் பார்த்துக் கேலி செய்வார்கள். சோதோமும் கொமோராவும் அவற்றைச் சுற்றியிருந்த ஊர்களும் அழிந்தது போலவே ஏதோமும் அழிந்துபோவாள். அங்கே யாரும் குடியிருக்க மாட்டார்கள். மனுஷ நடமாட்டமே இருக்காது” என்று யெகோவா சொல்கிறார்.
jr-E பக். 163 பாரா 18
“யெகோவா தான் நினைத்ததைச் செய்திருக்கிறார்”
18 கி.பி. முதல் நூற்றாண்டில் மற்றொரு தீர்க்கதரிசனமும் நிறைவேறியது. பாபிலோனியர்களின் படையெடுப்பினால் பாதிக்கப்படுகிற தேசங்களில் ஏதோம் தேசமும் ஒன்றாக இருக்கும் என எரேமியா மூலம் கடவுள் முன்னறிவித்தார். (எரே. 25:15-17, 21; 27:1-7) அதுமட்டுமல்ல, வேறொன்றையும் அவர் முன்னறிவித்தார். அதாவது, சோதோம் கொமாராவைப் போல ஏதோம் அழிக்கப்படும் என்று முன்னறிவித்தார். அப்படியானால், அது யாருமே குடியிருக்க முடியாதபடி என்றென்றும் பாழாகிப்போகும், சுவடு தெரியாமல் அழிந்துபோகும் என்று அர்த்தம். (எரே. 49:7-10, 17, 18) அவர் முன்னறிவித்தது அப்படியே நிறைவேறியது. இன்று ஏதோம், ஏதோமியர்கள் என்ற பெயர்கள் எங்கே இருக்கின்றன? தற்போதைய நில வரைபடம் ஏதாவதில் இருக்கின்றனவா? இல்லவே இல்லை. பூர்வ சரித்திரப் புத்தகங்களில், பைபிள் சரித்திரப் புத்தகங்களில் அல்லது அந்தக் காலத்து நில வரைபடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஏதோமியர்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் யூத மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக ஃப்ளேவியஸ் ஜோசிஃபஸ் பதிவு செய்திருக்கிறார். அந்த நூற்றாண்டுக்குப் பிறகு, அதாவது கி.பி. 70-ல் எருசலேம் அழிக்கப்பட்ட பிறகு, ஏதோம் என்ற வம்சமே உலகத்தில் இல்லாதபடி அழிந்துபோனது.