உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்தார்
    விழித்தெழு!—1991 | ஆகஸ்ட் 8
    • “தன் நடைகளை நடத்துவது நடக்கிற மனுஷனுக்கு உரியதல்ல. யெகோவாவே, என்னைத் திருத்தும்.”—எரேமியா 10:23, 24, NW.

      அந்த வார்த்தைகள் மனிதர் படைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டன. நம்முடைய முதல் பெற்றோருக்குக் கடவுள் அளித்த நல்ல ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் மனித சரித்திரம் தன்னுடைய நாள் வரையிலுமாகச் சீரழிந்திருப்பதை எரேமியா உணர்ந்தான்.

      எரேமியாவின் கூற்று அவனுடைய காலம் முதலான 2,500 ஆண்டு சரித்திரப் பதிவால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மானிடரின் சீரழிவு மிகவும் மோசமான நிலையை எட்டியிருக்கிறது. என்ன தவறு நடந்தது?

  • கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்தார்
    விழித்தெழு!—1991 | ஆகஸ்ட் 8
    • பாவத்துக்குள்ளான ஆட்கள் ஒருவருக்கொருவர் எவ்விதம் மோசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதையும் காலத்தின் ஓட்டமும் வெளிப்படுத்தியிருக்கிறது. எண்ணிலடங்கா வன்மையான போர்களும், இனம் மற்றும் மதக் கலவரங்களும், வன்மையான மத தண்டனை முறைகளும், எல்லாவிதமான பயங்கரக் குற்றச்செயல்களும் தன்னலம் மற்றும் பேராசையின் செயல்களும் இருந்துவந்திருக்கின்றன. இவற்றுடன்கூட, வறுமையும் பசி பட்டினியும் எண்ணிலடங்கா லட்சக்கணக்கான மக்களை பலிவாங்கியிருக்கிறது.

      கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனிதவர்க்கம் தங்களால் இயன்ற எல்லா வகையான அரசாங்கங்களையும் முயன்றுபார்த்திருக்கின்றனர். என்றபோதிலும், ஒன்றன் பின் ஒன்றாக மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தவறிவிட்டது. அண்மையில், கம்யூனிஸ அரசாங்கங்கள் அநேக தேசங்களில் மறுக்கப்பட்டுவிட்டது. குடியரசு நாடுகளில் குற்றச்செயல், வறுமை, பொருளாதார நிலையின்மை, ஊழல் தாண்டவமாடுகிறது. உண்மையில், எல்லா வகையான மனித அரசாங்கங்களுமே குறைபட்டிருக்கின்றன.

      மேலும், மனிதர் விஞ்ஞானம் மற்றும் பொருளாதார சாதனைகளின் உச்சத்தை அடைவதற்குக் கடவுள் காலத்தை அனுமதித்திருக்கிறார். ஆனால், வில்லுக்கும் அம்புக்கும் பதிலாக அணுஆயுத ஏவுகணைகள் எடுத்திருப்பதுதான் உண்மையான முன்னேற்றமா? மக்கள் விண்வெளியில் பயணம் செய்ய முடிகிறது, ஆனால் பூமியில் ஒன்றாக சமாதானமாய் வாழ முடியாமலிருப்பது உண்மையான முன்னேற்றமா? குற்றச்செயலின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இரவில் வெளியே செல்ல பயப்படுவது உண்மையான முன்னேற்றமா?

      மனிதர்கள் உணவு, காற்று, தண்ணீர் இல்லாமல் வாழ்வது எப்படி கூடாததாயிருக்கிறதோ அப்படியே வெற்றிகரமாக ‘தங்களுடைய நடைகளை நடத்துவதும்’ கூடாததாயிருக்கிறது என்பதைக் காலத்தின் சோதனை காண்பிக்கிறது. நாம் உணவு, காற்று, தண்ணீர் பேரில் சார்ந்திருக்கும்படிக்குப் படைக்கப்பட்டிருப்பது போல நாம் நம்முடைய சிருஷ்டிகரின் வழிநடத்துதலின்பேரில் சார்ந்திருக்க வடிவமைக்கப்பட்டிருக்கிறோம்.—மத்தேயு 4:4.

      துன்மார்க்கத்தையும் துன்பத்தையும் அனுமதித்திருப்பதன் மூலம், கடவுள் சுயாதீனத்தை துர்ப்பிரயோகம் செய்வதன் வருந்தத்தக்க பலன்களை எல்லாக் காலத்துக்குமாக ஒரே சமயத்தில் காண்பித்திருக்கிறார். இது அவ்வளவு விலையேறப்பெற்ற ஈவாக இருப்பதால், அதை மனிதரிடமிருந்து எடுத்துவிடுவதற்குப் பதிலாக, அதைத் துர்ப்பிரயோகம் செய்வது எதைக் குறிக்கிறது என்பதைக் காண அவனை அனுமதித்திருக்கிறார்.

      சுயாதீனத்தைக் குறித்து, “பழைமைப்பேணும் யூத மதத்தின் நியமங்கள்” (“Statement of Principles of Conservative Judaism”) என்ற வெளியீடு கூறுகிறது: “நன்மை தீமையை எதிர்ப்படும்போது மக்கள் தவறான தெரிவைச் செய்யும் சாத்தியமின்றி தெரிவு செய்தலின் அந்த முழு கருத்தும் அர்த்தமற்றதாகிறது. . . . உலகின் பேரளவான துன்பம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் சுயாதீனத்தைத் தவறாகப் பிரயோகிப்பதன் நேரடியான விளைவாக இருக்கிறது.”

      எரேமியா மிகவும் சரியாகவே பின்வருமாறு சொன்னான்: “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” சாலொமோனும் சரியாகவே இவ்வாறு சொன்னான்: ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.’—பிரசங்கி 8:9.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்