-
பெருமூச்சுவிட்டுக் குமுறுவதும், அடையாளம் போடுவதும், நொறுக்குவதும்—எப்போது, எப்படி?தூய வணக்கம்—பூமியெங்கும்!
-
-
‘நொறுக்குவது’
எப்போது: அர்மகெதோன் போரின்போது
எப்படி: இயேசு கிறிஸ்துவும் அவருடைய பரலோகப் படைவீரர்களும், அதாவது தேவதூதர்களும் கிறிஸ்துவோடு ஆட்சி செய்யும் 1,44,000 பேரும், இந்தப் பொல்லாத உலகத்தை அடியோடு அழிப்பார்கள். ஆனால், தூய வணக்கத்தாரை அந்த அழிவிலிருந்து காப்பாற்றி நீதியான புதிய உலகத்துக்கு வழிநடத்துவார்கள்
-
-
“நெற்றியில் அடையாளம் போடு”தூய வணக்கம்—பூமியெங்கும்!
-
-
19. இந்த உலகத்தின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதில் இயேசுவோடு யாரெல்லாம் சேர்ந்துகொள்வார்கள்? (“பெருமூச்சுவிட்டுக் குமுறுவதும், அடையாளம் போடுவதும், நொறுக்குவதும்—எப்போது, எப்படி?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
19 பரலோக ராஜாவான இயேசு கிறிஸ்துவும், அவருடைய பரலோகப் படைவீரர்களும் இந்த உலகத்தின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார்கள். எசேக்கியேலின் தரிசனத்தில், நொறுக்குவதற்கான ஆயுதங்களை வைத்திருந்த ஆறு ஆண்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அழிக்கும் வேலையை எப்போது ஆரம்பித்தார்கள்? நாரிழை உடையை உடுத்தியிருந்தவர் அடையாளம் போடும் வேலையை முடித்த பிறகுதான் அதை ஆரம்பித்தார்கள். (எசே. 9:4-7) அதேபோல், வரவிருக்கும் அழிவும்கூட, எல்லா தேசத்தாரையும் இயேசு நியாயந்தீர்த்து, செம்மறியாடுகளைப் போன்றவர்களுக்கு தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தைப் போட்ட பிறகுதான் ஆரம்பமாகும். அர்மகெதோன் போரின்போது, இந்தப் பொல்லாத உலகத்துக்கு எதிராக இயேசு தன்னுடைய பரலோகப் படையோடு வருவார். பரிசுத்தமான தேவதூதர்களும், இயேசுவோடு ஆட்சி செய்யப்போகிற 1,44,000 பேரும் சேர்ந்ததுதான் அந்தப் படை. அவர்கள் இந்தப் பொல்லாத உலகத்தைத் துடைத்தழிப்பார்கள். ஆனால், தூய வணக்கத்தில் ஈடுபடுகிறவர்களை அவர்கள் காப்பாற்றி நீதியான புதிய உலகத்துக்கு வழிநடத்துவார்கள்.—வெளி. 16:14-16; 19:11-21.
-