யெகோவா தம்முடைய பட்டயத்தை உறையிலிருந்து உருவுகிறார்!
“யெகோவாவாகிய நானே என் பட்டயத்தை என் உறையிலிருந்து உருவினேன் என்பதை அப்பொழுது மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்.”—எசேக்கியேல் 21:5, தி.மொ.
யெகோவாவின் பட்டயம் சரியகவே அவருடைய பகைவர்களில் பயத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால் அவர் அதை யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜ்யங்களுக்கு எதிராகச் சுழற்றியபோது, என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை அவர்கள் உண்மையிலேயே அறிந்திருந்தார்களா? ஆம், யெகோவா அடையாள அர்த்தமுள்ள தம்முடைய பட்டயத்தை உறையிலிருந்து உருவியிருக்கிறார் என்பதை அவர்கள் அறியும்படிச் செய்யப்பட்டார்கள்.—எஸ்றா 9:6-9; நெகேமியா 1:8; 9:26-30.
2 தம்முடைய தீர்க்கதரிசியும் காவற்காரனுமாகிய எசேக்கியேல் மூலமாகக் கடவுள் பின்வருமாறு சொன்னார்: “யெகோவாவாகிய நானே என் பட்டயத்தை என் உறையிலிருந்து உருவினேன் என்பதை அப்பொழுது மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்.” (எசேக்கியேல் 21:5) அந்த வார்த்தைகள் பூர்வகாலங்களில் மட்டுமே பொருந்தினவையாய் இருந்தனவா? அல்லது அவை நமக்கு அர்த்தமுடையவையாய் இருக்கின்றனவா?
எருசலேமின் நியாயத்தீர்ப்பு குறித்த முன்னறிவிப்புகள்
3 யெகோவாவின் ரதம் மீண்டும் நகர்ந்தது. எசேக்கியேலின் இடமும் மாறியது. அது கடவுளுடைய ரதம் போன்ற பரலோக அமைப்பு ஒலிவ மலைக்கும் மேல் பார்வையிடும் நிலைக்கு நகர்ந்ததுபோல் இருந்தது. அந்த இடத்தில்தான் பொ.ச. 70-ல் எருசலேம் மீது வந்த அழிவைக் குறித்து இயேசு முன்னறிவித்தார்; இது கிறிஸ்தவமண்டலத்திற்கு வரும் முடிவுக்குத் தீர்க்கதரிசனப் படமாக இருக்கும் ஓர் அழிவாகும். (மாற்கு 13:1-20) தரிசனத்திலே எசேக்கியேல்தானே கேபார் ஆற்றிலிருந்து கொண்டுசெல்லப்பட்டான், ஆனால் கடவுளுடைய ஆவியால் அவன் இப்பொழுது பாபிலோனியாவிலுள்ள தன்னுடைய சிறையிருப்பு வீட்டுக்குத் திரும்பக் கொண்டுவரப்படுகிறான். ‘யெகோவா தனக்குக் காண்பித்த யாவற்றையும்’ அவ்விடத்தில் சிறைப்பட்டிருந்தவர்களிடம் சொன்னான். அதுபோல, கடவுளுடைய அபிஷேகம்பண்ணப்பட்ட “காவற்காரனும்” அவர்களோடு கூட்டுறவு கொள்ளும் சாட்சிகளும் உன்னத மகிமைப்பொருந்திய ரதத்தில் சவாரி செய்பவரால் தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் யாவற்றையும் அறிவித்துவருகிறார்கள்.—எசேக்கியேல் 11:22-25.
4 அடையாள அர்த்தமுள்ள நடிப்புகள் மூலமாக, தேசத்திற்கு அழிவு கிட்டிவிட்டது என்று எசேக்கியேல் அந்தச் சிறையிருப்பிலிருந்த யூதர்களுக்குக் காண்பித்தான். (எசேக்கியேல் 12:1-7-ஐ வாசிக்கவும்.) தீர்க்கதரிசி “சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் சாமான்களைச்” சுமந்துசென்றான், இப்படியாக சிறையிருப்புக்குப் போகிறவர்கள் தங்களுடைய தோள்களில் ஒருசில சாமான்களைச் சுமந்துசெல்லக்கூடிய நிலையிலிருப்பார்கள் என்பதைக் காண்பிப்பவனாயிருந்தான். விரைவில் முற்றுகையிடப்பட்ட எருசலேமில் பயங்கரமான நிலைமை உண்டாகப்போகிறது. அநேகர் அப்படிப்பட்ட எச்சரிப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தவில்லையென்றாலும், எசேக்கியேல் மக்களைப் பார்த்து, “இனித் தாமதிப்பதில்லை,” என்று சொல்லவேண்டியவனாயிருந்தான். இன்றுங்கூட தெய்வீக எச்சரிப்புகளும் தீர்க்கதரிசனங்களும் கசந்துகொள்ளப்படுகிறது, ஆனால் சத்தியத்தில் நாட்டமுள்ளவர்கள் அவற்றின் நிறைவேற்றத்தில் நம்பிக்கை கொள்ள உதவும் வகையில் நாம் அதிகம் செய்யலாம்.—எசேக்கியேல் 12:8-28.
5 யெகோவாவின் காவற்காரனுக்கு செவிகொடாதவர்கள் கடவுளுடைய “பட்டயத்தை” உணர நேரிடும் என்பதை அறிய வேண்டியதாயிருந்தது. எனவே, எருசலேம் மற்றும் யூதாவின் பாதுகாப்பு குறித்து தவறான கருத்துக்குக் காரணமாயிருந்தவர்கள் சபிக்கப்பட்டார்கள். பொய்த் தீர்க்கதரிசிகள் சேதமுண்டாக்கும் நரிகளுக்கு ஒப்பிடப்பட்டார்கள், மற்றும் பொய்யர்கள் இடிந்துவிழும் நிலையிலுள்ள சுவர்களுக்கு அல்லது செயல்திட்டங்களுக்கு சாந்து பூசுகிறார்கள் என்றும் காட்டப்பட்டது. பொய்த் தீர்க்கதரிசினிகளுங்கூட சபிக்கப்பட்டார்கள். “யெகோவாவின் நாள்” நெருங்கிவிட்டது, அவருடைய முகம் ‘அவரைப் பின்பற்றாமல் பேதலித்துப்போனவர்களுக்கு’ எதிராக, அதாவது ‘கடவுளைப் பின்பற்றுவதற்குப் புறம்பாகத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்களுக்கு’ எதிராகத் திரும்பியிருக்கிறது. நாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்களாயிருந்தால், அவருடைய பரிசுத்த சேவையிலிருந்து பின்வாங்க விரும்பமாட்டோம்.—எசேக்கியேல் 13:1-14:11.
6 வழிவிலகிய யூதா மக்களை யார் பாதுகாக்கக் கூடும்? அந்தத் தேசத்துக்கு விரோதமாகக் கடவுள் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினபோது நீதிமான்களாகிய நோவா, தானியேல் மற்றும் யோபுவாலுங்கூட கூடாமல் போனது. நாம் இரட்சிப்படைய வேண்டுமானால், கடவுளுக்கு முன்பாக நம்முடைய தனிப்பட்ட உத்தரவாதத்தை ஏற்று அவருடைய சித்தத்தை நிறைவேற்றவேண்டும்.—எசேக்கியேல் 14:12-23; ரோமர் 14:12.
7 உண்மைதவறிய குடிமக்களைக்கொண்டிருந்ததால் யூதா நல்ல கனிகளற்ற, நெருப்பினால் சுட்டெரிக்கப்படத்தக்க காட்டு திராட்சச்செடிக்கு ஒப்பிடப்பட்டது. (எசேக்கியேல் 15:1-8) அவள் கடவுளால் மீட்கப்பட்ட குழந்தை எனவும், ஒரு பெண்ணாகும்வரை பேணிக்காக்கப்பட்டாள் எனவும் ஒப்பிடப்படுகிறாள். யெகோவா அவளைத் தம்முடைய மனைவியாக ஏற்றார், ஆனால் அவளோ பொய்த் தெய்வங்களிடமாகத் திரும்பினாள்; அவளுடைய ஆவிக்குரிய விபச்சாரத்துக்காக நாசமடைவாள். என்றாலும், உண்மைத் தவறாதவர்களோடு கடவுள் ‘ஒரு நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்துவார்’—இதுதான் ஆவிக்குரிய இஸ்ரவேலரோடு ஏற்படுத்தும் புதிய உடன்படிக்கை.—எசேக்கியேல் 16:1-63; எரேமியா 31:31-34; கலாத்தியர் 6:16.
8 அடுத்து, பாபிலோன் மற்றும் எகிப்திய அரசர்கள் பெரிய கழுகுகளுக்கு ஒப்பிடப்பட்டார்கள். ஒன்று கேதுருவின் நுனிக்கிளையை முறித்தது. யோயாக்கீம் அரசனை நீக்கிப்போட்டு அவனுடைய ஸ்தானத்தில் சிதேக்கியாவை நியமிப்பதன் மூலம் இப்படியானது. நேபுகாத்நேச்சாருக்கு உண்மைத்தவறாதவனாய் இருப்பதாக உறுதிமொழி எடுத்தும் சிதேக்கியா அதை மீறி, அந்த வேறொரு பெரிய கழுகாகிய எகிப்தின் அரசனுடைய இராணுவ உதவியை நாடினான். தான் உடன்படிக்கை செய்கையில் அல்லது உறுதிமொழி எடுக்கையில் கடவுளுடைய நாமத்தில் அப்படிச் செய்திருந்தால், அதை முறிப்பது யெகோவாவுக்கு அவதூறை ஏற்படுத்தியது. கடவுளுக்கு அவதூறை ஏற்படுத்தும் என்ற அந்த எண்ணம்தானே நம்முடைய வார்த்தைக்குப் பொய்யாய் நிரூபிப்பதிலிருந்து நம்மைக் கட்டுப்படுத்த வேண்டும். யெகோவாவின் சாட்சிகள் என்ற அந்தத் தெய்வீக பெயரை நாம் தாங்கியிருப்பதில் நிச்சயமாகவே சிலாக்கியம் பெற்றவர்கள்!—எசேக்கியேல் 17:1-21.
9 அடுத்து மகிழ்வூட்டும் மேசியானிய தீர்க்கதரிசனம் தொடருகிறது. (எசேக்கியேல் 17:22-24-ஐ வாசிக்கவும்.) இங்கு, “இளங்கிளைகளிலுள்ள கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்று” மேசியானிய ராஜாவாகிய இயேசு கிறிஸ்து. யெகோவா தேவனால் பரம சீயோன் மலையில் நடப்பட்டவராய், அவர் “மகிமையான கேதுருவாகி” பூமியின் மேல் ஆட்சி செய்கையில் பாதுகாப்புக்கும் ஆசீர்வாதத்துக்கும் ஊற்றுமூலமாவார். (வெளிப்படுத்துதல் 14:1) இது உண்மையிலேயே நமக்கு உற்சாகமளிப்பதாய் இருக்கிறது.
10 மேசியானிய தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் உண்மையிலேயே நன்மையடைய வேண்டுமானால், நாம் யெகோவா தேவனுடன் நல்ல உறவைக் காத்துக்கொள்ள வேண்டும். எசேக்கியேலோடு சிறையிருப்பிலிருந்தவர்கள் கடவுளோடு நல்ல நிலைநிற்கையிலிருப்பதாக நினைத்து, தங்களுடைய கஷ்டங்களுக்குத் தங்கள் முன்னோரைக் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் தங்களுடைய சொந்த நடத்தையின் விளைவுகளுக்கு தாங்கள் ஒவ்வொருவரும் உத்தரவாதிகள் என்று தீர்க்கதரிசி குறிப்பிட்டுக் காண்பித்தான். (எசேக்கியேல் 18:1-29; எரேமியா 31:28-30-ஐ ஒப்பிடவும்) அடுத்து யெகோவாவிடமிருந்து ஒரு வேண்டுகோள். (எசேக்கியேல் 18:30-32-ஐ வாசிக்கவும்.) ஆம், மனந்திரும்புகிறவர்களுக்கு யெகோவா இரக்கம் காண்பிக்கிறார், மற்றும் அவர்களுடைய மரணத்தில் அவர் பிரியம் கொள்வதில்லை. எனவே கடவுள் சொல்கிறார்: ‘ஜனங்களே, மனந்திரும்பி பிழைத்திருங்கள்.’—2 பேதுரு 3:9-ஐ ஒப்பிடவும்.
11 யூதாவின் வீழ்ச்சியின்பேரில் பாடப்பட்ட ஒரு புலம்பலில், அவளுடைய அரசர்கள் பாலசிங்கங்களுக்கு ஒப்பிடப்பட்டார்கள். யோவாகாஸ் அரசன் எகிப்திய சிறையிருப்பில் இறந்தான், யோயாக்கீம் நேபுகாத்நேச்சாரால் பிடிக்கப்பட்டான், யோயாக்கீன் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச்செல்லப்பட்டான். அதைத் தொடர்ந்து நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவை யூதாவுக்கு அரசனாக வைத்தான், ஆனால் அவனோ கலகம் செய்தான். கடைசியில் கூட்டில் அடைப்பட்ட ஒரு சிங்கம் போன்று, சிதேக்கியா பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்பட்டான். தீர்க்கதரிசன புலம்பலுக்கு இசைவாக, பொ.ச.மு. 607-ல் யூதா நாசமடைந்த திராட்சக்கொடியாக ஆயிற்று, “ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்த கொப்பு இனி அதில் இல்லை.” அவள் யெகோவாவின் “பட்டயத்தால்” வெட்டப்பட்டாள்!—எசேக்கியேல் 19:1-14; எரேமியா 39:1-7.
12 “இஸ்ரவேலின் மூப்பரில் சிலர்” வந்த போது, எசேக்கியேல் கடவுளுடைய செய்தியை அறிவித்தான். யெகோவா தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து மீட்டு அவர்களுக்குத் தம்முடைய நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த போதிலும் அவர்கள் அதை மறுத்து விக்கிரகாராதனையில் தொடர்ந்து ஈடுபட்டார்கள் என்று அவன் குறிப்பிட்டுக் காண்பித்தான். எசேக்கியேலின் நாட்களிலிருந்தவர்கள் அதேவிதமாகக் குற்றமுள்ளவர்களாயிருந்ததால் கடவுள் அவர்களுக்கு விரோதமாக நியாயத்தீர்ப்பு வழங்கிடுவார். எசேக்கியேல் சொன்ன காரியங்களைப் புரியாதவர்களாக இல்லாமல், ஆனால் ஐயுறவாதிகளைப்போல் அவர்கள், “இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான்?” என்று கேட்டார்கள். தீர்க்கதரிசியின் செய்தி வெறும் உவமைகளல்ல என்பதை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள். வேதவசனங்களின் எச்சரிப்புகளின்பேரில் நாம் நம்பிக்கையற்ற மனநிலையை வளர்த்துக்கொள்ளக் கூடாது என்ற காரியத்தில் இது நமக்கு எச்சரிப்பாக இருக்க வேண்டும்.—எசேக்கியேல் 20:1-49.
போர்வீரராகிய யெகோவா
13 சிறையிருப்பின் ஏழாம் வருடத்தில் (ஆப் 10, பொ.ச.மு. 611 போல்) யூதாவுக்கும் எருசலேமுக்கும் எதிரான “யெகோவாவின் நாளிலே நடக்கும் யுத்தத்துக்கு” இரண்டரை ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்தது. (எசேக்கியேல் 13:5;: 20:1) அந்தச் சமயத்தில் போர்வீரராகிய யெகோவா எசேக்கியேல் மூலம் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். (எசேக்கியேல் 21:1-5-ஐ வாசிக்கவும்.) கடவுளுடைய “பட்டயம்” அவர் உபயோகிக்கும் பூமிக்குரிய ஏதுவைக் குறிக்கிறது, ஆனால் அது அவருடைய பரலோக, ரதம் போன்ற அமைப்பையும் உட்படுத்தக்கூடும். யூதா மற்றும் இஸ்ரவேலின் “சன்மார்க்கனும்” “துன்மார்க்கனுமான” குடிகளும், அதேசமயத்தில் கடவுளுடைய ஜனங்களிடமாக பகைமைக் கொண்ட புறதேசங்களும் கடவுளுடைய “பட்டயத்துக்கு” இறையாவர். ஆம், அவர்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவது யெகோவா என்று “எல்லா மாம்சமும்” அறிந்துகொள்ள வேண்டியதாயிருக்கும்.
14 எசேக்கியேலைப் போல, யெகோவாவின் அபிஷேகம்பண்ணப்பட்ட சாட்சிகள், மாதிரிபடிவ “இஸ்ரவேல் தேச”மாகிய கிறிஸ்தவமண்டலத்தின் அங்கத்தினர்களுக்கு எதிராகக் கடவுள் பயன்படுத்தப்போகும் பட்டயத்தினிடமாகக் கவனத்தைத் திருப்புகின்றனர். விரைவில் அந்தப் “பட்டயம்” “தெற்கு துவங்கி வடக்கு மட்டுமுள்ள எல்லா மாம்சத்தாலும்,” பொய் மதத்தைப் பின்பற்றும் எல்லாராலும் உணரப்படும். எசேக்கியேலின் நாட்களிலிருந்த தன்னம்பிக்கைக் கொண்ட ஆட்கள் யெகோவாவின் “பட்டயம்” தங்களுக்கு விரோதமாய் ‘மகாசங்காரம் செய்யாது’ என்ற முடிவுக்கு வந்து களிகூருவதற்கு எந்தக் காரணமுமில்லை. அந்தப் பட்டயம் மற்ற எல்லா “விருட்சங்களையும்” அல்லது செங்கோலையும் அலட்சியம்பண்ணினது போல யூதா ராஜ்யத்தின் ராஜரீகக் கோலையும் அலட்சியம்பண்ணினது. எனவே, கிறிஸ்தவமண்டலத்தின் ஆட்சியாளர்கள் கடவுளுடைய அழிக்கும் ஏதுவால் விட்டுவைக்கப்பட மாட்டார்கள் என்பது நிச்சயம்.—எசேக்கியேல் 21:6-17.
15 பிசாசுகள் உட்பட எவருமே யெகோவாவின் “பட்டயத்தை” விலக்கிட முடியாது என்று எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் தொடர்ந்து காண்பிக்கிறது. (எசேக்கியேல் 21:18-22ஐ வாசிக்கவும்.) நேபுகாத்நேச்சார் பேய்த்தனத்துக்குரிய நிமித்தம் பார்ப்பவனாயிருந்தாலும், பாபிலோனிய அரசன் பலவீனமான அம்மோனியரின் தலைநகராகிய ரப்பாவுக்கு எதிராக அல்ல, எருசலேமுக்கு எதிராகச் செல்லும்படியாக யெகோவா பார்த்துக்கொள்வார். நேபுகாத்நேச்சார் அம்புகளின் உறையிலிருந்து எருசலேமுக்குக் குறிக்கப்பட்ட ஓர் அம்பைத் தெரிந்துக்கொள்வான். அவன் வீட்டு விக்கிரகங்களை (மனித உருகொண்ட சிறிய விக்கிரகங்களை) பயன்படுத்தி, கொல்லப்பட்ட ஒரு மிருகத்தின் ஈரலால் குறிபார்ப்பான். குறிபார்த்தபோதிலும், அவன் யூதாவின் தலைநகருக்குச் செல்லும் வழியைத் தெரிந்துக்கொண்டு அதை முற்றுகையிடுவான். நேபுகாத்நேச்சார் சிதேக்கியா அரசனுடன் ஒரு உடன்படிக்கை பண்ணினான் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் உடன்படிக்கையை முறித்ததால், சிதேக்கியாவும் மற்ற யூதர்களும் “கைப்பிடியாய்ப் பிடிக்கப்பட்டு” பாபிலோனுக்குச் சிறைக்கைதிகளாகக் கொண்டுச்செல்லப்பட்டார்கள்.—எசேக்கியேல் 21:23,24.
16 கலகஞ்செய்ததன் காரணமாக, சிதேக்கியா தன்னைத்தானே மரணத்துக்கேதுவாகக் காயப்படுத்திக் கொண்டான். (எசேக்கியேல் 21:25-27ஐ வாசிக்கவும்.) யூதாவின் அரசன் ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டபோது, ராஜ பாகையும் கிரீடமும் கழற்றப்பட்டது. (2 இராஜாக்கள் 25:1-7) பொ.ச.மு. 607-ல் அழிக்கப்பட்டதன் மூலம் “உயர்ந்த” யூதா ராஜ்யம் ‘தாழ்த்தப்பட்டது.’ இப்படியாக “தாழ்ந்த” புறஜாதியாரின் ராஜ்யங்கள் “உயர்த்தப்பட்டன”, அதாவது கடவுளுடைய ராஜ்யத்தின் தலையிடுதல் இல்லாமல் பூமியை ஆள அனுமதிக்கப்பட்டன. (உபாகமம் 28:13, 15, 36, 43, 44) இப்படியாக “புறஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்”—புறஜாதியாரின் காலங்கள்—ஆரம்பமாயின. இது ‘உரிமைக்காரரான’ இயேசு கிறிஸ்துவுக்குக் கடவுள் 1914-ல் ஆட்சி பொறுப்பைக் கொடுத்தபோது முடிவுக்கு வந்தது. (லூக்கா 21:20-24; சங்கீதம் 110:1, 2; தானியேல் 4:15-28; 7:13, 14) இயேசு பரலோக சிங்காசனத்தில் வீற்றிருப்பதால், பூர்வ எருசலேம் அடையாளப்படுத்திய தாவீதின் சட்டப்பூர்வமான வாரீசின் ராஜ்யத்தைப் புறஜாதியார் மிதிக்க முடியாது.—எபிரெயர் 12:22.
17 அம்மோனியரின் தலைநகராகிய ரப்பா நேபுகாத்நேச்சாரின் பட்டயத்துக்குத் தப்பிவிடும் என்று அம்மோனியரின் தீர்க்கதரிசிகள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இது “பொய்,” ஏனென்றால் அம்மோன் புத்திரரின் முழு தேசமும் பாழக்கப்படும். ரப்பா எருசலேமுக்குப் பின்பு அழிக்கப்பட்டது போல, நம்முடைய நாளில், தேசங்களின் அழிவு கிறிஸ்தவமண்டலத்தின் அழிவைப் பின்தொடரும் என்று கடவுள் தீர்மானித்திருக்கிறார்.—எசேக்கியேல் 21:28-32; வெளிப்படுத்துதல் 16:14-16.
எருசலேம் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டப்பட்டது
18 யெகோவாவின் வார்த்தையை மீண்டும் பேசுபவனாக, இரத்தஞ்சிந்துதல், விக்கிரகாரதனை, இச்சையடக்கமற்ற நடத்தை, ஏமாற்றுதல் மற்றும் கடவுளை மறந்துவிட்ட செயல் போன்ற பாவங்களுக்காக எசேக்கியேல் எருசலேமைக் கண்டனம் செய்தான். இரத்தஞ்சிந்தின குற்றமுடைய அவளுடைய பிரதானிகள் நீதிவிசாரணைக்குரிய கொலையைச் செய்யுமளவுக்குத் தங்கள் அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்தார்கள், மற்றும் அவர்கள்மீது பொய்க் குற்றஞ்சாட்டு எழுப்புவதன் மூலம் பழிதூற்றுபவர்கள் பகைவர்களின் விரோதத்துக்குத் தப்பியவர்களாயிருந்தார்கள். இந்தக் குற்றத்துக்காக எருசலேமின் குடிகள் சிதறடிக்கப்படுவார்கள். இந்தக் காரியத்தை அறிந்திருப்பது, அதிகார துர்ப்பிரயோகம், இச்சையடக்கமற்ற நடத்தை, பழிதூற்றுதல் போன்ற மற்ற வினைமையான பாவங்களை நாம் தவிர்க்க வேண்டும் என்ற நம்முடைய தீர்மானத்தைப் பலப்படுத்துவதாயிருக்கவேண்டும்.—எசேக்கியேல் 22:1-16.
19 யெகோவா யூதா மக்களை ஓர் உலைக்களத்திலே உருக்கிடுவார். புடமிடும் வகையில் அவர்களைச் சுத்திகரிப்பதற்காக அல்ல, ஆனால் தம்முடைய கோபமாகிய அக்கினியில் அவர்களை உருக்கிட அப்படிச் செய்கிறார். (எசேக்கியேல் 22:17-22) சூழ்ச்சி செய்யும் தீர்க்கதரிசிகள், பேராசை மிகுந்த பிரபுக்கள் மற்றும் அந்த அநீதியான மக்கள் இந்த நியாயத்தீர்ப்புக்குப் பாத்திரமுள்ளவர்களாயிருந்தனர். அனைவரும் கண்டனம் செய்யப்பட்டார்கள். அவர்களில் ஒரு மனிதன்கூட நீதிக்காக நிற்கவில்லையாதலால், கடவுள் அவர்களைத் தம்முடைய கோபத்தின் அக்கினியால் நிர்மூலமாக்குவார்.—எசேக்கியேல் 22:23-31.
தண்டனைக்குத் தகுதியாயிருந்தது
20 கடவுளுடைய கோபம் ஊற்றப்படும் காரியம் அடுத்ததாக ஆவிக்குரிய விபச்சாரக் குற்றமுடைய இரண்டு பெண்கள்மீது கடவுள் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் காரியத்தின் மூலம் சித்தரிக்கப்படுகிறது. அவர்களில் ஒருத்தி அகோலாள், சமாரியாவைத் தலைநகராகக் கொண்டிருந்த பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யம். அவள் மூத்தவள், ஏனென்றால் யாக்கோபின் மூத்த குமாரர்களாகிய ரூபன், சிமியோன் வழியில் வந்தவர்கள் உட்பட இஸ்ரவேலின் பெரும்பாலான கோத்திரங்களாலானது. அவளுடைய தங்கை அகோலிபாள், எருசலேமைத் தனது தலைநகராகக் கொண்ட இரண்டு கோத்திர ராஜ்யம். அகோலா என்பதற்கு “அவளுடைய கூடாரம்” என்று பொருள். அகோலிபாள் என்பதற்கு “அவளில் என் கூடாரம் இருக்கிறது” என்ற பொருள் பொருத்தமாயிருந்தது, ஏனென்றால் கடவுளுடைய கூடாரம், அல்லது ஆலயம் யூதாவிலிருந்தது.—எசேக்கியேல் 23:1-4.
21 பொ.ச.மு. 740-ல் அசீரியர்களால் முறியடிக்கப்பட்டபோது அகோலாள் (இஸ்ரவேல்) இல்லாமற் போனாள். அவள் என்ன செய்திருந்தாள்? (எசேக்கியேல் 23:5-7-ஐ வாசிக்கவும்.) அகோலாள் உண்மையற்றவளாய் பாதுகாப்புக்காக அரசியல் கூட்டு சேர்ந்தாள், ஆனால் இது அவளுடைய கூட்டு அரசுகளின் பொய் வணக்கத்தைப் பின்பற்றச் செய்தது; இப்படியாக “நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப் போனாள்.” அகோலாளின் ஆவிக்குரிய விபச்சாரப்போக்கிலிருந்து ஒரு எச்சரிப்பைப் பெறுகிறவர்களாக, நம்முடைய விசுவாசத்தைச் அழித்துப்போடக்கூடிய உலகப்பிரகாரமான தொடர்புகளுக்கெதிராக நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.—யாக்கோபு 4:4; 1 யோவான் 2:15-17.
22 தன்னுடைய சகோதரியைவிட அதிக மோசமான பாவ வழியை மேற்கொண்டதால், அகோலிபாள் (யூதா) பொ.ச.மு. 607-ல் பாபிலோனியரின் கைகளில் தேசியளவு அழிவை அடைந்தது. அவளுடைய பிள்ளைகள் பட்டயத்துக்கு இறையானார்கள், அல்லது சிறைப்பிடித்துச்செல்லப்பட்டார்கள், மற்றும் புறஜாதிகளுக்குள் அவமானப்படுத்தப்பட்டார்கள். அகோலாள் மற்றும் அகோலிபாள் போன்று, கிறிஸ்தவமண்டலம் ஆவிக்குரிய விபச்சாரத்தில் ஈடுபடுகிறாள், தான் வணங்கிவருவதாக உரிமைபாராட்டும் கடவுளுடைய பார்வையில் அது ஒரு பாவச் செயல். புராட்டஸ்டாண்ட் மதம் அநேக பிரிவுகளையுடையதாய், தன்னுடைய மூத்த சகோதரியாகிய ரோமன் கத்தோலிக்க மதத்தைவிட அதிகமாக உலகத்தின் வர்த்தக மற்றும் அரசியல் வல்லமைகளால் தன்னைக் கறைபடுத்தியிருக்கிறாள். எனவே கிறிஸ்தவமண்டலம் முழுவதும் அழிக்கப்படுவதை யெகோவா பார்த்துக்கொள்வார். பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் பிரதான பாகமாகக் கிறிஸ்தவமண்டலம் இருக்கிறது. இவளுடைய கூட்டாளிகள் வெகு சீக்கிரத்தில் அவள் மீது பாய்ந்து கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவர் என்பதை நாம் மனதில் கொண்டிருந்தால், தவறான உலகத் தொடர்பை நாம் வெறுத்தொதுக்குவதற்கான நம்முடைய தீர்மானத்தை அது பலப்படுத்திடும்.—எசேக்கியேல் 23:8-49; வெளிப்படுத்துதல் 17:1-6, 15-18.
மாய்மாலக்காரரின் திகைப்பு
23 நேபுகாத்நேச்சார் டிசம்பர் பிற்பகுதியில் எருசலேமின் 18 மாத முற்றுகையைத் துவங்கிய அதே நாளில் (தேபேத் 10, பொ.ச.மு. 609) கடவுள் எசேக்கியேலுக்கு உபமானத்துடன்கூடிய இன்னொரு செய்தியைக் கொடுத்தார். அதில் முற்றுகையிடப்பட்ட எருசலேம் ஒரு கொப்பரையால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது, அதில் நகரத்தின் குடிகள் ‘வேகவைக்கப்பட்டன.’ ஒழுக்கக்கேட்டுக்குரிய அசுத்தம் அந்த அடையாள அர்த்தமுள்ள கொப்பரையில் “துரு” பிடிக்கச் செய்திருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எருசலேமிலிருந்து “கண்டங்கண்டமாகக்” கொண்டுபோகப்படுவர், அவள் அழிந்துபோகுமட்டும் அவளுடைய வேதனை குறையாது. அவளுடைய பொல்லாத செயல்களினிமித்தம் யெகோவா எருசலேமை நியாயந்தீர்த்தார், அவள் அழிக்கப்படவேண்டியவளாயிருந்தாள். அப்படியே கிறிஸ்தவமண்டலமும் அழிக்கப்படவேண்டும்.—எசேக்கியேல் 24:1-14.
24 அடுத்து, எசேக்கியேல் அசாதாரணமான ஒரு விதத்தில் செயல்பட வேண்டியிருந்தது. (எசேக்கியேல் 24:15-18-ஐ வாசிக்கவும்.) தன்னுடைய மனைவி மரித்தபோது தீர்க்கதரிசி ஏன் துக்கிக்கக் கூடாது? எருசலேமும், அவளுடைய குடிகளும், அதன் ஆலயமும் அழிக்கப்படுகையில் யூதர்கள் எவ்வளவாய்த் திகைத்துப்போவார்கள் என்பதைக் காண்பிப்பதற்காக. அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து எசேக்கியேல் ஏற்கனவே ஏராளமாகக் கூறிவிட்டான், மற்றும் எருசலேமின் வீழ்ச்சி குறித்து அவனுக்கு அறிவிக்கப்படும்வரை கடவுளுடைய செய்தியை அவன் திரும்பவும் பேசமாட்டான். அதுபோல, கிறிஸ்தவமண்டலமும் அவளுடைய மாய்மாலமான மத விசுவாசிகளும் தங்களுடைய அழிவைக் காணும்போது திகைத்துப்போவார்கள். “மிகுந்த உபத்திரவம்” துவங்கிய பின்பு, அவளுடைய அழிவைக் குறித்து அபிஷேகம்பண்ணப்பட்ட காவற்கார வகுப்பு சொல்லியவை போதுமானதாக இருக்கும். (மத்தேயு 24:21) ஆனால் கடவுளுடைய “பட்டயம்” கிறிஸ்தவமண்டலம் மீது இறங்குகையில், திகைத்துநிற்கும் அப்படிப்பட்ட மத விசுவாசிகளும் மற்றவர்களும் ‘அவர் யெகோவா என்று அறிந்துகொள்ள வேண்டியதாயிருக்கும்.’—எசேக்கியேல் 24:19-27. (w88 9⁄15)
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவா யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் எதிராகத் தம்முடைய “பட்டயத்தை” பயன்படுத்திய போது என்ன நிகழ்ந்தது?
◻ சிதேக்கியா நேபுகாத்நேச்சாரிடம் உடன்படிக்கையை முறித்த காரியத்தால் நாம் எப்படி பாதிக்கப்படவேண்டும்?
◻ கடவுளுடைய “பட்டயம்” எதைக் குறிக்கிறது?
◻ யெகோவாவின் “பட்டயத்தை” எவரும் திருப்பிவிட முடியாது என்பதை நேபுகாத்நேச்சாரை உட்படுத்திய எந்த சம்பவம் காண்பிக்கிறது?
◻ எசேக்கியேல் 21:25-27-ன் நிறைவேற்றமாக என்ன சம்பவித்தது?
◻ தன்னுடைய மனைவி மரித்தபோது எசேக்கியேல் துக்கத்தை வெளிக்காட்டாதது எதற்கு முன்நிழலாக இருக்கிறது?
[கேள்விகள்]
1. யெகோவா யூதாவிலும் இஸ்ரவேலிலும் தம்முடைய பட்டயத்தை யாருக்கு எதிராகப் பயன்படுத்தினார்?
2. யெகோவா தம்முடைய “பட்டயத்தைக்” குறித்து என்ன சொன்னார்?
3. பாபிலோனியாவில் சிறையிருப்பிலிருந்தவர்களிடம் எசேக்கியேல் என்ன சொன்னான்? இதன் நவீன நாளைய இசைவுப் பொருத்தம் என்ன?
4. எசேக்கியேலின் அடையாள அர்த்தமுள்ள செயல்களுக்கு சிறையிருப்பிலிருந்த யூதர்கள் எவ்விதம் பிரதிபலித்தார்கள்?
5. “யெகோவாவின் நாள்” அருகாமையிலிருந்ததால், என்ன கண்டனங்கள் பொருத்தமாயிருந்தன?
6. வழிதவறிய யூதா மக்களை எந்த மனிதனாவது இரட்சிக்க முடியுமா? இது நமக்கு போதிப்பது என்ன?
7. யூதா எதற்கு ஒப்பிடப்பட்டது? என்றாலும் கடவுள் உண்மையாய் நிரூபித்தவர்களிடம் எதை ஏற்படுத்துவார்?
8. (எ) பாபிலோனும் எகிப்தும் எதற்கு ஒப்பிடப்பட்டன? (பி) சிதேக்கியா உடன்படிக்கையை முறித்தது நம்மை எவ்விதத்தில் பாதிக்க வேண்டும்?
9, 10. (எ) எசேக்கியேல் 17:22-24-ல் என்ன தீர்க்கதரிசனம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது? ஆனால் அதன் நிறைவேற்றத்திலிருந்து நாம் நன்மை பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? (பி) நம்முடைய நடத்தையின் விளைவுகளுக்கு உத்திரவாதியாயிருப்பது யார்?
11. யூதாவின் அரசர்கள் யாருக்கு ஒப்பிடப்பட்டார்கள்? யெகோவாவின் “பட்டயத்தால்” வெட்டப்படும்போது அவளுக்கு என்ன சம்பவிக்கும்?
12. (எ) அவர்களுடைய முன்னோர்களைப்போல, எசேக்கியேலின் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்ன தவறான செயலில் ஈடுபட்டார்கள்? (பி) எசேக்கியேல் ‘உவமைகளையல்லவோ சொல்லுகிறான்’ என்று ஏன் மக்கள் அவனைக் கேட்டார்கள்? இது நமக்கு என்ன எச்சரிப்பை அளிக்கிறது?
13. கடவுளுடைய “பட்டயம்” எதைக் குறிக்கிறது? பட்டயம் பயன்படுத்தப்பட்டபோது “எல்லா மாம்சமும்” எதை அறிந்துகொள்ள வேண்டியதாயிருந்தது?
14. (எ) எசேக்கியேலைப் போல, யெகோவாவின் அபிஷேகம்பண்ணப்பட்ட சாட்சிகள் எதற்கு கவனத்தைத் திருப்புகின்றனர்? (பி)கிறிஸ்தவமண்டலத்தின் ஆட்சியாளர்கள் கடவுளுடைய “பட்டயத்துக்குத்” தப்பமாட்டார்கள் என்பதை எது குறிப்பிட்டுக் காண்பிக்கிறது?
15. யெகோவாவின் பட்டயத்தை எவரும் திருப்பிவிட முடியாது என்பதை நேபுகாத்நேச்சாரை உட்படுத்திய எந்த சம்பவம் காண்பிக்கிறது?
16 (எ) எசேக்கியேல் 21:25-27-ன் நிறைவேற்றமாக என்ன சம்பவித்தது? (பி) புறஜாதிகளின் காலங்கள் எப்பொழுது ஆரம்பமாயிற்று? அவை எந்த சம்பவத்துடன் முடிவடைந்தது?
17. அம்மோனிய தீர்க்கதரிசிகளால் என்ன “பொய்” அறிவிக்கப்பட்டது?
18. என்ன பாவத்திற்காக எசேக்கியேல் எருசலேமைக் கண்டனம் செய்தான்? இதற்கு நாம் எவ்விதம் பிரதிபலிக்க வேண்டும்?
19. யூதா மக்கள் எவ்விதமாக உருக்கப்படுவார்கள்? அவர்களுடைய அழிவு ஏன் தகுதியானதாயிருந்தது?
20. கடவுளுடைய கோபம் எந்த அடையாள அர்த்தமுள்ள பெண்கள் மீது ஊற்றப்பட்டது? அவர்களை அடையாளங்காட்டும் வகையில் நீங்கள் என்ன விளக்கத்தை அளிக்கக்கூடும்?
21. அகோலாள் எதில் பாதுகாப்பை நாடினாள்? நமக்கு என்ன எச்சரிப்பை அளிக்கிறது?
22. அகோலாள் மற்றும் அகோலிபாள் போல, கிறிஸ்தவமண்டலம் என்ன செய்கிறது? அவளுக்கு என்ன நேரிடும்?
23. பொ.ச.மு. 609 டிசம்பர் கடைசியில் கடவுள் எசேக்கியேலுக்குக் கொடுத்த செய்தியில் எருசலேம் எப்படி பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது? அவளுக்கு என்ன நேரிடும்?
24. (எ) தன்னுடைய மனைவி மரித்தபோது எசேக்கியேல் ஏன் துக்கத்தை வெளிப்படுத்தவில்லை? (பி) யெகோவாவின் “பட்டயம்” கிறிஸ்தவமண்டலத்தின் மீது இறங்கும்போது, அவள் எப்படி பிரதிபலிப்பாள்? அவள் என்ன அறியவருவாள்?
[பக்கம் 18-ன் படம்]
சிதேக்கியா அரசன் நேபுகாத்நேச்சாரிடம் உடன்படிக்கையை முறித்து மற்றும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டபோது எந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற ஆரம்பித்தது?