-
“அவர்களை ஒரே தேசமாக்குவேன்”தூய வணக்கம்—பூமியெங்கும்!
-
-
3. (அ) “யூதாவுக்கு” என்று எழுதப்பட்ட கோல் எதை அடையாளப்படுத்தியது? (ஆ) ‘எப்பிராயீமைக் குறிக்கும் கோல்’ ஏன் பத்துக் கோத்திர ராஜ்யத்தை அடையாளப்படுத்தியது?
3 இரண்டு கோல்களை எடுக்கும்படி எசேக்கியேலிடம் யெகோவா சொன்னார். ஒரு கோலில் “யூதாவுக்கு” என்றும் மற்றொன்றில், ‘எப்பிராயீமைக் குறிக்கும் யோசேப்பின் கோல்’ என்றும் எழுதும்படி சொன்னார். (எசேக்கியேல் 37:15, 16-ஐ வாசியுங்கள்.) இந்த இரண்டு கோல்களும் எதைக் குறித்தன? “யூதாவுக்கு” என்று எழுதப்பட்ட கோல், யூதாவும் பென்யமீனும் சேர்ந்த இரண்டு கோத்திர ராஜ்யத்தை அர்த்தப்படுத்தியது. யூத வம்சத்தில் வந்த ராஜாக்கள் அந்த இரண்டு கோத்திரங்களையும் ஆட்சி செய்தார்கள். அதோடு குருமார்கள், எருசலேமிலிருந்த ஆலயத்தில் சேவை செய்ததால், அவர்களும் யூதா ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். (2 நா. 11:13, 14; 34:30) அதனால், தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாக்களும் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த குருமார்களும் யூதா ராஜ்யத்தில் இருந்தார்கள். ‘எப்பிராயீமைக் குறிக்கும் கோல்’ இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தை அர்த்தப்படுத்தியது. எந்த விதத்தில் அந்தக் கோல் எப்பிராயீமோடு சம்பந்தப்பட்டிருந்தது? பத்துக் கோத்திர ராஜ்யத்தின் முதல் ராஜாவான யெரொபெயாம், எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தார். காலப்போக்கில், எப்பிராயீம் இஸ்ரவேல் தேசத்தின் முக்கியமான கோத்திரமாக ஆனது. (உபா. 33:17; 1 ரா. 11:26) இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தாவீதின் வம்சத்திலுள்ள ராஜாக்களோ லேவி கோத்திரத்தைச் சேர்ந்த குருமார்களோ இஸ்ரவேலின் பத்து கோத்திர ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவில்லை.
-
-
இரண்டு கோல்களை ஒன்றுசேர்ப்பதுதூய வணக்கம்—பூமியெங்கும்!
-
-
தகவல் பெட்டி 12அ
இரண்டு கோல்களை ஒன்றுசேர்ப்பது
ஒரு கோலில் “யூதாவுக்கு” என்றும் மற்றொன்றில், ‘எப்பிராயீமைக் குறிக்கும் யோசேப்பின் கோல்’ என்றும் எழுதும்படி எசேக்கியேலிடம் யெகோவா சொல்கிறார்.
“யூதாவுக்கு”
பூர்வ காலத்தில்
இரண்டு கோத்திர யூதா ராஜ்யம்
நம் காலத்தில்
பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்
‘எப்பிராயீமைக் குறிக்கும் யோசேப்பின் கோல்’
பூர்வ காலத்தில்
பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யம்
நம் காலத்தில்
வேறே ஆடுகள்
-