-
மேசியா தோன்றும் காலத்தை தெரிவித்தல்தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
-
-
23 70-ஆம் வாரத்தில் என்ன நிறைவேறவிருந்தது? “மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை [“பரிசுத்தத்திலும் பரிசுத்தமானதை,” NW] அபிஷேகம்பண்ணுகிறதற்கும்” “எழுபது வாரங்கள்” குறிக்கப்பட்டிருந்ததாய் காபிரியேல் சொல்லியிருந்தார். இது நிறைவேற “பிரபுவாகிய மேசியா” இறக்க வேண்டியிருந்தது. எப்போது? காபிரியேல் சொன்னார்: “அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல. . . . அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்.” (தானியேல் 9:26அ, 27அ) முக்கிய காலக்கட்டம், “அந்த வாரம் பாதி சென்ற” சமயம், அதாவது, கடைசி வார-வருடத்தின் மத்திபம்.
24 இயேசு கிறிஸ்துவின் ஊழியம் பொ.ச. 29-ன் பிற்பகுதியில் ஆரம்பித்து, மூன்றரை வருடங்கள் நீடித்தது. முன்னறிவிக்கப்பட்டபடியே, பொ.ச. 33-ன் ஆரம்பத்தில், கிறிஸ்து ‘சங்கரிக்கப்பட்டார்.’ அப்போது அவர் கழுமரத்தில் அறையப்பட்டு, தம் மானிட உயிரை மனிதவர்க்கத்திற்கு மீட்கும்பொருளாக அளித்தார். (ஏசாயா 53:8; மத்தேயு 20:28) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தாம் பலிகொடுத்த மனித உயிரின் மதிப்பை பரலோகத்தில் கடவுளிடம் சமர்ப்பித்தபோது, நியாயப்பிரமாணம் தேவைப்படுத்திய மிருக பலிகளும் காணிக்கைகளும் முடிவுக்கு வந்தன. பொ.ச. 70-ல் எருசலேம் ஆலயம் அழிக்கப்படும்வரை யூத ஆசாரியர்கள் தொடர்ந்து பலிகளை செலுத்திவந்தபோதிலும், அவற்றை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவை எல்லாவற்றிற்கும் பதிலாக எல்லா காலத்திற்கும் ஒரே சிறந்த பலி செலுத்தப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: ‘[கிறிஸ்து] பாவங்களுக்காக ஒரேபலியைச் செலுத்தினார். . . . ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.’—எபிரெயர் 10:12, 14.
-
-
மேசியா தோன்றும் காலத்தை தெரிவித்தல்தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
-
-
29 எருசலேம் திரும்பக் கட்டப்படும் என காபிரியேல் முன்னரே சொல்லியிருந்தார். இப்போது திரும்பக் கட்டப்பட்ட அந்நகரமும் அதன் ஆலயமும் அழியவிருப்பதை இவ்வாறு முன்னறிவிக்கிறார்: “நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. . . . அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான்; நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும்.” (தானியேல் 9:26ஆ, 27ஆ) இந்நாசம் ‘எழுபது வாரங்களுக்குப்’ பிற்பாடே நடக்கும் என்றாலும், அந்த இறுதி ‘வாரத்தின்போது’ நடந்தவற்றின் நேரடி விளைவாக இருக்கும். அவ்வாரத்தில் யூதர்கள் கிறிஸ்துவை மறுதலித்து அவரைக் கொன்றார்கள்.—மத்தேயு 23:37, 38.
30 பொ.ச. 66-ல் சிரியாவின் ஆளுநரான செஸ்டியஸ் கேலஸின் தலைமையின்கீழ் ரோம சேனைகள் எருசலேமை சூழ்ந்தன என்று சரித்திர பதிவுகள் காட்டுகின்றன. யூதர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தியபோதிலும், ரோம படைகள் தங்கள் விக்கிரகாராதனைக்குரிய கொடிகளை அல்லது சின்னங்களை எடுத்துக்கொண்டு நகருக்குள் நுழைந்து வடக்கேயிருந்த ஆலய சுவரின்கீழ் சுரங்கம்போல் தோண்ட ஆரம்பித்தன. அங்கே நின்ற அவை, முழுமையான பாழ்க்கடிப்பை உண்டாக்கும் ‘அருவருப்பான’ காரியமாயின. (மத்தேயு 24:15, 16) தளபதி டைட்டஸின் தலைமையில் ரோமர்கள் “ஜலப்பிரவாகம்போல” திரண்டுவந்து இந்நகரையும் அதன் ஆலயத்தையும் பொ.ச. 70-ல் நாசமாக்கினார்கள். எதுவும் அவர்களை தடுக்க முடியவில்லை. ஏனெனில் இது கடவுளால் தீர்மானிக்கப்பட்டது அல்லது “நியமிக்கப்பட்டது.” எதையும் காலத்தோடு செய்யும் யெகோவா, தாம் சொல் தவறாதவரென மீண்டும் நிரூபித்துவிட்டார்!
-