-
“கோகுவே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன்”தூய வணக்கம்—பூமியெங்கும்!
-
-
8 “வடதிசை ராஜா.” (தானியேல் 11:40-45-ஐ வாசியுங்கள்.) தானியேல், தன்னுடைய காலத்திலிருந்து நம்முடைய காலம்வரையுள்ள உலக வல்லரசுகளைப் பற்றி முன்னறிவித்தார். அதோடு, எதிரும் புதிருமாக இருக்கும் ஆட்சியாளர்களைப் பற்றியும், அதாவது “தென்திசை ராஜா” மற்றும் “வடதிசை ராஜா” பற்றியும், அந்தத் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிட்டார். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பல நூற்றாண்டுகளாகவே பல்வேறு தேசங்கள் போர் செய்திருக்கின்றன. அந்தக் காலக்கட்டத்தில், பல ராஜாக்கள் அல்லது தேசங்கள் இந்த இரண்டு ராஜாக்களுக்கு அடையாளமாக இருந்திருக்கிறார்கள். “முடிவு காலத்தில்,” வடதிசை ராஜா தொடுக்கப்போகும் கடைசிப் போர் பற்றி தானியேல் இப்படிச் சொன்னார்: “[அவன்] பலரை அழிக்கவும் ஒழித்துக்கட்டவும் மிகுந்த ஆவேசத்தோடு புறப்பட்டுப் போவான்.” யெகோவாவை வணங்குகிறவர்கள்தான் வடதிசை ராஜாவின் முக்கிய குறியாக இருக்கிறார்கள்.c ஆனால், மாகோகு தேசத்தின் கோகுவைப் போலவே இந்த வடதிசை ராஜாவும், கடவுளுடைய மக்களுக்கு எதிரான தாக்குதலில் தோல்வி அடைந்து, “தன் முடிவைச் சந்திப்பான்.”
-
-
“கோகுவே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன்”தூய வணக்கம்—பூமியெங்கும்!
-
-
c வடதிசை ராஜா கடவுளுடைய மக்களைக் குறிவைப்பான் என்று தானியேல் 11:45 காட்டுகிறது. ஏனென்றால், “பெருங்கடலுக்கும் [மத்தியதரைக் கடல்] சிங்காரமான பரிசுத்த மலைக்கும் [ஒருகாலத்தில் அங்குதான் கடவுளுடைய ஆலயம் இருந்தது. அங்குதான், கடவுளுடைய மக்கள் கடவுளை வணங்கினார்கள்] இடையில் தன்னுடைய ராஜ கூடாரங்களைப் போடுவான்” என்று அது சொல்கிறது.
-