-
‘அவள் தன் இருதயத்தில் வைத்து, சிந்தனை பண்ணினாள்’காவற்கோபுரம்—2009 | ஜனவரி 1
-
-
பெத்லகேமை நோக்கி
இப்படிப் பயணம் போவது யோசேப்பும் மரியாளும் மட்டுமல்ல. தேசத்திலுள்ள அனைவரும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டுமென அண்மையில்தான் அகஸ்து ராயன் ஆணை பிறப்பித்திருந்தான். எனவே, அவரவருடைய சொந்த ஊருக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. யோசேப்பு என்ன செய்தார்? ‘யோசேப்பு தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியால், . . . கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்’ என்று பதிவு சொல்கிறது.—லூக்கா 2:1–5.
இத்தருணத்தில் ராயன் இப்படி உத்தரவிட்டது எதேச்சையாக நடந்த சம்பவமல்ல. பெத்லகேமில் மேசியா பிறப்பார் என சுமார் ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஒரு தீர்க்கதரிசனம் எழுதப்பட்டிருந்தது. நாசரேத்திலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் பெத்லகேம் என்ற பட்டணம் இருந்தது. ஆனால், மேசியா தோன்றும் ஊரோ ‘எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேம்’ என தீர்க்கதரிசனம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டது. (மீகா 5:2) தென் திசையில் வீற்றிருந்த அந்த பெத்லகேம் குக்கிராமத்திற்கு இன்றைய சாலைகள் வழியாகச் சென்றால் நாசரேத்திலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரம் மேல்நோக்கி பயணம் செய்ய வேண்டியிருக்கும். அந்த பெத்லகேமுக்குத்தான் யோசேப்பு போகவேண்டியிருந்தது. ஏனென்றால், அதுதான் அவருடைய முன்னோரான தாவீது ராஜாவின் பூர்வீகம்—யோசேப்பும் அவருடைய துணைவியாரும் அவருடைய வழி வந்தவர்களே.
-
-
‘அவள் தன் இருதயத்தில் வைத்து, சிந்தனை பண்ணினாள்’காவற்கோபுரம்—2009 | ஜனவரி 1
-
-
யோசேப்பின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடக்க மரியாளை வேறெதுவும் உந்துவித்திருக்கலாம்? பெத்லகேமில் மேசியா பிறப்பார் என்ற தீர்க்கதரிசனத்தை அவள் அறிந்திருந்தாளா? பைபிள் இதற்குப் பதிலளிப்பதில்லை, என்றாலும் அன்றைய மதத் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கலாம் என்ற உண்மையை நாம் ஒதுக்கிவிட முடியாது. (மத்தேயு 2:1–7; யோவான் 7:40–42) வேதவசனங்களை மரியாள் நன்றாகவே அறிந்திருந்தாள். (லூக்கா 1:46–55) மரியாள் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு பயணத்திற்கு ஒத்துக்கொண்டாளா அல்லது ராயனுடைய உத்தரவின் பேரில் அப்படிச் செய்தாளா அல்லது யெகோவா உரைத்த தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்காக அந்த முடிவை ஆதரித்தாளா அல்லது இந்த எல்லா விஷயங்களின் அடிப்படையில் பயணத்திற்கு சம்மதம் தெரிவித்தாளா என்று நமக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும் அவள் நமக்கு ஓர் ஆதர்ச முன்மாதிரி. தாழ்மையும் கீழ்ப்படிதலும் உள்ள ஆண்களையும் பெண்களையும் யெகோவா உயர்வாக மதிக்கிறார். நம் காலத்தில், கீழ்ப்படிந்து நடப்பதை பெரும்பாலோர் மதிக்காவிட்டாலும் மரியாளுடைய உதாரணம் எங்குமுள்ள உண்மை மனிதருக்கு கலங்கரைவிளக்கமாக உயர்ந்து நிற்கிறது.
-