-
“எனக்குக் காத்திருங்கள்”காவற்கோபுரம்—1996 | மார்ச் 1
-
-
13. மோவாப், அம்மோன், அசீரியா ஆகியவற்றிற்கு எதிராக என்ன நியாயத்தீர்ப்பு செய்தியை செப்பனியா அறிவித்தார்?
13 தம்முடைய தீர்க்கதரிசியாகிய செப்பனியாவின் மூலமாக, தம்முடைய ஜனங்களை மோசமாக நடத்தியிருந்த தேசங்களுக்கு எதிராக கோபத்தையும்கூட யெகோவா வெளிப்படுத்தினார். அவர் அறிவித்தார்: “மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன். ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப்போலுமாகி, காஞ்சொறி படரும் இடமும், உப்புப்பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும் . . . என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார். அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்.”—செப்பனியா 2:8, 9, 13.
14. அந்நிய தேசத்தார் இஸ்ரவேலர்களுக்கு எதிராகவும் அவர்களுடைய கடவுளாகிய யெகோவாவிற்கு எதிராகவும் ‘பெருமைபாராட்டினர்’ என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
14 மோவாபும் அம்மோனும் இஸ்ரவேலின் பரம்பரை விரோதிகளாக இருந்தனர். (ஒப்பிடுக: நியாயாதிபதிகள் 3:12-14.) பாரிஸிலுள்ள லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் மோவாபியக் கல்லில், மோவாபிய ராஜாவாகிய மேஷாவின் தற்புகழ்ச்சியான கூற்று பொறிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய கடவுளாகிய காமோசின் உதவியைக் கொண்டு அநேக இஸ்ரவேல் நகரங்களை கைப்பற்றிக்கொண்டதைக் குறித்து அவர் செருக்குடன் விவரிக்கிறார். (2 இராஜாக்கள் 1:1) இஸ்ரவேலரின் பிராந்தியமாகிய காத் தேசத்தை தங்கள் கடவுளாகிய மில்கோமின் பேரிலே அம்மோனியர்கள் சுதந்தரித்துக்கொண்டதைக் குறித்து செப்பனியாவின் காலத்தில் வாழ்ந்த எரேமியா கூறினார். (எரேமியா 49:1, NW) அசீரியாவைப் பொறுத்தவரை, செப்பனியாவின் நாளுக்கு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே ராஜாவாகிய சல்மனாசார் V சமாரியாவை முற்றிகையிட்டுக் கைப்பற்றினார். (2 இராஜாக்கள் 17:1-6) சிறிது காலத்திற்குப் பின்பு, ராஜாவாகிய சனகெரிப் யூதாவை தாக்கி, அதனுடைய அரணான அநேக பட்டணங்களையும் கைப்பற்றி, எருசலேமைக்கூட பயமுறுத்தினான். (ஏசாயா 36:1, 2) அசீரிய ராஜாவின் பிரதிநிதி எருசலேம் சரணடையவேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது உண்மையில் யெகோவாவிற்கு விரோதமாய் அதிகமாக பெருமைபாராட்டினான்.—ஏசாயா 36:4-20.
-
-
“எனக்குக் காத்திருங்கள்”காவற்கோபுரம்—1996 | மார்ச் 1
-
-
15. தம்முடைய ஜனங்களுக்கு எதிராக பெருமைபாராட்டின தேசங்களின் கடவுட்களை யெகோவா எவ்வாறு அவமானப்படுத்துவார்?
15 மோவாப், அம்மோன், அசீரியா ஆகியவற்றை உள்ளிட்ட அநேக தேசங்களை சங்கீதம் 83 குறிப்பிடுகிறது. அவர்கள் இஸ்ரவேலுக்கு எதிராக அதிகமாய் பெருமைபாராட்டி, தற்பெருமையுடன் இவ்வாறு குறிப்பிட்டனர்: “அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள்.” (சங்கீதம் 83:4) சேனைகளின் யெகோவாவால் இந்த எல்லா அகந்தையுள்ள தேசங்களும் அவற்றின் கடவுட்களும் அவமானப்படுத்தப்படப் போவதாக தீர்க்கதரிசியாகிய செப்பனியா தைரியமாக அறிவித்தார். “அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும். கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.”—செப்பனியா 2:10, 11.
-
-
“எனக்குக் காத்திருங்கள்”காவற்கோபுரம்—1996 | மார்ச் 1
-
-
18. (அ) எருசலேமின்மீது தெய்வீக நியாயத்தீர்ப்பு எவ்வாறு நிறைவேற்றப்பட்டது, ஏன்? (ஆ) மோவாப் மற்றும் அம்மோனைக் குறித்த செப்பனியாவின் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?
18 யெகோவாவிற்கு காத்திருந்தவர்களாக தங்களை வைத்துக்கொண்ட அநேக யூதர்கள் யூதாவின்மீதும் எருசலேமின்மீதும் நிறைவேற்றப்பட்ட நியாயத்தீர்ப்புகளை பார்க்கும்படிக்கு உயிருடனும் இருந்தனர். எருசலேமைக் குறித்து செப்பனியா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார்: “இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ! அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது கர்த்தரை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை.” (செப்பனியா 3:1, 2) அவளுடைய உண்மையற்ற தன்மையின் காரணமாக, எருசலேம் பாபிலோனியர்களால் இரண்டுமுறை முற்றுகையிடப்பட்டு கடைசியாக பொ.ச.மு. 607-ல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. (2 நாளாகமம் 36:5, 6, 11-21) மோவாப் மற்றும் அம்மோனைக் குறித்ததில், யூத சரித்திராசிரியர் ஜோசிஃபஸின்படி, எருசலேமின் வீழ்ச்சிக்கு பிறகு ஐந்தாவது வருடத்தில், பாபிலோனியர்கள் அவர்கள்மீது போர் செய்து அவர்களை வெற்றிகொண்டனர். தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட விதமாக, அவை அதற்கு பிறகு மறைந்து போயின.
-