-
“எனக்குக் காத்திருங்கள்”காவற்கோபுரம்—1996 | மார்ச் 1
-
-
“எனக்குக் காத்திருங்கள்”
16. (அ) யெகோவாவின் நாள் நெருங்கிவருவது யாருக்கு சந்தோஷத்தின் ஒரு ஊற்றுமூலமாக இருந்தது, ஏன்? (ஆ) உண்மையுள்ள இந்த மீதியானோருக்கு தூண்டியெழுப்பக்கூடிய என்ன கட்டளை சென்றது?
16 யூதா மற்றும் எருசலேமின் தலைவர்களுக்கும் அநேக குடிமக்களுக்கும் மத்தியில் ஆவிக்குரிய மந்தமும், அடிப்படை மத நியமங்களில் உறுதிப்பாடின்மையும், விக்கிரகாராதனையும், ஊழலும் பொருளாசையும் நிலவியபோதிலும், தெளிவாகவே, சில உண்மையுள்ள யூதர்கள் செப்பனியாவின் எச்சரிக்கையூட்டும் தீர்க்கதரிசனங்களுக்கு செவிகொடுத்தார்கள். யூதாவின் பிரபுக்கள், நியாயாதிபதிகள் மற்றும் ஆசாரியர்களின் அருவருக்கத்தக்க பழக்கவழக்கங்களைக் குறித்து அவர்கள் கவலையுற்றிருந்தார்கள். செப்பனியாவின் அறிவிப்புகள், உத்தமமுள்ள இந்த நபர்களுக்கு ஆறுதலின் ஒரு ஊற்றுமூலமாக இருந்தன. யெகோவாவின் நாள் நெருங்கிவருவது அவர்களுக்கு வேதனைக்குக் காரணமாயிருப்பதற்கு மாறாக, சந்தோஷத்தின் ஒரு ஊற்றுமூலமாக இருந்தது, ஏனென்றால் இப்படிப்பட்ட அருவருப்பான பழக்கவழக்கங்களுக்கு அது ஒரு நிறுத்தத்தை கொண்டுவரும். உண்மையுள்ள இந்த மீதியானோர் யெகோவாவின் தூண்டியெழுப்பும் கட்டளைக்கு செவிகொடுத்தனர்: “ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்.”—செப்பனியா 3:8.
17. எப்போது, எப்படி செப்பனியாவின் நியாயத்தீர்ப்பு செய்திகள் தேசங்களின்மீது நிறைவேற ஆரம்பித்தன?
17 அந்த எச்சரிக்கைக்கு செவிகொடுத்தவர்கள் ஆச்சரியமடையவில்லை. செப்பனியாவுடைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைப் பார்க்க அநேகர் உயிருடனிருந்தனர். பொ.ச.மு. 632-ல், பாபிலோனியர்கள், மேதியர்கள், மேலும் வடக்கிலிருந்து வந்த படைகள், ஒருவேளை ஸ்கைதியர்கள், ஆகியோரின் கூட்டிணைப்பினால் நினிவே கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. வில் டுயூரன்ட் என்ற சரித்திராசிரியர் விவரிக்கிறார்: “நெபோபொலாஸரின் தலைமையில் பாபிலோனியர்களின் சேனையும், சையாக்சரிஸின் தலைமையில் மேதியர்களின் சேனையும், காகசஸ்ஸிலிருந்து ஸ்கைதியர்களின் நாடோடிக் கூட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டவையாய் திகைப்பூட்டும் சௌகரியத்துடனும் வேகத்துடனும் வடதிசையின் அரணை கைப்பற்றின. . . . ஒரே வீச்சில் அசீரியா சரித்திரத்திலிருந்து மறைந்துபோயிற்று.” செப்பனியா தீர்க்கதரிசனம் உரைத்தது சரியாகவே இதுதான்.—செப்பனியா 2:13-15.
18. (அ) எருசலேமின்மீது தெய்வீக நியாயத்தீர்ப்பு எவ்வாறு நிறைவேற்றப்பட்டது, ஏன்? (ஆ) மோவாப் மற்றும் அம்மோனைக் குறித்த செப்பனியாவின் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?
18 யெகோவாவிற்கு காத்திருந்தவர்களாக தங்களை வைத்துக்கொண்ட அநேக யூதர்கள் யூதாவின்மீதும் எருசலேமின்மீதும் நிறைவேற்றப்பட்ட நியாயத்தீர்ப்புகளை பார்க்கும்படிக்கு உயிருடனும் இருந்தனர். எருசலேமைக் குறித்து செப்பனியா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார்: “இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ! அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது கர்த்தரை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை.” (செப்பனியா 3:1, 2) அவளுடைய உண்மையற்ற தன்மையின் காரணமாக, எருசலேம் பாபிலோனியர்களால் இரண்டுமுறை முற்றுகையிடப்பட்டு கடைசியாக பொ.ச.மு. 607-ல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. (2 நாளாகமம் 36:5, 6, 11-21) மோவாப் மற்றும் அம்மோனைக் குறித்ததில், யூத சரித்திராசிரியர் ஜோசிஃபஸின்படி, எருசலேமின் வீழ்ச்சிக்கு பிறகு ஐந்தாவது வருடத்தில், பாபிலோனியர்கள் அவர்கள்மீது போர் செய்து அவர்களை வெற்றிகொண்டனர். தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட விதமாக, அவை அதற்கு பிறகு மறைந்து போயின.
19, 20. (அ) தமக்காக காத்திருந்தவர்களுக்கு எவ்வாறு யெகோவா வெகுமதி அளித்தார்? (ஆ) இந்த சம்பவங்கள் நமக்கு ஏன் அக்கறையூட்டுவதாக இருக்கின்றன, அடுத்த கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?
19 யெகோவாவிற்கு காத்திருந்தவர்களாக தங்களை வைத்துக்கொண்ட யூதர்களுக்கும் யூதர்களல்லாதவர்களுக்கும் செப்பனியாவுடைய தீர்க்கதரிசனத்தின் இந்த விவரங்களின் நிறைவேற்றமும் மற்ற விவரங்களின் நிறைவேற்றமும் விசுவாசத்தைப் பலப்படுத்தும் ஒரு அனுபவமாக இருந்தது. எரேமியா, எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக், யோனதாபின் குடும்பத்தாராகிய ரேகாபியர் ஆகியோர் யூதாவிற்கும் எருசலேமிற்கும் நிகழ்ந்த அழிவிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களில் சிலர். (எரேமியா 35:18, 19; 39:11, 12, 16-18) யெகோவாவிற்கு தொடர்ந்து காத்துக்கொண்டிருந்த, சிறையிருப்பிலிருந்த உண்மையுள்ள யூதர்களும் அவர்களுடைய பிள்ளைகளும், பொ.ச.மு. 537-ல் பாபிலோனிலிருந்து விடுதலையாக்கப்பட்டு உண்மை வணக்கத்தை மறுபடியுமாக நிலைநாட்ட யூதாவிற்கு திரும்பிய சந்தோஷமுள்ள மீதியானோரின் ஒரு பாகமானார்கள்.—எஸ்றா 2:1, 2; செப்பனியா 3:14, 15, 20.
-
-
“உன் கைகளைத் தளரவிடாதே”காவற்கோபுரம்—1996 | மார்ச் 1
-
-
2. செப்பனியாவின் நாளிலிருந்த நிலைமைகளுக்கும் இன்று கிறிஸ்தவமண்டலத்தில் காணப்படும் நிலைமைக்கும் என்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?
2 இன்று, செப்பனியாவின் நாளைக் காட்டிலும் அதிக விரிவான அளவில் தேசங்களை அழிவுக்கு கூட்டிச்சேர்ப்பதே யெகோவாவின் நியாயமான தீர்மானம் ஆகும். (செப்பனியா 3:8) கிறிஸ்தவர்கள் என்பதாக உரிமைபாராட்டிக்கொள்ளும் தேசங்கள் எவையோ அவை கடவுளுடைய பார்வையில் குறிப்பாக கண்டனத்திற்குரியவையாக இருக்கின்றன. யெகோவாவிற்கு உண்மையற்றதாயிருந்ததன் காரணமாக எருசலேம் எவ்வாறு கடுமையாக தண்டிக்கப்பட்டதோ, அதுபோலவே கிறிஸ்தவமண்டலம் தன்னுடைய தீயொழுக்கமுடைய வழிகளுக்காக கடவுளுக்கு பதில் சொல்லவேண்டும். செப்பனியாவின் நாளில் யூதாவிற்கும் எருசலேமிற்கும் எதிராக அறிவிக்கப்பட்ட தெய்வீக நியாயத்தீர்ப்புகள், சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்தவமண்டல உட்பிரிவுகளுக்கு இன்னும் அதிக வலிமையோடு பொருந்துகின்றன. கடவுளை அவமதிக்கும் தங்களுடைய கோட்பாடுகளால் தூய்மையான வணக்கத்தை மாசுபடுத்தியும் இருக்கின்றன; அந்தக் கோட்பாடுகளில் பெரும்பாலானவை புறஜாதி மூலத்தைக் கொண்டவை. தங்களுடைய ஆரோக்கியமுள்ள குமாரர்களில் லட்சக்கணக்கானோரை நவீன நாளைய பலிபீடமான யுத்தத்தில் பலியிட்டிருக்கின்றன. கூடுதலாக, பாகால் வணக்கத்தை நினைப்பூட்டுகிற ஜோதிடம், ஆவி சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்கள், சீர்கெட்ட பால்சம்பந்தமான ஒழுக்கக்கேடு ஆகியவற்றை மாதிரிப்படிவத்துக்குரிய எருசலேமின் குடிமக்கள் கிறிஸ்தவம் என்று சொல்கிறதோடு கலந்திருக்கின்றனர்.—செப்பனியா 1:4, 5, 6.
-