உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மெய் வணக்கம் மக்களை ஒன்றுசேர்க்கிறது
    காவற்கோபுரம்—2001 | செப்டம்பர் 15
    • நம்முடைய நாளில் உலகம் தழுவிய ஒற்றுமை!

      பைபிள் புத்தகமாகிய செப்பனியாவிலுள்ள முக்கியமான ஒரு தீர்க்கதரிசனம், வித்தியாசப்பட்ட பின்னணியைச் சேர்ந்த மக்கள் ஒன்றுசேருவதைப் பற்றி கூறுகிறது. அது இவ்வாறு சொல்கிறது: “அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் [யெகோவா] அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.” (செப்பனியா 3:9) மாற்றங்களைச் செய்து கடவுளை ஒற்றுமையாக சேவிக்கும் ஆட்களைப் பற்றிய என்னே அழகான வர்ணனை!

  • மெய் வணக்கம் மக்களை ஒன்றுசேர்க்கிறது
    காவற்கோபுரம்—2001 | செப்டம்பர் 15
    • யெகோவா தம்முடைய மக்களை ஒன்றுபடுத்த அவர்களுக்கு சுத்தமான பாஷையைக் கொடுக்கிறார். இந்தப் புதிய பாஷையில் கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய பைபிளின் சத்தியத்தை சரியாக புரிந்துகொள்வது அடங்கியிருக்கிறது. சுத்தமான பாஷையை பேசுவது சத்தியத்தை நம்புவதையும், அதை மற்றவர்களுக்குக் கற்பிப்பதையும், கடவுளுடைய சட்டங்கள், நியமங்கள் ஆகியவற்றிற்கு இசைவாக வாழ்வதையும் உட்படுத்துகிறது. பிரிவினைகளை உண்டாக்கும் அரசியலை வெறுத்து ஒதுக்குவதையும், இந்த உலகத்தின் சிறப்பு அம்சங்களாக இருக்கும் இனவெறி, பிரிவினையை ஏற்படுத்தும் தேசபக்தி போன்ற சுயநல மனப்பான்மைகளை இருதயத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிவதையும் தேவைப்படுத்துகிறது. (யோவான் 17:14; அப்போஸ்தலர் 10:34, 35) சத்தியத்தை நேசிக்கும் நேர்மையான இருதயமுள்ளோர் அனைவரும் இந்த பாஷையைக் கற்றுக்கொள்ளலாம். முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த ஐந்து பேர், அப்போது வெவ்வேறு மதத்தவராக பிரிக்கப்பட்டிருந்த அவர்கள், இப்போது எவ்வாறு ஒரே மெய்க் கடவுளாகிய யெகோவாவின் வணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்