-
பைபிள் புத்தக எண் 37—ஆகாய்‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
5 ஆகாய் தீர்க்கதரிசனம் எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது என்பதைப் பற்றி யூதர்கள் மத்தியில் எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை. மேலும் எஸ்றா 5:1-லும் 6:14-லும் அவர் “இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே” தீர்க்கதரிசனம் உரைத்ததாக கூறப்படுவதாலும் இது ஆதரிக்கப்படுகிறது. அவருடைய தீர்க்கதரிசனம் ‘கடவுளால் ஏவப்பட்ட முழு வேதாகமத்தின்’ பாகம் என்பதை எபிரெயர் 12:26-ல் பவுல் அதை மேற்கோள் காட்டுவதும் நிரூபிக்கிறது: “இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார்.”—ஆகா. 2:6.
-
-
பைபிள் புத்தக எண் 37—ஆகாய்‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
10 இரண்டாவது செய்தி (2:1-9). கட்டட வேலை திரும்ப ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம்கூட ஆகவில்லை. இப்போது ஆகாய் தேவாவியால் ஏவப்பட்ட தன் இரண்டாவது செய்தியை உரைக்கிறார். இது செருபாபேலையும் யோசுவாவையும் ஜனத்தில் மீந்திருப்போரையும் நோக்கி கூறப்படுகிறது. சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்களில் சிலர் சாலொமோன் கட்டின முந்தின ஆலயத்தைக் கண்டிருந்தனர். அதோடு ஒப்பிட இந்த ஆலயம் ஒன்றுமேயில்லை என இவர்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால் சேனைகளின் யெகோவா சொல்வது என்ன? ‘திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள்; நான் உங்களுடனே இருக்கிறேன்.’ (2:4) அவர்களோடு செய்த உடன்படிக்கையை யெகோவா நினைப்பூட்டி, பயப்பட வேண்டாம் என அவர்களிடம் சொல்கிறார். சகல தேசங்களையும் அசைவித்து அவற்றிலிருந்து விரும்பத்தக்கவற்றை கூட்டிச்சேர்த்து, தம்முடைய ஆலயத்தை மகிமையால் நிரப்புவதாக வாக்குறுதி கொடுத்து அவர்களைப் பலப்படுத்துகிறார். முந்தின ஆலயத்தின் மகிமையைக் காட்டிலும் இந்தப் பிற்பட்ட ஆலயத்தின் மகிமை அதிகமாயிருக்கும், இந்த இடத்தில் அவர் சமாதானத்தையும் கட்டளையிடுவார்.
-
-
பைபிள் புத்தக எண் 37—ஆகாய்‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
16 யெகோவா, ‘வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணுவார்’ என்ற தீர்க்கதரிசனத்தைப் பற்றியென்ன? ஆகாய் 2:6-ன் பொருத்தத்தை அப்போஸ்தலன் பவுல் பின்வரும் வார்த்தைகளில் கூறுகிறார்: “இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது [தேவன்] வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார். இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.” (எபி. 12:26-29) “ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து”ப்போடுவதற்காகவே இவ்வாறு அசைவிக்கப்படுகிறது என ஆகாய் காட்டுகிறார். (ஆகா. 2:21, 22) இந்தத் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டுகையில் பவுல், “அசைவில்லாத” கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசுகிறார். இந்த ராஜ்ய நம்பிக்கையை சிந்தனையில் வைத்து, நாம் ‘திடன்கொண்டு உழைத்து’ கடவுளுக்கு பரிசுத்த சேவை செய்வோமாக. மேலும், பூமியின் தேசங்களை யெகோவா கவிழ்ப்பதற்கு முன்பாக அருமையான ஒன்று அசைவிக்கப்பட்டு தப்பிப்பிழைப்பதற்காக அவற்றைவிட்டு வெளிவரவேண்டும்: “சகல ஜாதியாரையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதியாரின் அருமையானவைகளும் வரும்; இந்த ஆலயத்திலே மகிமை நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.”—2:4, 7, தி.மொ.
-