-
அனைவரும் யெகோவாவை துதிப்பார்களாக!காவற்கோபுரம்—1997 | ஜனவரி 1
-
-
19. ஆகாய் 2:6, 7-ன் நிறைவேற்றத்தில் நாம் எவ்வாறு பங்குகொள்ளலாம்?
19 ஆகாய் 2:6, 7-ன் நவீனகால நிறைவேற்றத்தில் பங்குகொள்ளும் நம்முடைய சிலாக்கியம் சந்தோஷமானது: “சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்லுகிறார்: கொஞ்சக் காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதியாரையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதியாரின் அருமையானவைகளும் வரும்; இந்த ஆலயத்திலே மகிமை நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.” பேராசை, இலஞ்சம், பகைமை ஆகியவை இந்த 20-ம் நூற்றாண்டு உலகம் முழுவதிலும் தலைவிரித்தாடுகின்றன. அது உண்மையிலேயே அதன் கடைசி நாட்களில் இருக்கிறது; யெகோவா, தம்முடைய சாட்சிகள் ‘அவருடைய பழிவாங்கும் நாளை அறிவிக்கும்படி’ செய்வதன் மூலம் ஏற்கெனவே அதை ‘அசைக்க’ ஆரம்பித்துவிட்டார். (ஏசாயா 61:2) இந்த ஆரம்ப அசையப்பண்ணுதல், அர்மகெதோனில் இந்த உலகம் அழிந்துபோவதுடன் உச்சநிலையை அடையும்; ஆனால் அந்தச் சமயத்திற்கு முன்பாக, யெகோவா தம்முடைய வேலைக்காக ‘சகல ஜாதியாரின் அருமையானவைகளை’—பூமியிலுள்ள சாந்தகுணமுள்ள, செம்மறியாடுகள் போன்ற மக்களை—கூட்டிச் சேர்த்துவருகிறார். (யோவான் 6:44) இந்தத் ‘திரள் கூட்டத்தினர்’ அவருடைய வணக்கத்திற்குரிய ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரத்தில் இப்பொழுது ‘பரிசுத்த சேவை செய்கிறார்கள்.’—வெளிப்படுத்துதல் 7:9, 15.
-
-
யெகோவாவுடைய ஆலயத்தின் பேரளவான மகிமைகாவற்கோபுரம்—1997 | ஜனவரி 1
-
-
யெகோவாவுடைய ஆலயத்தின் பேரளவான மகிமை
“இந்த ஆலயத்திலே மகிமை நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.”—ஆகாய் 2:7, தி.மொ.
1. பரிசுத்த ஆவி எவ்வாறு விசுவாசத்தோடும் வேலையோடும் தொடர்புடையது?
வீட்டுக்கு வீடு பிரசங்கம் செய்துகொண்டிருக்கையில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் பெந்தெகொஸ்தே சபையைச் சேர்ந்த ஒரு பெண்ணை சந்தித்தார்; அந்தப் பெண் சொன்னாள், ‘எங்களிடம் பரிசுத்த ஆவி இருக்கிறது, ஆனால் பிரசங்க வேலையை செய்பவர்கள் நீங்கள்தான்.’ பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பவர்கள், இயல்பாகவே, கடவுளுடைய வேலையைச் செய்வதற்குத் தூண்டுவிக்கப்படுவார்கள் என அவளிடம் சாதுரியமாக விளக்கப்பட்டது. யாக்கோபு 2:17 சொல்லுகிறது: “விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னில்தானே செத்ததாயிருக்கும்.” யெகோவாவுடைய ஆவியின் உதவியால், அவருடைய சாட்சிகள் பலமான விசுவாசத்தை வளர்த்திருக்கிறார்கள்; மேலும் நீதியுள்ள காரியங்களைச் செய்வதற்கு—முக்கியமாக ‘ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தியை பூமியிலுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிப்பதற்கு’—அவர்களை ஏற்படுத்துவதன் மூலம் அவர் ‘தம்முடைய ஆலயத்தை மகிமை நிறையப்பண்ணியிருக்கிறார்.’ யெகோவா திருப்தியடையும் அளவுக்கு இந்த வேலை செய்யப்பட்டிருக்கும்போது, ‘அப்போது முடிவு வரும்.’—மத்தேயு 24:14.
-