-
பைபிள் புத்தக எண் 37—ஆகாய்‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
12 நான்காவது செய்தி (2:20-23). மூன்றாவது செய்தியைக் கூறிய அதே நாளில் இந்தச் செய்தியைச் சொல்கிறார், ஆனால் இதை செருபாபேலிடம் கூறுகிறார். மறுபடியுமாக யெகோவா, “வானத்தையும் பூமியையும் அசையப்பண்”ணுவதாக கூறுகிறார். ஆனால் இந்த முறை தேசங்களின் ராஜ்யங்களை முழுமையாக அழிப்பதோடு இதை சம்பந்தப்படுத்தி பேசுகிறார். அநேகர் கொல்லப்படுவர், “அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.” (2:21, 22) யெகோவா செருபாபேல்மீது தயவு காட்டுவார் என்ற உறுதியை அளித்து ஆகாய் தன் தீர்க்கதரிசனத்தை முடிக்கிறார்.
-
-
பைபிள் புத்தக எண் 37—ஆகாய்‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
-
-
16 யெகோவா, ‘வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணுவார்’ என்ற தீர்க்கதரிசனத்தைப் பற்றியென்ன? ஆகாய் 2:6-ன் பொருத்தத்தை அப்போஸ்தலன் பவுல் பின்வரும் வார்த்தைகளில் கூறுகிறார்: “இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது [தேவன்] வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார். இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.” (எபி. 12:26-29) “ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து”ப்போடுவதற்காகவே இவ்வாறு அசைவிக்கப்படுகிறது என ஆகாய் காட்டுகிறார். (ஆகா. 2:21, 22) இந்தத் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டுகையில் பவுல், “அசைவில்லாத” கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசுகிறார். இந்த ராஜ்ய நம்பிக்கையை சிந்தனையில் வைத்து, நாம் ‘திடன்கொண்டு உழைத்து’ கடவுளுக்கு பரிசுத்த சேவை செய்வோமாக. மேலும், பூமியின் தேசங்களை யெகோவா கவிழ்ப்பதற்கு முன்பாக அருமையான ஒன்று அசைவிக்கப்பட்டு தப்பிப்பிழைப்பதற்காக அவற்றைவிட்டு வெளிவரவேண்டும்: “சகல ஜாதியாரையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதியாரின் அருமையானவைகளும் வரும்; இந்த ஆலயத்திலே மகிமை நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.”—2:4, 7, தி.மொ.
-