இராஜ்யத்தைப்பற்றிய வசனம்—அதன் உட்கருத்தை உணர்ந்துகொள்ளுதல்
1 விதைப்பவனைப் பற்றிய இயேசுவின் உவமையில் ‘நல்ல நிலத்தில்’ விழுகிற விதையானது ‘வசனத்தைக் கேட்கிறவனும் அதன் உட்கருத்தை உணருகிறவனுமாய் இருக்கிற ஒருவனை’ குறிக்கிறது என்று அவர் சொன்னார். (மத். 13:23, NW) இராஜ்யத்தைப்பற்றி கேட்ட பின்பு நாம் ‘அதன் உட்கருத்தை உணர்ந்துகொண்டோமா’? அது நம் வாழ்க்கையில் எந்தளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது? இராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுப்பதன்மூலம் அந்தச் செய்தியின் உட்கருத்தை நாம் உணர்ந்துகொண்டோம் என வெளிக்காட்டுகிறோமா?
2 இராஜ்ய செய்தியைத் திருத்தமாகப் புரிந்துகொள்ள தனிப்பட்ட படிப்பு தேவையாக இருக்கிறது. அளிக்கப்பட்ட ஆவிக்குரிய உணவின்பேரில் தியானம் செய்ய நாம் நேரத்தை ஒதுக்கவேண்டியது தேவையாக இருக்கிறது. காவற்கோபுர பத்திரிகையை மேலோட்டமாக வாசித்துவிட்டு செல்வது, சுவைமிக்க சத்துள்ள ஒரு உணவை அரைகுறையாக மென்று விழுங்குவதற்குச் சமமாக இருக்கிறது. ஆவிக்குரிய உணவைக் கருத்தூன்றி அலசி ஆராய நேரத்தை செலவுசெய்கிறீர்களா? அதிகளவு நன்மைகளைப் பெற, ஊக்கமும் ஆரோக்கியமுமான ஆவிக்குரிய பசியும் இருக்கவேண்டும். இவை இல்லாவிட்டால், மற்ற நடவடிக்கைகள் தனிப்பட்ட படிப்பின் நன்மைகளைக் குறைத்துவிடலாம் அல்லது அதற்குத் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளும். நல்லதொரு படிப்பு அட்டவணையைப் பின்பற்றுவதென்பது அவ்வளவு சுலபம் ஒன்றுமல்ல. முன்னுரிமைகளைக் கவனமாக சமநிலைப்படுத்துவதை இது தேவைப்படுத்தினாலும், அதிலிருந்து பெறக்கூடிய ஆவிக்குரிய செல்வங்கள் மதிப்புள்ளவையாய் இருக்கின்றன.—நீதி. 3:13-18; கொலோ. 1:27.
3 இராஜ்யத்தைப் பற்றிய நம்பிக்கையூட்டும் மற்றும் கட்டியெழுப்பக்கூடிய எண்ணங்களை நாம் கொண்டிருக்க, வேதவாக்கியங்களை ஆராய்தல் ஒவ்வொரு நாளும் நமக்கு உதவிசெய்கிறது. “ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுடையோர்” அந்த வசனத்தையும் அதன்பேரிலான குறிப்புகளையும் வாசிக்க தினமும் ஒருசில நிமிடங்களை செலவிடுகின்றனர். (மத். 5:3, NW) அநேக வசனங்கள் ராஜ்யத்தின் பல்வேறு அம்சங்களை விவரிக்கின்றன. உதாரணமாக, நவம்பர் 22, 1994 அன்று கொடுக்கப்பட்டிருந்த வசனம் மத்தேயு 13:4 ஆகும். அதன்பேரிலான குறிப்பானது ராஜ்ய நம்பிக்கையைப்பற்றி ஆலோசித்து, உறவினர்களோடும் அயலகத்தாரோடும் கொள்ளக்கூடிய ஆரோக்கியமற்ற கூட்டுறவினால் வரும் ஆபத்துகளைப்பற்றி அது நமக்கு நினைவூட்டியது. உலகமுழுவதிலுமுள்ள பெத்தேல் குடும்பங்களில், ஒவ்வொரு வேலை நாட்களிலும் காலையில் 15 நிமிடத்திற்கு தினவசனம் கலந்தாலோசிக்கப்படுகிறது. இதுதானே ஒன்றாக சேர்ந்து தினவசனத்தை ஆலோசிப்பதன் பலன்களையும் முக்கியத்துவத்தையும் அழுத்திக்காட்டுகிறது. இதைப்போன்றே உங்களுடைய குடும்பமும் தினவசன கலந்தாலோசிப்பை அனுதின வழக்கமுறையில் உள்ளடக்கியிருக்கிறதா?
4 இராஜ்யத்திற்கான போற்றுதலில் நீங்கள் வளர்ந்துவருகையில், ராஜ்ய செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு அதிக ஊக்கத்தைப் பெறுவீர்கள். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! மனதோடு சம்பந்தப்பட்ட எரிபொருளுக்கு ஒப்பிடப்படக்கூடியதை நமக்குக் கொடுத்து, புதிய தகவல்களால் உடனுக்குடன் நம் மனதை நிரப்புகின்றன. இந்த உலகத்திற்கு எந்தளவு கடவுளுடைய ராஜ்யம் தேவையாயிருக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வோடு தொடர்ந்திருக்கும்படி நமக்கு உதவுகின்றன. நாம் “கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிற” ஆவிக்குரிய நபர்களாக இருக்க அவை நமக்கு உதவிசெய்கின்றன. (1 கொ. 2:15, 16) இவையனைத்தும் நம் நம்பிக்கையை பலப்படுத்தி, ராஜ்ய நம்பிக்கையை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கான நம்முடைய வைராக்கியத்தை அதிகரிக்கின்றன.—1 பே. 3:15.
5 நாம் தனிப்பட்ட வகையில் ராஜ்ய செய்தியின் உட்கருத்தை உணர்ந்துகொள்வது முக்கியமாக இருக்கிறது. இந்த ராஜ்யமே கடவுள் தம்முடைய சர்வலோக பேரரசுரிமையை ஆதரிப்பதற்கும், துன்மார்க்கத்தை ஒழித்துக் கட்டுவதற்கும், புதிய உலகை—ஒரு பரதீஸை—உருவாக்குவதற்கும் பயன்படுத்தும் வழியாக இருக்கிறது. நம் வாழ்க்கையில் அதற்கு முதலிடம் கொடுக்கும்படி இயேசு நமக்குக் கட்டளையிட்டார். அதன் ஆட்சியின்கீழ் வாழ நாம் செம்மறியாட்டைப்போன்ற பிரஜைகளாக இருக்கவேண்டும். (மத். 6:10, 33) அதன் ஆசீர்வாதங்களை அனுபவித்துக்களிப்பதற்கு உங்களுக்கிருக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.