-
யெகோவா சொல்வதைக் கேளுங்கள்காவற்கோபுரம் (படிப்பு)-2019 | மார்ச்
-
-
“இவர் சொல்வதைக் கேளுங்கள்”
7. மத்தேயு 17:1-5 சொல்கிறபடி, எந்தச் சந்தர்ப்பத்தில் யெகோவா பரலோகத்திலிருந்து பேசினார், அவர் என்ன சொன்னார்?
7 மத்தேயு 17:1-5-ஐ வாசியுங்கள். இயேசு “தோற்றம் மாறிய” சமயத்தில், யெகோவா பரலோகத்திலிருந்து பேசினார். இதுதான் யெகோவா பேசிய இரண்டாவது சந்தர்ப்பம். பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் கூட்டிக்கொண்டு உயரமான ஒரு மலைக்கு இயேசு போனார். அங்கே அவர்கள் அற்புதமான ஒரு தரிசனத்தைப் பார்த்தார்கள். இயேசுவின் முகம் பிரகாசித்தது, அவருடைய உடை பளிச்சிட்டது. அப்போது இரண்டு உருவங்கள் தோன்றின, ஒரு உருவம் மோசேயையும் இன்னொரு உருவம் எலியாவையும் அடையாளப்படுத்தின. அந்த உருவங்கள், இயேசுவின் மரணத்தைப் பற்றியும் உயிர்த்தெழுதலைப் பற்றியும் இயேசுவிடம் பேச ஆரம்பித்தன. மூன்று அப்போஸ்தலர்கள் “அரைத்தூக்கத்தில்” இருந்தபோதிலும், அவர்கள் விழித்துக்கொண்டபோது, இந்த அற்புதமான தரிசனத்தைப் பார்த்தார்கள். (லூக். 9:29-32) பிறகு, பிரகாசமான ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. அப்போது, மேகத்திலிருந்து ஒரு குரலை, அதாவது கடவுளுடைய குரலை, அவர்கள் கேட்டார்கள். இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது, யெகோவா தன் மகனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்மீது அன்பு வைத்திருப்பதாகவும் சொன்னார். அதேபோல் இப்போதும், “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொன்னார். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில், “இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்றும் சொன்னார்.
-
-
யெகோவா சொல்வதைக் கேளுங்கள்காவற்கோபுரம் (படிப்பு)-2019 | மார்ச்
-
-
9. இயேசு தன் சீஷர்களுக்கு என்ன நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுத்தார்?
9 “இவர் சொல்வதைக் கேளுங்கள்.” இப்படிச் சொன்னதன் மூலம், தன்னுடைய மகன் சொல்வதை நாம் கேட்க வேண்டும் என்றும், அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் யெகோவா எதிர்பார்க்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இயேசு பூமியில் இருந்தபோது என்ன சொன்னார்? நாம் கவனித்துக் கேட்க வேண்டிய நிறைய முக்கியமான விஷயங்களைச் சொன்னார். உதாரணத்துக்கு, எப்படிப் பிரசங்கிக்க வேண்டும் என்பதைப் பற்றித் தன் சீஷர்களுக்கு அன்பாகச் சொல்லிக்கொடுத்தார். அதோடு, விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் அவர்களுக்கு திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தினார். (மத். 24:42; 28:19, 20) தீவிரமாக உழைக்கவும், சோர்ந்துவிடாமல் இருக்கவும் அவர்களை உற்சாகப்படுத்தினார். (லூக். 13:24) தன்னுடைய சீஷர்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுவதும், ஒற்றுமையாக இருப்பதும், தன்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதும் எவ்வளவு முக்கியம் என்று சொன்னார். (யோவா. 15:10, 12, 13) தன் சீஷர்களுக்கு இயேசு கொடுத்த ஆலோசனைகள் எவ்வளவு நடைமுறையாக இருந்தன! அன்றுபோல் இன்றும், அவை முக்கியமானதாக இருக்கின்றன.
-