-
இன்று கடவுளின் இரக்கத்தைப் பின்பற்றுங்கள்காவற்கோபுரம்—1992 | பிப்ரவரி 1
-
-
2. வினைமையான பாவத்தைக் கையாளுவதைப்பற்றி மத்தேயு 18:15-17-ல் இயேசு என்ன அறிவுரையைக் கொடுத்தார்?
2 எவராவது நமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற இத்தகைய காரியங்களின்பேரிலுங்கூட, கடவுளுடைய சிந்தனைக்குள் உட்பார்வையை பைபிள் நமக்கு அளிக்கிறது. பின்னால் கிறிஸ்தவ கண்காணிகளாக இருக்கப்போகிற தம்முடைய அப்போஸ்தலருக்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “உன் சகோதரன் குற்றஞ்செய்தால், அவனிடம் போய் நீயும் அவனும் தனித்திருக்கையில் அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால் உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.” இங்கே உட்பட்ட குற்றம் முக்கியமல்லாத வெறும் தனிப்பட்ட புறக்கணிப்புபோன்றதல்ல ஆனால், மோசடி அல்லது பொய்ப் பழிதூற்றுதல் போன்ற வினைமையான பாவமாகும். இந்தப் படி அந்தக் காரியத்தைத் தீர்க்கவில்லையெனில், சாட்சிகள் கிடைக்கக்கூடியதாயிருந்தால், எவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யப்பட்டதோ அவன், குற்றம் செய்யப்பட்டதை நிரூபிக்க அவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும். இதுதான் கடைசி படியாகுமா? இல்லை. “அவர்களுக்கும் அவன் [பாவம் செய்தவன்] செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து, சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு புறஜாதியான்போலவும் ஆயக்காரன்போலவுமிருப்பானாக.—மத்தேயு 18:15-17, தி.மொ.
3. குற்றஞ்செய்து மனந்திரும்பாதவன் “புறஜாதியான்போலவும் ஆயக்காரன்போலவும்” இருக்கவேண்டுமென்று சொன்னதில் இயேசு பொருள்கொண்டதென்ன?
3 அப்போஸ்தலர் யூதர்களாதலால், ஒரு பாவியைப் ‘புறஜாதியான்போலவும் ஆயக்காரன்போலவும்’ நடத்துவது பொருள்படுவதைப் புரிந்துகொள்வார்கள். யூதர்கள் புறஜாதியாருடன் கூட்டுறவைத் தவிர்த்தனர், மற்றும் ரோம வரி வசூலிப்போராகa வேலைசெய்த யூதர்களை அவர்கள் புறக்கணித்தனர். (யோவான் 4:9; அப்போஸ்தலர் 10:28) ஆகவே, சபை ஒரு பாவியைச் சபைநீக்கம் செய்தால், அவர்கள் அவனோடு கூட்டுறவு வைப்பதை நிறுத்திவிடவேண்டுமென இயேசு சீஷர்களுக்கு அறிவுரை கூறினார். எனினும், இது, இயேசு சில சமயங்களில் ஆயக்காரருடன் இருந்ததோடு எவ்வாறு பொருந்தும்?
-
-
இன்று கடவுளின் இரக்கத்தைப் பின்பற்றுங்கள்காவற்கோபுரம்—1992 | பிப்ரவரி 1
-
-
a “முக்கியமாய் ஆயக்காரர்கள் பல காரணங்களினிமித்தம் பலஸ்தீனாவின் யூத ஜனம் முழுவதாலும் புறக்கணிக்கப்பட்டனர்: (1) இஸ்ரவேல் தேசத்தைக் கைப்பற்றின அன்னிய வல்லரசுக்குப் பணம் வசூலித்தார்கள், இவ்வாறு மறைமுகமாய் இந்த அட்டூழியத்துக்கு ஆதரவளித்தார்கள்; (2) அவர்கள் தங்கள் சொந்த ஜனத்தாரான மற்றவர்களின் செலவில் செல்வத்தைப் பெருக்கி, பழிபாவங்களுக்கு அஞ்சாமல் தகாவழியில் செல்வதில் பேர்போனவர்களாயிருந்தனர்; மேலும் (3) அவர்களுடைய வேலை புறஜாதியாருடன் இடைவிடாமல் தொடர்புகொள்வதில் அவர்களை உட்படுத்தியது, இது அவர்களை மத ஆசார முறைப்படி அசுத்தமானோராக்கியது. ஆயக்காரரை வெறுப்பது பு[திய] ஏ[ற்பாட்டிலும்] ரபீக்களின் புத்தகங்களிலும் காணப்படுகிறது . . . பின்குறிப்பிட்டதன்படி, வெறுப்பு ஆயக்காரரின் குடும்பத்துக்குங்கூட காட்டப்படவேண்டும்.”—தி இன்டர்நாஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோபீடியா.
-