உங்களை மகிழ்ச்சியாக்குவதற்குத் தேவைப்படுவது என்ன?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், அந்த மக்களை மகிழ்ச்சியாக்க கடினமாக முயற்சி செய்கின்றனர் அவர்களுடைய வேலைகள் அதைச் சார்ந்தே இருக்கின்றன. ஆனால் ஒரு செய்தியிதழ், போலாந்தில் “ஏமாற்றமடைந்த, மனமுறிவடைந்த ஒரு வாக்காளர் தொகுதி”யைப்பற்றி பேசுகிறது. ஐக்கிய மாகாணங்கள் “முறையான அரசியலில் அவநம்பிக்கையால் நிரம்பியிருக்கும்” ஒரு சமுதாயம் என்பதாக ஓர் இதழாசிரியர் விவரிக்கிறார். “பிரான்ஸில் அரசியல்மீது பற்றற்றதன்மை வளர்ந்துகொண்டிருக்கிறது,” என மற்றொரு எழுத்தாளர் கூறுகிறார். அத்தகைய—எவ்விதத்திலும் இந்த மூன்று நாடுகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டதாக இல்லாத—பரவலான பற்றற்றதன்மையும் அதிருப்தியும் மக்களை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்ற தங்களுடைய முயற்சியில் அரசியல்வாதிகள் தோல்வி அடைகின்றனர் என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது.
மதத்தலைவர்களும், இந்த வாழ்க்கையில் இல்லையென்றாலும் ஓர் எதிர்கால வாழ்க்கையிலாவது, மகிழ்ச்சியை வாக்களிக்கின்றனர். மனிதர் ஓர் அழியாத அல்லது இடம்பெயர்ந்து செல்லும் ஆத்துமாவைக் கொண்டிருக்கின்றனர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு சொல்கின்றனர்; இது பல காரணங்களுக்காக அநேக மக்கள் நிராகரிப்பதும் பைபிள் தெளிவாகவே தவறென நிரூபிப்பதுமான ஒரு கருத்தாக இருக்கிறது. மதம் மகிழ்ச்சிக்கு அத்தியாவசியமானது என்று இலட்சக்கணக்கானோர் இனிமேலும் நினைத்துக்கொண்டில்லை என்பதைக் காலியான சர்ச்சுகளும் குறைந்து கொண்டே போகும் அங்கத்தினரின் வரிசைகளும் காண்பிக்கின்றன.—ஒப்பிடவும்: ஆதியாகமம் 2:7, 17; எசேக்கியேல் 18:4, 20.
திருப்தியடையாத வெள்ளிப் பிரியர்கள்
அரசியலிலும் மதத்திலும் இல்லையென்றால், மகிழ்ச்சியை எங்கே கண்டடையலாம்? ஒருவேளை வியாபார துறையிலா? அதுவும் மகிழ்ச்சியைத் தருவதாக உரிமை பாராட்டுகிறது. விளம்பரத்தின் வாயிலாக பின்வருமாறு தெளிவாகச் சொல்வதன்மூலம் அது தன்னுடைய வாதத்தை அளிக்கிறது: பணத்தால் வாங்கக்கூடிய எல்லா பொருட்களையும் சேவைகளையும் கொண்டிருப்பதன்மூலம் மகிழ்ச்சி வருகிறது.
இந்த வழியில் மகிழ்ச்சியைத் தேடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு போவதாகத் தோன்றுகிறது. பல ஆண்டுகளுக்கு முன், ஜெர்மனியில் ஒவ்வொரு இரண்டு குடும்பத்திலும் ஒன்று கடுமையான கடனுக்குள் உட்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது. அப்படியென்றால், செல்வாக்குமிக்க ஜெர்மானிய செய்தித்தாளாகிய டி ஸிட், “[இவர்களில்] அநேகர் அந்தக் கடன்களைவிட்டு வெளிவர முடியாதவர்களாய் இருக்கிறார்கள்” என்று முன்னறிவித்ததில் ஆச்சரியமில்லை. அது விவரித்தது: “வங்கி தொடர்ந்து அனுமதிக்கும் வரையறை வரையாக மிகைபணத்தை எடுப்பது மிக எளிதாக இருக்கும்—கடன்படுதல் என்ற கண்ணியிலிருந்து கழுத்தை வெளியே எடுப்பது மிகக் கடினமாக இருக்கும்.”
அதிக தொழில் வளர்ச்சியடைந்த மற்ற நாடுகளிலும் நிலைமை அதேவிதமாகவே இருக்கிறது. சில வருடங்களுக்குமுன், இரண்டு கோடிக்கும் இரண்டரை கோடிக்கும் மத்தியிலுள்ள குடும்பங்கள் பேரளவில் கடன்பட்டிருந்தனர் என்று நியூ யார்க்கிலுள்ள ஸிட்டி பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளரான டேவிட் கேப்லோவிட்ஸ் கணக்கிட்டார். “மக்களுக்கு அவர்களுடைய கடன் தலைக்குமேல் இருந்தது, அது அவர்கள் வாழ்க்கையைச் சீரழித்துக்கொண்டிருந்தது,” என்று அவர் சொன்னார்.
அது மகிழ்ச்சியாக தோன்றவே இல்லையே! ஆனால் தெளிவாகவே மற்ற இரண்டாலும் (அரசியலும் மதமும்) தெளிவாகவே நிறைவேற்ற முடியாததை வியாபார உலகம் நிறைவேற்ற முடியும் என்று நாம் எதிர்பார்க்கலாமா? செல்வச்செழிப்பு வாய்ந்த அரசனாகிய சாலொமோன் ஒருமுறை எழுதினார்: “பணப்பிரியன் பணத்தினால் [வெள்ளிப்பிரியன் வெள்ளியால், NW] திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.”—பிரசங்கி 5:10.
பொருளாதார சம்பத்துகளில் மகிழ்ச்சியைத் தேடுதல் மனக்கோட்டைகளைக் கட்டுவது போன்றதாகும். அவற்றைக் கட்டுவது கிளர்ச்சியூட்டுவதாக இருக்கக்கூடும்; ஆனால் அவற்றில் வாழ முயன்றால் உங்களுக்குப் பிரச்னைகள் இருக்கும்.
மகிழ்ச்சி அடையக்கூடியதே, ஆனால் எப்படி?
அப்போஸ்தலன் பவுல் யெகோவாவை “நித்தியானந்த தேவன்” என்று அழைக்கிறார். (1 தீமோத்தேயு 1:11) மனிதரை அவருடைய சொந்த சாயலில் சிருஷ்டிப்பதன்மூலம், மகிழ்ச்சியாக இருப்பதற்கான திறமையை மகிழ்ச்சியுள்ள கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார். (ஆதியாகமம் 1:26) ஆனால் அவர்களுடைய மகிழ்ச்சி, சங்கீதக்காரன் காண்பித்தவிதமாக, அவர்கள் கடவுளைச் சேவிப்பதைச் சார்ந்திருப்பதாக இருந்தது: “யெகோவாவைக் கடவுளாகக் கொண்டிருக்கிற மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்!” (சங்கீதம் 144:15ஆ, NW) கடவுளுக்கான நம்முடைய சேவை எதை உட்படுத்துகிறது மற்றும் நாம் அவரைச் சேவிப்பது எப்படி உண்மையான மகிழ்ச்சிக்கு வழிநடத்துகிறது என்பதை புதிய உலக மொழிபெயர்ப்பில் (New World Translation) “மகிழ்ச்சியாக” மேலும் “மகிழ்ச்சி” என்ற வார்த்தைகள் காணப்படும் 110 இடங்களில் சிலவற்றைக் கவனிப்பதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
ஆவிக்குரிய தேவைகளை உணருதல்
கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய பிரபலமான மலைப்பிரசங்கத்தில் சொன்னார்: “தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளைக்குறித்து உணர்வுள்ளவர்களாய் இருப்பவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்.” (மத்தேயு 5:3, NW) சொகுசுகளை வாங்குவதுதானே மகிழ்ச்சிக்குப் போதுமானது என்று எண்ணும்படி வியாபார உலகம் நம்மைத் தவறாக வழிநடத்துவதற்கு முயற்சி செய்கிறது. அது நமக்குச் சொல்கிறது என்னவென்றால், ஒரு வீட்டு கம்ப்யூட்டர், ஒரு வீடியோ காமரா, ஒரு தொலைபேசி, ஒரு கார், நவீன விளையாட்டுச் சாதனம், புதுபாணியான உடை ஆகியவற்றைக் கொண்டிருப்பதே மகிழ்ச்சி. உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்தக் காரியங்களைக் கொண்டிராதபோதிலும், அவசியமாக மகிழ்ச்சியற்றவர்களாக இல்லை என்பதை அது நமக்குச் சொல்வதில்லை. வாழ்க்கையை ஒருவேளை செளகரியமாகவும் வசதியாகவும் செய்தாலும் இந்தக் காரியங்கள் மகிழ்ச்சிக்கு அத்தியாவசியமானவை அல்ல.
பவுலைப் போலவே, தங்களுடைய ஆவிக்குரிய தேவையைப்பற்றி உணர்வுள்ளவர்கள் சொல்கின்றனர்: “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.” (1 தீமோத்தேயு 6:8) ஏன்? ஏனென்றால் ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது.—யோவான் 17:3.
நல்ல காரியங்களை வாங்குவதற்கு நம்மிடம் பணம் இருந்தால் அவற்றை அனுபவிப்பதில் ஏதாவது தவறு இருக்கிறதா? ஒருவேளை தவறாக இருக்காது. இருந்தாலும், நம் மனம்போகும் ஒவ்வொரு போக்கிலும் ஈடுபடாமல் அல்லது நம்மால் முடியும் என்பதற்காக எதையாவது வாங்காமல் இருப்பது நம்முடைய ஆவிக்குரிய தன்மையைப் பலப்படுத்துகிறது. இவ்வாறு, இயேசுவின் பொருளாதார நிலைமை உலக தராதரங்களின்படி மிகச்சிறந்ததாக இல்லாதபோதிலும், அவர் செய்ததைப்போலவே நாம் மனநிறைவைக் கற்றுக்கொண்டு மகிழ்ச்சியைக் காத்துக்கொள்வோம். (மத்தேயு 8:20) மேலும் பவுல் பின்வருமாறு எழுதியபோது மகிழ்ச்சியற்ற தன்மையை வெளிக்காட்டிக்கொண்டில்லை: “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.”—பிலிப்பியர் 4:11, 12.
யெகோவாவிடம் நம்பிக்கையாயிருத்தல்
ஒருவருடைய ஆவிக்குரிய தேவையைப்பற்றி உணர்வுடன் இருத்தல், கடவுளிடம் நம்பிக்கையாயிருப்பதற்கு மனமுள்ளவர்களாய் இருப்பதைக் குறிக்கிறது. அரசனாகிய சாலொமோன் விவரித்தபடி இது மகிழ்ச்சிக்குத் தேவையாக இருக்கிறது: “யெகோவாவில் நம்பிக்கையாய் இருப்பவன் மகிழ்ச்சியுள்ளவன்.”—நீதிமொழிகள் 16:20, NW.
இருப்பினும், அநேக மக்கள் கடவுளிடம் நம்பிக்கை வைப்பதைவிட பணம் மற்றும் சம்பத்துகளின்மேல் அதிக நம்பிக்கை வைக்கிறார்கள் என்பது உண்மை அல்லவா? இந்த நோக்குநிலையிலிருந்து பார்க்கும்போது, “நாங்கள் கடவுளில் நம்பிக்கை வைக்கிறோம்” என்ற குறிக்கோள் ஐ.மா. நாணயத்தில் காணப்படுகிறபோதிலும், அதைக் காட்சியில் வைப்பதற்கு பணத்தைவிட அதிக பொருத்தமற்ற இடம் வேறு எதுவும் இருக்க முடியாது.
அரசனாகிய சாலொமோன், பணத்தால் வாங்கக்கூடிய எந்த நன்மையான காரியத்திலும் குறைவுபடாதபோதிலும், பொருளாதார சம்பத்துக்களில் நம்பிக்கை வைப்பது நித்திய மகிழ்ச்சிக்கு வழிநடத்துவதில்லை என்பதை உணர்ந்தான். (பிரசங்கி 5:12-15) வங்கியிலுள்ள பணத்தை வங்கி நொடித்துப் போவதால் அல்லது பணவீக்கத்தால் இழக்கலாம். சொத்துகள் கடுமையான புயல் காரணமாக அழிக்கப்படலாம். காப்புறுதி திட்டங்கள் ஓரளவிற்கு இழப்பை ஈடுசெய்தாலும் உணர்ச்சி சம்பந்தமான இழப்புகளை ஈடுசெய்ய முடியாது. ஒரு திடீர் பங்குச் சந்தை வீழ்ச்சியில், பங்குகளும் பிணைப்புகளும் ஓரிரவில் பயனற்றதாகிவிடலாம். ஒரு நல்ல சம்பளத்தை உடைய வேலைகூட—பல காரணங்களுக்காக—இன்று இருந்து, நாளை இல்லாமற்போய்விடலாம்.
இந்தக் காரணங்களுக்காக, யெகோவாவில் நம்பிக்கையாய் இருப்பவன் இயேசுவின் எச்சரிப்பிற்குச் செவிசாய்ப்பதன் ஞானத்தைப் பார்க்கிறான்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.”—மத்தேயு 6:19, 20.
எப்போதும் நம்மைக் கவனித்துவருகிறவரான சர்வவல்லமையுள்ள கடவுள்மேல் ஒருவர் தன்னுடைய நம்பிக்கையை வைத்திருப்பதை அறிந்திருப்பதைவிட என்ன அதிகளவான பாதுகாப்புணர்ச்சியும் மகிழ்ச்சியான உணர்வும் இருக்க முடியும்?—சங்கீதம் 94:14; எபிரெயர் 13:5, 6.
தெய்வீக கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுதல்
ஆலோசனை, கடிந்துகொள்ளுதல்கூட, ஓர் உண்மையான நண்பனால் ஓர் அன்பான உணர்வுடன் கொடுக்கப்படும்போது வரவேற்கப்படுகிறது. கடவுளுடைய ஊழியக்காரன், யோபிடம் அவருக்கு நண்பனாக உரிமைபாராட்டியவன் சுயநீதியான முறையில் அவரிடம் சொன்னான்: “தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்.” அந்தக் கூற்று உண்மையாக இருந்தாலும், எலிப்பாஸ் இந்த வார்த்தைகள் மூலமாக சொல்லவந்த காரியம்—யோபு வினைமையான தவறைச் செய்ததற்குக் குற்றமுள்ளவர் என்பது—உண்மையானது அல்ல. என்னே ஒரு ‘துயர்தரும் தேற்றரவாளன்’! இருந்தாலும், பின்னர் யெகோவா யோபை அன்பான முறையில் கண்டித்தபோது, யோபு மனத்தாழ்மையுடன் அந்தக் கடிந்துகொள்ளுதலை ஏற்று, தன்னை அதிக மகிழ்ச்சிக்குரிய பாதையில் வைத்தார்.—யோபு 5:17; 16:2; 42:6, 10-17.
யோபிடம் பேசியதுபோல் இன்று கடவுள் அவருடைய ஊழியக்காரரிடம் நேரடியாகப் பேசுவதில்லை. மாறாக, அவர் தன்னுடைய வார்த்தையின் மூலமாகவும் அவருடைய ஆவியால் வழிநடத்தப்பட்ட அமைப்பின் மூலமாகவும் கடிந்துகொள்கிறார். எனினும் பொருளாதார அக்கறைகளைப் பின்தொடர்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு, அடிக்கடி நேரமும், சக்தியும் இருப்பதுமில்லை; ஒழுங்காக பைபிளைப் படிப்பதற்கும் யெகோவாவின் அமைப்பு ஏற்படுத்தியிருக்கும் கூட்டங்களுக்குச் செல்வதற்கு மனச்சாய்வும் இருப்பதில்லை.
கடவுளால் கடிந்துகொள்ளப்படும் மனிதன், நீதிமொழிகள் 3:11-18-ன்படி, அத்தகைய கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்வதன் ஞானத்தை ஒத்துக்கொள்கிறான்: “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள் [சந்தோஷமுள்ளவர்கள், NW]. அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல. அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான் [சந்தோஷமுள்ளவன், NW].”
சுத்தமாயும் சமாதான பிரியராயும் இருத்தல்
“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்” மற்றும் “சமாதானம்பண்ணுகிறவர்கள்” மகிழ்ச்சியுள்ள மக்கள் என்பதாக இயேசு விவரித்தார். (மத்தேயு 5:8, 9) ஆனால், பொருளுடைமைகளை உடைய ஒரு வாழ்க்கை பாணியை உற்சாகப்படுத்தும் ஓர் உலகில், தன்னலமான, ஒருவேளை சுத்தமற்ற ஆசைகள்கூட நம் இருதயத்தில் வேர்கொள்வது எவ்வளவு எளிதாக இருக்கக்கூடும்! தெய்வீக ஞானத்தால் வழிநடத்தப்படாவிட்டால், மற்றவர்களுடன் கொண்டிருக்கும் சமாதான உறவுகளை அழித்துவிடக்கூடிய கேள்விக்குரிய வழிமுறைகளில் பொருளாதார நலனை நாடுவதற்குத் தவறாக வழிநடத்தப்படுவதுகூட எவ்வளவு எளிதானதாக இருக்கும்! பைபிளின் பின்வரும் எச்சரிக்கை காரணமில்லாமல் கொடுக்கப்படவில்லை: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:10.
பண ஆசை, திருப்தியற்றதன்மை, நன்றிகெட்டதன்மை, பேராசை ஆகியவற்றைப் பேணும் ஒரு தன்னல போக்கை வளர்க்கிறது. அத்தகைய தவறான ஆவி வளர்வதைத் தடுப்பதற்காக, பெரிய பொருளாதார தீர்மானங்களை எடுக்குமுன், சில கிறிஸ்தவர்கள் தங்களைத்தாங்களே இதுபோன்ற சில கேள்விகளைக் கேட்டுக்கொள்கின்றனர்: அது எனக்கு உண்மையில் தேவையா? இலட்சக்கணக்கிற்கும் அதிகமானோர் அது இல்லாமல் வாழும்போது, இந்த விலையுயர்ந்த பொருளை வாங்குதல் அல்லது இந்த நல்ல சம்பளத்தை உடைய, அதிக நேரத்தைக் கேட்கும் வேலை எனக்குத் தேவையா? என்னுடைய பணத்தை அல்லது என்னுடைய நேரத்தை உண்மை வணக்கத்தில் என்னுடைய பங்கை விஸ்தரிப்பதில், உலகளாவிய பிரசங்கவேலையை ஆதரிப்பது அல்லது என்னைவிட வசதிகள் குறைந்தவர்களுக்கு உதவுவதுபோன்ற மேம்பட்ட முறைகளில் நான் பயன்படுத்தக்கூடுமா?
சகிப்புத்தன்மையைக் காண்பித்தல்
யோபு சகித்திருக்கும்படி வற்புறுத்தப்பட்ட சோதனைகளில் ஒன்று பொருளாதார இழப்பாகும். (யோபு 1:14-17) அவருடைய உதாரணம் காண்பிக்கிறபடி, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. சில கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலை சகிக்கவேண்டும்; மற்றவர்கள் சோதனைகளை, இன்னும் மற்றவர்கள், குறைவான பொருளாதார நிலைமைகளைச் சகிக்கவேண்டும். ஆனால் எவ்விதமான சகிப்புத்தன்மையும் யெகோவாவால் பலனளிக்கப்படும்; கிறிஸ்தவ சீஷனாகிய யாக்கோபு யோபைக் குறிப்பிட்டுச் சொன்னபடி: “பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே!”—யாக்கோபு 5:11.
நம்முடைய பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காக ஆவிக்குரிய அக்கறைகளை அசட்டை செய்வது தற்காலிகமான பொருளாதார நிம்மதியைக் கொண்டுவரக்கூடும்; ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் கிடைக்கப்போகும் நிரந்தரமான பொருளாதார நிம்மதியைப்பற்றிய நம்முடைய காட்சியை ஒளிமயமாக வைப்பதற்கு அது உதவுமா? அது நாம் துணிந்து மேற்கொள்வதற்கு தகுந்த ஒன்றாக இருக்கிறதா?—2 கொரிந்தியர் 4:18.
இப்பொழுதும் என்றென்றுமாக மகிழ்ச்சியைக் கண்டடைதல்
தெளிவாகவே, மனிதரை மகிழ்ச்சியாக்குவதற்குத் தேவையானது என்ன என்பதைப்பற்றிய யெகோவாவின் கருத்தைக்குறித்து சில மக்கள் தர்க்கம் செய்கின்றனர். அதிக முக்கியமான நீண்டநாள் பலன்களைப் புறக்கணித்துவிட்டு, கடவுள் கூறும் அறிவுரையில் உடனடியான எந்தத் தனிப்பட்ட நன்மையையும் அவர்கள் காண்பதில்லை. பொருள் சம்பந்தமான காரியங்களில் நம்பிக்கை வைப்பது வெறும் மாயை என்றும் வேதனைகளுக்கு வழிநடத்துகிறது என்றும் அவர்கள் உணரத் தவறுகின்றனர். பைபிள் எழுத்தாளர் சரியாகவே கேட்கிறார்: “பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதைக் காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?” (பிரசங்கி 5:11; இவற்றையும் பாருங்கள்: பிரசங்கி 2:4-11; 7:12.) நாம் அப்போதே கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்த காரியங்கள், எவ்வளவு சீக்கிரமாக அக்கறை ஆர்வம் குன்றிப்போய், அதிகமாக எதற்கும் இல்லாமல் ஷெல்ஃபில் இடத்தை அடைத்துக்கொண்டு, தூசிபடிந்து கிடக்கின்றன!
ஒரு கிறிஸ்தவன், பொருள்சம்பந்தமான வழியில் ‘பிறருக்குச் சரிசமமாக வாழவேண்டும்’ என்ற அழுத்தத்தில் சிக்கிக்கொள்வதற்குத் தன்னை அனுமதிக்கமாட்டான். உண்மையான மதிப்பு, ஒருவர் எதை வைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்து அல்ல, ஆனால் ஒருவர் என்னவாக இருக்கிறார் என்பதைப் பொறுத்தே கணக்கிடப்படுகிறது. அவருடைய மனதில், ஓர் ஆளுடைய மகிழ்ச்சிக்கு—உண்மையான மகிழ்ச்சிக்கு—தேவையானது என்ன என்பதைப்பற்றி எவ்வித சந்தேகமுமில்லை; அது என்னவென்றால், யெகோவாவுடன் ஒரு நல்ல உறவை அனுபவிப்பதும் அவருடைய சேவையில் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதுமாகும்.
[பக்கம் 20-ன் படம்]
பொருள்சம்பந்தமான காரியங்கள் மட்டும் ஒருபோதும் நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியாது
[பக்கம் 22-ன் படம்]
பைபிள் சொல்கிறது: “தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளைக்குறித்து உணர்வுள்ளவர்களாய் இருப்பவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்”