வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஆகஸ்ட் 15, 1996-ன் காவற்கோபுரம் இவ்வாறு சொன்னது: “இந்த உபத்திரவத்தின் இறுதி பாகத்திலும், யெகோவாவின் பக்கத்தில் ஓடியிருக்கிற ‘மாம்சம்’ தப்புவிக்கப்படும்.” இது, மகா உபத்திரவத்தின் முதல் பாகத்திற்குப் பின், புதியவர்கள் பலர் கடவுளுடைய பக்கத்திற்கு வருவார்கள் என்று குறிப்பிடுகிறதா?
அந்தக் கருத்து குறிப்பிடப்படவில்லை.
மத்தேயு 24:22-ல் (NW) காணப்படுகிற இயேசுவின் வார்த்தைகள், வரவிருக்கும் மகா உபத்திரவம் மதத்தைத் தாக்குவதான அதன் முதல் பாகத்தில் இரட்சிக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் முதலாவதாக நிறைவேற்றப்படும். அந்தக் கட்டுரை இவ்வாறு சொன்னது: “இந்த உபத்திரவத்தின் முதல் பாகத்தில் மகா பாபிலோன் விரைவாயும் முழுமையாயும் விழும்போது, அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேரும் ‘திரள் கூட்டத்தாருமாகிய’ அந்த ‘மாம்சம்’ ஏற்கெனவே தப்புவிக்கப்பட்டிருக்கும் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.”
உபத்திரவத்தின் முடிவு பாகத்தில் இயேசுவும் அவருடைய பரலோக சேனையும் செயல்படுகையில் இத்தகைய உண்மையுள்ளவர்கள் ஆபத்தில் இருப்பதில்லை. ஆனால் உபத்திரவத்தின் அந்தப் பாகத்தில் இவ்வாறு கடக்கப்போகிறவர்கள் யார்? பூமிக்குரிய நம்பிக்கையுடைய ஒரு திரள் கூட்டமானோர் தப்பிப் பிழைப்பார்கள் என்று வெளிப்படுத்துதல் 7:9, 14 காட்டுகிறது. ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைப் பற்றியதென்ன? அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர் எப்போது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என்பதைப் பற்றி நாம் ஏன் உறுதியாகக் கூற முடியாது என்பது ஆகஸ்ட் 15, 1990-ன் காவற்கோபுரத்தில் (ஆங்கிலம்) “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” கட்டுரையில் பகுத்தாராயப்பட்டது. ஆகையால் இந்த சமீப கட்டுரை (ஆகஸ்ட் 15, 1996) அந்தக் காரியத்தைத் திட்டமாகக் குறிக்காமல், பொதுவாக இவ்வாறு குறிப்பிட்டது: “அவ்வாறே இந்த உபத்திரவத்தின் இறுதி பாகத்திலும், யெகோவாவின் பக்கத்துக்கு ஓடியிருக்கிற ‘மாம்சம்’ தப்புவிக்கப்படும்.”
மகா உபத்திரவம் தொடங்கின பின்பு, புதியவர்கள் எவராவது சத்தியத்தைக் கற்றறிந்து கடவுளின் சார்பில் வரக்கூடுமா என்பதைக் குறித்ததில், மத்தேயு 24:29-31-ல் (NW) பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளைக் கவனியுங்கள். மகா உபத்திரவம் தொடங்கின பின்பு, மனுஷகுமாரனின் அடையாளம் காணப்படும். பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் தங்களை அடித்துக்கொண்டு புலம்புவார்கள் என்று இயேசு சொன்னார். ஜனங்கள் அந்தச் சூழ்நிலைமைக்கு விழிப்புற்று, மனம் வருந்தித் திரும்பி, கடவுளுடைய சார்பில் நிலைநிற்கை ஏற்று, உண்மையான சீஷர்களாவதைப் பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை.
இவ்வாறே, செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமையில், மனுஷகுமாரன் தோன்றி, ஜனங்களை, கடந்த காலத்தில் அவர்கள் செய்திருந்தவற்றின் அல்லது செய்யாது விட்டவற்றின் ஆதாரத்தின்பேரில் நியாயந்தீர்த்துப் பிரிக்கிறார். வெள்ளாடுகளைப் போன்ற குணங்களை நெடுங்காலமாகக் காட்டிவந்திருக்கிற ஜனங்கள், திடீரென்று மனந்திரும்பி செம்மறியாடுகளைப்போல் ஆவதைப்பற்றி இயேசு ஒன்றும் சொல்லவில்லை. ஜனங்கள் எத்தகையோராகத் தங்களை ஏற்கெனவே நிரூபித்திருந்தார்களோ அந்த ஆதாரத்தின்பேரில்தானே தீர்ப்பளிப்பதற்கு இயேசு வருகிறார்.—மத்தேயு 25:31-46.
எனினும், இந்தக் குறிப்பு சம்பந்தமாக மிகவும் விடாப்பிடியாக நாம் இருக்கக்கூடாது. கடவுளுடைய மக்கள், அபிஷேகம்பண்ணப்பட்டவர்களும், திரள்கூட்டத்தினரும் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதை, அதாவது பிரசங்கம்செய்து, சீஷர்களை உண்டாக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். (மத்தேயு 28:19, 20; மாற்கு 13:10) பின்வரும் எச்சரிப்பை மனதில் வைக்க வேண்டிய காலம் இது: “தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.”—2 கொரிந்தியர் 6:1, 2.