-
யார் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்?விழித்தெழு!—1990 | பிப்ரவரி 8
-
-
யார் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்?
இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தில் இந்தக் கேள்விக்குப் பதிலளித்தார்: ‘சாந்த குணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.’ பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் சங்கீதக்காரனாகிய தாவீது இவ்விதமாகச் சொல்லியிருந்தான்: ‘சாந்த குணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.’ யெகோவா தேவனைப் பற்றிதாமே இவ்விதமாகச் சொல்லப்படுகிறது: “பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.”—மத்தேயு 5:5; சங்கீதம் 37:11; 115:16.
-
-
யார் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்?விழித்தெழு!—1990 | பிப்ரவரி 8
-
-
கடவுள், மனிதனுக்குத் தேவையான வழிநடத்துதலைக் கொடுக்கிறார்: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 119:105) இது மகிழ்ச்சிக்கு வழிநடத்துகிறது: “இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் (யெகோவா, NW) சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் (யெகோவாவே, NW) நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது, உன் சமாதானம் நதியைப் போலும் உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப் போலும் இருக்கும்.”—ஏசாயா 48:17, 18.
ஆனால் பெரும்பாலான மனிதவர்க்கத்துக்குத் தெய்வீக வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு அதன் மூலமாக அதன் நன்மைகளை அறுவடைச் செய்வதற்கு வேண்டிய சாந்த குணமில்லை. அது தன்னுடைய சுயாதீனத்தை வற்புறுத்தி அழிவுக்குப் போகும் வழியைத் தெரிந்துகொள்வதில் விடாப்பிடியாக இருக்க வேண்டும். சாந்த குணமுள்ளவர்கள் மாத்திரமே, “ஜீவனுக்குப் போகிற வழியைக்” கண்டடைகிறார்கள்.—மத்தேயு 7:13, 14.
மனிதர்கள் இன்று அவர்களுடைய நிலைக்குத் தகுதியற்றவர்களாகிவிட்டிருக்கின்றனர். முதலாவது ஒழுக்க விஷயங்களில் அவர்கள் தங்களை தூய்மைக் கேடடையச் செய்து, பின்னர் பூமியைச் சொல்லர்த்தமாக தூய்மைக் கேடடையச் செய்திருக்கிறார்கள். இந்த ஒழுக்க சம்பந்தமானத் தூய்மைக் கேடே பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு கடவுளுடையப் பார்வையில் அவர்களைத் தகுதியற்றவர்களாக்கிவிட்டிருக்கிறது. மக்களின் ஒழுக்கயீனம் எவ்விதமாக தேசத்தை அவ்வளவாகத் தூய்மைக் கேடடையச் செய்துவிட்டதால் அவர்கள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்பதைப் பற்றிய இரண்டு உதாரணங்களை பின்வரும் கட்டுரை கொண்டிக்கிறது. இரண்டுமே பூர்வ சரித்திரத்தில் நடை பெற்றவை. (g89 1/22)
-