பூமி சாந்த குணமுள்ளோருக்கு நித்திய சுதந்திரம்
“வானம் எனக்குச் சிங்காசனம்” என்று யெகோவா சொல்லுகிறார், “பூமி எனக்குப் பாதபடி.” தம்முடைய பாதபடியைக் குறித்து யெகோவா இவ்விதமாக வாக்களிக்கிறார்: “என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்.” (ஏசாயா 66:1; 60:13, ரோதர்ஹாம்) அதைச் சுதந்தரித்துக் கொள்ளப்போகிற சாந்தகுணமுள்ளவர்களுக்காக இதை அவர் செய்வார். அவர்களுடைய போற்றுதலுள்ள கவனிப்பின் கீழ், அதன் சிருஷ்டிகராகிய யெகோவாவுக்கு மகிமையுண்டாக பூமியானது பரதீஸிய அழகுள்ள ஓர் இடமாக மாற்றப்படும்.
ஆனால் சிலர் இவ்விதமாக தர்க்கம் பண்ணுவார்கள்: ‘பூமியைச் சதந்தரித்துக் கொள்ளப்போகிறவர்கள் சாந்தகுணமுள்ளவர்கள் அல்லவா? சர்ந்தகுணமுள்ளவர்கள் பலவீனமானவர்கள்! பூமியின் மீது ஆதிக்கம் செலுத்த அவர்கள் எவ்விதமாக போதிய பலமுள்ளவர்களாக இருக்கமுடியும்?’ வேதாகமத்தில், “சாந்தகுணமுள்ளவர்கள்” என்பது மென்மையான, தயவான, சாந்தமான ஆனால் இரும்பு பலமுள்ள ஆட்களைக் குறிப்பிடுகிறது. இது பழக்கி அடக்கப்பட்ட, ஆனால் இன்னும் பலமுள்ளதாக இருந்த ஒரு மூர்க்க மிருகத்துக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தையாக இருந்தது.
கிரேக்க வார்த்தைகளின் வைன் அகராதி சாந்தம் என்பதை இவ்விதமாக தொகுத்துரைக்கிறது: “இது ஆத்துமாவோடு நெருக்கமாக பின்னிக்கலந்துள்ள ஓர் இனிமையான பண்பாகும்; இது முதலாவதும், முக்கியமாகவும் கடவுளிடமாகக் காண்பிக்கப்படுகிறது. இந்த மனநிலையில்தானே, நாம் கடவுளுடைய செயல்தொடர்புகளை நன்மையானதாக, வாதாடாமல் அல்லது எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொள்கிறோம்.” சிலர் இன்று தங்களுடைய ஒழுக்கங்கெட்ட நடத்தைக்கு இடமளிப்பதற்காகச் செய்வதுபோல, சாந்தகுணமுள்ளவர்கள் கடவுளுடைய வார்த்தையை கூட்டவோ, குறைக்கவோ, அதன் ஆற்றலை இழக்கவோ அல்லது திரித்துவிடவோ செய்வதில்லை.—உபாகமம் 4:2; 2 பேதுரு 3:16; வெளிப்படுத்துதல் 22:18, 19.
“மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.” (எண்ணாகமம் 12:3) ஆனால் அவன் பலவீனமாக இருந்தானா? எகிப்தின் பராக்கிரமசாலியான பார்வோன் முன்னால் தோன்றி அவன் அடிமைப்பட்டிருந்த எபிரெயர்களைப் போக அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரத்துடன் கேட்டான். பார்வோன் பிடிவாதமாகவும், அவன் பதில் ‘இல்லை’ என்பதாகவும் இருந்தது! ஆனால் மோச மிரண்டுவிடாமல், திரும்ப வந்துகொண்டும் எகிப்தியர்கள் மீது வாதைகளை அறிவித்துக்கொண்டுமிருந்தான். (யாத்திராகமம், அதிகாரங்கள் 7-11) சாந்தகுணம், ஆம்; ஆனால் பலவீனம்? நிச்சயமாக இல்லை!
கிறிஸ்து இயேசு சாந்தகுணமுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் அவருடைய நாளிலிருந்த மதவெறியர்கள், தம்மை சித்திரவதைச் செய்து கொலை செய்வார்கள் என்பதை அறிந்திருந்தும் அவர்களை எதிர்த்து நின்றார். “இதோ” என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார், “எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புற தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரியாசம் பண்ணி, அவரை வாரினால் அடித்து அவர் மேல் துப்பி, அவரைக் கொலை செய்வார்கள்.” (மாற்கு 10:33, 34) இவை அனைத்தையும் அவர்கள் அவருக்குச் செய்தார்கள், ஆனால் அவர் கடவுளிடமாகத் தம்முடைய உத்தமத்தன்மையில் ஒருபோதும் தடுமாற்றமடையவில்லை. சாந்தகுணம், ஆம்; ஆனால் பலவீனம்? நிச்சயமாக இல்லை!
ஆகவே வேதப்பூர்மான சாந்த குணமுள்ளவர்களுக்கே யெகோவா தேவன் பூமியைக் கொடுப்பார். விஞ்ஞானிகளின் ஊக வாதங்களுக்கும், பொய் மதப் போதனைகளுக்கும் நேர் எதிர்மாறாக, பூமி, “ஒருபோதும் நிலைபேராதபடி” இருக்கும். (சங்கீதம் 104:5) யெகோவா அதை “வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்”திருக்கிறார். (ஏசாயா 45:18) அப்பொழுது வாழ்க்கை எத்தனை கவலையற்றதாக இருக்கும்! “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து போயின.”—வெளிப்படுத்துதல் 21:4.
பூமியைச் சீர்குலையச் செய்த தூய்மைக்கேடுச் செய்தவர்கள் அனைவரும் அழிந்துவிட்டிருப்பர்! அப்பொழுது “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (நீதிமொழிகள் 2:21, 22; சங்கீதம் 37:11) வேதப்பூர்வமான சாந்த குணமுள்ளவர்களில் ஒருவராக நீங்கள் தகுதிப்பெற போதிய பலமுள்ளவர்களாக இருப்பீர்களேயானால், நீங்களும்கூட அந்தப் பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை அனுபவித்துக் களிக்கலாம். (g89 1/22)