நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?
ராமு கரடுமுரடான பாதை வழியாய்க் கவனமாய்த் தன் அயலகத்தாரின் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கையில் புயல் மேகங்கள் ஒருங்கே திரண்டுகொண்டிருந்தன. அவனுக்குப் பய உணர்ச்சி உண்டாயிற்று. பரீட்சை சமயம் நெருங்கிக்கொண்டிருந்தது, தன் கணக்கு பாடங்கள் சிலவற்றை அவன் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனுடைய தாய் தங்கள் அயலகத்தாரிடம் உதவி கேட்பதற்கு அவன் அங்கு செல்லும்படி வற்புறுத்தினாள், ஆனால் ராமு ஆசிரியரிடம்a இன்னும் பேசினதில்லை, அவர் ஒரு நகர பள்ளியில் கணக்கு கற்பித்துக்கொண்டிருந்தார். அவர்கள் சிநேகப்பான்மையுள்ள ஒரு குடும்பத்தாரெனவும் உதவிசெய்வதில் சந்தோஷப்படுவரெனவும் அம்மா சொல்லியிருந்தாள். அம்மாவின் நிலைமையைக் கண்டபின் அந்த ஆசிரியரின் மனைவி உணவு பங்கீடு கடையிலிருந்து அம்மாவின் அரிசியைச் சுமந்துகொண்டுவந்தாள் அல்லவா?
ராமு தன் தாயையும் அவள் விடியற்காலையிலிருந்து இரவு வரை கடினமாய் உழைப்பதையும் பற்றி நினைத்துப் பார்த்தான். மேலும் உணவளித்து, உடையுடுத்தி, கவனித்துப் பேணுவதற்குச் சீக்கிரத்தில் குடும்பத்தில் மற்றொரு உறுப்பினன் பிறப்பான். ராமுக்கு நல்ல வேலை கிடைத்து குடும்பத்தை ஆதரிக்க உதவிசெய்யக் கூடும்படி கடினமாய் முயற்சியெடுத்து படிக்க அவனுடைய தகப்பன் அவனைத் தொடர்ந்து வற்புறுத்திவருவதில் அதிசயமொன்றுமில்லை.
அவன் ஆசிரியரின் வீட்டுக்கு வந்துசேர்ந்துவிட்டான். கதவண்டை அவன் சற்றுத் தயங்குகையில், “ஹலோ, உள்ளே வா,” என்று அன்பான குரல் சொன்னது, ராமு உள்ளே பிரவேசித்தான்.
சிறிது நேரத்துக்குப் பின் ராமுவின் தகப்பன், ஆனந்து, வேலையிலிருந்து வீடுதிரும்பிக்கொண்டிருந்தார், தன் மகன் ஆசிரியரின் வீட்டைவிட்டு வெளிவருவதைக் கண்டார். ராமு மகிழ்ச்சியோடிருப்பதாகத் தோன்றினான், அவன் நடையில் ஒரு துள்ளல் இருந்தது. ஆனந்து ஆசிரியரின் வீட்டை அடைகையில், வானம் திறவுண்டதுபோல் தோன்றிற்று, மழை சோ எனப் பொழிந்தது. ராமு தன் வீட்டுக்கு ஓடுவதைக் கவனித்துக்கொண்டிருந்த அந்தப் பள்ளி ஆசிரியர், ஆனந்துவை வீட்டுக்குள் அழைத்தார், கடுமையாய்ப் பெய்யும் மழைக்கெதிராகக் கதவை விரைவில் மூடினார்.
நாமெல்லாரும் எதிர்ப்படும் பிரச்னைகள்
தன் சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் அந்நாளைய நெடுநேர உழைப்புக்குப்பின் களைத்திருந்த ஆனந்து, ஆசிரியரின் மனைவி, மரியம், அவருக்காகத் தயார்செய்த அந்த ஒரு குவளை சூடானத் தேநீரை மகிழ்ச்சியுடன் ஏற்றார். மரியம் தன் தையல் மெஷினிடம் திரும்பிச் செல்லுகையில், மேலும் ஆசிரியரின் பிள்ளைகளாகிய பவுலும் ரேச்சலும் தங்கள் வீட்டுப்பாடவேலை செய்வதில் அமர்ந்திருக்கையில், அறை ஒழுங்காகவும் சுத்தமாகவும் இருந்த அந்த அறையைச் சுற்றி பார்த்தார். திடீரென்று ஆனந்து மிகுந்த கசப்பு நிறைந்த மனதுடன் பேசத்தொடங்கினார், “நான் ஒவ்வொரு நாளும் எதிர்ப்படவேண்டியிருக்கிற பிரச்னைகள் உங்களுக்கு இல்லையென்று காண்கிறேன். நீங்கள் எல்லாரும் அமைதியாயும் திருப்தியாயும் இருக்கிறீர்கள். உங்கள்பேரில் எனக்கு எவ்வளவு பொறாமையாயிருக்கிறது!” ஆசிரியர் புன்சிரிப்புடன் பின்வருமாறு கூறினார், “எங்களுக்கும் எங்கள் பிரச்னைகள் உண்டு, ஆனந்து. ஆனால் குறிப்பாய் உமக்கு மனச்சங்கடத்தைக் கொடுப்பது என்ன?”
ஆசிரியரின் அன்பான அக்கறையால் மனக்கிளர்ச்சியூட்டப்பட்ட ஆனந்து தன் இருதயத்திலுள்ளவற்றை வெளிப்படுத்திக்கூறத் தொடங்கினார். பணம், இதுவே முக்கியமான காரியம். செலவுக்குப் போதுமானது ஒருபோதும் இருந்ததில்லை. வீட்டுக்காரர் தொடர்ந்து வாடகையை உயர்த்திக்கொண்டே இருக்கிறார்; பள்ளிக்கூடக் கட்டணங்களும் புத்தகங்களின் மற்றும் பள்ளி சீருடைகளின் விலையும் எப்பொழுதும் உயர்ந்துகொண்டே இருக்கின்றன. அவனுடைய மனைவி, நிர்மலா, கடையிலிருந்து வந்த ஒவ்வொரு சமயத்திலும், அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் விலையுங்கூட உயர்ந்துகொண்டிருப்பதைப் பற்றி முறையிட்டாள். இப்பொழுது அவள் மறுபடியும் கர்ப்பமாயிருந்தாள், பலவீனமாயும் இரத்தச்சோகை உள்ளவளாயும் இருந்ததால் கட்டாயமாக அவள் சத்து மருந்துகள் உட்கொள்ளவேண்டுமென மருத்துவர் சொன்னார். பணம் எங்கிருந்து வரும்? அவருடைய மகன் ராமு பள்ளி படிப்பு முடிப்பதற்கு இன்னும் சில ஆண்டுகள் செல்லும், அவனை ஒரு நல்ல பள்ளிக்கு அனுப்ப செலவிட்ட எல்லா செலவுக்குப் பின்னும், அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்குமென்பதற்கு என்ன உறுதி இருந்தது? பல பட்டங்களைப்பெற்ற கல்லூரி பட்டதாரிகளுங்கூட வேலையில்லாதிருக்கின்றனர். வாழ்க்கையில் தங்கள் நிலையை முன்னேறச் செய்யும் வகையான வேலையைக் கண்டடைய சைக்கிள் பழுதுபார்ப்பவரின் மகனுக்கு என்ன நம்பிக்கை இருந்தது? தன் பெண் பிள்ளைகளுக்கு வரதட்சிணை கொடுக்கப் பணம் இல்லாமல் அவர்களுக்குக் எவ்வாறு கணவர்களைத் தேட முடியும்? இது சட்டவிரோதமானதாக இருந்தாலும், ஆட்கள் இன்னும் இதை ஏதோவொருவகையில் வற்புறுத்திக் கேட்கிறார்கள்.
ஆனந்து தன்னை நேர்மையுள்ள மனிதனாகக் கருதினார். பொய்ச் சொல்லவோ வஞ்சிக்கவோ கூடாதென அவருடைய பெற்றோர் அவருக்குக் கற்பித்திருந்தனர். ஆனால் இது அவரை முன்னேறச் செய்ததா? ஊழலை அவர் விரும்புகிறதில்லை, ஆனால் நேர்மையான வழிவகைகளால் தான் ஒருபோதும் முன்னேற முடியாதென அவர் உணர்ந்தார். சைக்கிள் பழுதுபார்க்கும் மற்றவர்கள், திருடின சைக்கிள்களை வைத்து வியாபாரம் செய்தனர், பயன்படுத்திய பழைய பாகங்களைப் புதியவைப்போல் விற்பனைசெய்தனர், அவர்களுடைய தொழில் நன்றாய் முன்னேறிக்கொண்டிருந்தது. அவரும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது? இன்னும் சிறிது அதிகப் பணம் அவருடைய எத்தனையோ பல பாரங்களைக் குறைக்கும்.
ஆனந்து தன்னுடைய துயர் நிறைந்த கதையைச் சொல்லித் தீர்க்கும் வரை ஆசிரியர் பொறுமையுடனும் அனுதாபத்துடனும் செவிகொடுத்துக் கேட்டார்.
அவர் கேட்டார், “ஆனந்து, பணம் உம்முடைய பிரச்னைகளைத் தீர்க்குமென நீர் உண்மையில் நினைக்கிறீரா? பணக்காரர் எல்லாரும் சந்தோஷமாயும், பாதுகாப்பாயும், பிரச்னைகள் இல்லாமலும் இருக்கிறார்களென்று நீர் நினைக்கிறீரா? அவர்கள் ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லையா? அவர்களுடைய பிள்ளைகள் போதை துர்ப்பழக்கத்துக்கு அடிமையாவது, ஒழுக்கக்கேட்டுக்கு உட்படுவது, அல்லது கலகஞ்செய்வோராவதைப் பற்றியதென்ன? பணம் மிக ஏராளமாயுள்ள முன்னேற்ற நாடுகளென அழைக்கப்படுபவற்றில் ஊழல்கள், லஞ்சங்கள் வாங்குதல், வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை பெருக்கம் ஆகியவற்றைப்பற்றி நாம் கேள்விப்படுகிறோமல்லவா? இல்லை, ஆனந்து, பணம் மாத்திரமே உம்முடைய அல்லது என்னுடைய பிரச்னைகளைத் தீர்த்துவிடுமென்பதை நான் ஒப்புக்கொள்ள முடியாது.”
“உங்களுடைய பிரச்னைகளா, அவை யாவை?” என்றார் ஆனந்து.
“அவை உம்முடையவற்றைப் போன்றவையே, ஆனந்து. நம்மில் பலர் அதே பிரச்னைகளை உடையோராய் இருக்கிறோமென நான் நினைக்கிறேன், தெரியுமா.”
“ஆனால் நான் மனக்கலக்கமடைவதுபோல் நீங்கள் இல்லை. உங்கள் குடும்பம் மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதை நான் காண முடிகிறது. உங்கள் இரகசியம் என்ன, சார்?”
“அதென்னவெனில் ஆனந்து, ஒருவர் நம்முடைய எல்லா பிரச்னைகளையும் சீக்கிரத்தில் தீர்க்கப்போகிறாரென நாங்கள் குடும்பமாக உறுதியாய் நம்புகிறோம்.”
“ஒரு சொத்தைச் சுதந்தரிக்க நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?”
“இல்லை, அப்படியில்லை,” என்று ஆசிரியர் சிரித்துக்கொண்டே சொன்னார். “இல்லை, ஆனந்து, வெகு சீக்கிரத்தில் கடவுள் உலக விவகாரங்களில் தலையிட்டு, நேர்மையுள்ளோராய் சமாதானத்தை நேசிக்கும் மக்கள் விலையுயர்வு, நோய், குற்றச் செயல்கள், தங்க வீட்டுவசதி இல்லா பிரச்னைகள், வேலையில்லாமை, வன்முறைச் செயல்கள், அல்லது பாதுகாப்பில்லாமை ஆகியவற்றைப்பற்றி இனிமேலும் கவலைப்படவேண்டியிராத அத்தகைய ஒரு மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறாரென நாங்கள் நம்புகிறோம்.”
ஆனந்து ஆச்சரியத்தோடு பார்த்தார். “நீங்கள் சொல்வது என் தாயார் சொல்வதைப்போலவே இருக்கிறது: ‘எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிடு; உன் விதி அவருடைய கைகளில் இருக்கிறது,’ என்று சொல்லுவார்கள். உம்மைப்போன்ற கல்விபெற்ற ஆளிடமிருந்து இத்தகைய யோசனையை நான் எதிர்பார்க்கவில்லை, சார். நீங்கள் கிறிஸ்தவரென்று எனக்குத் தெரியும், ஆனால் எனக்குத் தெரிந்த மற்றக் கிறிஸ்தவர்கள் நீங்கள் உணருவதுபோல் உணருகிறதில்லை. அவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவற்றிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் சுறுசுறுப்பாய் ஈடுபட்டு, தங்கள் சொந்த முயற்சிகளால் நிலைமைகளை முன்னேற்றுவிக்கப் பிரயாசப்படுகிறார்கள்; காரியங்களை மாற்ற அவர்கள் வெறுமென ‘கடவுளிடம் விட்டுவிடுகிறதில்லை.’”
“என் குடும்பமும் நானும் நம்புவதற்கும் சர்ச்சுகளில் கற்பிப்பவற்றிற்கும் செய்பவற்றிற்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளதென்பதை ஒருவேளை நான் உமக்கு விளக்கவேண்டும், ஆனந்து. கிறிஸ்தவமென உரிமைபாராட்டும், அதாவது, தாங்கள் கிறிஸ்துவையும் பைபிளின் போதகங்களையும் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் வெவ்வேறு வகைப்பட்ட பல தொகுதிகள் இங்கே இந்த நகரத்தில் இருப்பது உமக்குத் தெரியும். எனினும், அவர்களுடைய நம்பிக்கைகளை நீர் சோதித்துப் பார்த்தால், அவர்களுடைய போதகங்களில் பல கிறிஸ்துவின் போதகங்களிலிருந்து வேறுபடுவதைக் காண்பீர். உதாரணமாக, கிறிஸ்து, வன்முறைச் செயல்களில் ஈடுபடக்கூடாதெனவும் தங்கள் சத்துருக்களில் அன்புகூரவேண்டுமெனவும் தம்மைப் பின்பற்றினோருக்குக் கற்பித்தார். கிறிஸ்தவ தேசங்களென அழைக்கப்படுபவை இந்தப் போதகத்தைப் பின்பற்றுகின்றனவா? அவை இரண்டு உலகப் போர்களை நடத்துவதிலும் அணுசக்தி போர்த்தளவாடங்களை உண்டுபண்ணுவதிலும் தலைமை வகித்தனவல்லவா? மேலும் சர்ச்சுகள் இவற்றை ஆதரித்தனவென பதிவு காட்டுகிறது. ஆகையால் அவை தங்கள் மிஷனரிகளை கிறிஸ்தவமல்லாத நாடுகளுக்கு அனுப்புகையில், அவர்கள் கிறிஸ்துவின் போதகங்களை எப்பொழுதும் கொண்டுவருகிறதில்லை.
“எனினும், நாங்கள் நம்புவதுபோல், கடவுள் நம்முடைய பிரச்னைகளுக்குத் தீர்வைச் சீக்கிரம் கொண்டுவருவார் என்று நம்பும் ஜனங்கள் உலகமுழுவதிலும் இருக்கின்றனர். எங்கள் நம்பிக்கை பைபிளில் வெகு காலத்துக்கு முன்னால் எழுதிவைக்கப்பட்டுள்ள முன்னறிவிப்புகளின்பேரில் ஆதாரங் கொண்டுள்ளது. இவை, ஓர் உலக மாற்றம் வெகு அண்மையில் இருக்கிறதென எங்களுக்கு உறுதியான நம்பிக்கை அளிக்கின்றன, இந்த நற்செய்தியை எங்கள் அயலாருடன் பகிர்ந்துகொள்ள நாங்கள் எங்களால் கூடிய எல்லாவற்றையும் செய்கிறோம். இந்த மாற்றத்தை வாக்குக் கொடுக்கும் பைபிளின் கடவுள் யெகோவா என்று அழைக்கப்படுவதால், நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று அறியப்படுகிறோம்.”
“அப்படியானால், சார், இது எனக்குப் புதிதான ஒன்றாயிருக்கிறது. மற்றொரு சமயம் நீங்கள் இதைப்பற்றி எனக்கு அதிகம் சொல்லவேண்டும்.”
பூமியில் மகிழ்ச்சியுடன் இருக்கும்படியான விருப்பம்
“அவர்கள் நிச்சயமாய்க் கடவுளில் நம்புகிறார்கள்,” என்று நிர்மலா தன் மாமனாரிடம் சொன்னாள்.
“நீ எதைப்பற்றிப் பேசுகிறாய், நிர்மலா?”
“ஆசிரியரும் அவருடைய குடும்பமும் கோயிலுக்கோ மசூதிக்கோ அல்லது சர்ச்சுக்கோ ஒருபோதும் செல்லாததாலும் அவர்களுடைய வீட்டில் சிலைகளோ மத படங்களோ இல்லாததாலும், அவர்களுக்கு கடவுளில் நம்பிக்கை இல்லை என நீங்கள் உணர்ந்தீர்கள். ஆனால் அவர்கள் கடவுளை நம்புகிறார்கள். பிறக்கப்போகிற குழந்தைக்காக உடைகளை எவ்வாறு தைப்பதென்று மரியம் எனக்குச் சொல்லிக் கொடுக்கையில் விளக்கமாகக் கூறினாள். எல்லாவற்றையும் படைத்த ஒரே கடவுளில் அவர்கள் நம்புகிறார்கள், அவருடைய பெயர் யெகோவா என்று அவள் சொன்னாள். அவர் காணக்கூடாதவராயிருப்பதாலும் ஒருவரும் அவரைப் பார்க்காததாலும், அவர்கள் அவருக்குச் சிலைகளையோ படங்களையோ உருவாக்குவதில்லை. “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்,” என்று அவர்களுடைய பரிசுத்த புத்தகமாகிய பைபிள் சொல்கிறதென அவள் எனக்குச் சொன்னாள். (யோவான் 4:24) ஆகையால் பார்ப்பதற்குக் காணக்கூடிய எந்தப் பொருளையும் பயன்படுத்தாமல் அவர்கள் கடவுளிடம் ஜெபிக்கிறார்கள். அவர்கள் தங்களை யெகோவாவின் சாட்சிகளென அழைத்துக்கொள்கிறார்கள்.
“மேலும் கடவுளை உண்மையோடு வணங்குவதைப்பற்றி வெகுவாய் அக்கறையைக் கவரும் ஒரு காரியத்தை அவள் சொன்னாள். உண்மை என்பது புராணக் கட்டுக்கதை அல்லது கற்பனைக் கதை அல்ல, காரியங்கள் அவை உண்மைப்படி இருப்பவை எனவே பொருள்படுகிறதென அவள் கூறினாள். ஆகையால், அவர்கள், உள்ளப்படியான உண்மைகளோடு ஒத்திராத, மனிதனால் உண்டுபண்ணப்பட்ட தத்துவஞானத்தில் நம்புகிறதில்லை. (மாற்கு 7:7, 8) உதாரணமாக, இந்தப் பூமியை விட்டுச் சென்று கடவுளுடன் ஒன்றாய் இணைக்கப்படுவதே அல்லது மரணத்துக்குப் பின்னான ஏதோ ஆவிவாழ்க்கையில் பலன் அடைவதே நம்முடைய இறுதியான இலக்கென பெரும்பான்மையான மதங்கள் கற்பிக்கையில், இது உண்மை நிகழ்ச்சிகளோடு ஒத்தில்லை, இது மனிதனின் இயல்பான மனவிருப்பமல்லவென அவள் கூறினாள். மனிதன் மிக அதிகமாய் விரும்புவது ஒரு நல்ல வீடு, நல்ல உடல்நலம், மகிழ்ச்சியுள்ள ஒரு குடும்பம், மற்றும் அன்புள்ள நண்பர்கள் என்பதை அவள் அழுத்திக் கூறினாள். ஆட்கள் மகிழ்ச்சியாயிருக்கையில், அவர்கள் மரித்து பரலோகத்துக்குச் செல்லவோ அல்லது நிர்வாணா அல்லது மோட்சத்தை அடைவதையோ, இவ்வாறு தங்கள் ஆள்தன்மையை இழந்து தனி ஆளாக இல்லாமற்போவதை அவர்கள் விரும்புகிறதில்லை, ‘பூமியில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான இந்த விருப்பத்தை மனிதனுக்கு யார் கொடுத்திருக்க வேண்டும்?’ என்று அவள் என்னைக் கேட்டாள். மனிதனைப் படைத்தவரே கொடுத்திருக்க வேண்டும். ஆகையால், இங்கே இந்தப் பூமியில்தானே மகிழ்ச்சியுடன் என்றென்றும் வாழ்வதற்காக யெகோவா தேவன் மனிதனை உண்டாக்கினாரென்று பைபிள் கற்பிப்பதாகத் தெரிகிறது. இது மனிதனின் இயல்பான விருப்பமாதலால், பைபிளின் இந்தப் போதகம் காரியங்களை அவை உண்மையில் இருக்கிறபடியே விவரிக்கிறது, ஆகையால் அது உண்மை அல்லது சத்தியம் என அழைக்கப்படலாம் என்று அவள் வலியுறுத்தினாள்.”
“நிர்மலா, அது உண்மையானால், கடவுள் தம்முடைய நோக்கத்தில் தோல்வியுற்றார். மக்கள் பூமியில் மகிழ்ச்சியாக இல்லை. பூமிக்குரிய வாழ்க்கை பிரச்னைகளையும் துன்பத்தையுமே குறிக்கிறது, இந்தப் பூமியிலிருந்து வெளியேறினால் மாத்திரமே நாம் விடுதலைபெறுவோம். எவ்வாறாயினும், இன்று ஆசிரியரும் அவருடைய குடும்பமும் நம்மைப் பார்க்க வருகிறார்களென்று ஆனந்து சொல்கிறான். அவர் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.”
சகல பிரச்னைகளையும் தீர்ப்பதாக வாக்குக் கொடுக்கிறவர்
வானிலையையும் பிள்ளைகளின் நடக்கப்போகும் பரீட்சைகளையும் பற்றிச் சிறிது பேசினபின்பு, தாத்தாb அன்றைய தினம் முன்னால் தான் நிர்மலாவிடம் குறிப்பிட்ட விவாதத்தைக் கொண்டுவந்தார். ஆசிரியர் சில விநாடிகள் யோசித்து, பின் ஆனந்துவின் தாயாரை நோக்கி, “பாட்டிமா,cகுடும்பத்தில் எவருக்காவது குளிர்காய்ச்சல் ஏற்படும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.
ஆச்சரியமடைந்து, அவள் பதில் சொன்னதாவது, “நிச்சயமாகவே, நான் அவர்களுக்கு மருந்து கொடுக்கிறேன். எங்களுக்கு அது அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது, ஆகவே மருந்துகடைக்காரரிடம் என்ன கேட்கவேண்டுமென்று எனக்குத் தெரியும்.”
ஆனந்துவின் தகப்பனிடம் திரும்பி, ஆசிரியர் சொன்னார், “பாருங்கள் தாத்தா, நீங்கள் நோயால் வருந்துகையில் சுகமாவதற்கு மருந்து உட்கொள்கிறீர்கள். அதுவே சரியானப்படி செய்யவேண்டிய காரியம்; ‘நான் மரித்து இந்தப் பூமியைவிட்டு போகவிடு,’ என்று நீங்கள் சொல்வதில்லை. இங்கே பூமியில் உண்டாகும் எல்லா பாடுகளையும் நம்முடைய எல்லா பிரச்னைகளையும் நீக்குவதற்குச் சரியான ‘மருந்து’ நமக்கு இருக்கிறதென வைத்துக்கொள்வோம். மரித்து நாம் நேசிப்போரைவிட்டுச் செல்வதைப் பார்க்கிலும் இங்கே தங்கியிருப்பதையே நாம் விரும்பித் தெரிந்துகொள்வோமல்லவா?
“மனிதனுக்குத் தன் எல்லா பிரச்னைகளையும் தீர்க்கத் திறமை இல்லை என்பது தெளிவாயிருக்கிறது. ஆகையால் நெடுங்காலமாக, மனிதர் பூமியில் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், கலியுகத்தின்போது, பூமியில் சத்யுகத்தைக் கொண்டுவர கடவுள் அவதாரம் எடுக்க வேண்டுமென உங்கள் சொந்த நம்பிக்கைதானே கற்பிக்கிறதல்லவா?d இந்தப் போதகத்தைத் தோற்றுவித்தப் பூர்வ தத்துவ ஞானிகள், மனிதன் இங்கே பூமியில் மகிழ்ச்சியுடன் இருக்கும்படி கடவுள் விரும்பினாரெனவும் நம்பினார்களென்று இது காட்டுகிறதல்லவா?
“இந்தக் குடியிருப்பிடத்தைச் சற்று எண்ணிப் பாருங்கள், தாத்தா. இது முதன்முதல் கட்டப்பட்டபோது, மிகச் சிறந்த குடியிருப்பிடமாக இருந்தது அல்லவா? ஆனால் இன்று இதைப் பாருங்கள். இத்தனை பல குடித்தனக்காரர்கள் இதில் குடியேறியிருக்கின்றனர், இவர்களுக்கு மற்றவர்களைப்பற்றி அக்கறையில்லை. இவர்கள் தெரு விளக்குகளை உடைத்துப்போட்டிருக்கின்றனர், தாங்கள் விரும்பின இடங்களிலெல்லாம் குப்பைகளை வீசி எறிந்திருக்கின்றனர், ஜன்னல்களை நொறுக்கியிருக்கின்றனர், மற்றும் குழாய்களைத் திருடியிருக்கின்றனர், அதனால் தண்ணீர் வீணாக ஓடி வீதிகளைச் சேறாக்குகிறது. இப்பொழுது என்ன செய்யப்பட வேண்டும்? இந்தக் கெட்டக் குடித்தனக்காரர்களை அகற்றிவிட்டு இந்தக் குடியிருப்பின் வசதிகளைப் பழுதுபார்த்து சரிசெய்தால், இங்கே வாழ்வதை நாம் மகிழ்வுடன் அனுபவிக்க முடியுமல்லவா? இதையே கடவுள் இந்த முழு பூமிக்கும் செய்வாரென வாக்குக் கொடுத்திருக்கிறார்.
“பைபிளில் சொல்லியிருக்கிறபடி, கடவுள் மனிதனைப் பரிபூரணனாயும், உடல்நலமுள்ளவனாயும், மகிழ்ச்சியுள்ளவனாயும் படைத்தார். ஆனால் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாததால், மனிதர் கேடுண்டாக்கும் முறையில் நடந்து குறைபாடுள்ளவராயினர். (உபாகமம் 32:4, 5) அதுமட்டுமல்ல, கடவுளுடைய படைப்பாகிய, இந்தப் பூமியையும் அவர்கள் இன்று பாழாக்குகிறார்கள். ஆகையால் கடவுள் இந்தப் பொல்லாத ‘குடித்தனக்காரர்களை’ இந்தப் பூமியிலிருந்து முதலாவதாக அகற்றி, பின்பு நல்ல ஆட்கள் மகிழ்ச்சியுள்ள நிலைமைகளைத் திரும்பக் கொண்டுவருவதற்கு உதவிசெய்வாரென பைபிளில் சொல்லியிருக்கிறது.”—வெளிப்படுத்துதல் 11:18.
“ஆனால் சார், சிறிது காலத்துக்குப் பின்பு காரியங்கள் மறுபடியும் அவ்வாறே கேடடையும். இதனால்தான் கடவுள் இந்தப் பூமியைச் சுத்தமாக்கி சத்யுகத்தைக் கொண்டுவந்தப் பின்பு கெட்ட நிலைமைகள் திரும்பவும் ஏற்பட்டு கலியுகத்துக்குத் திரும்பவும் வழிநடத்தும். ஆகையால் இந்தப் பூமியை விட்டு வெளியேறுவதே நிலையான சமாதானத்தைக் கொண்டுவரும். உதாரணமாக, நான் என் குடும்பத்தின் பிரச்னைகள் சிலவற்றை அவ்வப்போது தீர்த்திருக்கிறேன், ஆனால் அவை மறுபடியும் திரும்பிவந்துவிடுகின்றன, அல்லது வேறு ஏதாவது பிரச்னைகள் அவற்றினிடத்தில் வந்துவிடுகின்றன.”
“ஆம், இது நம்மெல்லாருக்கும் நேரிடுகிறது. ஆனால் கடவுளிடம் இது நேரிடாது. அவருக்குப் பிரச்னைகளைத் தீர்க்க வல்லமை இருப்பதுமட்டுமல்லாமல் அவை மறுபடியும் ஒருபோதும் எழும்பாதபடி பார்த்துக்கொள்ளவும் வல்லமையும் விருப்பமும் உண்டு; பூமி முழுவதிலும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலையாய்க் காத்துவர அவருக்குத் திறமை இருக்கிறது.”—நாகூம் 1:9.
இந்தச் சமயத்தில், உரையாடலுக்கு அமைதியாய்ச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த ஆனந்து, தலையிட்டு: “நீங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறதில்லை, சார். நாங்கள் எங்கள் பிரச்னைகளை இவ்வளவு நீண்டகாலம் சகிக்க வேண்டியதாக இருந்திருக்கிறது, கடவுள் தலையிட்டு ஏதாவது செய்திருக்கிறாரா? இல்லை! மனிதராகிய நாம்தாமே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியுமென நான் நினைக்கிறேன். இந்த முழு ஒழுங்குமுறையையும் நாம் மாற்ற வேண்டும், பணக்காரருக்கும் ஊழல்காரருக்கும் விரோதமாக எதிர்க்கிளர்ச்சி செய்து அவர்களை அதிகாரத்திலிருந்து நீக்கவேண்டும். உலகமுழுவதிலுமுள்ள ஒடுக்கப்படும் மக்கள் அநீதிக்கு எதிராக எழும்பினால், நாம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அப்பொழுது ஒருவேளை நான் பெருந்தொகை நன்கொடை அளிப்பதற்கு அல்லது செல்வாக்கின்மூலம் வற்புறுத்தலைக் கொண்டுவருவதற்குத் தேவையில்லாமல் ராமுவையும் பிரியாவையும் ஒரு மேம்பட்ட பள்ளியில் சேர்க்க முடியும்.”
“நீர் உணருவதை நான் விளங்கிக்கொள்ள முடிகிறது, ஆனந்து. உண்மையில், காரியங்களின் இந்நிலைமையைப் பற்றி பைபிளில், நூற்றாண்டுகளாக ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்’ என்று சொல்லியிருக்கிறது.”—பிரசங்கி 8:9.
“ஆனால் கடவுள் நோக்கங்கொண்டது அதுவே அல்லவா?” ஆனந்து கேட்டார். “வணக்கத்துக்குரிய இடங்களிலுங்கூட, பணக்காரர் ஏழைகளுக்குமேல் முன்னுரிமை பெறுகிறார்கள், அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.”
“இல்லை, கடவுளுடைய நோக்கம் அதுவல்ல, ஆனந்து. கடவுள் மனிதனைக் கீழ்த்தர உயிரினங்களின்மீது—மிருகங்கள், மீன்கள், மற்றும் பறவைகள் போன்றவற்றின்மீது மாத்திரமே—ஆளுகை செலுத்தும்படி உண்டாக்கினார், உடன்தோழரான மனிதர்கள்மீதல்லவென பைபிள் விவரப் பதிவு சொல்கிறது.”—ஆதியாகமம் 1:28.
“நல்லது. இத்தகைய ஆளுகை கடவுளுடைய விருப்பங்களுக்கு எதிர்மாறாக இருந்தால், புரட்சிக்காரர்கள் ஊழல்நிறைந்த, கொடுங்கோன்மை செலுத்தும் ஆட்களைத் தாங்கள் அழித்தால் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள் அல்லவா?”
“ஆனால் புரட்சிக்காரர்கள் அத்தகையோரை நீக்கினபின் என்ன நடக்கும்? தாங்கள்தாமே ஆட்சி அதிகாரத்தை ஏற்று தாங்களும் கொடுங்கோன்மையுள்ளவராவர், இவ்வாறு நாம் முதல் தொடங்கின இடத்துக்கே திரும்ப வந்து சேர்ந்திருப்போம். இல்லை, கடவுள் மாத்திரமே எல்லா பொல்லாத ஆட்சியையும் நீக்கி தெய்வீக ஆட்சியை ஸ்தாபிப்பதனால் நிலையான சமாதானத்தைக் கொண்டுவர முடியும். இதையே யெகோவா தேவன் வெகு சீக்கிரத்தில் செய்வாரென பைபிளில் சொல்லியிருக்கிறது. இதையே என் குடும்பமும் யெகோவாவின் சாட்சிகளான பல ஆயிரக்கணக்கானோரும் நம்புகிறோம், இது எங்களுக்கு எதிர்காலத்துக்குரிய அதிசயமான நம்பிக்கையைக் கொடுக்கிறது.”
இந்தப் பிரச்னைகள் எப்பொழுது தீர்க்கப்படும்?
“அது சரியானதாகத் தொனிக்கிறது,” என்றார் ஆனந்து, “ஆனால் பூமியில் மாற்றத்துக்கோ முன்னேற்றத்துக்கோ உரிய எந்த அறிகுறியையும் நான் காண்கிறதில்லை. என் வாழ்நாளில் கடவுள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறாரென நான் எவ்வாறு நம்புவது?”
“ஆனந்து, நீர் வீட்டைவிட்டு வெளியே போயிருக்கும்போது, நான் உம்முடைய தோட்டத்தில் ஒரு மாங்கொட்டையை நட்டேன் என்று நான் உம்மிடம் சொன்னதாக வைத்துக்கொள்ளும். நீர் வெளியில் சென்று பார்த்தபொழுது, மண் தோண்டப்பட்டது போன்று எதையும் காணவில்லை. நான் உமக்கு அந்நியன். நீர் இவ்வாறு ஒருவேளை உணரலாம்: ‘இந்த அந்நியர் ஏன் என் தோட்டத்துக்கு வந்து ஒரு மாங்கொட்டையை நடும் சிரமத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்?’ நான் சொன்னபடி உண்மையில் செய்தேனென நீங்கள் உடனே நம்பிவிடுவீர்களா?”
“இல்லை, நான் நம்பமாட்டேனென நினைக்கிறேன். நீங்கள் செய்தீர்கள் என்பது எனக்கு மிகவும் சந்தேகமாகவாவது இருக்கும்.”
“ஆம், நான் அதை நம்ப முடிகிறது. ஒருவேளை சிறிது காலத்துக்குப் பின் ஒரு செடி வளரத் தொடங்குவதை நீர் காண்கிறீர். நீர் வீட்டில் இல்லாதபோது யாரோ சந்தடியில்லாமல் வந்து அந்தச் செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறாரென நீர் உணருகிறீர். காலம் கடந்து செல்கிறது, ஆண்டுகள் கடந்து செல்கின்றன. அது உண்மையில் ஒரு மாமரம் என்று நீர் தெரிந்துகொள்கிறீர். பின்பு, ஓர் ஆண்டில் அந்த மரம் பூக்கள் நிறைந்திருப்பதை நீர் காண்கிறீர். இப்பொழுது நீர் எவ்வாறு உணருவீர்?”
“நீங்கள் சொன்னது உண்மையென்று நான் அறிவேன். நீங்கள் தயவுள்ளவர்கள், உண்மையில் என் பேரில் அக்கறையுள்ளவராய் இருந்தீர்கள் என்று நான் அறிவேன். அந்த மரத்தைத் தொடர்ந்து கவனித்துப் பார்த்துக்கொண்டு, கனிக்காக ஆவலோடு காத்திருப்பேன்.”
“மிகவும் சரி. உம்முடைய பிரதிபலிப்பு எவரும் எதிர்பார்ப்பதே. யெகோவாவின் சாட்சிகள் ஏன் வெகு சீக்கிரத்தில் ஒரு மிகப் பெரிய உலக மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உமக்குத் தெளிவாகக் காட்டுவதற்கு இது ஓர் உதாரணமேயாகும். நான் விளக்குகிறேன்.
“பைபிள் எழுதுவதற்கு ஏறக்குறைய 1,600 ஆண்டுகள் எடுத்தன. 40-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மனிதர்கள் இதை 66 சிறு புத்தகங்களின் உருவில் எழுதினார்கள், இவை பின்னால் ஒரு பெரிய புத்தகமாக ஒன்றாய்த் தொகுக்கப்பட்டது. இந்த எழுத்தாளர்களில் ஒருவரும் தன் சொந்த எண்ணங்களை வெளிப்படுத்தினதாக உரிமை பாராட்டவில்லை. எழுதவேண்டியதைக் கடவுள் தங்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார் என்றும் அந்தச் செய்தி அவரிடமிருந்தே வந்ததென்றும் சொன்னார்கள். ஓர் எழுத்தாளன், மத்திய கிழக்கில் ஆட்சி செய்த ஓர் அரசன், அவன் சொன்னதாவது, ‘யெகோவாவின் ஆவியே என்னைக்கொண்டு பேசினது, அவருடைய வார்த்தை என் நாவின்மீது இருந்தது.’—2 சாமுவேல் 23:2, NW.
“முதல் புத்தகம் படைப்பை விவரிக்கிறது; யெகோவா மனிதனைப் பரிபூரணனாகப் படைத்து அவனை வழிநடத்துவதற்குச் சட்டங்களைக் கொடுத்தார் என்று சொல்கிறது. ஆனால் அவன் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதா இல்லையா என்பதைத் தான் தெரிந்துகொள்ளும்படி அவர் அவனுக்குத் தன்-விருப்பத் தெரிவு சுயாதீனத்தையும் கொடுத்தார். இந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது மகிழ்ச்சியைக் கொண்டுவரும்; அவற்றை மீறுவது தண்டனையைக் கொண்டுவரும். மனிதன் கடவுளுடைய சட்டங்களை மீறுவதைத் தெரிந்துகொண்டான் இவ்வாறு தன்மீதும் தன் சந்ததியார்மீதும் துன்பத்தையும் மரணத்தையும் கொண்டுவந்தான். ஆனால் இப்பொழுது கடவுள் ஒரு ‘வித்து’வை நட்டார். ஆம், ஒரு நாள் அவர் நம்முடைய பிரச்னைகள் யாவற்றையும் தீர்த்து மனித குலத்துக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் திரும்பக் கொண்டுவருவாரென்ற நம்பிக்கைக்குரிய ஒரு ‘வித்து’வை நட்டார்.
“இந்த ‘வித்து’ கடவுள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவாரென்ற வாக்கின் உருவில் இருந்தது. சரித்திரத்தினூடே மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையருக்கு, கடவுள் ஓர் ‘அன்னியராக’ இருந்திருக்கிறார். யெகோவா அந்த முதல் வாக்கைக் கொடுத்தபோது அல்லது அந்த ‘வித்து’வை நட்டபோது நீங்களும் நானும் இன்று வாழும் எல்லா ஜனங்களும் அங்கில்லை. தம்முடைய வாக்கைத் திரும்பத் திரும்பக் கூறுவதாலும் அதன்பேரில் இன்னும் விரிவாக்குவதாலும், நூற்றாண்டுகளினூடே இன்னுமதிக நுட்பவிவரங்களைக் கொடுப்பதாலும் அந்த வித்துவை அவர் தொடர்ந்து ‘தண்ணீர் பாய்ச்சி’ வந்தபோதும் நாம் அங்கில்லை. ஆனால் இதைப் பற்றிய ஒரு விவரப் பதிவு பைபிளில் காணப்படுகிறது, அதில் அடங்கிய பல்வேறு புத்தகங்கள் முழுவதிலும் பரவியதாய் உள்ளது. பைபிள் எழுதி முடிக்கப்பட்டபோது, கடவுள் எவ்வாறு மனிதவர்க்கத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பாரென்பது அதில் முழுமையாய் விளக்கப்பட்டாய்விட்டது.
“ஆகையால் இதுவே என் உதாரணத்தின் முக்கிய குறிப்பு ஆனந்து. இந்த ‘வித்து’—கடவுளுடைய முதல் வாக்கு—நடப்பட்டதையோ கூடுதலாய்ச் சேர்க்கப்பட்டுவந்த எல்லா தகவலாலும் அது நீர்ப்பாய்ச்சப்பட்டதையோ நாம் காணாதபோதிலும், முழுமையாய் வளர்ந்து அதில் பூக்கள் நிறைந்துள்ள இந்த மரத்தை இன்று நாம் காணமுடிகிறது. ஆகையால் கனி வருமென நாம் நிச்சயமாயிருக்கலாம்.”
“நீங்கள் குறிப்பதென்ன? நான் உங்களுக்கு முன்னால் சொன்னதுபோல், ஒரு மாற்றம் வருவதைக் காட்டும் எதையும் நான் காணமுடிகிறதில்லை.”
“ஆம், உம்மால் காணமுடியும். ஆனால் அதைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி ஒருவரும் உமக்குச் சொல்லாததனால் நீர் அதை அடையாளங் கண்டுகொள்கிறதில்லை. கடவுள் தலையிடப்போகிற சமயத்தில் பூமியில் நிலைமைகள் எவ்வாறு இருக்கும் என்பதைப்பற்றி பைபிள் நுட்பமான விவரத்தைக் கொடுக்கிறது. ஜனங்களின் ஒரு சந்ததி முனைப்பாய்த் தெரியும் பல காரியங்களைக் காணும் எனவும், மேலும் இந்த ‘அடையாளத்தைக்’ காணும் அதே சந்ததி பொல்லாங்கின் முடிவையும் சமாதான புதிய உலகம் தொடங்குவதையும் காணும் எனவும் அது தெளிவாகச் சொல்கிறது. (மத்தேயு 24:3) இப்பொழுது, ஆனந்து, நீர்தாமே கண்டு முடிவுசெய்துகொள்ளவும் நடந்துகொண்டிருக்கும் இந்தக் காரியங்களை நீரும் காணமுடிகிறதாவெனப் பார்க்கவும் பைபிள் சொல்வதை அறிந்துகொள்ள நீர் விரும்புவீரா?”
“நிச்சயமாகவே நான் விரும்புவேன்.”
அடையாளம்”
“அன்று சாயங்காலம் உள்ளூரில் வன்முறைச் செயல்கள் பெருகிக்கொண்டிருப்பதைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருந்ததும், இருண்டபின் பெண்களும் பிள்ளைகளும் தனிமையில் வெளியே செல்லக்கூடாது என்று நாம் ஒப்புக்கொண்டதும் உமக்கு நினைவிருக்கிறதா? முன்னாளில் இந்நகரத்தின் அத்தகைய சமாதானமான பகுதியாயிருந்த இந்த இடத்தில் எத்தனையோ பலர் திடீரென்று தாக்கப்பட்டும் களவாடப்பட்டும் இருக்கின்றனர். இது இந்த அடையாளத்தின் ஒரு பாகம். ‘அக்கிரமம் மிகுதியாகும்’ என்றும் ஜனங்கள் ‘பணப்பிரியராயும் . . . தன்னடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும்’ ஆகியிருப்பார்கள் என்றும் பைபிளில் சொல்லியிருக்கிறது. சமீபத்தில் போலி மருந்துகள் உற்பத்திசெய்வோரைக் காவல்துறையினர் திடீர்ச்சோதனையிட்டதைப் பற்றியும் நாம் பேசினோம்—உமக்கு நினைவிருக்கிறதா? இது எத்தகைய கொடுமையான காரியம், பணம் சம்பாதிப்பதற்காக ஜனங்களின் உயிரை ஆபத்துக்குள்ளாக்குவது! இயல்பாய், மனிதர் நோய்ப்பட்ட ஆட்களுக்காக வருத்த உணர்ச்சியடைவார்கள், ஆனால் இந்தப் பொல்லாத உலகத்தின் கடைசி நாட்களின்போது, மக்கள் ‘தற்பிரியராயும், . . . சுபாவ அன்பில்லாதவர்களாயும், . . . நற்குண விருப்பம் இல்லாதவர்களாயும்’ ஆகிவிடுவதால் காலங்கள் மிகக் கொடியதாயிருக்கும் என்று பைபிளில் சொல்லியிருக்கிறது.”—மத்தேயு 24:12; 2 தீமோத்தேயு 3:1-3.
ராமு திடீரென்று பேச ஆரம்பித்தான், “இதேதான் கலியுகத்தின் அடையாளம் என்று பாட்டிமா எங்களுக்குச் சொல்கிறார்கள்; கலியுகத்தின்போது ஆட்கள் மிகவும் தன்னலமும் பேராசையும் உள்ளவர்களாகிறார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் சத்யுகம் வருவதற்கு நீண்டகாலம் எடுக்கும், அவர்களுடைய வாழ்நாளில் வராதென்று அவர்கள் சொல்கிறார்கள்.”
“ராமு, பாட்டிமா உணருவதுபோல் பலர் உணருகின்றனர். நிலைமைகள் வெகு மோசமாயிருக்கின்றன என்று அவர்கள் காண்கின்றனர், ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர், ஆனால் அது எப்போது வரும் என்பதைப்பற்றி வேறுபட்ட பல எண்ணங்கள் இருக்கின்றன. இங்கேதான் பைபிள் நமக்கு உதவிசெய்கிறது. இந்த மாற்றம் நம்முடைய வாழ்நாளில் வருமென்று பைபிள் வெகுவாகத் தெளிவாக்குகிறது. தெரிகிறதா, மனிதனின் சுபாவம் மாத்திரமே கேடுகெட்டதாவது மட்டுமல்லாமல் இன்னும் மிக அதிகம் இந்த அடையாளத்தில் அடங்கியுள்ளன.
“பைபிள் புத்தகமாகிய மத்தேயு 24-ம் அதிகாரம், 7-ம் வசனம், சொல்வதாவது, ‘ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.’ இது பொல்லாங்கு நிறைந்த கடைசி நாட்கள் வந்துவிட்டன மற்றும் கடவுள் கொண்டுவரப்போகும் அழிவு நெருங்கிவிட்டது என்று காட்டுவதற்கு இயேசு கிறிஸ்து கொடுத்த அடையாளத்தின் பாகம். இப்பொழுது, இதை, வெளிப்படுத்துதல் என்று சொல்லப்படுகிற பைபிளின் கடைசி புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள இதே காலப்பகுதியைப் பற்றிய விவரிப்போடு ஒத்துப் பாருங்கள். 6-ம் அதிகாரத்தில், 4-லிருந்து 8 வரையான வசனங்களில், இந்த நிலைமைகள் உலகமுழுவதிலும் நிலவியிருக்குமென நாம் காண்கிறோம். போரை விவரிப்பதாய், ‘சமாதானத்தைப் பூமியிலிருந்து எடுத்துப்போடுவதைப்’ பற்றி அதில் சொல்லியிருக்கிறது. ராமு, உன் சரித்திர பாடங்களில், முதல் உலகப்போர் தொடங்கின ஆண்டு 1914 என்று நீ சந்தேகமில்லாமல் கற்றிருக்கிறாய். இதுவே சரித்திரத்தில் ஒரு திரும்புகட்டம் என சரித்திராசிரியர்கள் நமக்குச் சொல்கிறார்கள், ஏனெனில் அப்போது முதற்கொண்டு போர் ஒன்றைப் பின்தொடர்ந்து மற்றொன்றாகத் தொடர்ந்துகொண்டிருப்பதையும், பூமி முழுவதிலுமிருந்து சமாதானம் முற்றிலும் எடுத்துப்போடப்பட்டிருப்பதையும் நாம் கண்டிருக்கிறோம்.
“இயேசு பேசின உணவுக்குறைபாடுகளைப் பற்றி மேலுமான நுட்பவிவரங்களை இதே அதிகாரம் கொடுக்கிறது. ஒரு முழு நாளின் சம்பளத்துக்கு மிகச் சிறிய அளவான கோதுமையைத்தானே பெறுவதைப்பற்றி இது பேசுகிறது. நிர்மலா கடைக்குப் போய்வருகையில் முறையிடுவது இதுதான் அல்லவா, ஆனந்து? இன்றியமையாத அடிப்படை அத்தியாவசிய தேவைப்பொருட்களும் விலையேறிக்கொண்டே போவது? ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல பாகங்களில் வறட்சியால் உண்டான பயங்கர உணவு குறைபாட்டைப் பாரும். இலட்சக்கணக்கானe ஜனங்கள் இரவில் பசியோடு படுக்கைக்குச் செல்கின்றனர். பிள்ளைகள் சத்துணவு ஊட்டக் குறைவினால் உண்டான நோய்களின் காரணமாக மரிக்கின்றனர். ஆம், உணவு குறைபாடுகள் நம்முடைய நாளில் உலகெங்கும் பரவியுள்ள பயமுறுத்தலாயுள்ளன.
“இதே அடையாளத்தின் மற்றொரு பாகம் கொள்ளை நோய் அல்லது பிணி ஆகும். மருத்துவத் துறையில் மனிதன் எவ்வளவோ முன்னேற்றம் செய்திருந்தாலும், குளிர்காய்ச்சலுக்கும் வேறு நோய்களுக்கும் காரணமாயிருந்து நம்மைத் தொல்லைப்படுத்தும் கொசுக்களைத் தொலைக்க அவனால் முடியவில்லை. குடற் காய்ச்சல், வாந்திபேதி, மஞ்சட்காமாலை நோய், சீதபேதி, அல்லது புழுக்கள் உண்டாதல் ஆகியவை நமக்கு ஏற்படாதபடி சுத்தமான குடிக்கும் தண்ணீரை எல்லாருக்கும் அளிக்க மனிதனால் இன்னும் முடியவில்லை. இந்த நோய்கள் அரிதாயுள்ள முன்னேற்ற நாடுகள் என்று அழைக்கப்படுபவற்றில், புற்றுநோய், இருதய நோய், பாலுறவால் கடத்தப்பட்ட நோய்கள், மற்றும் வேறு பல கொள்ளைநோய்களால் தாக்கப்படுவது பெருகியுள்ளது.
“இங்கே, இப்போதே, முடிவு உண்மையில் வரப்போகும் அந்தக் காலப்பகுதியை பைபிள் மிக நுட்பமாகக் குறிப்பிடுகிறது. பிரியா, மத்தேயு 24-ம் அதிகாரம், 32-லிருந்து 34-ம் வசனங்கள் வரை எங்களுக்கு வாசிப்பாயா?”
“அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே, இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
“நன்றி, பிரியா. இதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரிகிறதா? மரம் பூக்கிறது, வசந்த காலம் சமீபித்திருக்கிறதென்று நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். நீங்கள் இந்த அடையாளத்தை—அடையாளத்தை உண்டுபண்ணும் வெவ்வேறு காரியங்கள் எல்லாம் நடைபெறுவதைக்— காண்கிறீர்கள், உலக விவகாரங்களைக் கடவுள் ஏற்கும் காலம் சமீபத்தில் இருக்கிறதென்று நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். எவ்வளவு சமீபத்தில்? இயேசு சொல்கிறார், ‘இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது.’ எந்தச் சந்ததி? இந்த முழு அடையாளத்தையும் காணும் அந்தச் சந்ததி. மற்றப்படி, அடையாளம் குறித்துக்காட்டுவதன் பயன் என்ன? இந்தச் சமயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆட்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதற்கு இது ஓர் எச்சரிக்கை. இரயில் நிலைய மணி அடிக்கையில், இரயில் வண்டி நாளைக்கு வருகிறதென்று அது குறிக்கிறதா? நாம் அமைதியாய் உட்கார்ந்து தூங்கத்தொடங்குவோமா? இல்லை. நாம் நம்முடைய பைகளைத் தூக்கிக்கொண்டு ஆயத்தமாய் நிற்போம் ஏனெனில் இரயில் வண்டி, அது நிற்கும் பிளாட்பாரத்தில் சீக்கிரத்தில் வந்துவிடுமென நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே இந்த எச்சரிக்கை அடையாளத்தைக் கண்ட ஜனங்களின் அந்தச் சந்ததியே இந்தப் பொல்லாத உலகத்தின் முழு முடிவைக் காணப்போகும் அதே சந்ததியென இயேசு சொன்னார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், 1914-ல் இந்த அடையாளத்தின் முதல் பாகம் தோன்றினபோது உயிர்வாழ்ந்து நடப்பதைக் கண்டுணர்ந்த ஆட்களில் சிலர் இந்த முடிவு வருகையில் இன்னும் உயிரோடிருப்பார்கள்.”
“தாத்தா, 1914-ல் நீங்கள் உயிரோடிருந்தீர்களா?”
“இல்லை, ராமு, எனக்கு அவ்வளவு அதிக வயதாகவில்லை. ஆனால் நான் அதற்குச் சிறிதுகாலத்துக்குப் பின் பிறந்தேன், நான் சிறு பிள்ளையாக இருக்கையில் என் தகப்பனும் அவருடைய குடும்பத்தார் பலரும் அந்த முதல் உலகப்போருக்குப்பின் வந்த ஒரு பயங்கர நோயால் மரித்துவிட்டதனால் நாங்கள் ஏழைகளாக இருந்தோமென என் தாயார் என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அது ஸ்பானிஷ் ஃப்ளூ என்றழைக்கப்பட்டது, உலக முழுவதிலும் லட்சக்கணக்கான ஆட்கள் அதால் மாண்டனர்.”
“தாத்தா, உங்களுக்குத் தெரிகிறதா, அது இந்த அடையாளத்தின் மற்றொரு பாகம். அந்தக் கொள்ளைநோய் அவ்வளவு பிரபலமானதாக இருந்ததால் அது ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டபோதிலும் நீங்கள் அதைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள் அதால் உண்டான விளைவுகளும் உங்களுக்கு நினைவிருக்கிறது.
“எனினும் கடவுள் தாம் செய்யப்போகிறதைக் குறித்து நமக்குத் தயவுடன் இத்தகைய தெளிவான எச்சரிக்கை கொடுக்கிறபோதிலும், மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையர் இந்த எச்சரிக்கையை அசட்டை செய்வார்களென்று பைபிளில் சொல்லியிருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் தங்கள் அன்றாட விவகாரங்களில் ஈடுபட்டு தாங்கள் சாப்பிடுவதிலும் குடிப்பதிலும், தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதிலும், இத்தகைய வழக்கமாய்ச் செய்யும் மற்றக் காரியங்களிலுமே அக்கறையை ஊன்றவைத்து, அழிவு திடீரென்று தங்கள்மீது வரும்வரை கவனம் செலுத்தாதிருப்பார்கள் என்று அதில் நமக்குச் சொல்லியிருக்கிறது. இந்தப் பொல்லாத உலகத்துக்கு வரவிருக்கும் முடிவைப்பற்றிச் சொல்கையில் பலர் கேலிசெய்து பரியாசம் பண்ணுவார்களெனவும் பைபிளில் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறது. ஆகையால் இந்தப் பெரும்பான்மையரைப்போல் இராமல் இந்த எச்சரிக்கையை முக்கிய கவனத்துக்குரியதாய் ஏற்று நடக்கும்படி மனத்தாழ்மையுள்ள நேர்மையான ஆட்களை அது எச்சரிக்கிறது.—மத்தேயு 24:38, 39; லூக்கா 21:34-36; 2 பேதுரு 3:3, 4.
“இதையே 212 நாடுகளிலுள்ள 40 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்கள் செய்கின்றனர். இவர்கள் இந்த எச்சரிக்கையை நம்புகிறார்கள், இந்தப் பெரிய அழிவைத் தப்பிப்பிழைத்து கடவுள் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் இந்த அழகிய வீட்டுக்குரிய பொருத்தமான ‘குடியிருப்பாளர்களாக’ பூமியில் நிலைத்திருப்பதற்குத் தகுதியுள்ளோராய்த் தங்களை நிரூபிக்கத் தங்களால் கூடியதையெல்லாம் செய்துகொண்டிருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் எங்கு வாழ்ந்தாலும், ஜாதி, குலம், அல்லது நிறம் என்ற எவ்வித வேறுபாடும் செய்வதில்லையென நீங்கள் காண்பீர்கள்; அவர்கள் உலகளாவிய ஒரே பெரிய குடும்பம். கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிதலாக, அவர்கள், போரிலோ, வன்முறைச் செயல்களிலோ, புரட்சிகளிலோ, உலகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முயலும் அரசியல் இயக்கங்களிலோ எத்தகைய பங்கும் கொள்வதில்லை. அதற்கு மாறாக, அவர்கள் எல்லாரிடமும் நடைமுறையில் அன்பு காட்டுகின்றனர், அவர்களுடைய இந்த அன்பின் மிகப் பெரிய வெளிக்காட்டானது வீடுவீடாகச் சென்று ஆட்களைச் சந்தித்து, அவர்களும் கடவுளுடைய சமாதானமான புதிய உலகத்தில் ஜீவனை அனுபவித்து மகிழக்கூடும்படி கடவுளுடைய எச்சரிக்கைகளைக் கவனத்தில் ஏற்கும்படி அவர்களை ஊக்கப்படுத்த நேரத்தையும், முயற்சியையும், பணத்தையும் அவர்கள் செலவிடுவதேயாகும்.”
ஒரு புதிய உலகம்—எவ்வகையில் வேறுபடுகிறது?
“சார், நீங்கள் ஒரு புதிய உலகத்தைப்பற்றியும் கடவுள் மாற்றங்களைக் கொண்டுவருவதைப்பற்றியும் தொடர்ந்து பேசுகிறீர்கள். என்ன வகையான மாற்றங்களைக் கடவுள் செய்வார்? அதாவது, இந்தப் புதிய உலகத்தில் எது வேறுபட்டிருக்கும்?” என்று ராமு கேட்டான்.
“இதைப்பற்றி ஏதாவது சொல்ல நாம் ரேச்சலைக் கேட்கலாம், ராமு. ரேச்சல், கடவுள் மனிதனின் விவகாரங்களில் தலையிடுகையில் பூமியில் இருக்கப்போகும் நிலைமைகளைப்பற்றி பைபிளில் நீ வாசித்திருக்கிற சில காரியங்கள் யாவை? உன் மனதைக் கவர்ந்த காரியங்களில் சிலவற்றை எங்களுக்குச் சொல்.”
“இது நான் வாசிப்பதற்கு ஆசைப்படும் பைபிள் வசனங்களில் ஒன்று,” என்று ரேச்சல் சொல்லத்தொடங்கினாள், “ஏனெனில் மிருகங்களோடு விளையாட எனக்கு ஆசை. நான் இதைச் சத்தமாய் வாசிக்கட்டுமா? இது ஏசாயாவின் புத்தகம் 11-ம் அதிகாரம், 6-லிருந்து 8 வசனங்கள் வரை. இங்கே சொல்லியிருப்பதாவது: ‘அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும்; புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும், பால்மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்.’ சிங்கங்கள் தாக்கும் அல்லது பாம்புகள் கடிக்கும் என்ற பயமில்லாமல் நாம் காட்டுக்குள் போக இயலும்பொழுது அதிசயமாயிருக்குமென்று நான் நினைக்கிறேன்; எல்லா மிருகங்களுடனும் நாம் விளையாடலாம்.
“எனக்கு சளிக்காய்ச்சல் அல்லது குளிர்காய்ச்சல் ஏற்படுகையில் அல்லது கடுமையாய்ச் சளி பிடித்திருக்கையிலுங்கூட, ‘“வியாதிப்பட்டிருக்கிறேன்” என்று நகரவாசிகள் சொல்வதில்லை,’ என்று சொல்லும் இந்த வசனத்தை நான் நினைக்கிறேன். (ஏசாயா 33:24) பள்ளியில் நொண்டியாயிருக்கும் ஒரு பெண் இருக்கிறாள், மிகச் சிறியவளாயிருக்கையில் அவளுக்கு இளம்பிள்ளை வாதம் உண்டானதால் அவ்வாறாயிற்று. அவள் மிகவும் துன்பப்படுகிறாள், எங்களோடு விளையாட்டுகள் விளையாட முடியாது. ஒரு நாள் நான் என் பைபிளைப் பள்ளிக்கு எடுத்துச் சென்று ஏசாயா 35:5, 6-லிருந்து இதை அவளுக்கு வாசித்தேன்: ‘அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.’ இதைக் கேட்டு அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.
“என் மாமா, விவசாயியாக எங்கள் கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவருக்கு நான் இந்த அடுத்த வசனத்தை வாசித்தபோது அவரும் மகிழ்ச்சியடைந்தார்: ‘வெட்டாந்தரை தண்ணீர்த் தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்.’ (ஏசாயா 35:7) பருவமழை சரியாகப் பெய்யாமல் அவருடைய பயிர் விளைச்சல் குறைந்துபோகையில் அவருக்கு மிக அதிக வறுமை ஏற்படுகிறது. ஆனால் கடவுளுடைய புதிய உலகத்தில் எல்லாருக்கும் ஏராளமான உணவு இருக்குமென்று பைபிளில் சொல்லியிருக்கிறது—அப்பொழுது விளைச்சல் குறைவுபடுதல் கிடையாது! யெகோவா தேவன் ‘சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், . . . நிறைந்த விருந்தாயிருக்கும்,’ என்றும் ‘பூமியில் ஏராளமான தானியம் உண்டாயிருக்கும்,’ எனவும் அது சொல்லுகிறது. (ஏசாயா 25:6; சங்கீதம் 72:16, NW) எசேக்கியேல் 34:27 நமக்கு இவ்வாறு சொல்கிறது: ‘வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்.’ இது எவ்வளவு நன்றாயிருக்கிறதல்லவா?”
“சிங்கத்தோடு நான் உண்மையில் விளையாட இயலுமானால் நிச்சயமாகவே அது அதிசயமாயிருக்கும்,” என்றாள் ஆஷா, ஆனந்துவின் இளைய மகள். “நான் அவற்றை மிருகக் காட்சிச்சாலையில் பார்த்திருக்கிறேன், அவற்றின் தோற்றம் பயமுறுத்துகிறது.”
“நீ மகிழ்வாயென்று நான் நிச்சயமாயிருக்கிறேன், ஆஷா,” என்றார் ஆசிரியர். “ஆனந்து, அவரவருக்குரிய நம் தனிப் பிரச்னைகளை யெகோவா தேவன் தெரிந்துணர்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கு வாக்குக் கொடுக்கிறார் என்பதை பைபிள் எவ்வாறு காட்டுகிறதென இப்பொழுது நீர் காண்கிறீரா? நோய், மழை குறைவுபடுவதாலும் பயிர் விளைச்சல் கெடுவதாலும் உணவு இல்லாமை, இந்தக் காரியங்கள் நம்மெல்லாரையும் பாதிக்கிறவை. வீட்டுவசதியில்லா நிலைமைகளும் பெரிய பிரச்னையே. உயர்ந்த வாடகைகள் மற்றும் மட்டுக்குமீறிய நெருக்கம், இத்தகைய காரியங்கள் கடவுளுடைய புதிய உலகத்தில் இரா. ஏசாயா 65:21, 22-ல் வீட்டு வசதியைப்பற்றி இவ்வாறு சொல்லியிருக்கிறது: ‘வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை.’ ஆகவே பூமியிலிருக்கப்போகும் எல்லாருக்கும் வீடுகளையும் தோட்டங்களையும் கடவுள் கொடுப்பதாக வாக்களிக்கிறார்.
“எனினும், பொல்லாத ஆட்கள் போர்கள் தொடுத்துக்கொண்டும் வன்முறைச் செயல்களை நடப்பித்துக்கொண்டும் இருப்பதால் நமக்குப் பாதுகாப்பு இல்லையென்றால் இந்த அதிசயமான நிலைமைகளை அனுபவித்து மகிழ முடியாது. இவர்களையே கடவுள் அழிப்பார். சங்கீதம் 37:10-ல் இவ்வாறு சொல்லியிருக்கிறது: ‘இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.’ பொல்லாத ஆட்கள் அழிக்கப்படப்போவதால், ‘அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்,’ என்ற இந்த வாக்கில் நாம் உறுதியாய் நம்பிக்கை வைக்கலாம்.—சங்கீதம் 46:9.
“கடவுளுடைய ராஜ்யம் என்று பைபிளில் அழைக்கப்பட்டுள்ள ஓர் அரசாங்கத்தைக் கருவியாகக் கொண்டு தாம் இதை நிறைவேற்றுவாரென யெகோவா தேவன் வாக்குக் கொடுக்கிறார். இந்த அரசாங்கம் எந்த மனித அரசாங்கத்திலிருந்தும் பல வழிகளில் வேறுபட்டிருக்கும். முதலாவது, அது பரலோக அரசாங்கமாயிருக்கும், ஆகையால் அதைக் கெடுப்பது கூடாதகாரியம். இரண்டாவது, அது எல்லாருக்கும் நீதிசெய்யுமென்ற உறுதிதரும், பணக்காரருக்கும் செல்வாக்குடையோருக்கும் மட்டுமல்ல. இந்த அரசாங்கம் செயல்படுவதைப்பற்றிக் கூறும் பைபிளிலுள்ள ஓர் அழகிய விவரிப்பை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: ‘நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச் செய்[வார்], . . . நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.’—ஏசாயா 11:4, 5.
“முடிவில், கடவுளுடைய ராஜ்யம் மற்ற எல்லா அரசாங்கங்களையும் நீக்கி அவற்றினிடத்தை ஏற்கும், இவ்வாறு அது உண்மையான உலக அரசாங்கமாயிருக்கும். இது தானியேலின் புத்தகத்தில் கவனத்தை வெகுவாய்க் கவரும் ஒரு தீர்க்கதரிசனத்தில் காட்டப்பட்டுள்ளது: ‘அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.’ (தானியேல் 2:44) ஆம், கடவுளுடைய ராஜ்யம் முழு அதிகாரத்தையும் ஏற்றிருக்கையில் காரியங்கள் மிக மேம்பட்டதாயிருக்கும். இதனிமித்தமே, அதன் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றினோருக்குக் கற்பித்தார். ‘உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக,’ என்று கடவுளிடம் ஜெபிக்கும்படியும் அவர் அவர்களுக்குக் கூறினார்.—மத்தேயு 6:10.
“ஆகவே, யெகோவா என்னும் பெயருடைய சர்வவல்லமையுள்ள கடவுள், நம்முடைய தொல்லைகளைப்பற்றி முற்றிலும் தெரிந்து நம்மிடம் பரிவான இரக்கமுள்ளவராக இருக்கிறாரென்று நீங்கள் காணமுடிகிறது. நம்முடைய பிரச்னைகளைத் தீர்க்கத் தாம் வெகு சீக்கிரத்தில் நடவடிக்கை எடுப்பாரென அவர் நமக்கு உறுதிதருகிறார்.”
ஞானமான அறிவுரையிலிருந்து இப்பொழுது அடையும் நன்மைகள்
“இதெல்லாம் மிக நல்லவையாகத் தொனிக்கின்றன, சார், ஆனால் கடவுள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக வெறுமென உட்கார்ந்து காத்துக்கொண்டிருப்பது இன்று என் பிள்ளைகளுக்கு உணவும் உடையும் அளிக்கப்போகிறதில்லை. நாம் வேலைசெய்ய வேண்டும். வாழ்க்கையில் நம்முடைய நிலையை முன்னேற்றுவிக்க நாம்தாமே பிரயாசம் எடுக்கவேண்டும்.”
“நாம் நிச்சயமாக வேலைசெய்ய வேண்டும், ஆனந்து. நம்மீது சார்ந்திருக்கிறவர்களுக்குத் தேவைப்பட்டவற்றை அளிக்க நாம் தொல்லைகளுக்கெதிரிலும் கடினமாய் வேலைசெய்யும்படி பைபிளில் நமக்குச் சொல்லியிருக்கிறது. (1 தீமோத்தேயு 5:8) உண்மையில், ‘ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது,’ என்று அதில் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறது. (2 தெசலோனிக்கேயர் 3:10) மேலும் நாம் அவற்றைப் பின்பற்றினால் நம்முடைய உடல்நலத்துக்கும் சந்தோஷத்துக்கும் நன்மைபயக்குகிற சட்டங்களும், நியமங்களும், அறிவுரையும் அதில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மட்டுக்குமீறி சாப்பிடுதலையும் மட்டுக்குமீறி மதுபானக் குடிவெறிக்கு ஆட்படுதலையும் கடவுள் கண்டனம் பண்ணுகிறாரென பைபிள் காட்டுகிறது. இந்த இரு காரியங்களும் நம்முடைய உடல்நலத்தைச் சீர்கெடுத்து, கடினமாய் உழைத்துச் சம்பாதித்தப் பணத்தை வீணாக்குமென நாம் தெரிந்திருக்கிறோம்.
“இவ்வாறே, புகையிலை, பாக்கு ஆகியவற்றையும் தவிர்க்கும்படி பைபிள் நியமங்கள் நமக்குக் கற்பிக்கின்றன, இவை மருத்துவர்கள் ஒப்புக்கொள்கிறபடி, நம்முடைய உடல்நலத்தை சீர்கெடுக்கும், மேலும் நம்முடைய கடன்களைக் கொடுத்துத் தீர்க்க அல்லது குடும்பத்துக்கு உணவு வாங்க நன்றாய்ச் செலவிடும் பணத்தை வீணாகப்போகச் செய்யும். (2 கொரிந்தியர் 7:1) பைபிளின் உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களையும் உடல்நலத்தின்பேரில் ஞானமான அறிவுரையையும் பின்பற்றுவது நம்மை உணர்ச்சி சம்பந்தமாய் மகிழ்ச்சியுடனிருக்கச் செய்கிறது, மேலும் பல நோய்களைத் தவிர்த்திருக்கவும் நமக்கு உதவிசெய்கிறது. இதனிமித்தமே பைபிளில், யெகோவா தேவன், ‘உனக்கு நன்மை உண்டாகும்படி உனக்குக் கற்பிக்கிறவர் நானே,’ [NW] என்று தம்மைக் குறித்துப் பேசுகிறார். ‘ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.’—ஏசாயா 48:17, 18.
“எனினும், ஞானமான ஆலோசனையைப் பின்பற்றுவதன்மூலம், இன்று நம்முடைய வாழ்க்கையின் தன்மையை நாம் பேரளவில் முன்னேற்றுவிக்கலாமெனினும், அநீதி, ஊழல், ஜாதி மற்றும் குல பேத உணர்ச்சி, பட்சபாதம், வினைமையான நோய், மற்றும் மரணம் ஆகிய இந்தப் பெரிய பிரச்னைகளை நாம் இன்னும் தீர்க்க முடியாது. இவற்றை நிலையாய் நீக்கிப்போட, கடவுள்தாமே தலையிடவேண்டும்.”
“நம்முடைய சொந்த நற்கிரியைகளால் நாம் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியுமென நான் நம்புகிறேன்,” என்று பாட்டிமா பேசத்தொடங்கினார். “நம்முடைய நல்ல கர்மம்f மற்ற ஆட்களையும் பாதிக்கிறது, மேலும் அன்றாட தியானத்தின்மூலம் நாம் உள்ளார்ந்த சமாதானத்தை அடைந்து நாம் எதிர்ப்பட வேண்டியிருக்கிற பிரச்னைகள் என்னவாயிருந்தாலும் மனங்கலங்காமல் இருக்க முடியுமென நான் நம்புகிறேன்.”
“நீங்கள் உணருவதைப்போலவே பல ஆட்கள் உணருகின்றனர், பாட்டிமா, ஆனால் ஒரு காரியம் நிச்சயம். நம்முடைய செயல்கள் எவ்வளவு நல்லவையாயிருந்தாலும், நாம் பூமியிலிருந்து பொல்லாங்கை விலக்கிப்போட முடியாது. நம்முடைய நல்ல செயல்கள் நல்லதைச் செய்யும்படி மற்றவர்களைத் தூண்டி இயக்கலாம், ஆனால் சிலர் மாறமாட்டார்கள். உண்மையில், சிலர் மேலுமதிகத் தீங்குசெய்வதற்கு உங்கள் நற்குணத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
“கடவுள் அவதாரம் எடுப்பதன்மூலமே சத்யுகம் வருமென்று இந்துக்கள் பெரும்பான்மையர் நம்புகின்றனரென நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். மனிதரில் பெரும்பான்மையர் கெட்ட கர்மங்களைச் செய்கையில் கடவுள் தலையிடுதல் மிகவும் தேவையென அவர்கள் உணருகிறார்கள். சற்று எண்ணிப் பாருங்கள், பாட்டிமா, தியானஞ்செய்வதனால் உங்களுக்கு உள்ளார்ந்த சமாதானம் இருக்கிறதென்றால், அதுதானேயும், ஆனந்து குடும்பத்துக்கு உணவு, உடை, மற்றும் கல்வி அளிப்பதற்குப் போதிய பணத்தைச் சம்பாதிக்கிறாரென உறுதியளிக்குமா? அளிக்காதல்லவா?
“தியானஞ்செய்வதைப்பற்றி நீங்கள் சொல்வது வெகுவாய் அக்கறையைக் கவருகிறது. எனினும், முதலாவது, நாம் திருத்தமாய்த் தியானம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக, அதன்பேரில் தியானிக்க நமக்குத் தகவல் தேவை. இதனிமித்தமே நாம் நம்முடைய பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம்; தங்களுக்குக் கற்பிக்க அதிகத் தகவலையுடைய ஒருவர் அவர்களுக்குத் தேவை. அப்பொழுது பிள்ளைகள் தாங்கள் கற்றவற்றின்பேரில் தியானம் செய்ய முடியும். வெறுமென வீட்டில் உட்கார்ந்து தியானம் செய்யவும் அறிவு அவர்களுக்குள்ளிருந்து வரவிடும்படியும் நாம் அவர்களுக்குச் சொல்கிறதில்லை. நமக்குத் தெரிவதைப் பார்க்கிலும் அதிகம் அறிந்துள்ள ஒருவர், ஓர் ஆசிரியர், அல்லது குரு தேவைப்படுவதை நாம் உணருகிறோம். ஆகவே மனிதனையும் அவனுடைய பிரச்னைகளையும் பற்றி அவனைப் படைத்தவரைப் பார்க்கிலும் அதிகம் யார் அறிந்திருக்கிறார்? அப்படியானால், நிச்சயமாகவே, நம்முடைய சிருஷ்டிகர் நம்முடைய போதகராகவும் செயல்பட்டு, நம்முடைய பிரச்னைகளைத் தீர்க்கும் முறையை நமக்குக் காட்டும்படி நாம் எதிர்பார்க்கலாம். நாம் நம்முடைய பிள்ளைகளை நேசிப்பதனால் அவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கிறோம். சர்வவல்லமையுள்ள, அன்பான பரலோகத் தகப்பன் அவ்வாறே செய்வாரல்லவா?”
“நீங்கள் நம்பவைப்பதுபோல் தொனிக்கிறீர்களென நான் சொல்லவேண்டும், சார்,” என தாத்தா தலையிட்டார், “ஆனால் நீங்கள் காரியங்களை விளக்கும் முறை மிகவும் எளிதாயுள்ளது. எங்கள் மதம் அதிக ஆழமான தத்துவஞானம் அடங்கியுள்ளது. எங்கள் முனிவர்களும் ரிஷிகளும் வாழ்க்கையின் அர்த்தத்தின்பேரில் தியானிக்க பல ஆண்டுகள் செலவிட்டனர். நான்தானேயும் என் வாழ்நாள் முழுவதும் அந்தப் புனித புத்தகங்களை வாசித்திருக்கிறேன், ஆனால் சர்வலோகத்தையும் வாழ்க்கையையும் அதன் நோக்கத்தையும் பற்றிய எல்லா மர்மங்களின் அர்த்தத்தையும் நான் இன்னும் கிரகிக்க முடிகிறதில்லை.”
“கடவுளுடைய ஞானம் நம்முடையதைப் பார்க்கிலும் மிக அதிக உயர்ந்ததென்பது நிச்சயமாகவே உண்மை, தாத்தா. யோபு என்றழைக்கப்பட்ட ஒரு மனிதனைப்பற்றி பைபிள் பேசுகிறது, அவன், கடவுளைப்பற்றியும் அவருடைய படைப்பைப் பற்றியும் பல ஆண்டுகள் ஆழ்ந்து சிந்தித்தப்பின், ‘இதோ, இவையெல்லாம் அவர் செயலின் கடை ஓரமே; நம் செவிப்படுவது சிறுமெல்லோசையே, அவர் வல்ல பேரிடியின் முழக்கறிபவன் யார்?’ என்று ஒப்புக்கொண்டான். (யோபு 26:14, தி.மொ.) ஆனால் நாம் நம்முடைய மிகத் தாழ்வான மனதால் கடவுளைப்பற்றி அறிய இருப்பவற்றையெல்லாம் புரிந்துகொள்ள முடியாதெனினும், அவர் விரும்பினால் நாம் தெரிய வேண்டியதையாவது நமக்குக் கற்பிக்க முடியுமல்லவா?
“உதாரணமாக, கணக்குப் பேராசிரியர் ஒருவர், மிக உயர்ந்த கல்விபெற்றவர் திறமிக்கக் கணக்கறிஞரென பெயர்பெற்றவர், பணம் எதுவும் ஏற்காமல் ராமுவுக்குக் கற்பிக்க முன்வருகிறாரென்றால், ‘அவர் அறிவில் மீறிய முன்னேற்றமடைந்தவர்; அவருக்குத் தெரிபவற்றையெல்லாம் ராமு ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது’ என்று சொல்லி நீங்கள் அவருடைய அளிப்பை மறுத்துவிடுவீர்களா? நிச்சயமாகவே மறுக்கமாட்டீர்கள்! அவர் எத்தகைய திறமிக்க அறிவாளராக இருப்பினும், அவர் சிறந்தப் போதகர், குழந்தைகளின் விளையாட்டுமுறை கல்விப்பள்ளிப் பிள்ளைகளுக்குங்கூட அவர்கள் மனதில் ஏற்று புரிந்துகொள்ளும் வகையில் அவர் கற்பிக்க முடியும் என்று நீங்கள் அறிவீர்கள். அப்படியானால் சகல-ஞானமுமுள்ள கடவுள், தம்முடைய பிள்ளைகளாகிய நமக்கு, நாம் அறியவேண்டியதை நாம் விளங்கிக்கொள்ளக்கூடிய எளிய மொழிநடையில் கற்பிக்க முடியாதா? அவர் அவ்வாறு செய்கிறாரென்று பைபிள் சொல்லுகிறது, அது சொல்லுவதாவது: ‘உன் பிள்ளைகளெல்லாரும் யெகோவாவால் போதிக்கப்படுவார்கள்.’ (ஏசாயா 54:13, தி.மொ.) இதனிமித்தமே பைபிளிலுள்ள போதகம் எளியதாயும் மனிதராகிய நமக்குப் புரிந்துகொள்ளக்கூடியதாயும் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அது உதாரணங்கள் நிறைந்துள்ளது, சாதாரண மனிதரைப்பற்றிய பதிவுகளைக் கொண்டுள்ளது, மற்றும் நம்மில் எவரும் விளங்கிக்கொள்ளக்கூடிய எளிய மொழிநடையில் எழுதப்பட்ட அன்றாட வாழ்க்கைக்குரிய விவரங்கள் அடங்கியுள்ளது. ஈடற்ற உயர் அறிவாற்றலுள்ள ஒருவர் நம்முடைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழியை நமக்குக் காட்டுவதற்கு இது மிகச் சிறந்த முறையாகும்.
“இப்பொழுது நாங்கள் போகவேண்டும். நாம் ஒன்றாய்ச் செலவிட்ட இந்த நேரத்தை நாங்கள் உண்மையில் மகிழ்ச்சியோடு அனுபவித்தோம், உங்கள் அன்பான உபசரிப்புக்கும் நன்றி.”
அறிவுரைக்குரிய புத்தகம்
சில நாட்களுக்குப் பின்பு, நிர்மலாவும் மரியமும் மரியமுடைய தையல் மெஷின் சரியாய் வேலைசெய்யாததால், அதைப் பயன்படுத்தும் முறைக்குரிய அறிவுரைப் புத்தகத்தை வைத்து சரிபார்த்துக்கொண்டிருந்தனர். அந்தச் சிக்கல் சரியாக்கப்பட்டபோது, மரியம் நிர்மலாவைப் பார்த்து, “நம்மை உண்டாக்கின கடவுள், நமக்குப் பிரச்னைகள் ஏற்படுகையில் உதவிக்காக எடுத்துப் பார்க்கக் கூடும்படி அறிவுரைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை நமக்குக் கொடுப்பாரென நீ நினைக்கிறாயா?” என்று கேட்டாள்.
நிர்மலா ஆச்சரியத்துடன், “நீங்கள் அர்த்தப்படுத்துவது என்ன மரியம்?” என்று கேட்டாள்.
“நாங்கள் இந்தத் தையல் மெஷின் வாங்கினபோது, இதை உண்டாக்கினவன் எங்களுக்கு அறிவுரைகள் அடங்கிய ஒரு புத்தகத்தைக் கொடுத்தான். அவ்வாறே, மனிதனை உண்டாக்கின கடவுள், மனிதர்கள் அவற்றைப் பின்பற்றினால் அவர்களுக்கு பயன்தரக்கூடிய அறிவுரைகளைக் கொடுப்பார் என்பது நியாயமாயிருக்கிறதல்லவா?”
“பைபிளே அந்தப் அறிவுரைகளடங்கிய புத்தகமென நீ நம்புகிறாயல்லவா?”
“ஆம், அவ்வாறே நான் நம்புகிறேன், நிர்மலா. புனித புத்தகங்களென அழைக்கப்படும் பல புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் சில புராணக்கதை இலக்கியங்களெனவும், சில சரித்திரத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த ஆட்களின் தத்துவஞானம், அவர்களுடைய சொந்த சிந்தனையால் தோற்றுவிக்கப்பட்டன என்றும் ஏற்கப்படுகின்றன. மற்றவை ஒரு குறிப்பிட்ட இடப்பகுதிக்கு ஒரு திட்டமான காலத்தில் பொருந்தும் ஒழுக்கமுறையையும் சமுதாய சட்டங்களையும் கொடுக்கின்றன. இந்த எல்லா புத்தகங்களும் வெவ்வேறு காரியங்களைக் கற்பிக்கின்றன, ஒரு பெண் தான் உடுத்திக்கொள்வதற்கு விரும்பிய நிற புடவையைத் தெரிந்துகொள்வதுபோல், மக்கள் தங்களுக்குக் கவர்ச்சியூட்டுவதைப் பின்பற்றத் தெரிந்துகொள்கின்றனர்.
“எனினும், பைபிள் வேறுபட்டது. நாம் முன்னால் கலந்தாராய்ந்தபடி, எழுத்தாளர்களில் எவரும் அது தங்களுடைய சொந்த சிந்தனையென உரிமைபாராட்டவில்லை. ஓர் எழுத்தாளன் விளக்கினபடி, பைபிளிலுள்ள செய்தி ‘ஒருபோதும் மனுஷ சித்தத்தினால் வரவில்லை; கடவுளினிடமிருந்து வந்ததையே மனுஷர் பேசினார்கள்.’ (2 பேதுரு 1:21, தி.மொ.) பைபிளின் அறிவுரை அது எழுதப்பட்ட சமயத்தில் நடைமுறைக்குரியதாக இருந்தபோதிலும், இன்று இந்த 20-ம் நூற்றாண்டிலும் அது நடைமுறைக்குரியதாக இருக்கிறது, ஏனெனில் கடவுளுடைய வழிநடத்துதல் நித்தியமாய் நன்மைபயக்குகிறது, அவருடைய தராதரங்கள் மாறுவதில்லை. அதைப் பின்பற்றுவோரின் வாழ்க்கையில் அது எப்பொழுதும் நன்மைக்குரிய சக்தியாக இருந்திருக்கிறது, தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றங்களைச் செய்ய அவர்களுக்கு உதவிசெய்திருக்கிறது. இதனிமித்தமே, ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு சட்ட அறிஞர்: ‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது,’ என்று கூறினார்.—எபிரெயர் 4:12.
“எனினும் நிர்மலா, இன்று வாழும் நமக்கு, பைபிள் மிக அதிக முக்கியமாய் மதிப்புள்ளதாயிருப்பதற்குக் காரணம், கடவுள் வாக்குக் கொடுத்துள்ள அந்த மாற்றத்தைக் காணப்போவது நம்முடைய சந்ததியே என்று அது மிகவும் துல்லியமாய்க் குறிப்பிடுவதே. அன்று சாயங்காலம் நாம் கலந்துபேசின அந்த ‘அடையாளத்தை’ அது நமக்குக் கொடுக்கிறது. பைபிள் எழுத்தாளர்கள் இந்தக் காலத்துக்காக ஆவலோடு எதிர்பார்த்தனர், மனிதரின் பிரச்னைகளைக் கடவுள் எவ்வாறு தீர்ப்பார் என்பதில் அவர்கள் கூர்ந்த அக்கறையுடையோராய் இருந்தபோதிலும், தாங்கள் எழுதி பதிவுசெய்தத் தீர்க்கதரிசனங்களின் உட்பொருள் அவர்களில் பலருக்கு விளங்கவில்லை. உதாரணமாக, தானியேல் என்ற ஓர் எழுத்தாளன், எழுதும்படி தனக்குச் சொல்லப்பட்டிருந்த காரியங்களுக்கு விளக்கத்தைக் கொடுக்கும்படி கேட்டான். அவனுக்குக் கிடைத்த பதிலைப் பார்: ‘தானியேலே, நீ போய்விடு; இந்த வார்த்தைகள் முடிவுகாலவரையும் புதைபொருளாக வைக்கப்பட்டு முத்திரிக்கப்பட்டிருக்கும். . . . பக்திவிவேகமுள்ளவர்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.’ மேலும் முடிவு காலத்தைப்பற்றியும் அவனுக்குச் சொல்லப்பட்டது, ‘அநேகர் இங்கும் அங்கும் ஓடி விசாரிப்பார்கள், அறிவும் பெருகிப்போம்.’—தானியேல் 12:4, 8-10, தி.மொ.
“இது இன்று உண்மையில் நடந்துகொண்டிருக்கிறது. நூற்றாண்டுகளாக பைபிள் மூல மொழிகளில் மாத்திரமே கிடைத்தது, பின்பு ஓரிரண்டு மற்ற மொழிகளில் கிடைத்தது. இன்று, பைபிள் முழுமையாகவும் பகுதியாகவும் 1,900-க்கு மேற்பட்ட மொழிகளில் நமக்குக் கிடைக்கிறது, 200 கோடிக்குg மேற்பட்ட பிரதிகள் உலகமெங்கும் விரிவாக விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இது மட்டுமல்லாமல், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள் வீடுவீடாகச் சென்று மக்கள் பைபிளை விளங்கிக்கொள்ள உதவிசெய்கின்றனர் என்ற உண்மையிலிருந்தும், அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடையும் முறையை நீ காணலாம். ‘புதைபொருளாக வைக்கப்பட்ட’ அந்தக் காரியங்கள், ‘முடிவு காலத்தில்,’ ‘உண்மையான அறிவு’ பெருகுகையில் இப்பொழுது விளங்கிக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவிலிருந்து தப்பிப்பிழைப்பதற்குக் கடவுளுடைய கட்டளைகளை ஜனங்கள் தெரிந்துகொள்ளச் செய்ய வேண்டுமானால் இது இன்றியமையாதது. பைபிளைப் படிப்பதனால், சென்ற காலத்தில் கடவுள் முன்னறிவித்த காரியங்கள் மெய்யாய் நடந்தேறினவென ஜனங்கள் காண முடிகிறது, இவ்வாறு நம்முடைய பிரச்னைகளுக்குத் தீர்வைக் கொண்டுவரும் புதிய உலகத்தைப்பற்றிய அவருடைய வாக்கை அவர்கள் நம்ப முடிகிறது.”
தப்பிப்பிழைப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை
மரியம் நிர்மலாவுடன் நடந்து வீடு சேர்ந்தபோது பாட்டிமா தன் மாலை ஜெபங்களை அப்போதுதான் முடித்திருந்தார்கள். எதிர்பார்க்கும் குழந்தைக்கான அந்த அழகிய உடைகளைப் பார்த்து மகிழ்ந்தபின், பாட்டிமா திடீரென்று பேச்சை மாற்றினார்கள்.
“ஆசிரியர் சொன்னது சரியாக இருந்து,” என அவர்கள் தொடங்கி சொன்னதாவது, “பொல்லாத ஜனங்களைக் கடவுள் சீக்கிரத்தில் அழிக்கப்போகிறாரென்றால், நாங்கள் பத்திரமாயிருப்போம். நாங்கள் மோசடி செய்வதோ பொய்ச் சொல்வதோ இல்லை, நாங்கள் கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொள்கிறோம், ஒழுக்கமான வாழ்க்கை நடத்துகிறோம். எங்கள் குடும்பத்துக்கு ஒரு தீங்கும் வரமுடியாது.”
“பொல்லாத ஆட்களைக் கடவுள் அழிக்கையில் தப்பிப்பிழைப்பதற்கு ஒழுக்கமுறையான வாழ்க்கை நடத்துவது நிச்சயமாகவே தேவை பாட்டிமா,” என மரியம் பதில் சொல்லத் தொடங்கினாள். “பொய்ச் சொல்லி, மோசடிசெய்து, கொல்லும் ஆட்களை அவர் தம்முடைய புதிய உலகத்தில் அனுமதிக்கமாட்டார், அல்லது அது தற்போதைய உலகத்திலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டிராது, அல்லவா? ஆனால் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், பாட்டிமா. வெள்ளப்பெருக்கு போன்ற, விபத்து நேரிடும் காலத்தில், தப்பிப்பிழைப்பதற்கு அரசாங்கம் தனிப்பட்ட கட்டளைகளை நமக்குக் கொடுக்கிறது. இவை, நிலைமை உண்மையில் இருப்பதைப்பற்றிய அவர்கள் அறிவின்பேரிலும் நடக்கப்போவதை அவர்கள் அறிந்திருப்பதன்பேரிலும் ஆதாரங்கொண்டுள்ளவை. நாம் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, ‘நான் நல்ல ஆள், ஆகவே நான் மூழ்கிப்போகமாட்டேன்,’ என்று சொல்வோமா, சொல்லமாட்டோம் அல்லவா? இப்பொழுது, கடவுள் பெரும் வெள்ளத்தைப் பார்க்கிலும் மிகப் பெரிய அழிவைக் கொண்டுவரப்போகிறார். அர்மகெதோன் என்று பைபிளில் அழைத்துள்ள ஒரு போரை அவர் கொண்டுவருவார், அது பூமியிலுள்ள ஒவ்வொரு ஆளையும் பாதிக்கும். (வெளிப்படுத்துதல் 16:14-16) ஒழுக்க முறைப்படி நல்லவர்களாயிருப்பது தப்பிப்பிழைப்பதற்கு ஓர் அடிப்படையான தேவையென பரிசுத்த வேத எழுத்துக்களில் நமக்குச் சொல்லியிருக்கிறது. ஆனால் கடவுள், நிலைமையைப்பற்றித் தாம் அறிந்திருப்பதன் அடிப்படையில் மற்றத் தனிப்பட்ட திட்டமான கட்டளைகளையும் கொடுத்திருக்கிறார். நாம் தப்பிப்பிழைக்க வேண்டுமானால் இவற்றையும் நாம் பின்பற்றவேண்டும். கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் ‘நீதிமான்கள்,’ ‘நேர்மையாளர்,’ ‘குற்றமற்றோர்’ எனக் கருதப்பட்டு, கடவுள் பொல்லாதவர்களை அழிக்கையில் பூமியில் மீந்திருக்க விடப்படுவரென பைபிளில் சொல்லியிருக்கிறது.”—நீதிமொழிகள் 2:20-22, தி.மொ.
இந்தத் தறுவாயில் தாத்தா பேசினார்: “ஆனால் நம்முடைய தற்போதைய நிலைமையில், நாம் தப்பிப்பிழைப்பதற்குப் போதிய நீதியுள்ளோரென எவ்வாறு கருதப்பட முடியும்?”
மரியம் பதில்கொடுத்தாள், “மனிதனுக்கு உதவிசெய்ய யெகோவா தேவன் ஓர் அதிசயமான சட்டப்பூர்வ ஏற்பாட்டைச் செய்தார். இதை நான் ஓர் உதாரணத்துடன் விளக்குகிறேன். நிர்மலா, நீ ராமுவிடம் பத்து ரூபாய் கொடுத்து ஒரு கிலோ சர்க்கரை வாங்கிவரும்படி அனுப்புகிறாய் என்று வைத்துக்கொள்வோம். கடைக்குப் போகும் வழியில், அவன் விளையாடுவதற்காக நின்று பணத்தை எங்கேயோ தொலைத்துவிடுகிறான். அவன் கடையை அடைகையில், கடைக்காரன் அவனுக்குச் சர்க்கரையைக் கொடுப்பானா?”
“இல்லை, நிச்சயமாகவே கொடுக்கமாட்டான்,” என்றாள் நிர்மலா.
“ராமு அழுதுகொண்டு நிற்கிறான். தான் அந்தப் பணத்தைத் தொலைத்துவிட்டதனால் முழு குடும்பமும் துன்பம் அனுபவிக்குமென்று அவனுக்குத் தெரியும். அருகில் நின்றுகொண்டிருக்கும் ஒரு தயவுள்ள பெரியவர் அவன்பேரில் பரிதபித்து அவனுக்குப் பத்து ரூபாய் கொடுக்கிறார். இது சர்க்கரைக்காக கடைக்காரனுக்குக் கொடுக்கப்படுகிறது, உங்கள் குடும்பம் அதைப் பயன்படுத்த முடிகிறது.
“கடவுள் படைத்த முதல் மனித ஜோடி தங்கள் தெரிவு சுயாதீனத்தைத் தவறாக உபயோகித்து கடவுளுடைய ஞானமான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமற்போகத் தெரிந்துகொண்டபோதே நம்முடைய பிரச்னைகள் தொடங்கினவென பைபிளில் நமக்குச் சொல்லியிருக்கிறது. அவ்வாறு செய்வதால் கிடைக்கும் தண்டனையைப்பற்றி கடவுள் அவர்களை ஏற்கெனவே எச்சரித்திருந்தார்—அதாவது, பரிபூரணத்தை இழத்தல், தங்கள் பரதீஸ் வீட்டை இழத்தல், மற்றும் பூமியில் என்றென்றும் தொடர்ந்து வாழ்வதற்கான தங்கள் உரிமையை இழத்தல் ஆகும். கடவுள் நியாயப்படி தம்முடைய சட்டங்களைச் செயல்படுத்தினார். இது அவர்களுடைய சந்ததியைத் தங்கள் பெரும் இழப்பினிமித்தம் அழும்படி செய்ததுபோல் விட்டது, ஆனால் கடவுள் தம்முடைய நீதியை அன்புடன் கலந்து பதப்படுத்துவதால், அந்த முதல் ஜோடி இழந்தவற்றைத் திரும்பப் பெறுவதற்கு மனிதருக்கு வாய்ப்பைக் கொடுக்கும்படி அவர் ஏற்பாடு செய்தார். உதாரணத்திலுள்ள அந்தத் தயவான பெரியவரைப்போல், இழந்துவிட்டதற்கு ஈடான அதே விலையைக் கடவுள் ஏற்பாடுசெய்து கொடுத்தார். பரலோகத்திலிருந்தத் தம்முடைய சொந்த ஆவிக் குமாரன் இயேசு கிறிஸ்து என்றறியப்பட்ட ஒரு மனிதனாகப் பூமியில் பிறக்கும்படி அவரை அனுப்புவதனால் அவர் இதைச் செய்தார். இயேசு, முதல் மனிதனாகிய ஆதாம் இழந்த அந்த உயிருக்குச் சமமாயிருந்தத் தம்முடைய பரிபூரண மனித உயிரை மனமுவந்து பலி செலுத்தி, அதன் விலைமதிப்பைக் கடவுளுக்கு அளித்தபோது, மனிதவர்க்கத்துக்கு இழக்கப்பட்டதை, அதாவது, பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழும் பரிபூரண உயிரைத் திரும்ப வாங்குவதற்கு அந்த விலை பயன்படுத்தப்படக் கூடியதாயிற்று.”
உரையாடலின் இந்தத் தறுவாயில், ஆனந்துடன் சிறிது நேரத்துக்கு முன்னால் உட்பிரவேசித்திருந்த ஆசிரியர், அதில் சேர்ந்துகொண்டார். “ஆகவே, இயேசு கடவுளின் ஓர் அவதாரம் அல்ல ஆனால் கடவுளின் ஓர் ஆவிக் குமாரன், தம்முடைய பரிபூரண உயிரை மனிதனுக்காகப் பலிசெலுத்துவதற்கு மனிதனாகப் பிறந்தார், இவ்வாறு முதல் மனித ஜோடி கீழ்ப்படியாமையால் இழந்ததை அவர்கள் திரும்பப் பெறுவதற்கு வழியை உண்டுபண்ணினாரென மரியம் சொல்வதிலிருந்து நீங்கள் காணமுடிகிறது. கடவுள் செய்த இந்த ஏற்பாட்டை நாம் ஏற்கையில், அப்பொழுது நாம் இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவிலிருந்து தப்பிப்பிழைத்து பிரச்னை இல்லாத சமாதானமான பூமியில் நித்திய ஜீவனை அனுபவிக்க வழிநடத்தும் பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த நம்பிக்கை அவ்வளவு மிக நல்லதாயிருப்பதால் உலகமுழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் சகல ஜாதிகளின் ஜனங்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள அவர்களுக்கு உதவிசெய்வதற்குத் தங்களைக் கடுமுயற்சியில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த நம்பிக்கை நம்பத்தக்கதென நமக்கு நிரூபித்துக்கொள்ள முயற்சி தேவைப்படுகிறதென்பது உண்மையே, ஆனால் நமக்கு நீட்டப்படுகிற பரிசுகள் அந்த முயற்சியைத் தகுந்ததாக்குகின்றன.”
நம்பிக்கைநிறைந்த எதிர்காலம்
நிர்மலாவையும் புதிதாய்ப் பிறந்தக் குழந்தையையும் மருத்துவமனையிலிருந்து ஆனந்து வீட்டுக்குக் கொண்டுவந்தபோது தெளிவான நீல வானத்தில் சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்தது. மழைக்காலம் முடிந்துவிட்டதுபோல் தோன்றிற்று. குடும்பத்தில் மிகுந்த மகிழ்ச்சி பரபரப்பு, அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் புதிதாய்ப் பிறந்தக் குழந்தையைப் பார்க்க வந்தார்கள். ஆனந்து சந்தடியில்லாமல் நழுவி வெளி முற்றத்துக்குச் சென்று ஒரு சிட்டுக்குருவி கூடு கட்ட வைக்கோல் துண்டுகளைச் சேகரித்துக்கொண்டிருப்பதைக் கவனித்துக்கொண்டிருந்தார். ‘என்னைப்போலவே அதுவும் தன் குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை நாடுகிறது,’ என்று அவர் எண்ணினார்.
ஆசிரியர் சொன்ன காரியங்களெல்லாம் உண்மையானால் என்ன செய்வது? அப்பொழுது தன் வீட்டிலுள்ள இந்தப் புதிய குழந்தை தனக்கெதிரில் ஓர் அதிசயமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கும். சில நாட்களுக்கு முன்னால் தாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஆசிரியர் சொன்ன கடைசி வார்த்தைகள் ஆனந்துவின் நினைவுக்கு வந்தன. அவர் சொன்னதாவது, “ராமு தன் படிப்பை முடித்தபோது, ஒரு வேலைக்கான விளம்பரத்தை நீர் செய்தித்தாளில் காண்கிறீரென வைத்துக்கொள்வோம். ராமுவுக்கு இருக்கும் தகுதிகளையுடையோருக்கு அது அளிக்கப்படுகிறது. உயர்ந்த சம்பளம், அவன் வாழ்வதற்கு விரும்பும் இடம், தங்குவதற்கு நல்ல வசதியான வீடு கிடைக்கும், அவன் மகிழ்ச்சி அனுபவித்து செய்யக்கூடிய வேலை. நீர் என்ன செய்வீர்? அந்த விளம்பரத்தை அசட்டை செய்வீரா, அல்லது அந்த வேலையைப் பெற உம்முடைய சக்தியிலுள்ள எல்லாவற்றையும் செய்வீரா?” ‘அதற்குப் பதில் வெளிப்படையாயிருக்கிறது,’ என்று ஆனந்து எண்ணினார்.
ஆகையால், இன்று வாழும் மக்களுக்குக் கடவுள் அளிக்க முன்வருகிறாரென பைபிளில் சொல்லியிருக்கிற இந்தக் காரியங்களைப் பற்றியதென்ன? ஒரு பரதீஸ் பூமி, நல்ல வீடு, சாப்பிடுவதற்கு ஏராளமானவை, திருப்திதரும் வேலை, பரிபூரண உடல்நலம், முழுமையான பாதுகாப்பு. இது உண்மையாயிருந்தால். ஆனந்து வெகு நேரம் சிந்தித்தார்.
சூரியன் மகிமையான பகட்டு ஒளிவண்ணங்களுடன் மறைய தொடங்கினபோது, அவர் தன் மனதில் தீர்மானித்தார். ‘ஆம்,’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். ‘இந்த மாற்றம் உண்மையில் வருமா என்பதை பற்றிய அத்தாட்சியை முற்றிலும் தீர ஆராய்ந்து பார்ப்பதற்கு நான் எனக்கும் என் குடும்பத்துக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் திருப்தியடைந்தால், பொல்லாங்கின் முடிவிலிருந்து தப்பிப்பிழைத்து எங்கள் பிரச்னைகள் யாவும் தீர்க்கப்பட்டிருக்கும் சந்தோஷமான எதிர்காலத்தை அனுபவித்து மகிழத் தகுதியுள்ளோராய் நிரூபிக்க எங்கள் சக்தியிலுள்ள எல்லாவற்றையும் நாங்கள் செய்ய வேண்டும்.’
[அடிக்குறிப்புகள்]
a Respectful term for a schoolteacher.
b Grandfather.
c Grandmother.
d “கலியுகம்” என்பது “இருள் சகாப்தம்,” அல்லது பொல்லாங்குக்குரிய காலப்பகுதி. “அவதாரம்” என்பது “மறுபிறப்பைக்” குறிக்கிறது. “சத்யுகம்” என்பது சத்தியம், சமாதானம் மற்றும் சந்தோஷத்துக்குரிய சகாப்தம்.
e A lakh equals 100,000.
f கிரியைகள், அல்லது செயல்கள்.
g 200 crore equals 2,000,000,000.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“நான் ஒவ்வோறு நாளும் எதிர்பட வேண்டியிருக்கிற பிரச்சனைகள் உங்களுக்கு இல்லையென்று காண்கிறேன். நீங்கல் எல்லாரும் அமைதியாயும் திருப்தியாயும் இருக்கிறீர்கள். உங்கள்பேரில் எனக்கு எவ்வளவு பொறாமையிருக்கிறது”
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
மனிதன் மிக அதிகமாய் விரும்புவது ஒருநல்ல வீடு, நல்ல உடல் நலம், மகிழ்ச்சியுள்ள ஒரு குடும்பம், மற்றும் அன்புள்ள நண்பர்கள்
[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]
மனிதனின் சுபாவம் மாத்திரமே கேடுகெட்டது மட்டுமல்லாமல் இந்த அடையாளத்தில் இன்னும் மிக அதிகம் அடங்கியுள்ளது
[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]
அந்தக் குடித்தனக்காரர்களை அகற்றிவிட்டு உந்தக் குடியிருப்பின் வசதிகளைப் பழுதுபார்த்து சரிசெய்தால். இங்கே வாழ்வதை நாம் மகிழ்வுடன் அனுபவிக்க முடியுமல்லவா? இதையே கடவுள் இந்த முழு பூமிக்கும் செய்வாரென வாக்குக் கொடுத்திருக்கிறார்
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
“கடவுளுடைய ஞானம் நம்முடையதைப் பார்க்கிலும் மிக உயர்ந்ததென்பது நிச்சயமாகவே உண்மை”
[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]
“ஆனால் நம்முடைய தற்போதைய நிலைமையில், நாம் தப்பிப்பிழைப்பதற்குப் போதிய நீதியுள்ளவரென எவ்வாறு கருதப்பட முடியும்?”
[பக்கம் 8-ன் படம்]
நெடுங்காலமாக, மனிதர் பூமியில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்
[பக்கம் 9-ன் படம்]
மகிழ்ச்சியுள்ள எதிர்காலத்தின் வாய்ப்பை இவர்களுக்கு அளிப்பதற்கு ஒரு புரட்சி தேவைப்படுமா?
[பக்கம் 14, 15-ன் படங்கள்]
மரம் பூக்கிறதை நீங்கள் காண்கையில் வசந்த காலம் சமிபமாயிற்றென்று அறிகிறீர்கள். அவ்வாறே. இந்த முழு அடையாளமும் நிறைவேறுகையில், முடிவு சமிபித்திருக்கிறது
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
கடவுளுடைய எச்சரிக்கைகளை முக்கிய கவனத்துடன் ஏற்று நடக்கும்படி மனத்தாழ்மையையும் நேர்மையுமுள்ள ஆட்களை பைபிள் எச்சரிக்கிறது.
[பக்கம் 25-ன் படம்]
கடவுளுடைய வார்த்தை நித்தியமாதலால் பைபிளின் அறிவுரை இன்று நடைமுறைக் குரியதாயுள்ளது
[பக்கம் 29-ன் படம்]
“அத்தாட்சியை முற்றிலும் தீர ஆராய்ந்து பார்ப்பதற்கு நான் எனக்கும் என் குடும்பத்துக்கும் கடமைப் பட்டிருக்கிறேன்”