-
‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை’ நீங்கள் உங்கள் வாழ்க்கையில் காட்டுகிறீர்களா?யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
-
-
11 சக வணக்கத்தார் ஒருவரை நீங்கள் புண்படுத்திவிட்டதாக உணரும்போது என்ன செய்ய வேண்டும்? இயேசு இவ்வாறு கூறினார்: “அதனால், பலிபீடத்தில் காணிக்கை செலுத்த நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள்மேல் ஏதோ மனவருத்தம் இருப்பது ஞாபகத்துக்கு வந்தால், அங்கேயே அந்தப் பலிபீடத்துக்கு முன்னால் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.” (மத்தேயு 5:23, 24) உங்களுடைய சகோதரரிடம் சென்று பேச முதற்படி எடுப்பதன் மூலம் இந்த அறிவுரையைப் பொருத்தலாம். என்ன நோக்கத்தோடு செல்ல வேண்டும்? அவருடன் ‘சமாதானமாகும்’ நோக்கத்தோடு செல்ல வேண்டும்.b அதற்காக, அவரது உணர்ச்சிகள் புண்பட்டிருப்பதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும், மறுக்கக் கூடாது. சமாதானத்தை ஏற்படுத்தி அதை காத்துக்கொள்ளும் மனப்பான்மையோடு நீங்கள் அவரை அணுகினால், எந்தவொரு மனஸ்தாபத்தையும் ஒருவேளை தீர்த்துக்கொள்ளலாம், தகுந்த விதத்தில் மன்னிப்பும் கேட்கலாம், மன்னிக்கவும் செய்யலாம். சமாதானம் பண்ணுவதற்கு நீங்கள் முதற்படி எடுக்கும்போது, தெய்வீக ஞானத்தால் வழிநடத்தப்படுகிறீர்கள் என்பதை காட்டுகிறீர்கள்.
-
-
‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை’ நீங்கள் உங்கள் வாழ்க்கையில் காட்டுகிறீர்களா?யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
-
-
b “சமாதானமாகு” என்பதற்குரிய கிரேக்க வார்த்தை “விரோதத்தை விட்டுவிட்டு நண்பராவதை; சமரசமாவதை; மறுபடியும் ஒரு நல்ல உறவுக்குள் வருவதை” குறிக்கிறது. ஆகவே, முடிந்தால் புண்படுத்தப்பட்டவருடைய மனதிலிருந்து மனத்தாங்கலை நீக்கி மாற்றத்தை உண்டுபண்ணுவதே உங்களுடைய இலக்கு.—ரோமர் 12:18.
-