உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீங்கள் கடவுளோடு நடப்பீர்களா?
    காவற்கோபுரம்—2005 | நவம்பர் 1
    • 5. ஒருவருடைய ஆயுளின் அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவது பற்றி இயேசு ஏன் பேசினார்?

      5 வாழ்க்கையை ஒரு பயணத்துடன் அல்லது நடை பயணத்துடன் ஒப்பிட்டு பைபிள் அடிக்கடி பேசுகிறது. சில சமயங்களில், அந்த ஒப்புமை நேரடியாகக் குறிப்பிடப்படுகிறது, ஆனால் வேறு சமயங்களில் அது மறைமுகமாகத் தெரிவிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, இயேசு இவ்வாறு சொன்னார்: “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர [“ஆயுளின்,” NW] அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” (மத்தேயு 6:27) இந்த வார்த்தைகளில் ஏதோவொன்று உங்களைக் குழப்புவதாக இருக்கலாம். இயேசு எதற்காக ஒரு நபருடைய “ஆயுளின் அளவோடு ஒரு முழத்தைக்” கூட்டுவது பற்றிப் பேச வேண்டும்? முழம் என்பது நீளத்தை, அல்லது தூரத்தை, கணக்கிட அல்லவா பயன்படுத்தப்படுகிறது? காலத்தை வைத்துத்தானே ஆயுளைக் கணக்கிட முடியும்?a வாழ்க்கையை ஒரு பயணத்திற்கு ஒப்பிட்டே இயேசு பேசினார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆக, கவலைப்படுவது உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சிறிய அடியைக்கூட சேர்க்க உதவாது என்பதையே அவர் உண்மையில் கற்பித்துக்கொண்டிருந்தார். அப்படியானால், எவ்வளவு தூரம் நாம் கடவுளோடு நடப்போம் என்பதை நம்மால் நிர்ணயிக்க முடியாது என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை! இது நம்முடைய இரண்டாவது கேள்விக்கு, அதாவது நாம் ஏன் கடவுளோடு நடக்க வேண்டும் என்ற கேள்விக்கு நம்மை வழிநடத்துகிறது.

  • நீங்கள் கடவுளோடு நடப்பீர்களா?
    காவற்கோபுரம்—2005 | நவம்பர் 1
    • a சில பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தில் ‘முழம்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக, “ஒரு நொடி” (தி எம்ஃபட்டிக் டையக்லட்) அல்லது ‘ஒரு நாள்’ (பொது மொழிபெயர்ப்பு, அடிக்குறிப்பு) என்று பயன்படுத்தியிருக்கின்றன. ஆனால், இதன் மூல வார்த்தை ஒரு முழத்தைத்தான் குறிக்கிறது, ஒரு முழம் என்பது சுமார் 45 சென்டிமீட்டர் நீளமாகும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்