-
“உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்”தூய வணக்கம்—பூமியெங்கும்!
-
-
1, 2. கி.பி. 29, இலையுதிர் காலத்தில் இயேசு ஏன் யூதேயா வனாந்தரத்துக்கு வந்தார், அங்கே அவருக்கு என்ன நடந்தது? (ஆரம்பப் படம்.)
கி.பி. 29, இலையுதிர் காலத்தின் ஆரம்பம் அது. சவக்கடலுக்கு வடக்கிலுள்ள யூதேயா வனாந்தரத்தில் இயேசு இருக்கிறார். அவர் ஞானஸ்நானம் எடுத்து அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு, கடவுளுடைய சக்தி அவரை அந்த இடத்துக்கு வழிநடத்தியது. பாறைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த அந்த வறண்ட நிலப்பகுதியில் இயேசு 40 நாட்களுக்கு விரதம் இருக்கிறார். தனியாக இருந்து ஜெபம் செய்வதற்கும் தியானிப்பதற்கும் அந்தக் காலத்தைப் பயன்படுத்துகிறார். ஒருவேளை அந்தச் சமயத்தில் யெகோவா தன்னுடைய மகனிடம் பேசி, அவர் எதிர்ப்படப்போகும் விஷயங்களுக்காக அவரைத் தயார்படுத்தியிருப்பார்.
-
-
“உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்”தூய வணக்கம்—பூமியெங்கும்!
-
-
3, 4. (அ) முதல் இரண்டு சோதனைகளின்போது என்ன வார்த்தைகளைச் சொல்லி சாத்தான் பேச ஆரம்பித்தான், இயேசுவின் மனதில் என்ன சந்தேகத்தை விதைக்க அவன் முயற்சி செய்தான்? (ஆ) அதேபோன்ற தந்திரங்களை சாத்தான் இன்று எப்படிப் பயன்படுத்துகிறான்?
3 மத்தேயு 4:1-7-ஐ வாசியுங்கள். முதல் இரண்டு முறை இயேசுவைச் சோதித்தபோது, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால்” என்ற வார்த்தைகளைச் சொல்லி சாத்தான் தந்திரமாகப் பேச ஆரம்பித்தான். இயேசுதான் கடவுளுடைய மகன் என்பதில் சாத்தானுக்குச் சந்தேகம் இருந்ததா? இல்லவே இல்லை. கடவுளுடைய தயவை இழந்த அந்த தேவதூதனுக்கு இயேசுதான் கடவுளுடைய முதல் படைப்பு என்பது நன்றாகத் தெரிந்திருந்தது. (கொலோ. 1:15) அதோடு, இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது, “இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று யெகோவா பரலோகத்திலிருந்து சொன்னதுகூட சாத்தானுக்குத் தெரிந்திருக்கும். (மத். 3:17) இயேசுவின் மனதில், தன்னுடைய அப்பா நம்பகமானவரா, தன்மீது அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா என்ற சந்தேகத்தை விதைப்பதற்காக அவன் தந்திரமாக அப்படிச் சொல்லியிருக்கலாம். முதல் சோதனையின்போது, கற்களை ரொட்டிகளாக்கும்படி சாத்தான் சொன்னான். இதன் மூலம், ‘நீ கடவுளுடைய மகன் என்றால், உன் அப்பா ஏன் இந்த வனாந்தரத்தில் உனக்கு சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை?’ என்று மறைமுகமாகக் கேட்டான். இரண்டாவது சோதனையின்போது, அவன் ஆலயத்தின் உயரமான இடத்திலிருந்து இயேசுவைக் கீழே குதிக்கச் சொன்னான். இதன் மூலம், ‘நீ கடவுளுடைய மகன் என்றால், உன் அப்பா உன்னைக் காப்பாற்றுவார் என்று நிஜமாகவே நம்புகிறாயா?’ என்று மறைமுகமாகக் கேட்டான்.
-