பைபிளில் இருக்கும் புதையல்கள் | மாற்கு 9-10
விசுவாசத்தைப் பலப்படுத்திய ஒரு தரிசனம்
இயேசு தோற்றம் மாறிய சமயத்தில், அவரை ஏற்றுக்கொள்வதாக அவருடைய பரலோகத் தகப்பன் சொன்னார். அதைக் கேட்டபோது இயேசுவுக்கு எப்படி இருந்திருக்கும்! சீக்கிரத்தில் வரவிருந்த கஷ்டங்களைச் சகிக்க இது அவரைப் பலப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரின் மனதில் இந்தக் காட்சி ஆழமாகப் பதிந்தது. இயேசுதான் மேசியா என்பதையும், அவர் சொல்வதைக் கேட்பதுதான் சரி என்பதையும் இந்தத் தரிசனம் அவர்களுக்கு உறுதிப்படுத்தியது. கிட்டத்தட்ட 32 வருஷங்களுக்குப் பிறகும், பேதுருவின் மனதில் இந்தச் சம்பவம் பசுமையாக இருந்தது. ‘தீர்க்கதரிசன வார்த்தைகளின்மீது’ தனக்கு இருந்த விசுவாசத்தை அந்தத் தரிசனம் பலப்படுத்தியதாக அவர் எழுதினார்.—2பே 1:16-19.
சிலிர்க்க வைக்கும் இந்தத் தரிசனத்தை நம்மில் யாரும் நேரில் பார்க்கவில்லை. ஆனாலும், அதன் நிறைவேற்றத்தை நாம் பார்க்கிறோம். வல்லமையுள்ள ராஜாவாக இயேசு இப்போது ஆட்சி செய்கிறார். சீக்கிரத்தில் அவர் ‘ஜெயித்து முடிப்பார்.’ நீதியான புதிய உலகத்துக்கு வழி திறந்துவைப்பார்.—வெளி 6:2.
பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதைப் பார்ப்பது உங்களுடைய விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தியிருக்கிறது?