-
கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
2. 1914-லிருந்து உலக நிலைமைகளும் மக்களின் குணங்களும் எப்படி மோசமாகியிருக்கின்றன?
இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “உங்களுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். (மத்தேயு 24:3) பரலோகத்தில் தன்னுடைய ஆட்சி ஆரம்பித்த பிறகு பூமியில் என்னென்ன நடக்கும் என்று இயேசு அவர்களிடம் சொன்னார். உதாரணத்துக்கு, போரும் பஞ்சமும் நிலநடுக்கமும் வரும் என்று சொன்னார். (மத்தேயு 24:7-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, “கடைசி நாட்களில்” மக்களுடைய குணங்கள் மோசமாகும் என்பதால் “சமாளிக்க முடியாத அளவுக்கு” வாழ்க்கை கஷ்டமாக இருக்கும் என்று பைபிள் சொன்னது. (2 தீமோத்தேயு 3:1-5) முக்கியமாக 1914-லிருந்து உலக நிலைமைகளும் மக்களின் குணங்களும் படுமோசமாகியிருக்கின்றன.
3. கடவுளுடைய ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து உலகம் ஏன் இவ்வளவு மோசமாகியிருக்கிறது?
இயேசு ராஜாவானதும் சாத்தானோடும் பேய்களோடும் பரலோகத்தில் போர் செய்தார். அதில் சாத்தான் தோற்றுப்போனான். “அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.” (வெளிப்படுத்துதல் 12:9, 10, 12) சாத்தான் அழியப்போவதால் பயங்கர கோபத்தோடு இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கிறான். அதனால்தான் இந்த உலகத்தில் இவ்வளவு வலி, இவ்வளவு வேதனை! ஆனால், கடவுளுடைய அரசாங்கம் இதற்கெல்லாம் முடிவுகட்டும்.
-
-
கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
5. 1914-லிருந்து உலகம் மாறிவிட்டது
தான் ராஜாவாக ஆன பிறகு உலக நிலைமைகள் எப்படி இருக்கும் என்று இயேசு முன்கூட்டியே சொன்னார். லூக்கா 21:9-11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இதில் எதையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்கள்?
மனித ஆட்சியின் கடைசி நாட்களில் மக்கள் எப்படி இருப்பார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். 2 தீமோத்தேயு 3:1-5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இப்படிப்பட்ட ஆட்களில் யாரையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?
-