நீங்கள் மேசியாவை அடையாளம் கண்டுகொண்டிருப்பீர்களா?
இயசு கிறிஸ்து, இஸ்ரவேலர் மத்தியில் கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதில் மூன்றரை ஆண்டுகள் செலவிட்டார். ஆனால், பூமிக்குரிய அவருடைய ஊழியம் முடிவுக்கு வருகையில், அவருடைய சமகாலத்தவர் பெரும்பான்மையோர் அவரை மேசியாவாக, அல்லது கடவுளின் வாக்குப்பண்ணப்பட்ட “அபிஷேகஞ்செய்யப்பட்டவராக” ஏற்காமல் தள்ளிவிட்டிருந்தனர். ஏன்?
இயேசு மேசியா என்பதை முதல் நூற்றாண்டு யூதர்கள் ஏன் ஒப்புக்கொள்ளவில்லை என்பதற்குப் பல காரணங்களைக் கண்டுகொள்ள பைபிள் நமக்கு உதவிசெய்கிறது. ஆளும் மேசியானிய அரசராக இயேசுவின் தற்கால ஸ்தானத்தை ஒப்புக்கொள்வதிலிருந்து, இந்தக் காரணங்களில் மூன்று, பலரைத் தடுத்து வைக்கின்றன.
“ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்”
இயேசுவின் மேசியானிய பதவியைக் குறிப்பிட்டுக் காட்டின வேதப்பூர்வ அடையாளங்களை ஏற்க முதல் நூற்றாண்டு யூதர்கள் மறுத்தது, மேசியாவை அவர்கள் ஏற்காததற்கு ஒரு காரணமாக இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில், இயேசுவுக்குச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்கள், அவர் கடவுளிடமிருந்து வந்ததை நிரூபிப்பதற்கு ஓர் அடையாளத்தை நடப்பிக்கும்படி அவரைக் கேட்டனர். உதாரணமாக, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் இவ்வாறு சொன்னதாக மத்தேயு 12:38 அறிவிக்கிறது: “போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்.” இயேசு ஏற்கெனவே அவர்களுக்கு அடையாளங்களைக் காட்டியிருந்தாரல்லவா? நிச்சயமாகவே காட்டியிருந்தார்.
அந்தச் சமயத்திற்குள் இயேசு, பல அற்புதங்களை ஏற்கெனவே நடப்பித்திருந்தார். தண்ணீரை அவர் திராட்ச மதுவாக மாற்றியிருந்தார். மரண நிலையிலிருந்த ஒரு பையனைச் சுகப்படுத்தியிருந்தார், பேதுருவின், நோயுற்றிருந்த மாமியாரைச் சுகமடைய செய்திருந்தார்; குஷ்டரோகியான ஒருவனைச் சுத்தமாக்கியிருந்தார்; ஒரு திமிர்வாதக்காரனை எழுந்து நடக்கும்படி செய்திருந்தார், 38 ஆண்டுகள் நோயுற்றிருந்த ஒரு மனிதனை சுகம்பெற செய்திருந்தார், ஒரு மனிதனின் சூம்பின கையைத் திரும்ப இயல்பான நிலையடைய செய்திருந்தார், துயரமுண்டாக்கின தங்கள் நோய்களிலிருந்து பலருக்குச் சுகமளித்திருந்தார், படைத் தலைவர் ஒருவரின் அடிமையைச் சுகப்படுத்தியிருந்தார், விதவையின் மரித்த குமாரனை உயிர்பெறச் செய்திருந்தார், குருடும் ஊமையுமாயிருந்த ஒரு மனிதனைச் சுகப்படுத்தியிருந்தார். இந்த அற்புதங்கள், கானாவிலும், கப்பர்நகூமிலும், எருசலேமிலும், நாயீனிலும் நடப்பிக்கப்பட்டன. மேலும், இத்தகைய அற்புதங்களைப் பற்றிய செய்திகள், யூதேயா முழுவதிலும், சுற்றியுள்ள நாட்டிலும் பரவின.—யோவான் 2:1-12; 4:46-54; மத்தேயு 8:14-17; 8:1-4; 9:1-8; யோவான் 5:1-9; மத்தேயு 12:9-14; மாற்கு 3:7-12; லூக்கா 7:1-10; 7:11-17; மத்தேயு 12:22.
இயேசு மேசியாவாக இருந்தார் என்பதை நிரூபிக்கும் அடையாளங்களுக்கு குறைவு எதுவும் இருக்கவில்லை. ஜனங்களுக்கு முன்பாக அவர் அத்தனை பல அடையாளங்களை நடப்பித்திருந்தும், அவர்கள் அவரில் விசுவாசம் வைக்கவில்லை. இயேசு கடவுளால் அனுப்பப்பட்டார் என்பதற்கு நிரூபணத்தைக் கண்டிருந்து, ஆனால் அவரை மேசியாவாக ஒப்புக்கொள்ளாதவர்கள் ஆவிக்குரியப்பிரகாரம் குருடராக இருந்தனர். அவர்களுடைய இருதயங்கள் கடினப்பட்டும் சத்தியம் நுழைவதற்கு இடமளியாமலும் இருந்தன.—யோவான் 12:37-41.
நம்முடைய நாளைப் பற்றியதென்ன? “என் சொந்தக் கண்களால் காண்பதை மாத்திரமே நான் நம்புகிறேன்,” என்று சில ஆட்கள் சொல்லுகிறார்கள். ஆனால், அது உண்மையில் ஞானமான போக்காக இருக்கிறதா? இயேசு ஏற்கெனவே மேசியானிய ராஜ்யத்தில் பரலோக அரசராக சிங்காசனத்தில் ஏற்றப்பட்டிருக்கிறார் என்று பைபிள் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. அவர் காணக்கூடாதவராக இருப்பதால், அவர் ஆட்சி செய்வதை அறிந்துகொள்ளும்படி நமக்கு உதவிசெய்வதற்கு ஓர் அடையாளம் நமக்குத் தேவை. அது, இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையினுடைய கடைசி நாட்களின் தொடக்கத்தைக் குறித்தது. அந்த அடையாளத்தை நீங்கள் கண்டுகொள்கிறீர்களா?—மத்தேயு 24:3, NW.
பைபிளின்படி, மேசியானிய அரசராக, கிறிஸ்துவினுடைய ஆட்சியின் தொடக்கம், போர், பூமியதிர்ச்சிகள், உணவு குறைபாடுகள் மற்றும் கொள்ளைநோய்கள், முன் என்றுமில்லாத அளவில் ஏற்படுவதால் குறிக்கப்படும். “கடைசிநாட்களில்,” மனித உறவுகள், தன்னலத்தாலும், பேராசையினாலும், தன்னடக்கம் இல்லாமையினாலும் தனிப்பட்டு விளங்கும். (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:6, 7; லூக்கா 21:10, 11) காலக்கணிப்பு மட்டுமல்லாமல், கடைசி நாட்களுக்குரிய 20-க்கு மேற்பட்ட வெவ்வேறு அம்சங்கள், 1914-ஐ மேசியாவினுடைய ஆட்சியின் தொடக்கமென மிக நுட்பமாய்க் குறிப்பிடுகின்றன.—காவற்கோபுரம் ஏப்ரல் 1, 1993, பக்கம் 14 காண்க.
‘பணப்பிரியர்’
யூதர்கள், இயேசுவை மேசியாவாக ஏற்காமல் தள்ளிவிட்டதற்கு மற்றொரு காரணம் பொருளாசையாக இருந்தது. செல்வத்திற்கு மட்டுக்குமீறிய முக்கியத்துவத்தைக் கொடுத்தது, இயேசுவைப் பின்பற்றுவதற்குத் தடங்கலாகப் பலருக்கு இருந்தது. உதாரணமாக, ‘பணப்பிரியரென’ பரிசேயர் அறியப்பட்டனர். (லூக்கா 16:14, தி.மொ.) இயேசுவை அணுகி, நித்திய ஜீவனை அடைவது எவ்வாறென்று கேட்ட செல்வந்தனான ஒரு வாலிபத் தலைவனின் காரியத்தைக் கவனியுங்கள். தொடர்ந்து “கற்பனைகளைக் கைக்கொள்” என்று இயேசு பதிலளித்தார். “இவைகளையெல்லாம் . . . கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன” என்று அந்த வாலிபன் கேட்டான். குறிப்பிட்ட சட்டங்களைக் கைக்கொள்வதைப் பார்க்கிலும் அதிகம் தேவைப்படுவதாக அவன் உணர்ந்திருக்கலாம். “உனக்கு உண்டானவைகளை விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா,” என்று இயேசு அவனுக்குச் சொன்னார். மேசியாவின் ஒரு சீஷனாயிருப்பது—எத்தகைய ஒரு வாய்ப்பு! எனினும், அந்தத் தலைவன் வருத்தத்தோடு திரும்பி சென்றுவிட்டான். ஏன்? ஏனெனில் பரலோகத்திலுள்ள பொக்கிஷத்தைப் பார்க்கிலும் பூமியிலிருந்த பொக்கிஷமே அவனுக்கு அதிக முக்கியமானதாக இருந்தது.—மத்தேயு 19:16-22.
இந்த நிலைமை மாறிவிடவில்லை. மேசியானிய அரசரை உண்மையாகப் பின்பற்றுபவராவது, பூமிக்குரிய உடைமைகள் உட்பட, எல்லாவற்றிற்கும் மேலாக ஆவிக்குரிய அக்கறைகளை முதலில் வைப்பதைக் குறிக்கிறது. பொருளாசை மனச்சாய்வுடையோர் எவருக்கும், இது ஒரு சவாலாக இருக்கிறது. உதாரணமாக, கிழக்கத்திய நாடு ஒன்றில் ஒரு மிஷனரி தம்பதியினர், பைபிளைப் பற்றி ஓர் அம்மாளிடம் பேசினார்கள். யெகோவா தேவனையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி மேலும் அதிகம் கற்றுக்கொள்ள அவர்கள் விரும்புவார்களென்று நம்பி, அந்தத் தம்பதியினர் அவர்களுக்கு தி உவாட்ச்டவர் மற்றும் அவேக்! பத்திரிகைகளை ஏற்கும்படி அளித்தார்கள். அந்த அம்மாள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்? “மேலும் அதிக பணத்தை நான் சம்பாதிக்கும்படி இந்தப் பத்திரிகைகள் எனக்கு உதவிசெய்யுமா?” என்று அவர்கள் கேட்டார்கள். அந்த அம்மாள், ஆவிக்குரிய காரியங்களைப் பார்க்கிலும் பொருள் சம்பந்தமான காரியங்களிலேயே அதிக அக்கறையுடையவர்களாக இருந்தார்கள்.
இதே தம்பதியினர், ஒரு வாலிபனிடம் பைபிள் படிப்பு நடத்தினார்கள். அவன், ராஜ்ய மன்றத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு வரத் தொடங்கினான். அவனுடைய பெற்றோர் அவனிடம்: “நீ உன் நேரத்தை வீணாக்குகிறாய். சாயங்காலத்தில் செய்வதற்கான ஒரு இரண்டாவது வேலையை ஏற்று, மேலும் அதிக பணத்தை நீ சம்பாதிக்க வேண்டும்,” என்று சொன்னார்கள். மேசியானிய அரசரைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு மேலாக, பொருளாதாரக் காரியங்களை வைக்கும்படி பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிப்பது எவ்வளவு விசனகரமாயுள்ளது! “தனக்கு எல்லா செல்வமும் இருந்தும், அந்தத் தலைவன் பத்தாயிர ஆண்டு வாழ்க்கையை விலைக்கு வாங்க முடியாது,” என்று சீன பழமொழி சொல்கிறது.
மேசியானிய அரசரைப் பற்றி படித்து, அவரைப் பின்பற்றுவது, பண ஆசைக்கு இடமளிக்கிறதில்லை என்பதை இப்போது பலர் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் தன் சொந்த வாணிகத்தை நடத்துபவராக மிகுதியான பணம் சம்பாதித்துவந்த, யெகோவாவின் சாட்சியான ஓர் அம்மாள், இவ்வாறு சொன்னார்கள்: “மிகுதியான பணத்தை வைத்திருப்பது மிக இன்பமாயிருக்கிறது ஆனால் அவசியமல்ல. ஓர் ஆளை மகிழ்விப்பது பணமல்ல.” இவர்கள் இப்போது, உவாட்ச் டவர் சொஸைட்டியின் ஐரோப்பிய கிளை அலுவலகம் ஒன்றில், பெத்தேல் குடும்பத்தின் ஓர் உறுப்பினராக இருக்கிறார்கள்.
‘யூதருக்குப் பயந்ததனால்’
மனிதருக்குப் பயப்படுகிற பயம், இயேசுவை மேசியாவாக யூதர்கள் ஏற்காததற்கு மற்றொரு காரணமாக இருந்தது. இயேசு மேசியா என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது, தங்கள் பொதுமதிப்பை ஆபத்தில் வைப்பதைக் குறித்தது. சிலருக்கு அதன் மதிப்பு மிக மீறிய உயர்வுள்ளதாக இருந்தது. சனகெதரின் என்றழைக்கப்பட்ட யூத உயர்நீதிமன்றத்தின் ஓர் உறுப்பினரான நிக்கொதேமுவைக் கவனியுங்கள். இயேசுவின் அடையாளங்களாலும் போதகங்களாலும் மனங்கவரப்பட்டவராய் அவர்: “ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்,” என்று சொன்னார். எனினும் இராக்காலத்திலேயே அவர் இயேசுவினிடம் வந்தார். மற்ற யூதர்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்வதைத் தவிர்ப்பதற்கு ஒருவேளை அவ்வாறு செய்திருக்கலாம்.—யோவான் 3:1, 2.
இயேசு பேசினதைக் கேட்ட பலருக்கு, கடவுளுடைய அங்கீகாரத்தைப் பார்க்கிலும் மனிதனுடைய அங்கீகாரமே அதிக முக்கியமாக இருந்தது. (யோவான் 5:44) பொ.ச. 32-ல் கூடாரப் பண்டிகைக்காக இயேசு எருசலேமில் இருந்தபோது, ‘கூட்டங்களுக்குள்ளே அவரைப்பற்றி கம்மிய குரலில் மிகுதியான பேச்சு நடந்தது.’ “யூதருக்குப் பயந்ததனால்” இயேசுவைப் பற்றி வெளிப்படையாக ஒருவரும் பேசவில்லை. (யோவான் 7:10-13, NW) பார்வையடையும்படி இயேசு சுகப்படுத்தின ஒரு மனிதனின் பெற்றோருங்கூட, கடவுளுடைய பிரதிநிதி அந்த அற்புதத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்ள மனமில்லாதிருந்தனர். அவர்களும் ‘யூதருக்குப் பயந்தனர்.’—யோவான் 9:13-23.
இயேசு இப்போது மேசியானிய அரசராக, பரலோகத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் என்பதைச் சிலர் உணருகின்றனர்; ஆனால் இதை வெளிப்படையாய் ஒப்புக்கொள்ள அவர்கள் பயப்படுகின்றனர். மற்றவர்களோடு தங்கள் நிலைநிற்கையை இழப்பதன் மதிப்பு அவர்களுக்கு மிக உயர்வானதாக உள்ளது. உதாரணமாக, ஜெர்மனியில், யெகோவாவின் சாட்சி ஒருவர், ஒரு மனிதனுடன் பைபிளைப்பற்றி உரையாடிக்கொண்டிருந்தார். அந்த மனிதன் இவ்வாறு கூறினார்: “சாட்சிகளாகிய நீங்கள் பைபிளைப் பற்றி பிரசங்கிப்பது சத்தியமே. ஆனால், இன்று நான் ஒரு சாட்சியானால், நாளைக்குள் எல்லாரும் அதைப்பற்றி தெரிந்திருப்பார்கள். நான் வேலைசெய்யுமிடத்திலும், சுற்றுப்புறத்திலும், நானும் என் குடும்பமும் சேர்ந்துள்ள கழகத்திலும் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அதை என்னால் சகிக்க முடியாது.”
மனிதருக்குப் பயப்படும்படி செய்வது எது? பெருமை, குடும்பத்தினர் மற்றும் நண்பர் மத்தியில் மதிப்பை நாடுவது, கேலியும் ஏளனமும் செய்யப்படுவதைப்பற்றிய பயம், பெரும்பான்மையரிலிருந்து வேறுபட்டிருப்பதன்பேரில் கவலை. முக்கியமாய், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்கத் தொடங்குவோருக்கு இத்தகைய உணர்ச்சிகள் ஒரு பரீட்சையாக நிரூபிக்கின்றன. உதாரணமாக, இயேசு கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ், மேசியானிய ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்போகிற பரதீஸைப் பற்றி படித்தறிந்ததில் ஓர் இளம் பெண் பெரும் மனமகிழ்ச்சியடைந்தாள். ஆனால் அவள் டிஸ்கோ நடனத்தில் பேரார்வம் உடையவளாகவும் இருந்தாள். மனிதனுக்குப் பயப்படுகிற பயம், இந்த நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களுடன் பேசுவதைத் தடை செய்தது. முடிவில், பைபிளைப் பற்றி தாராளமாய்ப் பேசுவதற்கு அவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டாள். அவளுடைய டிஸ்கோ நண்பர்கள் அவளை ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள்; ஆனால் அவளுடைய கணவரும் பெற்றோரும் அக்கறை காட்டினார்கள். இந்தப் பெண்ணும் அவளுடைய தாயும் முடிவில் முழுக்காட்டப்பட்டார்கள்; அவளுடைய கணவரும் தகப்பனும் பைபிள் படிக்கத் தொடங்கினார்கள். மனிதனுக்குப் பயப்படும் பயத்தை அடக்கி வென்றதற்கு எத்தகைய நற்பலன்!
மேசியாவை நீங்கள் உண்மையில் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறீர்களா?
இயேசு வாதனையின் கழுமரத்தின்மீது மரிக்கையில், அவருடைய சீஷர்களில் சிலர் அங்கிருந்தனர். அவர்கள் அவரை முன்னறிவிக்கப்பட்ட மேசியாவாக அடையாளம் கண்டுகொண்டிருந்தனர். யூத அதிபதிகளும் அங்கிருந்தனர். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், ஓர் அடையாளத்தை அவர்கள் இன்னும் கேட்போராக இருந்தனர். “இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால் [அல்லது மேசியாவானால்], தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும்.” (லூக்கா 23:35) ஓர் அடையாளத்துக்காகக் கேட்பதை அவர்கள் ஒருபோதும் நிறுத்தமாட்டார்களா? இயேசு பல டஜன்கணக்கான அற்புதங்களை நடப்பித்திருந்தார். கூடுதலாக, அவருடைய பிறப்பு, ஊழியம், விசாரணை, கொல்லப்பட்டது, மற்றும் உயிர்த்தெழுதல் எபிரெயத் தீர்க்கதரிசனங்கள் பலவற்றை நிறைவேற்றின.—உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட “வேதவாக்கியம் முழுவதும் தேவனால் ஏவப்பட்டது பயனுடையது” என்ற ஆங்கில பிரசுரத்தில் பக்கங்கள் 343-4-ஐக் காண்க.
அவர் மேசியா என்பதற்கான அத்தாட்சியை ஏற்காது தள்ளினவர்களாக, வழியில் நடந்துசெல்வோர், இயேசுவை இகழ்ந்தனர். (மத்தேயு 27:39, 40) போர்ச்சேவகர் பொருளாசை கொண்டவர்களாய் இயேசுவின் உடையைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு, அவருடைய உள்ளங்கிக்காகச் சீட்டுப்போட்டார்கள். (யோவான் 19:23, 24) சிலருடைய காரியங்களில் மனிதருக்குப் பயப்படுகிற பயம் காரணமாக இருந்தது. உதாரணமாக, ஆலோசனை சபையின் [சனகெதரினின்] ஓர் உறுப்பினராயிருந்த அரிமத்தியா ஊராரான யோசேப்பைக் கவனியுங்கள். ‘யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனாக’ அவர் இருந்தார். மேசியாவின் மரணத்துக்குப் பின், யோசேப்பும் நிக்கொதேமுவும் இயேசுவின் உடலுக்குச் செய்யவேண்டியதைச் செய்தார்கள். இவ்வாறு யோசேப்பு மனிதனுக்குப் பயப்படுகிற பயத்தை அடக்கி மேற்கொண்டார்.—யோவான் 19:38-40.
முதல் நூற்றாண்டில் நீங்கள் வாழ்ந்திருந்தால், இயேசுவை மேசியாவாக நீங்கள் அடையாளம் கண்டுகொண்டிருப்பீர்களா? அவ்வாறு செய்வது, வேதப்பூர்வ அத்தாட்சியை நீங்கள் ஏற்பதையும், பொருள்பற்றுக்குரிய சிந்தனையை ஒதுக்கித் தள்ளுவதையும், மனிதருக்குப் பயப்படுகிற பயத்துக்கு இடமளிக்காதிருப்பதையும் தேவைப்படுத்தியிருக்கும். இந்தக் கடைசி நாட்களில், நாம் ஒவ்வொருவரும் நம்மைநாமே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும், ‘இயேசுவை இப்போது பரலோக மேசியானிய அரசராக நான் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறேனா?’ சீக்கிரத்தில் பூமியின் விவகாரங்களை அவர் ஏற்பார். அது சம்பவிக்கையில், இயேசு கிறிஸ்துவை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக உண்மையில் அங்கீகரிப்போருக்குள் நீங்கள் இருப்பீர்களா?
[பக்கம் 28-ன் படங்கள்]
இயேசு மேசியானிய அரசர் என்பதற்கான அத்தாட்சியை வேண்டுமென்றே ஒருபோதும் புறக்கணியாதீர்கள்
[பக்கம் 31-ன் படம்]
மேசியாவைப் பற்றி கற்றறிவது, மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற பயத்தை அடக்கி மேற்கொள்வதை பெரும்பாலும் குறிக்கிறது