-
ஆவி மண்டலத்தில் ஆட்சியாளர்கள்காவற்கோபுரம்—1995 | ஜூலை 15
-
-
இயேசு, தம்முடைய முழுக்காட்டுதலுக்குப்பின் சில நாட்களில், பிசாசாகிய சாத்தான் என்றழைக்கப்பட்ட, பார்க்கமுடியாத ஆவி சிருஷ்டியால் சோதிக்கப்பட்டார். அந்தச் சோதனைகளில் ஒன்றைப்பற்றி, பைபிள் சொல்கிறது: ‘பிசாசு அவரை [இயேசுவை] மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான்.’ (மத்தேயு 4:8) பின்பு இயேசுவிடம் சாத்தான் இவ்வாறு சொன்னான்: “இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும்.”—லூக்கா 4:6, 7.
இந்த உலகின் எல்லா ராஜ்யங்கள், அல்லது அரசாங்கங்களின்மீதும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதாக சாத்தான் உரிமைபாராட்டினான். இயேசு இந்த உரிமைபாராட்டலை மறுத்தாரா? இல்லை. உண்மையில், சாத்தானை “உலகத்தின் அதிபதி” என்று வேறொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவதன்மூலம் அவர் அதை ஊர்ஜிதம் செய்தார்.—யோவான் 14:30.
பைபிளின்படி, சாத்தான், அதிக வல்லமையைக் கொண்டிருக்கும் ஒரு பொல்லாத தூதனாக இருக்கிறான். கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் சாத்தானை “பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு” தொடர்புபடுத்துகிறார்; அவர்களை ‘இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள்’ என்பதாகச் சொல்லுகிறார். (எபேசியர் 6:11, 12) மேலுமாக, “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” அப்போஸ்தலன் யோவான் சொன்னார். (1 யோவான் 5:19) சாத்தான் ‘உலகமனைத்தையும் மோசம்போக்குவதாக’ பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 12:9) உலகின் அரசியல் அமைப்பிற்கு “தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும்” கொடுக்கிற ஒரு வலுசர்ப்பமாகவும் சாத்தானை அடையாளப்பூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துதல் சித்தரிக்கிறது.—வெளிப்படுத்துதல் 13:2.
மனிதர்களைத் தங்களுடைய கேட்டுக்கே வழிநடத்தும் விதத்தில் ஒரு தீய சக்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு உலக சம்பவங்களும் சான்றளிக்கின்றன. இல்லையென்றால் வேறென்ன காரணத்துக்காக மனித அரசாங்கங்கள் சமாதானத்தை முன்னேற்றுவிக்கத் தவறுகின்றன? மக்கள் ஒருவரையொருவர் பகைத்து கொலைசெய்வதற்குக் காரணமாக வேறு எது இருக்க முடியும்? உள்நாட்டுக் கலகம் ஒன்றில் ஏற்பட்ட படுகொலையையும் சாவையும் கண்டு திகைப்புற்றவராய், ஒரு கண்கண்ட சாட்சி இவ்வாறு கூறினார்: “இது எப்படி நடந்திருக்கக்கூடும் என்று எனக்குத் தெரியவில்லை. இது பகையைவிடவும் அதிகமானது. ஒரு பொல்லாத ஆவி ஆளே, இந்த மனிதர்களை ஒருவரையொருவர் அழிக்கும்படி பயன்படுத்துகிறான்.”
-
-
ஆவி மண்டலத்தில் ஆட்சியாளர்கள்காவற்கோபுரம்—1995 | ஜூலை 15
-
-
சாத்தான் ஏன் ஆட்சி செய்யும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறான்
பூமியின்மீதான ஆட்சியைக் குறித்து சாத்தான் இயேசுவிடம் என்ன சொன்னான் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? “இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் . . . உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது,” என்று சாத்தான் சொன்னான். (லூக்கா 4:6) கடவுளுடைய அனுமதியின் காரணமாக மட்டுமே பிசாசாகிய சாத்தான் அதிகாரம் செலுத்துகிறான் என்று அந்தக் கூற்று காண்பிக்கிறது. ஆனால் சாத்தானை கடவுள் ஏன் பொறுத்துக்கொள்கிறார்?
-