-
‘இயேசு . . . முடிவுவரை அவர்கள்மீது அன்பு காட்டினார்’என்னைப் பின்பற்றி வா
-
-
9 மரணத் தறுவாயிலும், தம் அன்புக்குரியவர்களின் ஆன்மீக நலனில் இயேசு வைத்திருந்த அக்கறை நம் நெஞ்சை நெகிழவைக்கிறது. இந்தக் காட்சியை அப்படியே உங்களுடைய மனத்திரையில் ஓடவிடுங்கள். இயேசு சித்திரவதைக் கம்பத்தில் அறையப்பட்டிருக்கிறார், உயிர்போகும் வேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலைமையில் மூச்சு இழுப்பதே அவருக்குப் பெரும் பாடாக இருந்திருக்கும். அப்படியானால், மூச்சு இழுப்பதற்கு ஒவ்வொரு முறையும் அவர் தம் முழு பலத்தையும் திரட்டி காலை உந்தி எம்பும்போது ஆணி அறையப்பட்ட அவருடைய பாதங்கள் கிழிந்து அவருக்கு எந்தளவு வேதனையை ஏற்படுத்தியிருக்கும். அதுமட்டுமா, சவுக்கடி வாங்கி நார் நாராய் கிழிந்திருந்த முதுகு, சித்திரவதைக் கம்பத்தில் உராய்ந்தபோது அவருக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும். பொதுவாக, நாம் பேசும்போது மூச்சை இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்கும். அப்படியானால், கடும் வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் இயேசுவுக்கு அது இன்னும் எந்தளவு சிரமமாகவும் சித்திரவதையாகவும் இருந்திருக்கும். என்றாலும், அவருடைய தாய் மரியாள்மீது அவர் மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்பதைச் சாவதற்கு சற்று முன்பு அவர் பேசிய வார்த்தைகள் காட்டுகின்றன. மரியாளையும் அவர் அருகே நின்றுகொண்டிருந்த அப்போஸ்தலன் யோவானையும் பார்த்து, அங்கு இருந்தவர்கள் கேட்கும் அளவுக்குச் சத்தமாக, “பெண்மணியே, இதோ! உங்கள் மகன்!” என்று தம் தாயிடம் சொன்னார். அடுத்ததாக யோவானைப் பார்த்து, “இதோ! உன் அம்மா!” என்றார். (யோவான் 19:26, 27) உத்தமமுள்ள அந்த அப்போஸ்தலன் மரியாளின் சரீர மற்றும் பொருளாதார தேவைகளை மட்டுமல்ல ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை இயேசுவுக்கு இருந்தது.b
-
-
‘இயேசு . . . முடிவுவரை அவர்கள்மீது அன்பு காட்டினார்’என்னைப் பின்பற்றி வா
-
-
b மரியாள் ஒருவேளை அந்தச் சமயத்தில் விதவையாக இருந்திருக்கலாம். அவளுடைய மற்ற பிள்ளைகள் இன்னும் இயேசுவின் சீஷர்களாய் ஆகவில்லை எனத் தெரிகிறது.—யோவான் 7:5.
-