-
“அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை”என்னைப் பின்பற்றி வா
-
-
அதிகாரம் பதினொன்று
“அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை”
1, 2. (அ) இயேசுவைப் பிடித்து வரச் சொல்லி அனுப்பப்பட்ட அதிகாரிகள் ஏன் வெறுங்கையோடு திரும்பினார்கள்? (ஆ) இயேசு பிரபல போதகராக இருந்ததற்கு காரணம் என்ன?
பரிசேயர்களுக்கு கோபம் தலைக்கேறுகிறது. ஆலயத்தில் இயேசு தம் தகப்பனைப் பற்றி கற்பித்துக்கொண்டிருக்கிறார். மக்கள் மத்தியில் பிரிவினை உண்டாகிறது; அநேகர் இயேசுமீது விசுவாசம் வைக்கிறார்கள், மற்றவர்களோ அவரை கைது செய்ய துடிக்கிறார்கள். மதத் தலைவர்கள் தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், இயேசுவைப் பிடித்து வரச் சொல்லி அதிகாரிகளை அனுப்புகிறார்கள். அதிகாரிகளோ வெறுங்கையோடு திரும்பி வருகிறார்கள். “ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?” என்று பிரதான குருமார்களும் பரிசேயர்களும் கேட்கிறார்கள். அதற்கு அதிகாரிகள், “அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை” என்று பதிலளிக்கிறார்கள். இயேசுவின் போதனையைக் கேட்டு அவர்கள் மனங்கவரப்பட்டதால் அவரைக் கைதுசெய்ய அவர்களுக்கு மனம் வரவில்லை.a—யோவான் 7:45, 46.
-
-
“அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை”என்னைப் பின்பற்றி வா
-
-
a அந்த அதிகாரிகள் பிரதான குருமார்களின் தலைமையின்கீழ் நியாயசங்கத்தில் பணிபுரிந்தவர்களாய் இருந்திருக்கலாம்.
-