உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அண்மையில் வெளியான காவற்கோபுரம் பிரதிகளை வாசித்து நீங்கள் மகிழ்ந்தீர்களா? சரி, பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
◻ பைபிள் எழுத்தாளர்கள் தகவலை எடுத்துரைக்கும் முறைகளில் வித்தியாசப்பட்ட போதிலும் எந்த ஒரே திசையையும் கடவுளின் நோக்கத்தையும் சுட்டிக் காண்பித்தார்கள்?
மனிதவர்க்கத்தை மகிழ்ச்சியுள்ளதாக ஆக்குவதற்கு யெகோவா தேவன் என்ன செய்யப் போகிறார் என்பதையும் கடவுளுடைய அங்கீகாரத்தை அடைவதற்கு ஆட்கள் தனிப்பட்டவர்களாக என்ன செய்ய வேண்டும் என்பதையுமே அனைவரும் காண்பித்தனர்.—2/1 பக்கம் 7.
◻ மெய்க் கிறிஸ்தவர்களுக்கும் பெயர் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயுள்ள நான்கு முக்கியமான வித்தியாசங்கள் யாவை?
மெய்க் கிறிஸ்தவர்கள் இரத்தத்துக்கு விலகியிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 15:28, 29) அவர்கள் உயர்ந்த ஒழுக்க தராதரத்தைக் காத்துவருகிறார்கள். (1 கொரிந்தியர் 6:9, 10) மெய்க் கிறிஸ்தவர்கள் அரசியல் காரியங்களிலும் அநேக தேசப் போராட்டங்களிலும் நடுநிலை வகிக்கிறார்கள். (யோவான் 17:16) இயேசுவை பின்பற்றுகிறவர்கள் தங்கள் குடும்ப உறவுகளில் இயேசுவின் நடத்தையை ஒரு முன்மாதிரியாக கொள்கிறார்கள். (எபேசியர் 5:21-25)—2/1 பக்கங்கள் 11–13.
◻ நேர்மையாக இருப்பதில் கிடைக்கும் சில பலன்களும் நன்மைகளும் யாவை?
ஆரோக்கியமான மனநிலைக்கும் நல்லுறவுக்கும் வழிநடத்தும் நம்பிக்கையும் நம்பகமான தன்மையும் நிறைந்த ஒரு சூழ்நிலைமை உருவாகிறது. நேர்மை ஒரு சுத்தமான மனச்சாட்சியை கொண்டிருக்க உதவி செய்கிறது. இது மன சமாதானத்தைக் கொடுக்கிறது. ஒருவர் எவ்வித சங்கட உணர்ச்சியுமில்லாமல் மற்றவர்களை எதிர்ப்படமுடிகிறது. (எபிரெயர் 9:14; 1 தீமோத்தேயு 1:19)—3/1 பக்கம் 7.
◻ வெளிப்படுத்துதல் 9:16-ல் குறிப்பிடப்படும் “குதிரை சேனைகள்” பிரதிநிதித்துவம் செய்வது என்ன?
இந்த அடையாள அர்த்தமுள்ள குதிரைகள் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே போகும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை மட்டுமல்லாமல், அதிகரித்தும் பலத்தும் வரும் “வேறே ஆடுகளைச்” சேர்ந்த “திரள் கூட்டத்தையும்” பிரதிநிதித்துவம் செய்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16)—4/1 பக்கம் 19.
◻ இன்றைய பருவ வயது கர்ப்ப பிரச்னைக்குப் பரிகாரம் யாது?
இளைஞர்களுக்கு ஒழுக்கம் மற்றும் ஆவிக்குரிய விஷயங்களில் வழிநடத்துதல் கொடுக்கப்பட வேண்டும். இதைச் செய்வது பெற்றோருடைய பொறுப்பு என்பதை பைபிள் காண்பிக்கிறது. (எபேசியர் 6:4)—5/1 பக்கம் 27.
◻ கடந்த காலத்திலும் தற்காலத்திலும் சாட்சிகளின் மிஷனரி ஊழியத்தைப் பலன் மிகுந்ததாய் ஆக்கியிருக்கும் மூன்று அடிப்படை அம்சங்கள் யாவை?
ஒன்று, வீடுகளில் மக்களோடு நேரடியாக தொடர்பு கொள்வதாகும். மற்றொன்று நேரடியான எளிமையான பைபிள் அடிப்படையிலான ராஜ்ய செய்தியாகும். மூன்றாவது, மக்களுடன் கொள்ளும் தொடர்புகளில் மிஷனரிகள் வெளிக்காட்டும் கிறிஸ்து கற்பித்த அன்பாகும்.—6/1 பக்கம் 14.
◻ பிள்ளைகளை வெற்றிகரமாக வளர்ப்பதைக் கடினமாக்குவது எது?
பெற்றோரும் பிள்ளைகளும் அபூரணராக இருக்கின்ற காரணத்தால் தவறுகளைச் செய்கின்றனர். (ரோமர் 5:12) மேலுமாக வளரும் பிள்ளைகள் தற்கால சமுதாயத்தின் கெட்ட மனச்சாய்வுகளினால் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள்: இது அவர்களுடைய மதிப்பீடுகளையும் வாழ்க்கையின் நோக்குநிலையையும் வெகுவாக பாதிக்கின்றது. (2 தீமோத்தேயு 3:1–5)—8/1 பக்கம் 4.
◻ செப்பனியா 3:9-ல் பேசப்படும் அந்தச் “சுத்தமான பாஷை” எது?
இது எல்லாத் தேசங்களையும் இனங்களையும் சேர்ந்த கடவுள் பயமுள்ள மக்களையும் தோளோடு தோள் நின்று, யெகோவாவைச் சேவிக்க உதவி செய்யும் வேதப்பூர்வமான சத்தியத்தின் பாஷையாகும்.—8/1 பக்கம் 8.
◻ எதன் மூலமாக ஒருவர் யெகோவாவால் அங்கீகரிக்கப்பட்டவராகிறார்?
ஒப்புக்கொடுத்தல் மற்றும் முழுக்காட்டுதலின் மூலமாக, அபூரணமான மனிதன் ‘நற்பிரியமுள்ள மனிதனாக’ அல்லது கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட மனிதனாக ஆவது கூடியகாரியமாகும். (லூக்கா 2:14)—8/1 பக்கம் 14.
◻ முழுக்காட்டப்படாத ஒரு பிரஸ்தாபியாக தகுதி மறுக்கப்பட்டிருந்தாலும் அல்லது சபை நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும் பெற்றோர் தவறு செய்யும் தங்களுடைய சிறு பிள்ளைக்கு உதவி செய்ய என்ன செய்யலாம்?
பெற்றோர் உணவையும் உடையையும் உறைவிடத்தையும் தொடர்ந்து அளித்து வருவது போலவே, கடவுளுடைய வார்த்தைக்கு இணங்க அவனுக்குக் கற்பிப்பதும் சிட்சிப்பதும் அவசியமாயிருக்கிறது. அவனோடு தனியாக அவர்கள் படிக்கவோ அல்லது குடும்ப படிப்பு ஏற்பாட்டில் பங்கு கொள்ளவோ செய்யலாம்.—8/1 பக்கம் 23.
◻ கடவுளோடு ஓர் உறவை வளர்த்துக் கொள்வதால் என்ன விடுதலைகள் கிடைக்கின்றன?
அடிமைப்படுத்துகின்ற மனுஷனைப் பற்றிய பயத்திலிருந்தும் உண்மையான அர்த்தமோ அல்லது மதிப்போ இல்லாத சுமையான பழக்கவழக்கங்களிலிருந்தும் விடுதலை. (நீதிமொழிகள் 29:25) மேலுமாக மரண பயத்திலிருந்தும் விடுதலை. (பிரசங்கி 9:5, 10; யோவான் 5:28, 29)—9/1 பக்கம் 5.
◻ வெளிப்படுத்துதல் 11:1-ல் குறிப்பிடப்பட்ட ஆலயம் என்பது என்ன? அது எப்போது ஏற்பட்டது?
அது பெரிய ஆவிக்குரிய ஆலயமாகும். பரலோகத்தில் அதனுடைய மகா பரிசுத்த ஸ்தலமே யெகோவாவின் இருப்பிடமாகும். அது பொ.ச. 29-ல் இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டு பிரதான ஆசாரியனாக சேவிக்க ஆரம்பித்தது முதற்கொண்டு இருந்து வருகிறது. (எபிரெயர் 3:1; 10:5)—9/1 பக்கம் 12.
◻ “உலோகாயவாதி” அல்லது “அறியொணாமைக் கொள்கை” (agnostic) என்ற பதம் எதிலிருந்து பெறப்பட்டது? அது பைபிளில் எவ்விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது?
“உலோகாயதவாதி” அல்லது “அறியொணாமைக் கொள்கை” என்பது “அறியப்படாதது” என்று பொருள்படும் கிரேக்க பதமாகிய அக்நாஸ்டோஸிலிருந்து (a’gno–stos) பெறப்பட்டது. பவுல் “அறியப்படாத தேவனுக்கு” என்பதாக எழுதப்பட்டிருந்த ஒரு புறமத பலிபீடத்தைக் குறிப்பிட்டு அத்தேனே பட்டணத்தாருக்குக் கொடுத்த அவனுடைய பேச்சில் இதன் ஒரு வடிவை உபயோகித்தான். (அப்போஸ்தலர் 17:23)—9/1 பக்கம் 21.
◻ யெகோவாவுக்கு நன்றியறிதலைக் காண்பிப்பதற்கு சில வழிகள் யாவை?
நன்றியறிதல் ஆழமாக இருக்கையில் கடவுளை சேவிக்கத் தூண்டும் ஓர் ஆசை போற்றுதலுள்ள இருதயத்திலிருந்து வெளிப்பட்டு வருகிறது. இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு ஒரு வழி, ஒருவேளை பயனியர் ஊழியத்தில் ஈடுபடுவதாகும். மற்றொன்று பூமி முழுவதிலும் இப்பொழுது நடைபெற்றுவரும் கட்டட திட்டங்களில் ஒத்துழைப்பதாகும்.—10/1 பக்கம் 20.