-
இறந்தவர்களின் நிலைமை என்ன?இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
3. இறந்தவர்களின் உண்மையான நிலைமையைத் தெரிந்துகொள்ளுங்கள்
இறந்தவர்களின் நிலைமையைப் பற்றி நிறைய கருத்துகள் இருக்கின்றன. ஆனால், எல்லாமே உண்மையாக இருக்க முடியாது.
இறந்தவர்களைப் பற்றி உங்கள் பகுதியில் என்ன நம்புகிறார்கள்?
பைபிள் என்ன சொல்கிறதென்று தெரிந்துகொள்ள, வீடியோவைப் பாருங்கள்.
பிரசங்கி 3:20-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஒருவர் இறக்கும்போது என்ன நடப்பதாக இந்த வசனம் சொல்கிறது?
ஒருவர் இறந்த பிறகு அவருடைய ஆவியோ ஆத்துமாவோ தொடர்ந்து உயிர்வாழ்கிறதா?
இயேசுவின் நெருங்கிய நண்பரான லாசரு இறந்தபோது அவருடைய நிலைமையைப் பற்றி இயேசு சொன்னதை யோவான் 11:11-14-ல் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
மரணத்தை இயேசு எதனோடு ஒப்பிட்டுப் பேசினார்?
அப்படியென்றால், இறந்தவர்களின் நிலைமை என்ன?
மரணத்தைப் பற்றி பைபிள் சொல்வது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா?
-
-
உங்கள் உயிருக்கு உயிரானவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள்!இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
4. இறந்தவர்களை இயேசு உயிரோடு எழுப்பிக் காட்டியிருக்கிறார்
இயேசு தன் நண்பரான லாசருவின் விஷயத்தில் என்ன செய்தார் என்று விவரமாகப் பார்க்கலாம். யோவான் 11:14, 38-44-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
லாசரு உண்மையிலேயே இறந்துபோயிருந்தார் என்று நமக்கு எப்படித் தெரியும்?—வசனம் 39-ஐப் பாருங்கள்.
லாசரு ஒருவேளை பரலோகத்துக்குப் போயிருந்தால், இயேசு அவரை மறுபடியும் பூமிக்குக் கொண்டுவந்திருப்பாரா?
-