-
“என்னுடைய வாதத்தைக் கேளுங்கள்”கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
-
-
11. மூப்பர்கள் பவுலிடம் என்ன செய்யச் சொன்னார்கள், அதில் என்ன உட்பட்டிருந்தது? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
11 அதனால், பவுலைப் பற்றிய வதந்திகள் முழுக்க முழுக்க பொய்யாக இருந்தபோதிலும், யூத கிறிஸ்தவர்களுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது. அதனால், மூப்பர்கள் பவுலைப் பார்த்து, “கடவுளிடம் நேர்ந்துகொண்ட நான்கு ஆண்கள் இப்போது எங்களோடு இருக்கிறார்கள். அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களோடு சேர்ந்து நீங்களும் தூய்மைச் சடங்கு செய்துகொள்ளுங்கள். அவர்கள் தலைச்சவரம் செய்துகொள்வதற்கு ஆகும் எல்லா செலவுகளையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிச் செய்தால் உங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட விஷயமெல்லாம் வெறும் வதந்தி என்பதையும், நீங்கள் நல்ல நடத்தை உள்ளவர் என்பதையும், திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவர் என்பதையும் எல்லாரும் புரிந்துகொள்வார்கள்”c என்று சொன்னார்கள்.—அப். 21:23, 24.
12. பவுல் எப்படி வளைந்துகொடுப்பவராக, மூப்பர்களோடு ஒத்துழைப்பவராக இருந்தார்?
12 உண்மையில், பிரச்சினை தன்னைப் பற்றிய வதந்திகள் அல்ல, ஆனால் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் யூத கிறிஸ்தவர்கள் காட்டிய வைராக்கியம்தான் என்று பவுல் அந்த மூப்பர்களிடம் அடித்துச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை, வளைந்துகொடுப்பவராக இருந்தார்; கடவுளுடைய நியமங்களுக்கு விரோதமாக இல்லாதவரை அந்த மூப்பர்கள் சொன்னவற்றைச் செய்ய மனமுள்ளவராக இருந்தார். முன்னொரு சமயம் கொரிந்து சபையில் இருந்தவர்களுக்கு அவர் இப்படி எழுதியிருந்தார்: “திருச்சட்டத்தின்கீழ் நான் இல்லாதபோதிலும், திருச்சட்டத்தின்கீழ் இருப்பவர்களைக் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவர திருச்சட்டத்தின்கீழ் இருப்பவனைப் போல் ஆனேன்.” (1 கொ. 9:20) இந்தச் சமயத்தில், பவுல் எருசலேமிலிருந்த மூப்பர்களோடு ஒத்துழைத்து, ‘திருச்சட்டத்தின்கீழ் இருப்பவனைப் போலானார்.’ அதனால், பவுலுடைய நல்ல முன்மாதிரியைப் பின்பற்றி, நாமும் பிடிவாதமாக இல்லாமல் வளைந்துகொடுப்பவர்களாக இருக்க வேண்டும், மூப்பர்களோடு ஒத்துழைக்க வேண்டும்.—எபி. 13:17.
-
-
“என்னுடைய வாதத்தைக் கேளுங்கள்”கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
-
-
c அந்த நான்கு ஆண்கள் நசரேய விரதம் மேற்கொண்டிருந்தார்கள் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். (எண். 6:1-21) திருச்சட்டமும் அதன் ஒரு அம்சமான நசரேய விரதமும் அப்போது முடிவுக்கு வந்துவிட்டது என்பது உண்மைதான்; ஆனாலும், அந்த ஆண்கள் யெகோவாவிடம் நேர்ந்துகொண்ட விரதத்தை நிறைவேற்றுவதில் தவறில்லை என்று பவுல் நினைத்திருக்கலாம். அதனால், அந்த நான்கு பேரோடு போவதும், அவர்களுடைய செலவுகளைக் கவனித்துக்கொள்வதும் தவறில்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். அது என்ன விரதம் என்று நமக்குச் சரியாகத் தெரியாது; அது என்னவாக இருந்திருந்தாலும் சரி, பவுல் நிச்சயம் (நசரேயர்கள் செய்ததுபோல) மிருக பலிகளைப் பாவநிவாரண பலியாகச் செலுத்துவதற்கு ஒத்துக்கொண்டிருக்க மாட்டார். ஏன்? இயேசு கிறிஸ்து பரிபூரண பலியைச் செலுத்தியிருந்ததால், மிருகங்களைப் பாவநிவாரண பலிகளாகச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருந்தது. அதனால், பவுல் அந்தச் சமயத்தில் என்ன செய்தார் என்று நமக்குச் சரியாகத் தெரியாவிட்டாலும், அவர் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்திருக்க மாட்டார் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்.
-