பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 23-24
விஷமி என்றும் தேசத் துரோகச் செயல்களைச் செய்பவர் என்றும் குற்றம்சாட்டப்பட்டார்
எருசலேமிலிருந்த யூதர்கள் பவுலைக் கொலை செய்வதற்கு ‘சபதம் செய்தார்கள்.’ (அப் 23:12) ஆனால், ரோமுக்குப் போய் பவுல் சாட்சி கொடுக்க வேண்டும் என்பது யெகோவாவின் விருப்பமாக இருந்தது. (அப் 23:11) அவருக்கு எதிரான அந்தச் சதித்திட்டத்தைக் கேள்விப்பட்ட அவருடைய சகோதரியின் மகன் அதை அவரிடம் போய் சொன்னான். அதனால், பவுல் உயிர் தப்பினார். (அப் 23:16) கீழே இருக்கிற விஷயங்களைப் பற்றி இந்தப் பதிவு என்ன பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது?
கடவுளுடைய விருப்பத்துக்கு எதிராக மக்கள் செயல்பட முயற்சி செய்யும் விஷயத்தில்...
கடவுள் நமக்கு உதவும் விஷயத்தில்...
தைரியத்தைக் காட்டும் விஷயத்தில்...