-
“யெகோவா தந்த அதிகாரத்தில் தைரியமாகப் பேசிவந்தார்கள்”கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
-
-
11-13. (அ) லீஸ்திரா மக்களிடம் பவுலும் பர்னபாவும் என்ன சொன்னார்கள்? (ஆ) பவுலும் பர்னபாவும் சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் முதல் பாடம் என்ன?
11 தடாலடியாகச் சம்பவங்கள் நடந்தபோதிலும், கேட்கிறவர்களுடைய இதயத்தைத் தொடும் விதத்தில் பேச பவுலும் பர்னபாவும் முடிந்தளவு முயற்சி செய்தார்கள். மற்ற மதங்களை சேர்ந்த மக்களுக்கு திறம்பட்ட விதத்தில் நல்ல செய்தியைப் பிரசங்கிப்பது எப்படி என்பதை லூக்கா இந்தச் சம்பவத்தின் மூலம் நமக்குத் தெரிவிக்கிறார். பவுலும் பர்னபாவும் கேட்போருடைய ஆர்வத்தை எப்படித் தூண்டினார்கள் என்பதைக் கவனியுங்கள். “மக்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போல் குறைபாடுகள் உள்ள மனிதர்கள்தான். இந்த வீணான காரியங்களை விட்டுவிட்டு, வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்த உயிருள்ள கடவுளிடம் திரும்புங்கள், அதற்காகவே உங்களுக்கு நல்ல செய்தியைச் சொல்கிறோம். கடந்த காலங்களில் அவர் எல்லா தேசத்து மக்களையும் அவரவருடைய இஷ்டப்படி நடக்க அனுமதித்திருந்தார். ஆனாலும், அவர் தன்னைப் பற்றிச் சாட்சி கொடுக்காமல் இருந்ததில்லை. எப்படியென்றால், வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும், ஏராளமான உணவையும் உங்களுக்குத் தந்து, உங்கள் உள்ளத்தைச் சந்தோஷத்தால் நிரப்பி நன்மை செய்திருக்கிறார்” என்று சொன்னார்கள்.—அப். 14:15-17.
-
-
“யெகோவா தந்த அதிகாரத்தில் தைரியமாகப் பேசிவந்தார்கள்”கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
-
-
14-16. லீஸ்திரா மக்களிடம் பவுலும் பர்னபாவும் பேசிய விஷயத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் இரண்டாவது, மூன்றாவது பாடங்கள் என்ன?
14 பவுல் மற்றும் பர்னபாவின் பேச்சிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் இரண்டாவது பாடத்தைக் கவனியுங்கள். இந்த மிஷனரிகள் சூழ்நிலைக்கு ஏற்றபடி பேசினார்கள். இக்கோனியாவிலிருந்த யூதர்களையும் யூத மதத்துக்கு மாறியவர்களையும் போல, லீஸ்திரா மக்களுக்கு வேதாகமத்தைப் பற்றியோ இஸ்ரவேலருக்கு கடவுள் செய்த மகத்தான செயல்களைப் பற்றியோ எள்ளளவும் தெரியாது. அதுமட்டுமல்ல, அவர்கள் விவசாயிகள். லீஸ்திராவில் மிதமான சீதோஷ்ண நிலை இருந்தது, பூமியும் செழிப்பாக இருந்தது. படைப்பாளரின் குணங்களை படம்பிடித்துக் காட்டும் நிறைய விஷயங்களை லீஸ்திரா மக்கள் தினம் தினம் பார்த்தார்கள்; பருவ காலங்களிலும் அமோக விளைச்சலிலும் கடவுளுடைய குணங்களை காட்டும் நிறைய ஆதாரங்களை அவர்கள் பார்த்தார்கள். அவர்களின் மனதைத் தொட இந்த விஷயங்களை அடிப்படையாக வைத்தே பவுலும் பர்னபாவும் பேசினார்கள்.—ரோமர் 1:19, 20.
-