இயேசுவின் அடிச்சுவடுகளில் நடந்துகொண்டிருக்கும் ஓர் ஜனம்
“நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா?” —2 கொரிந்தியர் 12:18.
“ஒருதொகுதியாக அவர்கள் மரியாதையுள்ளவர்கள், உத்தரவாதமுள்ளவர்கள், பள்ளியில் நன்றாக செய்பவர்கள். வேறு தொகுதிகளைக் குறித்து இவ்வாறு சொல்லமுடியாது.” இவ்வாறாக ஐக்கிய மாகாணங்களில் ஒரு பாலர் பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறினார். இவர் யாரைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார்? தனது பள்ளியில் மாணவர்களாக இருந்த யெகோவாவின் சாட்சிகளின் பிள்ளைகளைக் குறித்து சொன்னார். நிச்சயமாகவே, யெகோவாவின் சாட்சிகள், தங்கள் பிள்ளைகள் உட்பட, வேறு யெகோவாவின் சாட்சிகளைப் போலவே பல விதங்களில் இருக்கிறார்கள் என்பதை அநேகர் கவனித்திருக்கின்றனர். தங்களுடைய நம்பிக்கைகளைக் குறித்ததிலும் நடத்தையைக் குறித்ததிலும் அவர்கள் குறிப்பிடத்தக்க விதத்தில் ஐக்கியப்பட்டவர்கள் என்பது கடந்த ஆண்டுகளாக யாவருக்கும் அறியத்தக்கதாக இருந்திருக்கிறது. ஆகவே சாட்சிகளை அடையாளங் கண்டுகொள்வது கடினமல்ல.
2 யெகோவாவின் சாட்சிகளின் ஐக்கியம், ஒற்றுமையற்ற இவ்வுலகில் அசாதாரணமான ஒன்று. ஆனால் இவர்கள் யாவருமே இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்க பிரயாசப்படுகிறார்கள் என்பதை நாம் நினைவில் வைக்கையில் இது விளங்கிக்கொள்வதற்கு கடினமல்ல. (1 பேதுரு 2:21) இத்தகைய ஐக்கியம் முதற் நூற்றாண்டு கிறிஸ்தவர்களையும் அடையாளப்படுத்தியது. ஒரு சந்தர்ப்பத்தில், கொரிந்து சபைக்கு பவுல் பின்வரும் அறிவுரை கொடுத்தான்: “சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.” (1 கொரிந்தியர் 1:10) கிறிஸ்தவ ஐக்கியத்தை காத்துக்கொள்ள மனமில்லாதவர்களை எவ்வாறு கையாளுவது என்றும் பவுல் ஏவப்பட்ட புத்திமதியைக் கொடுத்தான்.—ரோமர் 16:17-ஐயும் 2 தெசலோனிக்கேயர் 3:6-ஐயும் பார்க்கவும்.
3 சுமார் பொ.ச.55-ல், யூதேயாவில் தேவையிலுள்ள சகோதரர்களுக்காக நன்கொடையை திரட்டுவதிலும், மற்றும், கூடியவரை பவுலின் ஆலோசனைக்கு சபை எப்படி பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதிலும், உதவி செய்ய, பவுல் தீத்துவை கொரிந்துவுக்கு அனுப்பினான். கொரிந்தியர்களுக்கு பின்பு எழுதுகையில், பவுல் தீத்துவின் சமீபத்திய வருகையை குறிப்பிட்டு பின்வருமாறு கேட்டான்: “தீத்து உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா?” (2 கொரிந்தியர் 12:18) தாங்கள் “ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோம்” என்று சொல்வதன் மூலம் பவுல் எதை அர்த்தப்படுத்தினான்?
4 தனக்கும் தீத்துவுக்கும் இடையே நிலவிய ஐக்கியத்தை எடுத்துக் காட்டினான். தீத்து அவ்வப்போது பவுலோடு பயணப்பட்டான், சந்தேகத்திற்கிடமில்லாமல் இம்முறையில் பவுலிடமிருந்து அநேக காரியங்களை அவன் கற்றுக்கொண்டான். ஆனால், அவர்கள் இருவருக்கிடையில் நிலவிய ஐக்கியம், இதைவிட நிலையான ஏதோ ஒன்றில் ஆதாரங்கொண்டிருந்தது. அவர்கள் யெகோவாவிடம் கொண்டிருந்த சிறந்த நட்புறவிலும், அவர்கள் இருவரும் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினவர்கள் என்ற உண்மையிலும் அது ஆதாரங்கொண்டிருந்தது. பவுல் கிறிஸ்துவை பின்பற்றினதுபோல, தீத்து பவுலைப் பின்பற்றினான். (லூக்கா 6:40; 1 கொரிந்தியர் 11:1) இவ்வாறாக அவர்கள் இயேசுவின் ஆவியிலும் அவருடைய அடிச்சுவடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள்.
5 தீத்து மற்றும் பவுலைப் போலவே “ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நட”க்கும் இந்த 20-ம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுங்கூட ஈடிணையற்ற ஐக்கியத்தை அனுபவிப்பது விசித்திரமல்ல. அப்படியானால், பெயரளவுக்கு கிறிஸ்தவர்களாக இருப்பவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமையின்மையானது, உண்மையில் அவர்களை போலி கிறிஸ்தவர்களாக, தாங்கள் பின்பற்றிக்கொண்டிருப்பதாக உரிமை பாராட்டுகிற அந்த தலைவருடைய அடிச்சுவடுகளில் நடக்காதவர்களாக வெளிப்படுத்துகிறது. (லூக்கா 11:17) பெயரளவுக்கு உள்ள கிறிஸ்தவர்களுக்கும் மெய்க் கிறிஸ்தவர்களுக்குமிடையே இருக்கும் இவ்வேறுபாடு பல வழிகளில் தெளிவாக புலன்படுகிறது. நாம் நான்கு வழிகளை குறிப்பிடுவோம்.
இரத்தத்தின் புனிதத்தன்மை
6 சுமார் பொ.ச. 49-ல் முதற் நூற்றாண்டு சபையின் நிர்வாகக் குழு பின்வரும் கேள்விக்கு விடையளித்த ஒரு கடிதத்தை அனுப்பியது: யூதரல்லாத கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படிய வேண்டுமா? அந்தக் கடிதம் இவ்வாறு கூறிற்று: “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது.” (அப்போஸ்தலர் 15:28, 29) “அவசியமான” இவைகளில், இரத்தத்திற்கு விலகியிருப்பதும் அடங்கியிருந்தது என்பதை கவனிக்கவும். இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பதானது, இரத்தத்தை சரீரத்திற்குள் வாய்மூலமாகவோ அல்லது வேறு எந்த விதமாகவோ உட்கொள்ளக்கூடாது என்பதை அர்த்தப்படுத்துகிறது.
7 இரத்தமேற்றுதல் பழக்கத்தின் மூலம் கிறிஸ்தவ மண்டலத்தில் இந்த நியமம் பகிரங்கமாக மீறப்படுகிறது. உண்மைதான், சமீப ஆண்டுகளில் இரத்தமேற்றுதல் உடல் நலத்துக்கு ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகளைக் குறித்து அநேகர் உணர்வுள்ளவர்களாய் மருத்துவ காரணத்துக்காக அதை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்கள். விசேஷமாக அநேகர் இரத்தமேற்றுதல் மூலம் ஏய்ட்ஸ் வியாதியை பெற்றிருப்பதன் காரணமாக இது உண்மையாக இருக்கிறது. ஆனால் ஒரு தொகுதியாக, கடவுளுடைய சட்டத்திற்கு மரியாதை காட்டுவதன் காரணமாக இரத்தத்தின் புனிதத் தன்மையை மதித்து வருபவர்கள் யார்? ஒரு வியாதியஸ்தன் இரத்தம் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, மருத்துவர் அவன் யார் என்பதாக உடனடியாக நினைத்துக்கொள்ளுகிறார்? ‘நீர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருக்க வேண்டும்’ என்பதாக மருத்துவர் பெரும்பாலும் சொல்லுகிறார் அல்லவா?
8 “அன்டோனிட்டா இத்தாலியில் வாழ்கிறாள். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவளுடைய இரத்த எண்ணிக்கை அவ்வளவு குறைவாக இருந்ததனால் அவளுடைய உயிரைப் பாதுகாக்க மருத்துவர்கள் கட்டாயம் இரத்தமேற்றவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அவள் மறுத்தாள். இதன் காரணமாக மருத்துவர்களும் உறவினரும் அவளை எதிர்த்தார்கள். அவளுடைய இரண்டு சிறு பையன்களும்கூட, “அம்மா, நீங்கள் எங்களை உண்மையிலேயே நேசிக்கிறீர்கள் என்றால், இரத்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கெஞ்சினார்கள். ஆனால் அன்டோனிட்டா உண்மையுள்ளவளாக நிலைத்திருக்க தீர்மானமாய் இருந்தாள். சந்தோஷகரமாக அவள் மரிக்கவில்லை. ஆகிலும் அவளுடைய நிலை அவ்வளவு கவலைக்கிடமானதாகிவிட்டதால், “அவள் எப்படி இன்னமும் உயிருடன் இருக்கிறாள் என்பதை எங்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை” என்பதாக மருத்துவர் ஒருவர் கூறினார். ஆகிலும், ஆட்ஷேபனம் இல்லாத ஒரு மருத்துவ சிகிச்சை துவங்கப்பட்ட உடனேயே, அவள் விரைவில் முன்னேற்றமடைந்தாள். மற்றொரு மருத்துவர் கூறினார்: “என்னால் நம்பமுடியவில்லை—இவ்வளவு விரைவாக நீ சுகமடைந்திருக்க முடியாது. நாங்கள் நாள் முழுவதும் உனக்குள் இரத்தத்தை ஏற்றியிருந்தாலுங்கூட நீ சுகமடைந்திருக்க முடியாது.” தற்சமயம், அவள் ஒழுங்கான பயனியராக இருக்கிறாள், தற்போது 12, 14 வயதள்ள அவளுடைய குமாரர்கள் சத்தியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பித்து வருகிறார்கள். அன்டோனிட்டா இரத்தத்தின் புனிதத் தன்மையை மதிக்கவேண்டும் என்ற “அவசியமான” கட்டளைக்கு தைரியத்துடன் கீழ்ப்படிந்தாள். யெகோவாவின் சாட்சிகள் எல்லாருமே இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகையில் இதே எண்ணத்தை உடையவர்களாய் இருக்கிறார்கள்.
நல்ல ஒழுக்கம்
9 முதற் நூற்றாண்டு நிர்வாகக் குழுவின் கடிதத்தில் முக்கியப்படுத்திக் காட்டப்பட்ட மற்றொரு “அவசியமான” காரியம் “வேசித்தனத்திற்கும் . . . நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே.” பவுல் இதை மேலுமாக விளக்கி கொரிந்தியர்களுக்கு எழுதின தனது முதலாம் நிருபத்தில் இவ்வாறு கூறினான்: “வேசி மார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:9, 10) யெகோவாவை சேவிக்க விரும்புகிற ஜனங்கள் இப்பேர்ப்பட்ட அசுத்தமான பழக்கவழக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு கிறிஸ்தவர்கள் உதவுகிறார்கள். இப்பேர்ப்பட்ட கண்ணிகளில் அகப்படுகிற சபையின் அங்கத்தினர்களும்கூட மனந்திரும்பி குணப்படுவார்களேயானால், தங்களையே சுத்தம் செய்துகொள்வதற்கு உதவப்படுகிறார்கள். (யாக்கோபு 5:13-15) ஆனால், கிறிஸ்தவன் ஒருவன் இப்பேர்ப்பட்ட தகாத பழக்கவழக்கங்களில் விழுந்துவிட்டு, மனந்திரும்ப மறுப்புத் தெரிவிப்பானேயானால் ஒரு நேரடியான பைபிள் நியதி பொருந்துகிறது. பவுல் பின்வருமாறு சொல்லும்படியாக தேவனால் ஏவுதலளிக்கப்பட்டான்: “சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது . . . இருந்தால் அவனோடே கலந்திருக்கக்கூடாது . . . அந்தப் பொல்லாதவனை உங்களை விட்டுத் தள்ளிப்போடுங்கள்.”—1 கொரிந்தியர் 5:11, 13.
10 இந்தத் தெளிவான போதனை இருந்தும், கிறிஸ்தவ மண்டலம் இன்று ஒழுக்கயீனத்தால் நிரம்பியிருக்கிறது. தெய்வீக தராதரங்களின் முக்கியத்துவத்தை குறைவுபடுத்தும் குருமார்கள்தாமே இந்நிலைக்கு குற்றமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். இதே விதமாக, வெறுமென பைபிள் தராதரங்களை வாயளவுக்கு மதித்து, ஆனால் அவற்றை தங்கள் சபைகளில் தைரியத்துடன் அமுல்படுத்த தவறுகிறவர்களுங்கூட இதற்கு காரணராயிருக்கின்றனர். ஆகிலும், இதிலுங்கூட யெகோவாவின் சாட்சிகள், ஒரு ஜனமாக, இயேசுவின் அடிச்சுவடுகளில் நடக்கிறார்கள்.
11 பிலிப்பீன்ஸ் தீவுகளிலுள்ள ஜோஸைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவன் 17 வயதாயிருக்கையில்தானே, கலகமூட்டுபவனாகவும் சூதாடுபவனாகவும் பெயர் பெற்றிருந்தான். குடித்து அடிக்கடி வெறிகொண்டிருந்தான். ஒழுக்கக்கேடான வாழ்க்கையை வாழ்ந்துவந்தான், திருடினதற்காக பலமுறை சிறையில் போடப்பட்டான். பின்பு அவன் யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்பு கொண்டான். “பைபிள் படிப்பதானது என்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது,” என்று அவன் கூறுகிறான். “நான் இனிமேலும் மதுபானம் அல்லது சிகரெட் குடிப்பதில்லை, என்னுடைய உணர்ச்சியை கட்டுப்படுத்த நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது ஒரே ஒரு மனைவி எனக்கு இருப்பதால் சுத்த மனசாட்சி இருக்கிறது. ‘பயங்கரமான ஜோஸ்’ ‘பேய் போன்ற ஜோஸ்’ என்று என்னை அழைத்துவந்த என்னுடைய அயலகத்தாருடைய மரியாதையையுங்கூட நான் சம்பாதித்துக் கொண்டேன். இப்பொழுது அவர்கள் என்னை ‘யெகோவாவின் சாட்சியாகிய ஜோஸ்’ என்றழைக்கிறார்கள். என்னுடைய மகனும் என் சகோதரனின் மகனும், நான் மூப்பனாகவும் ஒழுங்கான பயனியராகவும் சேவைபுரியும் அதே சபையில் உதவி ஊழியர்களாக இருக்கிறார்கள்.” ஜோஸும் அவரைப்போன்ற இலட்சக்கணக்கான மற்ற யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகளும் ஒழுக்க சம்பந்தமாக சுத்தமுள்ள கிறிஸ்தவர்களாக இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருகிறார்கள்.
நடுநிலை வகிப்பு
12 இயேசு தம்முடைய சீஷருடன் இருந்த கடைசி சாயங்காலத்தின்போது அவர்களோடுகூட செய்த நீண்ட ஜெபத்திலே சீஷர்கள் ‘தம்முடைய அடிச்சுவடுகளில் நடக்கக்கூடிய’ மற்றொரு வழியை குறிப்பிட்டார். தம்முடைய சீஷர்களைக் குறித்து பேசுகையில், அவர் கூறினார்: “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:16) இது கிறிஸ்தவர்கள் நடுநிலை வகிப்பவர்கள் என பொருள்படுகிறது. அரசியல் காரியங்களிலும் தேசப் போராட்டங்களிலும் பங்குகொள்வதற்குப் பதிலாக, அவர்கள் இந்த உலகப் பிரச்னைகளுக்கு ஒரே பரிகாரமாக இருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லுகிறார்கள்.—மத்தேயு 6:9, 10; யோவான் 18:36.
13 கிறிஸ்தவ மண்டலத்திலுள்ள பெரும்பான்மையான அங்கத்தினர்களுக்கு, மத காரியங்களில் சேர்ந்துகொள்வதைப் பார்க்கிலும் தேசிய காரியங்களில் முதல் நிலையில் இருப்பதானது எப்பொழுதும் மிக முக்கியமானதாக இருக்கிறது. இதன் காரணமாக, நடுநிலை வகிப்பு நியமமானது அசட்டை செய்யப்பட்டிருக்கிறது. உரிமை விளம்பரக் குழுவைச் சேர்ந்த மைக் ராய்க்கோ என்ற பத்திரிகையாளர் “கிறிஸ்தவர்கள்” “மற்ற கிறிஸ்தவர்களுடன் போர் தொடுப்பதைக் குறித்து எவ்வித அருவருப்பான உணர்ச்சியும் ஒருபோதும் அனுபவிப்பதில்லை” என்று குறிப்பிடுகிறார். யுத்த சமயங்களில் யெகோவாவின் சாட்சிகளே சரியான கிறிஸ்தவ நடுநிலையைக் காத்துக்கொள்பவர்கள் என்பது பலரும் அறிந்த உண்மை. ஆனால் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்களாக அவர்கள் சமூக மற்றும் அரசியல் விவாதங்களிலுங்கூட நடுநிலை வகிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுடைய தனிச்சிறந்த உலகம் முழுவதிலுமான ஐக்கியத்தை ஒன்றுமே குலைக்கிறதில்லை.—1 பேதுரு 2:17.
14 அவர்களுடைய நடுநிலை வகிப்பானது சில சமயங்களில் எதிர்பாரா விளைவுகளை கொண்டுவருகிறது. ஜப்பானில் வடக்கே உள்ள சுகாரு மாவட்டத்தில், உதாரணமாக, தேர்தல்கள் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. ஆனால், அங்குள்ள அரசாங்க அலுவலகத்தின் நிதி இலாக்காவில் துணை மேலாளராக இருக்கும் டோஷியோ என்பவர், மனசாட்சி இடங்கொடுக்காமையின் காரணமாக, மாநகர் முதல்வருடைய மறுதேர்தல் பிரசாரத்தில் சேர்ந்துகொள்ள மறுப்பு தெரிவித்தார். இது அவரை கழிநீர் துறைக்கு, பதவியில் கீழ் நிலைக்கு தாழ்த்தப்படுவதில் விளைவடைந்தது. எனினும், ஓர் ஆண்டுக்கு பிறகு, இந்த மாநகர் முதல்வரானவர் சில ஊழல் செயல்களில் ஈடுபட்டதன் காரணமாக, சிறையிலடைக்கப்பட்டு தன் பணியிலிருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டார். ஒரு புதிய மாநகர் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் டோஷியோ பதவியில் கீழே தாழ்த்தப்பட்டதை கேள்விப்பட்டவுடன், அவரை நிர்வாகம் சார்ந்த உயர் பதவியில் மீண்டும் அமர்த்தினார், இது டோஷியோவுடைய கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆசீர்வாதங்களை கொண்டுவந்தது. எப்படி? உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் தவிர, உடற்பயிற்சிக்கான இடங்களை, கூட்டங்கள் நடத்துவதற்கு உபயோகிக்க அனுமதி பெறுவதானது மிக கடினம் என டோஷியோ விளக்குகிறார். ஆனால் அவருடைய தற்போதைய ஸ்தானத்தில், “இப்பேர்ப்பட்ட உடற்பயிற்சி கூடங்களை, மூன்று மாவட்ட மாநாடுகளுக்கும், நான்கு வட்டார மாநாடுகளுக்கும் உபயோகிக்க யெகோவா என்னை இப்போது பயன்படுத்தக்கூடியவராயிருக்கிறார்” என டோஷியோவினுடைய சொந்த வார்த்தைகள் மேற்கோளாக எடுத்துரைக்கப்படுகின்றன. “நான் உண்மையுள்ளவர்களாக நிலைநிற்போமேயானால், யெகோவா நம்மை உபயோகிக்க, கற்பனை செய்ய முடியாத வழிகளை திறந்தருளுவார்” என சொல்லி அவர் முடிக்கிறார்.
15 ‘இயேசுவின் அடிச்சுவடுகளில்’ பின்தொடரக்கூடிய மற்றொரு வட்டாரமானது வீட்டிலாகும். பின்வருமாறு கூறுகையில், குடும்ப உறவுகளில் இயேசுவின் நடத்தையை பைபிள் ஒரு முன்மாதிரியாக நமக்கு வைக்கிறது: “கிறிஸ்துவுக்கு பயந்தவர்களாய் ஒருவருக்கொருவர் அடங்கியிருங்கள்.” (தி.மொ.) “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்த புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷரும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; . . . ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறதுபோல, மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.”—எபேசியர் 5:21-25.
16 இன்று கிறிஸ்தவமண்டலமானது இந்த ஆலோசனைகளை பெரும்பாலும் உதறித்தள்ளிவிட்டிருப்பதன் காரணமாக தகர்க்கப்பட்ட குடும்பங்களால் நிரம்பிக் கிடக்கிறது. பிளவுற்ற குடும்பங்கள் சர்வ சாதாரணமாக ஆகிக்கொண்டு வருகின்றன. பெற்றார்-பிள்ளை மோதல்கள் அநேகமாக கடுஞ்சிக்கலான ஒன்றாக போய்க்கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு உளநூல் பேராசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “குடும்பங்கள் பிரிவுற முறிந்துவிழுகின்றன.” குழந்தை உளநூல் வல்லுநர்கள், விவாக ஆலோசகர்கள் மற்றும் உளநோய் மருத்துவர்கள், ஆபத்திற்குள்ளாக்கப்பட்ட குடும்பங்களை ஒருங்கிணைப்பதில் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியையே கண்டிருக்கின்றனர். மாறாக, யெகோவாவின் சாட்சிகள் பைபிள் நியமங்களை பொருத்துவதற்குக் கடுமையாக பிரயாசப்படுகின்றனர் மேலும் சராசரியாக குடும்பத்தில் உறவுகளை கொண்டிருப்பவர்களைவிட மேம்பட்ட குடும்ப உறவுகளை கொண்டிருப்பதனால் பேர்பெற்றவர்களாக இருக்கின்றனர்.
17 உதாரணமாக, ஆல்டெமர் என்பவர் பிரெஸீலில் இராணுவக் காவல் துறையில் அனுக்க முதன்மையராக இருந்தார். இவருக்கு குடும்ப பிரச்னைகள் இருந்தன. இவருடைய மனைவி இவரை விட்டு பிரிந்துசென்று சட்டப்பூர்வமான விவாகரத்தை பெற்றுக்கொண்டாள். இவர் மட்டுமீறி குடிக்கத் தொடங்கி தற்கொலை செய்துகொள்ளவும் முற்பட்டார். பின்பு, யெகோவாவின் சாட்சிகளாயிருக்கிற அவருடைய உறவினர்கள் பைபிளைக் குறித்து அவரிடம் பேசினர். அவர், தான் கேட்ட காரியங்களில் விருப்பங்கொண்டு படிக்க ஆரம்பித்தார். யெகோவாவின் சாட்சிகள் பெயர் பெற்றவர்களாயிருக்கிற நடுநிலை வகிப்பு நிலைநிற்கையுடன் தன்னுடைய வாழ்க்கையை இசைவுபடுத்திக்கொள்ள விரும்பி இராணுவத்திலிருந்து விலக விண்ணப்பித்துக்கொண்டார். ஆல்டெமரும் அவருடைய மனைவியும், ஆல்டெமர் கற்றுக்கொண்டிருந்த பைபிள் நியமங்களை பொருத்துவதன் மூலம் தங்களுடைய விவாக சம்பந்தப்பட்ட வேற்றுமைகளைத் தீர்த்துக் கொண்டனர். இப்போது, அவர்கள் இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறார்கள், அவர்கள் ஒழுங்கான பயனியர்களாக ஒன்றுசேர்ந்து யெகோவாவை சேவிக்கிறார்கள்.
அன்பின் காரணமாக கீழ்ப்படிதல்
18 இயேசு கிறிஸ்துவின் ஆவியிலும் அவருடைய அடிச்சுவடுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் ஐக்கியத்துடன் நடக்கிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. அப்படிச் செய்வதனால் தனிப்பட்டவர்களாகவும் ஒரு தொகுதியாகவும் அவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். (சங்கீதம் 133:1-3) அவர்கள் மீது இருக்கும் ஆசீர்வாதத்தின் வெளிப்படையான அத்தாட்சி, நேர்மை இருதயமுள்ள திரளான மக்களை ஏசாயா 2:2-4-க்கு இசைய செயற்படும்படி தூண்டியிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள், 9,87,828 பேர் ஒப்புக்கொடுத்தலினிடமாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து, தண்ணீர் முழுக்காட்டுதலுக்கு தங்களை அளித்திருக்கிறார்கள். அன்புள்ளவராக யெகோவா தேவன், “மிகுந்த உபத்திரம்” தாக்குவதற்கு முன்பு இவ்வாறு செயற்படக்கூடியவர்களின் எண்ணிக்கையில் ஒரு வரம்பை வைக்கவில்லை!—வெளிப்படுத்துதல் 9:7, 14.
19 மேற்கூறப்பட்ட அனுபவங்கள் காட்டுகிறபடி, கடவுளுடைய ஜனங்கள் அனுபவிக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அடிக்கடி காணக்கூடிய நன்மைகள் மூலம் வருகின்றன. உதாரணமாக, புகைபிடித்தலை தவிர்த்தல், ஒழுக்கமுள்ள வாழ்க்கையை நடத்துதல், மற்றும் இரத்தத்தின் புனிதத் தன்மையை மதித்தல் ஆகியவற்றின் மூலம் அவர்கள் சில வியாதிகளுக்கு ஆளாகமல் இருக்கலாம். அல்லது சத்தியத்திற்கு இசைய வாழ்வதன் மூலம், பொருள்சம்பந்த, சமூக அல்லது குடும்ப காரியங்களில் நன்மைகளை அனுபவிக்கலாம். இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பதிலிருந்து இயல்பாக கிடைக்கும் காணக்கூடிய நன்மைகள் எதுவாயிருந்தாலும் அதை நாம் யெகோவாவிடமிருந்து வந்த ஆசீர்வாதமாக கருதுகிறோம். யெகோவாவுடைய நியாயப்பிரமாணங்கள் நடைமுறைக்கேதுவானது என்பதை இவை தெளிவுபடுத்துகின்றன. ஆனால், நாம் தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்ப்படிவதற்கான முக்கிய காரணம், கிடைக்கக்கூடிய நடைமுறைக்கேதுவான இந்த அனுகூலங்களினால் மட்டுமல்ல. நாம் யெகோவாவை அன்புகூருவதன் காரணமாகவும் நம்முடைய வணக்கத்திற்கு அவர் தகுதியுடையவராக இருப்பதாலும், அவருடைய சித்தத்தைச் செய்வதே சரியான காரியமாக இருப்பதாலும் நாம் அவருக்குக் கீழ்ப்படிகிறோம். (1 யோவான் 5:2, 3; வெளிப்படுத்துதல் 4:11) ஜனங்கள் தன்னல நன்மைகளுக்காக மட்டுமே தேவனை சேவிக்கிறார்கள் என சாத்தான்தானே வாதாடுகிறான்.—யோபு 1:9-11; 2:4, 5-ஐப் பாருங்கள்.
20 தானியேல் காலத்தில் இருந்த மூன்று விசுவாசமுள்ள இளம் எபிரெய சாட்சிகளைப் போலவே தற்கால யெகோவாவின் சாட்சிகள் நடந்துகொண்டிருக்கிறார்கள். அக்கினிச் சூளையில் போடுவதாக அச்சுறுத்தப்பட்டபோது இவர்கள் சொன்னதாவது: “நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், [அதாவது, அவர் நாங்கள் மரிக்கும்படி அனுமதித்தாலும்,] நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது.” (தானியேல் 3:17, 18) உடனடியாக கிடைக்கும் காணக்கூடிய நன்மைகள் என்னவாக இருந்தாலும், கடவுளுடைய புதிய உலகிலே நித்திய ஜீவன் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தவர்களாக, யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து நெருங்கிய விதத்தில் இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பார்கள்! ஒற்றுமையுள்ள ஜனமாக, என்ன நேரிட்டாலும், “ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில்” ஆம், தொடர்ந்து நடப்பார்கள்! (w88 5⁄1)
உங்களால் விளக்கக்கூடுமா:
◻ யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஐக்கியப்பட்டவர்களாக இருக்கிறார்கள்?
◻ பெயரளவுக்கு கிறிஸ்தவர்களாக இருப்பவர்களிலிருந்து எந்தெந்த அம்சங்களில் யெகோவாவின் சாட்சிகள் வேறுபடுகிறார்கள்?
◻ உண்மை கிறிஸ்தவர்கள் யெகோவாவை சேவிப்பதற்கு முக்கிய காரணம் என்ன?
◻ யெகோவாவுக்கு கீழ்ப்படிவதிலிருந்து விளைவடையும் நன்மைகளை தேவனுடைய ஜனங்கள் எவ்வாறு கருதுகிறார்கள்?
[கேள்விகள்]
1. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை அடையாளங் கண்டுகொள்வதானது ஏன் எப்போதும் கடினமானதாக இருக்கிறதில்லை?
2. பூர்வ கிறிஸ்தவ சபையில் எது தனிச்சிறப்பு வாய்ந்த தன்மையாக இருந்தது? இதைக் குறித்து பவுல் என்ன சொல்லக்கூடியவனாக இருந்தான்?
3, 4. தனக்கும் தீத்துவுக்கும் இடையே இருந்த ஒற்றுமையை பவுல் எவ்வாறு விளக்கினான்? இந்த ஒற்றுமைக்கு எது அடிப்படையாக இருந்தது?
5. பவுலையும் தீத்துவையும் பின்பற்றி “ஒரே ஆவி”யிலும் “ஒரே அடிச்சுவடு”களிலும் நடக்கிற ஜனங்களிடம் இப்போது என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
6, 7. (எ) இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பதில் இரத்தத்தைப் பற்றிய என்ன சரியான நோக்கு உட்பட்டிருக்கிறது? (பி) இன்று, இரத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர்களுக்கும், யெகோவாவின் சாட்சிகளுக்கும் இடையே என்ன வேற்றுமை இருக்கிறது?
8. இந்த அம்சத்தில், தேவனுடைய சட்டத்தைக் காத்துக்கொள்வதில் உறுதியுடன் இருந்ததற்காக எவ்வாறு இத்தாலியில் உள்ள ஒரு சாட்சி ஆசீர்வதிக்கப்பட்டாள்?
9. இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் உட்பட்டிருக்கிற மற்றொரு “அவசியமான” காரியம் என்ன? இதைக் கைக்கொள்ள தவறுகிறவர்களுக்கு என்ன நேரிடுகிறது?
10, 11. (எ) கிறிஸ்தவமண்டலத்திலுள்ள கீழ்த்தரமான ஒழுக்க தராதரங்களுக்கு யார் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஏன்? (பி) யெகோவாவின் சாட்சிகள், ஒரு தொகுதியாக, மேம்பட்ட ஒழுக்க தராதரங்களைக் காத்துக்கொள்கிறவர்கள் என்பதை எவ்வாறு பிலிப்பீன்ஸ் தீவுகளிலுள்ள ஒரு மனிதனுடைய அனுபவம் மெய்ப்பித்துக் காட்டுகிறது?
12. யோவான் 17-ம் அதிகாரத்தில் பதிவாகியுள்ள அவருடைய ஜெபத்தில், இயேசு, உண்மைக் கிறிஸ்தவர்களுடைய என்ன மனநிலையை முக்கியப்படுத்தினார்?
13, 14. (எ) நடுநிலை வகிப்பு விஷயத்தில், யெகோவாவின் சாட்சிகளிலிருந்து எவ்வாறு கிறிஸ்தவ மண்டலம் வேறுபடுகிறது? (பி) ஜப்பானில் உள்ள ஒரு சாட்சி, தன்னுடைய பங்கில் அரசியல் காரியங்களில் நடுநிலை வகித்தலை காத்துக் கொண்டதினால் எவ்வாறு முழு சகோதரத்துவமும் நன்மையடைவதில் விளைவடைந்தது?
15. குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்டதில், தன்னுடைய அடிச்சுவடுகளை பின்பற்றுபவர்களுக்கு எப்படி இயேசு மாதிரியை வைத்துப்போனார்?
16, 17. (எ) குடும்பத்தைச் சார்ந்த உறவுகள் சம்பந்தமாக கிறிஸ்தவ மண்டலத்தில் எப்பேர்ப்பட்ட மோசமான சூழ்நிலை நிலவுகிறது? (பி) பிரெஸீலில் விவாகமான தம்பதியினருடைய அனுபவம் காட்டுவதுபோல் குடும்ப உறவுகள் எப்படி மட்டுமே முன்னேற்றுவிக்கப்படலாம்?
18. (எ) இன்று, யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்? (பி) ஏசாயா 2:2-4 எவ்வாறு நிறைவேற்றத்தை அடைந்துகொண்டிருக்கிறது?
19. (எ) யெகோவாவை சேவிப்பதிலிருந்து விளைவடையக்கூடிய உடனடியான நன்மைகள் என்ன? அவற்றை எவ்வாறு கருத வேண்டும்? (பி) யெகோவாவின் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிவதற்கான அடிப்படையான காரணம் என்ன?
20. பூர்வ காலத்திலிருந்த உண்மையுள்ள எபிரெய சாட்சிகள்போல ஒரே ஆவியில் இன்று எவ்வாறு யெகோவாவின் சாட்சிகள் நடக்கிறார்கள்?
[பக்கம் 10-ன் படம்]
ஒரு வியாதியஸ்தன் இரத்தம் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, அவன் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருக்க வேண்டும் என்பதாக பெரும்பாலும் நினைக்கப்படுகிறது
[பக்கம் 12-ன் படம்]
கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அநேகர்—தங்கள் குருமாரின் ஆசீர்வாதத்தோடு—ஒருவர் பேரில் ஒருவர் போர் தொடுப்பதைக் குறித்து எவ்வித அருவருப்பான உணர்ச்சியும் அனுபவிப்பதில்லை