-
இயேசுவின் அப்போஸ்தலர்களிடமிருந்து விழிப்புணர்வைக் கற்றுக்கொள்ளுங்கள்காவற்கோபுரம்—2012 | ஜனவரி 15
-
-
4, 5. கடவுளுடைய சக்தி பவுலையும் அவரது பயணத் தோழர்களையும் எப்படி வழிநடத்தியது?
4 முதலாவதாக, எங்கே பிரசங்கம் செய்ய வேண்டும் என்ற விஷயத்தில் வழிநடத்துதலைப் பெற அப்போஸ்தலர்கள் விழிப்புடன் இருந்தார்கள். மிகவும் அசாதாரணமான ஒரு பயணத்தின்போது அப்போஸ்தலன் பவுலையும் அவரது பயணத் தோழர்களையும் வழிநடத்த இயேசு எப்படிக் கடவுளுடைய சக்தியைப் பயன்படுத்தினார் என்பதை ஒரு பதிவில் தெரிந்துகொள்கிறோம். (அப். 2:33) அதை இப்போது கவனிக்கலாம்.—அப்போஸ்தலர் 16:6-10-ஐ வாசியுங்கள்.
-
-
இயேசுவின் அப்போஸ்தலர்களிடமிருந்து விழிப்புணர்வைக் கற்றுக்கொள்ளுங்கள்காவற்கோபுரம்—2012 | ஜனவரி 15
-
-
7 அந்தத் தருணத்தில் அவர்கள் எடுத்த ஒரு தீர்மானம் சற்று விநோதமாய்த் தோன்றியிருக்கலாம். 8-ஆம் வசனம் நமக்குச் சொல்கிறது: “அவர்கள் மீசியாவைக் கடந்து துரோவாவை அடைந்தார்கள்.” ஆகவே, அந்தப் பயணிகள் மேற்கே திரும்பி, 563 கிலோமீட்டர் (350 மைல்) தூரம் நடந்தே சென்றார்கள்; நகரம் நகரமாய்க் கடந்து வந்து கடைசியில் துரோவா துறைமுகத்தை... மக்கெதோனியாவுக்குச் செல்லும் இயற்கை வாயிலை.... அடைந்தார்கள். அங்கே, மூன்றாவது தடவையாக பவுலும் அவரது தோழர்களும் கதவைத் தட்டினார்கள், ஆனால் இந்தத் தடவை அது அகலத் திறந்தது! அடுத்து நடந்ததை 9-ஆம் வசனம் கூறுகிறது: “அங்கு பவுல் இரவு நேரத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டார்; அந்தத் தரிசனத்தில், மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒருவன் வந்து நின்று, ‘மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று அவரைக் கெஞ்சிக் கேட்டான்.” ஒருவழியாக, எங்கே பிரசங்கிப்பது என்பதை பவுலும் அவரது தோழர்களும் தெரிந்துகொண்டார்கள். உடனடியாக, அவர்கள் மக்கெதோனியாவுக்குக் கப்பலேறினார்கள்.
-