உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அனைவருக்கும் விடுதலை நிச்சயம்
    காவற்கோபுரம்—1999 | மே 1
    • ‘தேவனுடைய புத்திரர் வெளிப்படுவது’

      “தேவனுடைய புத்திரர்” மூலமாக மனித குலம் மீண்டும் சுதந்திரத்தை அனுபவிக்கும் என்ற “நம்பிக்கையோடே”தான் யெகோவா தேவன் சிருஷ்டியை மாயைக்கு கீழ்ப்படுத்தினார். இந்தத் “தேவனுடைய புத்திரர்” யார்? இவர்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்; எல்லா மனித “சிருஷ்டி”களைப் போலவே இவர்களும் பாவத்திற்கும் அபூரணத்திற்கும் அடிமைப்பட்டவர்களே. பிறப்பின்படி கடவுளுடைய சுத்தமான, பரிபூரண, சர்வலோக குடும்பத்தில் அவர்களுக்கு எந்த இடமுமில்லை என்பது நியாயமானதே. ஆனால் யெகோவா அவர்களுக்காக மகத்தான ஓர் ஏற்பாட்டை செய்கிறார். இயேசு கிறிஸ்துவின் கிரய பலி மூலமாக, சுதந்தரிக்கப்பட்ட பாவத்திற்கு அடிமைகளாய் இருப்பதிலிருந்து அவர்களை விடுவிக்கிறார். இவ்வாறு அவர்களை ‘நீதிமான்கள்’ அல்லது ஆவிக்குரிய அர்த்தத்தில் சுத்தமானவர்கள் என அறிவிக்கிறார். (1 கொரிந்தியர் 6:11) அதற்கு பிறகு அவர்களை ‘தேவனுடைய புத்திரராக’ தத்தெடுத்து தம்முடைய சர்வலோக குடும்பத்திற்குள் மறுபடியும் சேர்த்துக்கொள்கிறார்.​—ரோமர் 8:14-17.

      யெகோவா தத்தெடுத்த குமாரர்களாக இருப்பதால் அவர்களுக்கு மகத்தான சிலாக்கியம் உள்ளது. அவர்கள் ‘தேவனுக்கு முன்பாக ஆசாரியர்களாய்’ கடவுளுடைய பரலோக ராஜ்யம் அல்லது அரசாங்கத்தின் பாகமாக இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து ‘பூமியிலே அரசாளுவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1-4) இந்த அரசாங்கத்திற்கு, ஒடுக்குமுறையும் கொடுங்கோன்மையும் அல்ல சுதந்திரமும் நீதியுமே அஸ்திவாரம். (ஏசாயா 9:6, 7; 61:1-4) இந்தத் தேவனுடைய புத்திரர், வெகு காலத்திற்கு முன்பு வாக்குப்பண்ணப்பட்ட ‘ஆபிரகாமின் சந்ததியான’ இயேசுவின் கூட்டாளிகள் என அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். (கலாத்தியர் 3:16, 26, 29) கடவுள் தம்முடைய நண்பனான ஆபிரகாமோடு செய்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இவர்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆபிரகாமுடைய சந்ததிக்குள், “பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்பதே அந்த வாக்குறுதியின் ஒரு பகுதி.​—ஆதியாகமம் 22:18.

  • அனைவருக்கும் விடுதலை நிச்சயம்
    காவற்கோபுரம்—1999 | மே 1
    • ‘தேவனுடைய புத்திரர் வெளிப்படுவது’ எப்போது ஆரம்பமாகும்? வெகு சீக்கிரத்தில். தேவனுடைய புத்திரர் யார் என யெகோவா எல்லாருக்கும் தெளிவாக காண்பிக்கும்போது இது நடக்கும். ஆவி உலகிற்கு உயிர்த்தெழுப்பப்படும் இந்தப் “புத்திரர்” இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து கடவுளுடைய யுத்தமான அர்மகெதோனில் பூமியிலிருந்து துன்மார்க்கத்தையும் ஒடுக்குதலையும் நீக்கி சுத்திகரிக்கும்போது தெரியவரும். (தானியேல் 2:44; 7:13, 14, 27; வெளிப்படுத்துதல் 2:26, 27; 16:16; 17:14; 19:11-21) நாம் ‘கடைசி நாட்களின்’ முடிவை நெருங்கிவிட்டோம் என்பதற்கான ஏராளமான அத்தாட்சிகளை தினமும் பார்க்கிறோம். வெகு சீக்கிரத்தில், கடவுள் இத்தனை காலமாக கலகத்தனத்தை பொறுத்திருந்ததும் அதன் விளைவாக ஏற்பட்ட துன்மார்க்கமும் முடிவுக்கு வரும்.​—2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:3-31.

  • அனைவருக்கும் விடுதலை நிச்சயம்
    காவற்கோபுரம்—1999 | மே 1
    • “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு” காத்திருக்கும் அதே சமயத்தில், கிறிஸ்துவின் அன்பான பாதுகாப்பிலும் ஆதரவிலும் அப்போஸ்தலன் பவுலுக்கிருந்ததைப் போன்ற நம்பிக்கையை நீங்களும் வளர்த்துக் கொள்ளலாம். தாங்கவே முடியாதளவுக்கு துன்புறுத்தலும் பொறுக்க முடியாத அநீதிகளும் இருப்பதாக தோன்றினாலும் அவ்வாறு செய்ய முடியும். தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதைப் பற்றி பேசிய பிறகு பவுல் இவ்வாறு கேட்டார்: “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?” (ரோமர் 8:36) ஆம் ரௌசயு சொன்னபடி, பவுலின் நாட்களிலிருந்த கிறிஸ்தவர்கள் ஏதாவதொருவித ஒடுக்குமுறைக்குள் இன்னமும் ‘சிறைப்பட்டிருந்தனர்.’ அவர்கள் ‘எந்நேரமும் கொல்லப்பட்டு, அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்பட்டார்கள்.’ (ரோமர் 8:35) அதனால் அவர்கள் மனந்தளர்ந்து போனார்களா?

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்