-
ஞானஸ்நானம்—நீங்கள் தயாரா?இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
3. நீங்கள் ஏன் பயப்பட வேண்டியதில்லை?
யெகோவாவுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்று சிலர் பயப்படுகிறார்கள். நாம் சிலசமயம் தவறு செய்துவிடலாம் என்பது உண்மைதான். ஆனால், கடவுளுக்கு உண்மையாக இருந்த ஆண்களும் பெண்களும்கூட சிலசமயம் தவறு செய்ததாக பைபிள் சொல்கிறது. நாம் எந்தத் தவறும் செய்யாமல் பரிபூரணமாக இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. (சங்கீதம் 103:13, 14-ஐ வாசியுங்கள்.) தவறு செய்யாமல் இருக்க நீங்கள் முழு முயற்சி எடுப்பதைப் பார்த்து அவர் சந்தோஷப்படுகிறார்! உங்களுக்கு உதவியும் செய்வார். சொல்லப்போனால், “[அவர்] காட்டுகிற அன்பிலிருந்து [எதுவுமே] நம்மைப் பிரிக்க முடியாதென்று” உறுதி தருகிறார்.—ரோமர் 8:38, 39-ஐ வாசியுங்கள்.
-
-
துன்புறுத்தல்—நீங்கள் வெல்லலாம்!இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
கிறிஸ்தவர்கள் எல்லாருமே ஒருநாள் எதிர்ப்பையோ துன்புறுத்தலையோ சந்திக்க வேண்டியிருக்கும். அதை நினைத்து நாம் பயப்பட வேண்டுமா?
1. துன்புறுத்தல் வரும் என்று நாம் ஏன் எதிர்பார்க்கலாம்?
“கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகக் கடவுள்பக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:12) சாத்தானுடைய உலகத்தின் பாகமாக இல்லாததால் இயேசு துன்புறுத்தப்பட்டார். அதே காரணத்துக்காக அரசாங்கங்களோ மத அமைப்புகளோ நம்மையும் துன்புறுத்தலாம். இதில் ஆச்சரியமே இல்லை!—யோவான் 15:18, 19.
2. துன்புறுத்தலைச் சந்திக்க நாம் எப்படித் தயாராகலாம்?
யெகோவாமேல் வைத்திருக்கும் நம்பிக்கையை நாம் இப்போதே பலப்படுத்த வேண்டும். அதனால், அவரிடம் ஜெபம் செய்யவும் அவருடைய வார்த்தையைப் படிக்கவும் தினமும் நேரம் ஒதுக்குங்கள். கூட்டங்களைத் தவறவிடாதீர்கள். அப்போது, துன்புறுத்தலைத் தைரியமாகச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் துன்புறுத்தினாலும் சோர்ந்துபோக மாட்டீர்கள். அடிக்கடி துன்புறுத்தப்பட்ட பவுல் இப்படிச் சொன்னார்: “யெகோவா எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன்.”—எபிரெயர் 13:6.
தவறாமல் ஊழியம் செய்வதன் மூலமும் நாம் தைரியத்தை வளர்த்துக்கொள்ளலாம். யெகோவாமேல் நம்பிக்கை வைக்கவும் மனிதர்களைப் பார்த்துப் பயப்படாமல் இருக்கவும் ஊழியம் உதவுகிறது. (நீதிமொழிகள் 29:25) ஊழியம் செய்ய இப்போதே தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான், எதிர்காலத்தில் நம் வேலையை அரசாங்கம் தடை செய்தாலும் தொடர்ந்து ஊழியம் செய்யத் தயாராக இருப்பீர்கள்.—1 தெசலோனிக்கேயர் 2:2.
3. துன்புறுத்தலைச் சகிப்பதால் நமக்கு என்ன நன்மை?
துன்புறுத்தலை நாம் விரும்புவதில்லைதான். ஆனால், அதைச் சகித்துக்கொண்டால் நம் விசுவாசம் பலமாகும். நாம் சோர்ந்துபோகும்போது யெகோவா பலம் தருவதைப் பார்த்து அவரிடம் நெருங்கிப் போவோம். (யாக்கோபு 1:2-4-ஐ வாசியுங்கள்.) நாம் கஷ்டப்படும்போது யெகோவா வேதனைப்படுகிறார், அதேசமயத்தில் நாம் சகித்திருக்கும்போது சந்தோஷப்படுகிறார். “நீங்கள் நன்மை செய்ததற்காகப் பாடுகள் படும்போது அவற்றைச் சகித்துக்கொண்டால், அதுதான் கடவுளுக்குப் பிரியமாக இருக்கும்.” (1 பேதுரு 2:20) கடைசிவரை சகித்திருப்பவர்களை யெகோவா புதிய உலகத்தில் என்றென்றும் வாழ வைப்பார். அங்கே எந்த எதிர்ப்பும் துன்புறுத்தலும் இல்லாமல் அவரை நிம்மதியாக வணங்குவோம்.—மத்தேயு 24:13.
ஆராய்ந்து பார்க்கலாம்!
துன்புறுத்தல் வந்தாலும் நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும் என்று எப்படிச் சொல்லலாம்? அவர் நமக்கு என்ன பலன் கொடுப்பார்? பார்க்கலாம்.
4. குடும்பத்தாரின் எதிர்ப்பை உங்களால் சகிக்க முடியும்
குடும்பத்திலிருந்தே எதிர்ப்பு வரலாம் என்று இயேசு சொன்னார். மத்தேயு 10:34-36-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஒருவர் யெகோவாவை வணங்க முடிவு செய்யும்போது அவருடைய குடும்பத்தில் என்ன நடக்கலாம்?
இதற்கு ஒரு உதாரணத்தை, வீடியோவில் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
குடும்பத்தில் இருப்பவரோ நண்பரோ நீங்கள் யெகோவாவை வணங்கக் கூடாதென்று சொன்னால் என்ன செய்வீர்கள்?
சங்கீதம் 27:10-ஐயும் மாற்கு 10:29, 30-ஐயும் படியுங்கள். ஒவ்வொரு வசனத்தைப் படித்த பிறகும், இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
குடும்பத்தில் இருப்பவர்களோ நண்பர்களோ எதிர்க்கும்போது இந்த வாக்குறுதி உங்களுக்கு எப்படி உதவும்?
5. துன்புறுத்தல் வந்தாலும் தொடர்ந்து யெகோவாவை வணங்குங்கள்
மற்றவர்கள் நம்மைத் தடுக்கும்போதும் தொடர்ந்து யெகோவாவை வணங்குவதற்குத் தைரியம் தேவை. வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
இந்த வீடியோவில் வரும் அனுபவங்கள் உங்களுக்கு எப்படித் தைரியத்தைக் கொடுக்கின்றன?
அப்போஸ்தலர் 5:27-29-ஐயும் எபிரெயர் 10:24, 25-ஐயும் படியுங்கள். ஒவ்வொரு வசனத்தைப் படித்த பிறகும், இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நம் ஊழியமும் கூட்டங்களும் தடை செய்யப்பட்டாலும் நாம் தொடர்ந்து யெகோவாவை வணங்குவது ஏன் ரொம்ப முக்கியம்?
6. சகித்திருக்க யெகோவா உங்களுக்கு உதவுவார்
வெவ்வேறு வயதையும் பின்னணியையும் சேர்ந்த எத்தனையோ யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தல் மத்தியிலும் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்துவருகிறார்கள். அவர்களுக்கு எது உதவியாக இருக்கிறது? வீடியோவைப் பாருங்கள். பிறகு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
சகித்திருப்பதற்கு வீடியோவில் வந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு எது உதவியாக இருந்தது?
ரோமர் 8:35, 37-39-ஐயும் பிலிப்பியர் 4:13-ஐயும் படியுங்கள். ஒவ்வொரு வசனத்தைப் படித்த பிறகும், இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
எப்பேர்ப்பட்ட சோதனையையும் சகிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த வசனம் எப்படி உங்களுக்குத் தருகிறது?
மத்தேயு 5:10-12-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
துன்புறுத்தப்பட்டாலும் நீங்கள் ஏன் சந்தோஷமாக இருக்கலாம்?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “என்னால துன்புறுத்தல தாங்கிக்க முடியுமானு தெரியல.”
எந்த வசனங்கள் அவர்களுக்குத் தேவையான நம்பிக்கையைக் கொடுக்கும்?
சுருக்கம்
துன்புறுத்தல் மத்தியிலும் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் உயர்வாக மதிக்கிறார். அவருடைய உதவியோடு நம்மால் கடைசிவரை சகித்திருக்க முடியும்!
ஞாபகம் வருகிறதா?
துன்புறுத்தல் வரும் என்று கிறிஸ்தவர்கள் ஏன் எதிர்பார்க்கலாம்?
துன்புறுத்தலைச் சந்திக்கத் தயாராவதற்கு இப்போதே நீங்கள் என்ன செய்யலாம்?
எப்பேர்ப்பட்ட சோதனை வந்தாலும் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு எது கொடுக்கிறது?
அலசிப் பாருங்கள்
நடுநிலையோடு இருந்ததால் ஓர் இளம் சகோதரர் சிறையில் அடைக்கப்பட்டார். சகித்திருக்க யெகோவா எப்படி அவருக்கு உதவி செய்தார் என்று அவர் சொல்வதைக் கேளுங்கள்.
எதிர்ப்பு வந்தாலும் வருஷக்கணக்காக யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்ய ஒரு தம்பதிக்கு எது உதவியது என்று பாருங்கள்.
துன்புறுத்தலை எப்படித் தைரியமாகச் சந்திக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“துன்புறுத்தலைச் சந்திக்க இப்போதே தயாராகுங்கள்” (காவற்கோபுரம், ஜூலை 2019)
குடும்பத்திலிருந்து வரும் எதிர்ப்பை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்? அதை எப்படி சமாளித்து சமாதானமாக வாழலாம்?
“சத்தியம் ‘சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்குகிறது’” (காவற்கோபுரம், அக்டோபர் 2017)
-