-
துன்மார்க்கத்தை கடவுள் அனுமதித்திருப்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
-
-
8 அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய கடிதத்தில், “கடவுளிடத்தில் அநீதி இருக்குமென்போமோ?” என்ற கேள்வியை கேட்கிறார். “அல்லவே அல்ல” என அவர் உறுதியாக பதிலளிக்கிறார். அதற்குப் பின்பு அவர் கடவுளுடைய இரக்கத்தை வலியுறுத்திக் காட்டி, பார்வோனை இன்னும் கொஞ்ச காலம் வாழ அனுமதித்ததற்கு யெகோவா சொன்ன காரணத்தையும் குறிப்பிடுகிறார். மனிதராகிய நாம் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போன்று இருக்கிறோம் எனவும் பவுல் காண்பிக்கிறார். பின்பு அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கடவுள் தமது கோபத்தைக் காண்பிக்கவும் தமது வல்லமையைத் தெரிவிக்கவும் அதோடுகூடத் தாம் மகிமைக்காக ஆயத்தமாக்கின இரக்கப் பாத்திரங்கள்மேல், அதாவது யூதரிலிருந்து மாத்திரமல்ல புறஜாதிகளிலிருந்தும் அவர் அழைத்த நம்மேல், தமது மகிமையின் ஐசுவரியத்தைத் தெரிவிக்கவும் சித்தங்கொண்டு அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாயிருந்தாரானாலென்ன?”—ரோமர் 9:14-24, தி.மொ.
-
-
துன்மார்க்கத்தை கடவுள் அனுமதித்திருப்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
-
-
10 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் 1,900-க்கும் மேலான ஆண்டுகளாக ‘கோபாக்கினை பாத்திரங்களை’ யெகோவா மேலுமாக சகித்து, அவர்களை அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறார். ஏன்? அதற்கு ஒரு காரணம் இயேசு கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தில் ஆளப் போகிறவர்களை அவர் தயார்படுத்திக் கொண்டிருந்தார். இவர்கள் 1,44,000 பேர்; அப்போஸ்தலன் பவுல் சொன்ன “இரக்கப் பாத்திரங்கள்” இவர்களே. இந்தப் பரலோக வகுப்பில் அங்கம் வகிக்க முதலில் யூதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிற்பாடு புறதேசத்தாருக்கு கடவுள் அழைப்பு விடுத்தார். தம்மை வணங்கும்படி இவர்களில் எவரையுமே யெகோவா வற்புறுத்தவில்லை. ஆனால், தமது அன்பான ஏற்பாடுகளுக்கு நன்றியுணர்வை காண்பித்தவர்களில் சிலருக்கு தம்முடைய குமாரனோடு சேர்ந்து பரலோக ராஜ்யத்தில் ஆளும் சிலாக்கியத்தை அவர் அருளினார். அந்தப் பரலோக வகுப்பாரை தயார்படுத்தும் வேலை இப்போது ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது.—லூக்கா 22:29; வெளிப்படுத்துதல் 14:1-4.
-