“முடிவு காலத்தில்” விழித்திருங்கள்
“அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருங்கள்.”—மாற்கு 13:33.
1. “முடிவு காலத்தில்,” கிளர்ச்சியூட்டும் சம்பவங்கள் வெளிப்படுத்தப்படுகையில் நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
இந்த “முடிவு காலத்தில்,” கிளர்ச்சியூட்டும் சம்பவங்கள், வெளிப்படுத்தப்படுகையில், கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? (தானியேல் 12:4) அவர்கள் சந்தேகத்தில் விடப்பட்டில்லை. இயேசு கிறிஸ்து, இந்த 20-ம் நூற்றாண்டில் நிறைவேற்றமடைந்து வருகின்ற கூட்டு அடையாளத்தையுடைய தீர்க்கதரிசனத்தை உரைத்தார். 1914 முதற்கொண்டு இருந்துவரும் இந்தக் காலப் பகுதியை ஈடிணையற்றதாக தனிப்படுத்திக் காட்டியிருக்கும் அநேக அம்சங்களை அவர் முன்னுரைத்தார். “முடிவு காலத்தைப்” பற்றிய தானியேலின் தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தபடியால், இயேசு தம்முடைய சொந்த மிகப் பெரிய தீர்க்கதரிசனத்தை உரைத்தப் பின் “விழித்திருக்”கும்படியாக தம்முடைய சீஷர்களைத் துரிதப்படுத்தினார்.—லூக்கா 21:36.
2. ஆவிக்குரிய விதத்தில் விழிப்பாயிருப்பதற்கு ஏன் மிகப் பெரிய தேவை இருக்கிறது?
2 ஏன் விழித்திருக்க வேண்டும்? ஏனென்றால் மனித சரித்திரத்திலேயே இது மிகவும் ஆபத்தான ஒரு காலமாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் இந்தச் சமயத்தில் ஆவிக்குரிய அரைத்தூக்க நிலைக்கு இடங்கொடுப்பது ஆபத்தாக இருக்கும். நாம் சுய-மனநிறைவுள்ளவர்களாகவோ அல்லது வாழ்க்கையின் கவலைகளால் நம்முடைய இருதயம் பாரமடைந்துவிட நாம் அனுமதிக்கிறவர்களாகவோ இருப்போமானால் நாம் அபாயத்தில் இருப்போம். லூக்கா 21:34, 35-ல் இயேசு கிறிஸ்து நம்மை இவ்வாறு எச்சரித்தார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப் போல வரும்.”
3, 4. (எ) கடவுளின் கோபாக்கினை நாள் மக்கள் மீது “ஒரு கண்ணியைப் போல” திடீரென்று வரும் என்று சொன்னதன் மூலம் இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? (பி) கண்ணியை வைப்பது கடவுளாக இல்லாத காரணத்தால், அந்த நாள் ஏன் பொதுவில் மக்கள் எதிர்பாராத வகையில் அவர்கள் மீது வந்துவிடும்?
3 யெகோவாவின் நாள் ‘ஒரு கண்ணியைப் போல நம்மேல் வரக்கூடும்,’ என இயேசு நல்ல காரணத்தோடு தானே சொன்னார். ஒரு கண்ணியில் அடிக்கடி ஒரு சுருக்குக் கயிறு பொருத்தப்பட்டு, அது பறவைகளையும் பாலூட்டிகளையும் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. கண்ணி விசைவில் ஒன்றை கொண்டிருக்கிறது, அதற்குள் நடந்து செல்லும் எவரும் விசைவில்லை விடுவித்து விடுவர். பிறகு கண்ணி மூடிக்கொண்டுவிடுகிறது. பலியுயிர் அகப்பட்டுக் கொள்கிறது. இவை அனைத்தும் மிகவும் திடீரென்று சம்பவிக்கிறது. அதேவிதமாகவே ஆவிக்குரிய வகையில் செயலற்றவர்கள் எதிர்பாராது சிக்கிவிடுவர். கடவுளுடைய “கோபாக்கினை நாள்,” திடீரென்று அவர்கள் மீது வரும்.—நீதிமொழிகள் 11:4.
4 மக்களுக்கு கண்ணியை வைப்பது யெகோவா தேவனா? இல்லை. அவர் மக்களை அழிப்பதற்காக அவர்கள் விழிப்பின்றி இருக்கையில் பிடிப்பதற்குக் காத்துக்கொண்டில்லை. ஆனால் அந்த நாள் பொதுவில் ஜனங்கள் எதிர்பாராத சமயத்தில் திடீரென்று வரும், ஏனென்றால், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்துக்கு முக்கிய கவனம் செலுத்துவதில்லை. தங்களைச் சுற்றி நிகழும் சம்பவங்களின் அர்த்தத்தை அசட்டை செய்து வாழ்க்கையின் அக்கறைகளில் தங்கள் சொந்த வழியில் சென்றுகொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இது கடவுளுடைய அட்டவணையை மாற்றிவிடுவது கிடையாது. அவர் கணக்குத் தீர்ப்பதற்காக தம்முடைய சொந்த நிலையான நேரத்தைக் கொண்டிருக்கிறார். மற்றும் இரக்கமாக, வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்து மனிதகுலத்தை அவர் அறியாமையில் விட்டு வைப்பதில்லை.—மாற்கு 13:10.
5, 6. (எ) வரவிருக்கும் நியாயத்தீர்ப்பின் காரணமாக, மனித சிருஷ்டிகளுக்கு சிருஷ்டிகர் என்ன அன்பான ஏற்பாட்டைச் செய்திருக்கிறார், ஆனால் பொதுவான என்ன விளைவோடு? (பி) விழித்திருக்க நமக்கு உதவி செய்வதற்கு எது சிந்திக்கப்படும்?
5 இந்த முன் எச்சரிக்கையானது, இங்கே தம்முடைய அடையாள அர்த்தமுள்ள பாதபடியிலுள்ள மனித சிருஷ்டிப்புகளின் நலனில் அக்கறையுள்ளவராக இருக்கும் மகத்தான சிருஷ்டிகரின் பங்கில் அன்புள்ள ஏற்பாடாக இருக்கிறது. (ஏசாயா 66:1) அவருடைய பாதம் படிந்திருப்பதாக பேசப்படும் இடத்தின் குடிகளை அவர் நெஞ்சார நேசிக்கிறார். ஆகவே தம்முடைய பூமிக்குரிய ஸ்தானாபதிகள் மற்றும் தூதுவர்கள் மூலமாக அவர்களுக்கு முன்னாலிருக்கும் சம்பவங்களைக் குறித்து அவர் எச்சரிக்கிறார். (2 கொரிந்தியர் 5:20) என்றபோதிலும், கொடுக்கப்பட்ட எல்லா எச்சரிப்பின் மத்தியிலும் அவர்கள் ஒரு கண்ணியினுள் காலெடுத்து வைப்பது போன்று அந்தச் சம்பவங்கள் மனித குடும்பத்தின் மீது எதிர்பாரா வகையில் வந்திறங்கும். ஏன்? ஏனென்றால் பெரும்பாலான மக்கள் ஆவிக்குரிய வகையில் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். (1 தெசலோனிக்கேயர் 5:6) ஒப்பிடுகையில் ஒரு சிறிய எண்ணிக்கையானோரே எச்சரிப்புக்கு செவி கொடுத்து கடவுளுடைய புதிய உலகிற்குள் தப்பிப்பிழைப்பர்.—மத்தேயு 7:13, 14.
6 அப்படியென்றால் பாதுகாக்கப்படப் போகிறவர்கள் மத்தியில் இருப்பதற்கு இந்த முடிவு காலத்தில் நாம் எவ்வாறு விழித்திருக்கலாம்? யெகோவா தேவையான உதவியை அளிக்கிறார். நாம் செய்யக்கூடிய ஏழு காரியங்களை கவனிப்போமாக.
கவனம் திசைத்திருப்பப்படுவதை எதிர்த்து போராடுங்கள்
7. கவனம் திசைத்திருப்பப்படுவதைக் குறித்து என்ன எச்சரிப்பை இயேசு கொடுத்தார்?
7 முதலாவதாக, கவனம் திசைத்திருப்பப்படுவதை எதிர்த்து போராட வேண்டும். மத்தேயு 24:42, 44-ல் இயேசு சொன்னார்: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷ குமாரன் வருவார்; ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” இங்கே இயேசு பயன்படுத்திய மொழிநடை இந்த நெருக்கடியான காலத்தில் கவனத்தை திசைத்திருப்ப அதிகம் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. கவனம் திசைத்திருப்பப்படுதல் அழிவுக்கு வழிநடத்தக்கூடும். நோவாவின் நாளில் அநேக காரியங்கள் மக்களின் கவனத்தை முழுவதுமாக கவர்ந்துவிட்டிருந்தது. இதன் விளைவாக கவனம் திசைத்திருப்பப்பட்ட மக்கள் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை “உணராதிருந்தார்கள்.” ஜலப்பிரளயம் அவர்கள் அனைவரையும் துடைத்தழித்துவிட்டது. ஆதலால் இயேசு எச்சரித்தார்: “அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.”—மத்தேயு 24:37-39.
8, 9. (எ) வாழ்க்கையின் சாதாரணமான அக்கறைகள் எவ்விதமாக அபாயகரமாக நம்முடைய கவனத்தைத் திசைத்திருப்பிவிடக்கூடும்? (பி) பவுலும் இயேசுவும் என்ன எச்சரிப்புகளை நமக்குக் கொடுக்கின்றனர்?
8 லூக்கா 21:34, 35-லுள்ள அவருடைய எச்சரிப்பில், இயேசு புசித்தல், குடித்தல், பிழைப்புக்காகக் கவலைப்படுதல் போன்ற வாழ்க்கையின் சாதாரணமான அம்சங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததையும்கூட மனதில் வையுங்கள். இவை கர்த்தராகிய இயேசுவின் சீஷர்கள் உட்பட எல்லா மனிதருக்கும் பொதுவில் இருக்கும் காரியங்களாகும். (மாற்கு 6:31-ஐ ஒப்பிடவும்.) இந்தக் காரியங்கள் தம்மில்தாமே தீங்கற்றவையாக இருக்கக்கூடும், ஆனால் அனுமதிக்கப்பட்டால், அவை நம் கவனத்தைத் திசைத்திருப்பி, ஆழ்ந்துவிடச் செய்து, இவ்விதமாக ஆபத்தான அரைத்தூக்க நிலையை நம்மில் ஏற்படுத்தக்கூடும்.
9 ஆகவே மிக உயர்ந்த முக்கியத்துவமுள்ள காரியத்தை அசட்டை செய்யாதிருப்போமாக—தெய்வீக அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல். வாழ்க்கையின் சாதாரணமான காரியங்களில் ஆழ்ந்துவிடுவதற்கு பதிலாக நம்முடைய பிழைப்புக்குத் தேவையான அளவில் மாத்திரமே நாம் அவைகளைப் பயன்படுத்துவோமாக. (பிலிப்பியர் 3:8) அவை ராஜ்ய அக்கறைகளை நெருக்கிப் போடக்கூடாது. ரோமர் 14:17 சொல்கிற வண்ணமாகவே: “தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.” இயேசு சொன்ன பின்வரும் அவருடைய வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33) மேலுமாக லூக்கா 9:62-ல் இயேசு அறிவித்ததாவது: “கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல.”
10. நம்முடைய கண்கள் நேராக இலக்கை நோக்கிப் பார்த்துக்கொண்டிராவிட்டால் என்ன ஆபத்து இருக்கிறது?
10 அடையாள அர்த்தத்தில் பேசுகையில், நாம் கலப்பையைக் கொண்டு உழ ஆரம்பித்துவிட்டோமானால், நேர் கோட்டிலேயே நாம் சென்றுகொண்டிருக்க வேண்டும். பின்னால் திரும்பிப் பார்க்கும் உழவன் நேரான ஒரு பள்ளத்தை உழ மாட்டான். அவன் கவனம் திசைத்திருப்பப்படுகிறது. அவன் எளிதில் பக்க பாதைக்குச் சென்றுவிடவோ அல்லது ஏதாவது ஓர் இடைஞ்சலினால் நிறுத்திவிடவோக்கூடும். பின்னால் திரும்பிப் பார்த்து காப்பாற்றப்படாமலே போன லோத்துவின் மனைவியைப் போல் நாம் இருக்கவேண்டாம். நம்முடைய கண்கள் நேராக இலக்கை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். அதைச் செய்வதற்கு நாம் கவனம் திசைத்திருப்பப்படுவதை எதிர்த்து போராட வேண்டும்.—ஆதியாகமம் 19:17, 26; லூக்கா 17:32.
எல்லா ஊக்கத்தோடும் ஜெபியுங்கள்
11. கவனம் திசைத்திருப்பப்படும் ஆபத்துக்கு எதிராக நம்மை எச்சரித்தப் பின்பு, இயேசு எதை அழுத்திக்கூறினார்?
11 என்றபோதிலும் விழித்திருக்க நாம் செய்யக்கூடியது அதிகமிருக்கிறது. இரண்டாவது முக்கிய காரியம்: எல்லா ஊக்கத்தோடும் ஜெபியுங்கள். வாழ்க்கையின் சாதாரண அக்கறைகளால் கவனம் திசைத்திருப்பப்படுவதற்கு எதிராக நம்மை எச்சரித்தப் பிறகு இயேசு இந்தப் புத்திமதியைக் கொடுத்தார்: “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்.”—லூக்கா 21:36.
12. என்ன வகையான ஜெபம் தேவைப்படுகிறது, என்ன விளைவோடு?
12 இதன் காரணமாக நம்முடைய நிலைமையின் அபாயத்தையும் விழிப்பாயிருப்பதற்கான நம்முடைய தேவையையும் குறித்து இடைவிடாமல் வேண்டிக்கொண்டே இருக்க வேண்டும். ஆகவே ஊக்கமான வேண்டுதலோடு கூட ஜெபத்தில் நாம் கடவுளிடம் செல்வோமாக. ரோமர் 12:12-ல் பவுல் சொல்கிறார்: “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.” எபேசியர் 6:18-ல் நாம் இவ்விதமாக வாசிக்கிறோம்: “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி அதன் பொருட்டு . . . விழித்துக்கொண்டிருங்கள்.” இது எந்தப் பெரிய விளைவையும் கொண்டில்லாத ஒரு தற்செயலான விஷயம் போல வெறுமென ஜெபத்தை ஏறெடுக்கும் ஒரு காரியமாக இல்லை. நாம் உயிரோடிருப்பதே ஆபத்திலிருக்கிறது. ஆகவே நாம் தெய்வீக உதவிக்காக ஊக்கமாக மன்றாடுவது அவசியமாக இருக்கிறது. (எபிரெயர் 5:7 ஒப்பிடவும்.) அந்த வகையில், நாம் யெகோவாவின் பக்கமாக நாம் நம்மைக் காத்துக் கொள்வோம். இதைச் செய்து முடிப்பதற்கு உதவி செய்வதில் ‘எப்பொழுதும் ஜெபம் பண்ணுவதை’க் காட்டிலும் வேறு எதுவும் நமக்கு அதிக பிரயோஜனமாயிருக்காது. அப்பொழுது யெகோவா நம்மை விழிப்பான உணர்வு நிலையில் வைப்பார். அப்படியென்றால் ஜெபத்தில் நிலைத்திருப்பது எத்தனை முக்கியமாயிருக்கிறது!
யெகோவாவின் அமைப்பையும் அதன் வேலையையும் நெருக்கமாக பற்றிக்கொண்டிருங்கள்
13. விழித்திருக்க என்ன வகையான கூட்டுறவு அவசியமாயிருக்கிறது?
13 இந்த உலகத்தின் மீது வர இருக்கும் இந்த எல்லாக் காரியங்களையும் நாம் தப்பிக்கொள்ள விரும்புகிறோம். நாம் மனுஷகுமாரனுக்கு முன்பாக அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றவர்களாய் நிற்க விரும்புகிறோம். இதற்காக நாம் செய்யக்கூடிய மூன்றாவது காரியம் ஒன்று இருக்கிறது: முறிக்க முடியாத வண்ணம் யெகோவாவின் தேவராஜ்ய அமைப்பைப் பற்றிக்கொண்டிருங்கள். நாம் நிபந்தனையின்றி அந்த அமைப்போடு கூட்டுறவுக்கொண்டு அதன் செயல்நடவடிக்கைகளில் பங்குகொள்வது அவசியமாகும். இவ்விதமாக நாம் விழித்திருக்கும் கிறிஸ்தவர்களாக நம்மைநாமே தெளிவாக அடையாளப்படுத்துகிறவர்களாக இருப்போம்.
14, 15. (எ) எந்த வேலையில் ஈடுபட்டிருப்பது விழித்திருக்க நமக்கு உதவி செய்யும்? (பி) பிரசங்க வேலை எப்போது முடிந்துவிட்டது என்பதை தீர்மானிப்பது யார், அதைக் குறித்து நாம் எவ்வாறு உணரவேண்டும்? (சி) மகா உபத்திரவத்துக்குப் பின்பு, செய்து முடிக்கப்பட்ட ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை பின்னோக்கிப் பார்க்கையில் நாம் எதை உணர்ந்து கொள்வோம்?
14 விழித்திருக்க நமக்கு உதவிசெய்யக்கூடிய இதோடு நெருங்கிய தொடர்புடைய நான்காவது காரியம் ஒன்று இருக்கிறது. நாம் வரவிருக்கும் இந்தக் காரிய ஒழுங்கின் முடிவைக் குறித்து மக்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறவர்கள் மத்தியில் இருக்க வேண்டும். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம்,” சர்வ வல்லமையுள்ள கடவுள் நோக்கங் கொண்டிருக்கும் அளவுக்கு பிரசங்கிக்கப்படும் வரையாக இந்தப் பழைய காரிய ஒழுங்கு முறை முழுமையாக முடிவுக்கு வருவது நடந்தேறாது. (மத்தேயு 24:14) பிரசங்க வேலை எப்பொழுது செய்து முடிக்கப்பட்டிருக்கிறது என்பதை தீர்மானிப்பது யெகோவாவின் சாட்சிகள் அல்ல. யெகோவா அந்த உரிமையை தமக்கென்றே ஒதுக்கி வைத்திருக்கிறார். (மாற்கு 13:32, 33) ஆனால் நாமோ மனிதகுலம் எக்காலத்திலும் கொண்டிருக்கக்கூடிய மிகச் சிறந்த அரசாங்கமாகிய கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிப்பதில் எவ்வளவு கடினமாக உழைக்க முடியுமோ அவ்வளவு கடினமாக உழைக்கவும், எவ்வளவு நீண்ட காலம் அவசியமோ அவ்வளவு நீண்ட காலம் பிரசங்கிக்கவும் தீர்மானமாயிருக்கிறோம். இந்த வேலையில் இன்னும் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலேயே “மகா உபத்திரவம்,” தொடங்கும். (மத்தேயு 24:21) எல்லா எதிர்காலத்தின் போதும், இரட்சிக்கப்பட்டவர்கள் பின்னோக்கிப் பார்த்து இயேசு ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாக இருக்கவில்லை என்பதை மனமார உறுதி செய்யக்கூடியவர்களாக இருப்பர். (வெளிப்படுத்துதல் 19:11) பிரசங்க வேலையானது அதில் பங்குகொள்கிறவர்களால் எதிர்பார்க்கப்பட்டதற்கும் மிக அதிகமான அளவில் செய்து முடிக்கப்பட்டிருக்கும்.
15 ஆதலால் கடவுளுடைய சொந்த மனநிறைவுக்கேற்ப இந்த வேலை செய்து முடிக்கப்படுகின்ற அந்த மிக முக்கியமான நேரத்தில், முந்திய எந்த ஒரு காலப்பகுதியிலும் இருந்ததைவிட அதிகமானவர்கள் அதில் பங்குகொண்டிருப்பார்கள். இந்த மகத்தான வேலையில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருப்போம்! யெகோவா, “ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிறார்,” என்று பேதுரு அப்போஸ்தலன் நமக்கு உறுதியளிக்கிறார். (2 பேதுரு 3:9) இதன் காரணமாக, சர்வ வல்லமையுள்ள கடவுளின் கிரியை நடப்பிக்கும் சக்தி இன்று எக்காலத்திலுமிருந்ததைவிட அதிகத் தீவிரமாக கிரியை செய்து வருகிறது, ஆவியால் தூண்டப்படும் இந்த நடவடிக்கையில் தொடர்ந்திருக்க யெகோவாவின் சாட்சிகள் விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றனர். ஆகவே யெகோவாவின் அமைப்பை நெருக்கமாக பற்றிக்கொண்டிருங்கள், அதன் பொது ஊழியத்தில் சுறுசுறுப்பாயிருங்கள். நீங்கள் விழித்திருப்பதற்கு இது ஓர் உதவியாக இருக்கும்.
சுய-பரிசோதனைச் செய்யுங்கள்
16. நம்முடைய தற்போதைய ஆவிக்குரிய நிலையைக் குறித்து நாம் ஏன் சுய-பரிசோதனை செய்ய வேண்டும்?
16 விழித்திருக்கும் பொருட்டு நாம் செய்யக்கூடிய ஓர் ஐந்தாவது காரியம் இருக்கிறது. தனிப்பட்டவர்களாக, நம்முடைய தற்போதைய நிலையைக் குறித்து நாம் சுய-பரிசோதனை செய்ய வேண்டும். இது எக்காலத்திலுமிருந்ததைவிட இப்பொழுது மிகவும் பொருத்தமாக உள்ளது. நாம் தீர்மானமாக யார் பக்கத்திலிருக்கிறோம் என்பதை நிரூபிப்பது அவசியமாகும். கலாத்தியர் 6:4-ல் பவுல் சொன்னார்: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவன்.” 1 தெசலோனிக்கேயர் 5:6-8-லுள்ள பவுலின் வார்த்தைகளுக்கு இசைவாக சுய-பரிசோதனை செய்யுங்கள்: “ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.”
17. சுய-பரிசோதனை செய்கையில், என்ன கேள்விகளை நம்மைநாமே கேட்டுக்கொள்ள வேண்டும்?
17 நம்மைப் பற்றியதென்ன? வேதாகமத்தின் வெளிச்சத்தில் நம்மைநாமே சோதனை செய்து பார்க்கையில், நாம் இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவை கொண்டவர்களாய், நாம் விழித்துக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோமா? பழைய காரிய ஒழுங்கிலிருந்து உறுதியாக நம்மைநாமே பிரித்துக்கொண்டு, இனிமேலும் அதன் எண்ணங்களை ஏற்றுக்கொள்ளாத ஆட்களாக நாம் இருக்கிறோமா? உண்மையில் நமக்கு கடவுளுடைய புதிய உலகின் ஆவி இருக்கிறதா? இந்த ஒழுங்கு எங்கே போய் கொண்டிருக்கிறது என்பது குறித்து நாம் முழுமையாக எச்சரிப்பூட்டப்பட்டு இருக்கிறோமா? அப்படியானால், யெகோவாவின் நாள் திருடனைப் போல நம்மேல் வராது.—1 தெசலோனிக்கேயர் 5:4.
18. மேலுமான என்ன கேள்வியை நம்மைநாமே கேட்டுக்கொள்ள வேண்டும்? என்ன விளைவோடு?
18 ஆனால் நம்முடைய சுய-பரிசோதனை நாம் நேர்த்தியான, சொகுசான, செளகரியமான, கவலையற்ற வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள நாம் பாடுபட்டுக்கொண்டிருப்பதை வெளிப்படுத்தினால் அப்போது என்ன? நம்முடைய ஆவிக்குரிய கண்கள் அறை தூக்கத்திலும் தூக்கத்திலும் சோர்ந்துவிட்டிருப்பதை நாம் கண்டுபிடித்தால் அப்போது என்ன? கனவுகாணும் ஒரு நிலையில், ஏதோ ஓர் உலகப்பிரகாரமான கற்பனைப் போக்கின் பின்னால் நாம் சென்றுகொண்டிருக்கிறோமா? அப்படியென்றால் நாம் விழித்துக்கொள்வோமாக!—1 கொரிந்தியர் 15:34.
நிறைவேறி முடிந்த தீர்க்கதரிசனங்களை தியானியுங்கள்
19. நாம் நிறைவேற்றமடைவதை பார்த்திருக்கும் ஒரு சில தீர்க்கதரிசனங்கள் யாவை?
19 நாம் விழித்திருக்க நமக்கு உதவி செய்யக்கூடிய ஓர் ஆறாவது காரியத்துக்கு இப்பொழுது நாம் வருகிறோம்: இந்த முடிவின் காலத்திலே நிறைவேறி முடிந்த அநேக தீர்க்கதரிசனங்கள் பேரில் தியானியுங்கள். புறஜாதியாருக்கு நியமிக்கப்பட்ட காலங்கள் 1914-ல் முடிவடைந்தது முதற்கொண்டு ஏற்கெனவே 77-வது வருடத்தை நாம் கடந்துவிட்டிருக்கிறோம். முக்கால் நூற்றாண்டை நாம் பின்னோக்கிப் பார்க்கையில், எவ்விதமாக ஒன்றன் பின் ஒன்றாக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருக்கின்றன என்பதை நம்மால் பார்க்க முடிகிறது—மெய் வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுதல்; அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் அவர்களுடைய தோழர்களோடு கூட ஆவிக்குரிய பரதீஸிற்குள் மீட்டுக்கொள்ளப்படுதல்; உலகளாவிய அளவில் ராஜ்யத்தின் நற்செய்தி பிரசங்கிக்கப்படுதல்; திரள் கூட்டத்தாரின் தோற்றம். (ஏசாயா 2:2, 3; அதிகாரம் 35; சகரியா 8:23; மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 7:9) யெகோவாவின் மேலான நாமமும் சர்வலோக அரசுரிமையும் மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறது, யெகோவா ஏற்றக் காலத்தில் தீவிரமாக அதை நடப்பிக்க, சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதியுமாக ஆகும் பொருட்டு அதிகரிப்பு இருந்திருக்கிறது. (ஏசாயா 60:22; எசேக்கியேல் 38:23) வெளிப்படுத்துதல் பதிவிலுள்ள அப்போஸ்தலனாகிய யோவானின் தரிசனங்கள் இப்பொழுது அவற்றின் உச்சக்கட்டத்தை நெருங்கி வருகின்றன.
20. யெகோவாவின் சாட்சிகள் என்ன உறுதியான நம்பிக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள்? அவர்கள் உண்மையில் யாராக இருப்பதாக நிரூபித்திருக்கிறார்கள்?
20 ஆகவே, எக்காலத்திலுமிருந்ததைவிட, யெகோவாவின் சாட்சிகள் 1914 முதற்கொண்டு உலக விவகாரங்களின் அர்த்தத்தைப் பற்றிய தங்கள் புரிந்துகொள்ளுதல் சரியானது என்பது குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கை இருப்பதன் காரணமாக, மகா உன்னதமான கடவுளின் கரங்களில் கருவிகளாகத் தங்களை நிரூபித்திருக்கின்றனர். இந்த அதிமுக்கியமான காலத்தில் தெய்வீக செய்திகளைத் தெரியப்படுத்துவதற்கு பொறுப்பளிக்கப்பட்டிருப்பவர்கள் இவர்களே. (ரோமர் 10:15, 18) ஆம், முடிவின் காலத்துக்கான யெகோவாவின் வார்த்தைகள் உண்மையாக இருந்திருக்கின்றன. (ஏசாயா 55:11) இது, இயேசு கிறிஸ்துவின் மூலமாக கடவுளுடைய எல்லா வாக்குறுதிகளும் கடைசியாக நிறைவேறுவதை நாம் காணும் வரையாக தொடர்ந்து நிலைத்திருக்க நம்மைத் தூண்ட வேண்டும்.
நாம் விசுவாசிகளான போது இருந்ததைப் பார்க்கிலும் இரட்சிப்பு அதிக சமீபமாயிருக்கிறது
21. ஆவிக்குரிய விதமாக விழித்திருப்பதற்கு என்ன ஏழாவது உதவி நமக்கிருக்கிறது?
21 கடைசியாக, நாம் விழித்திருப்பதற்கு ஏழாவது உதவி: நாம் முதலில் விசுவாசிகளான போது இருந்ததைப் பார்க்கிலும் இரட்சிப்பு அதிக சமீபமாயிருப்பதை எப்பொழுதும் மனதில் வையுங்கள். அதிமுக்கியமாக, யெகோவாவின் சர்வலோக அரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படுவதும் அவருடைய பெயர் மகிமைப்படுத்துவதும் அதிக சமீபமாயிருக்கிறது. ஆகவே எக்காலத்திலுமிருந்ததைவிட விழித்திருப்பதற்கான அவசியம் மிக அவசரமானதாக இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார்: “நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளான போது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று.”—ரோமர் 13:11, 12.
22. நம்முடைய இரட்சிப்பு சமீபமாயிருப்பது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
22 நம்முடைய இரட்சிப்பு இத்தனை சமீபத்தில் இருப்பதன் காரணமாக நாம் கட்டாயமாகவே விழித்திருக்க வேண்டும்! எந்தத் தனிப்பட்ட அல்லது உலகப்பிரகாரமான அக்கறைகளும், யெகோவா இந்த முடிவின் காலத்தில் தம்முடைய ஜனங்களுக்கு செய்து வரும் காரியங்களுக்கு நம்முடைய போற்றுதலைக் காட்டிலும் அதிமுக்கியத்துவமுள்ளதாக ஆவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. (தானியேல் 12:3) கடவுளுடைய வார்த்தை தெளிவாக நமக்கு பரிந்துரை செய்யும் வழியிலிருந்து நாம் விலகிச் சென்றுவிடாதபடி, எக்காலத்தையும்விட அதிக உறுதியை நாம் காண்பிப்பது அவசியமாகும். (மத்தேயு 13:22) இந்த உலகம் அதனுடைய கடைசி நாட்களில் இருப்பதை அத்தாட்சி தெளிவாக காண்பிக்கிறது. விரைவில், நீதியுள்ள புதிய ஓர் உலகுக்கு வழிவிட அது இல்லாமற் போகும்படி செய்யப்படும்.—2 பேதுரு 3:13.
23. என்ன விதத்தில் யெகோவா நமக்கு உதவி செய்வார்? என்ன ஆசீர்வாதமான விளைவோடு?
23 அப்படியென்றால், எல்லா வழிகளிலும் நாம் விழித்திருப்போமாக. முன்னொரு போதுமிராத வகையில், காலத்தின் ஓட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பது குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். இந்த விஷயத்தில் யெகோவா ஒருபோதும் உறங்கச்சென்று விடமாட்டார். மாறாக, இந்த முடிவின் காலத்தில் விழித்திருக்க நமக்கு எப்போதும் உதவி செய்வார். இரவு சென்று போயிற்று. பகல் சமீபமாயிருக்கிறது. ஆகவே விழித்திருங்கள்! மேசியானிய ராஜ்யம் பூமியிடமாக யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றுகையில் எல்லா நாட்களிலும் மிக அழகான நாளை நாம் அனுபவிப்போம்!—வெளிப்படுத்துதல் 21:4, 5.
உங்கள் பதில்கள் யாவை?
◻ இயேசு கடவுளுடைய கோபாக்கினை நாள் மக்கள் மீது “ஒரு கண்ணி”யைப் போல வரும் என்று சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்?
◻ கவனம் திசைத்திருப்பப்படுவதை எதிர்த்து நாம் ஏன் போராட வேண்டும்? நாம் எவ்விதமாக அதைச் செய்யலாம்?
◻ விழித்திருக்கும் பொருட்டு என்னவிதமான ஜெபம் தேவையாக இருக்கிறது?
◻ என்னவிதமான கூட்டுறவு இன்றியமையாதது?
◻ நம்முடைய ஆவிக்குரிய நிலையைப் பற்றி ஏன் சுய-பரிசோதனை செய்ய வேண்டும்?
◻ நாம் விழித்திருப்பதில் தீர்க்கதரிசனம் என்ன பங்கை வகிக்கிறது?