-
கிறிஸ்தவர்கள் புதுவருட கொண்டாட்டங்களில் பங்குகொள்ளலாமா?விழித்தெழு!—2002 | பிப்ரவரி 8
-
-
‘களியாட்டமும் குடிவெறியுமின்றி மதிப்போடு நடந்து கொள்ளும்படி’ பைபிள் கிறிஸ்தவர்களுக்கு புத்திமதி அளிக்கிறது.a (உரோமையர் [ரோமர்] 13:12-14, பொது மொழிபெயர்ப்பு; கலாத்தியர் 5:19-21; 1 பேதுரு 4:3) பைபிள் கண்டனம் செய்கிற மிதமிஞ்சிய காரியங்களே புதுவருட கொண்டாட்டங்களில் பெரும்பாலும் முக்கிய பாகம் வகிப்பதால், கிறிஸ்தவர்கள் அவற்றில் பங்குகொள்வதில்லை. இதனால் கிறிஸ்தவர்கள் இன்பம் அனுபவிக்காத, உற்சாகமற்ற மக்கள் என்று அர்த்தமில்லை. மாறாக, உண்மை கடவுளை வணங்குகிறவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பைபிள் திரும்பத்திரும்ப சொல்கிறது; அதுவும் மகிழ்ச்சியாக இருக்க பல காரணங்களை குறிப்பிடுகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (உபாகமம் 26:10, 11; சங்கீதம் 32:11; நீதிமொழிகள் 5:15-19; பிரசங்கி 3:22; 11:9) உணவும் பானமும் பெரும்பாலும் மகிழ்ச்சியுடன் சம்பந்தப்பட்டிருப்பதையும் பைபிள் ஒத்துக்கொள்கிறது.—சங்கீதம் 104:15; பிரசங்கி 9:7அ.
-
-
கிறிஸ்தவர்கள் புதுவருட கொண்டாட்டங்களில் பங்குகொள்ளலாமா?விழித்தெழு!—2002 | பிப்ரவரி 8
-
-
a ‘களியாட்டத்தையும் குடிவெறியையும்’ பற்றி பவுல் குறிப்பிட்டது, புதுவருட கொண்டாட்டங்களில் நடந்தவற்றையும் உட்படுத்தியிருக்கலாம், ஏனென்றால் ரோமில் முதல் நூற்றாண்டில் இவை பிரபலமாக இருந்தன.
-