உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவது
“மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் [“உண்மைப் பற்றுறுதியிலும்,” NW] தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்.”—எபேசியர் 4:24.
1. நாம் ஏன் யெகோவா தேவனுக்கு உண்மைப் பற்றுறுதியைக் காண்பிக்க கடமைப்பட்டிருக்கிறோம்?
உ ண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவது அநேக அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அதில் அதிமுக்கியமானது யெகோவா தேவனுக்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவதாகும். உண்மையாகவே, யெகோவா யார், அவர் நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை முன்னிட்டும், அவருக்கு நாம் நம்மை ஒப்புக்கொடுத்திருப்பதன் காரணமாகவும், நாம் அவருக்கு உண்மைப் பற்றுறுதியைக் காண்பிக்க கடமைப்பட்டிருக்கிறோம். யெகோவா தேவனுக்கு நாம் எவ்வாறு உண்மைப் பற்றுறுதியை வெளிக்காட்டலாம்? யெகோவாவின் நீதியுள்ள நியமங்களுக்கு உண்மைப் பற்றுறுதியை காண்பிப்பது ஒரு பிரதான வழியாகும்.
2, 3. உண்மைப் பற்றுறுதிக்கும் நீதிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
2 அந்தச் சவாலில் வெற்றிபெறுவதற்கு, 1 பேதுரு 1:15, 16-ல் காணப்படும் வார்த்தைகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும்: “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.” யெகோவா தேவனுக்கு உண்மைப் பற்றுறுதியைக் காண்பிப்பது எல்லா சமயங்களிலும் அவருக்கு கீழ்ப்படிந்து, நம்முடைய எண்ணங்களையும் வார்த்தைகளையும் செயல்களையும் அவருடைய பரிசுத்த சித்தத்திற்கு இசைவாக கொண்டுவரவும் செய்யும். 1 தீமோத்தேயு 1:3-5-ல் நாம் கட்டளையிடப்பட்டிருப்பதுபோல் ஒரு நல்மனசாட்சியை காத்துக்கொள்வதை இது அர்த்தப்படுத்துகிறது: “கற்பனையின் பொருள் என்னவெனில் [வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், கட்டுக்கதைகளையும் கவனியாதபடிக்கும்] சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.” நாம் எவருமே பரிபூரணரில்லை என்பது உண்மைதான், ஆனால் நம்மால் முடிந்தவற்றில் சிறந்ததை செய்ய நாம் முயற்சி செய்யவேண்டும் அல்லவா?
3 யெகோவாவிற்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதி, நீதியுள்ள நியமங்களை சுயநலத்தோடு விட்டுக்கொடுப்பதிலிருந்து நம்மை விலகியிருக்கச் செய்யும். உண்மையில், உண்மைப் பற்றுறுதி உள்ளே ஒருவராகவும் புறம்பே ஒருவராகவும் இருப்பதிலிருந்து நம்மை விலகியிருக்கச் செய்யும். சங்கீதக்காரன் இவ்வாறு பாடும்போது உண்மைப் பற்றுறுதியைத்தான் மனதில் கொண்டிருந்தார்: “கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.” (சங்கீதம் 86:11) “அமல்படுத்தப்பட முடியாதவற்றிற்கு கீழ்ப்படிவது” என்பதாக நன்றாகவே விளக்கப்பட்டிருக்கும் ஒன்றை உண்மைப் பற்றுறுதி தேவைப்படுத்துகிறது.
4, 5. உண்மைப் பற்றுறுதி என்ன தவறான நடவடிக்கை எடுப்பதிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்?
4 யெகோவா தேவனுக்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதி அவருடைய நாமத்திற்கும் ராஜ்யத்திற்கும் இழிவை கொண்டுவரும் எந்தக் காரியத்திலிருந்தும்கூட நம்மை விலகியிருக்கச் செய்கிறது. உதாரணத்திற்கு, தகாத விதத்தில் ஒரு உலகப்பிரகாரமான சட்ட நீதிமன்றத்தை நாடுமளவிற்கு இரண்டு கிறிஸ்தவர்கள் ஒருமுறை ஒருவரோடொருவர் அப்படிப்பட்ட பிரச்சினைக்கு ஆளானார்கள். நீதிபதி கேட்டார், ‘நீங்கள் இருவரும் யெகோவாவின் சாட்சிகளா?’ தெளிவாகவே, ஏன் அவர்கள் இருவரும் நீதிமன்றத்திலிருந்தனர் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது என்னே ஒரு நிந்தையாயிருந்தது! யெகோவா தேவனுக்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதி அந்தச் சகோதரர்களை அப்போஸ்தலனாகிய பவுலின் இந்த அறிவுரைக்கு செவிசாய்க்கும்படி செய்திருக்கக்கூடும்: “நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?” (1 கொரிந்தியர் 6:7) நிச்சயமாகவே, யெகோவாவிற்கும் அவருடைய அமைப்பிற்கும் நிந்தையை கொண்டுவருவதைப் பார்க்கிலும் தனிப்பட்ட இழப்பை அனுபவிப்பதே யெகோவா தேவனுக்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதியின் போக்காகும்.
5 யெகோவா தேவனுக்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதி மனித பயத்திற்கு வளைந்துகொடுக்காததையும்கூட உட்படுத்துகிறது. “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.” (நீதிமொழிகள் 29:25) இவ்வாறு, துன்புறுத்துதலை எதிர்ப்படும்போது நாம் விட்டுக்கொடுப்பதில்லை, ஆனால் முன்னாள் சோவியத் யூனியனிலும் மலாவியிலும் எதியோபியாவிலும் மற்ற எண்ணிலடங்கா நாடுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் வைத்திருக்கும் முன்மாதிரியை நாம் பின்பற்றுவோம்.
6. உண்மைப் பற்றுறுதி யாரோடு கூட்டுறவு கொள்வதிலிருந்து நம்மை விலகியிருக்கச் செய்யும்?
6 நாம் யெகோவா தேவனுக்கு உண்மைப் பற்றுறுதியுடன் இருந்தால், அவருக்கு சத்துருக்களாயிருக்கும் எவருடனும் நண்பராவதை நாம் தவிர்ப்போம். ஆகவேதான் சீஷனாகிய யாக்கோபு எழுதினார்: “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” (யாக்கோபு 4:4) “கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ? முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்,” என்று தாவீது ராஜா சொன்னபோது அவர் நிரூபணம் செய்த அந்த உண்மைப் பற்றுறுதியை கொண்டிருக்க நாம் விரும்புகிறோம். (சங்கீதம் 139:21, 22) வேண்டுமென்றே பாவம் செய்யக்கூடிய எந்த நபரிடமும் தோழமைகொள்ள நாம் விரும்புவதில்லை, ஏனெனில் அவர்களோடு எதையுமே நாம் பொதுவாக கொண்டிருப்பதில்லை. அப்படிப்பட்ட யெகோவாவின் விரோதிகள் எவருடனும், நேரடியாகவோ அல்லது தொலைக்காட்சி சாதனத்தின் மூலமாகவோ, தோழமைகொள்வதிலிருந்து கடவுளுக்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதி நம்மை விலகியிருக்கச் செய்யும் அல்லவா?
யெகோவாவுக்காக வாதாட வருவது
7. யெகோவாவின் சம்பந்தமாக என்ன செய்யும்படி உண்மைப் பற்றுறுதி நமக்கு உதவும், எலிகூ இதை எவ்வாறு செய்தார்?
7 யெகோவாவுக்காக வாதாட வருவதற்கு உண்மைப் பற்றுறுதி நம்மை தூண்டுவிக்கும். இதில் என்னே ஒரு நல்ல முன்மாதிரியை எலிகூவில் நாம் கொண்டிருக்கிறோம்! யோபு 32:2, 3 நமக்கு சொல்கிறது: “எலிகூவுக்குக் கோபம்மூண்டது: யோபு, தேவனைப்பார்க்கிலும் தன்னைத் தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது. கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று [“கடவுளை துன்மார்க்கரென்று,” NW] தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.” யோபு புத்தகத்தில் அதிகாரங்கள் 32-லிருந்து 37 வரையாக, எலிகூ யெகோவாவுக்காக வாதாட வருகிறார். உதாரணத்திற்கு, அவர் இவ்வாறு சொன்னார்: “நான் பேசிமுடியுமட்டும் சற்றே பொறும்; இன்னும் தேவன்பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன். . . . என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன். . . . அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமலிருப்பார்.”—யோபு 36:2-7.
8. நாம் யெகோவாவுக்காக வாதாட வருவதற்கு என்ன தேவை இருக்கிறது?
8 யெகோவாவுக்காக வாதாட வருவதற்கான தேவை என்ன? இன்று, நம்முடைய கடவுளாகிய யெகோவா அநேக வழிகளில் தூஷிக்கப்படுகிறார். அவர் இல்லை எனவும், அவர் திரித்துவத்தின் ஒரு பாகம் எனவும், எரிநரகத்தில் அவர் நித்தியமாக ஜனங்களை வாதிக்கிறார் எனவும், இந்த உலகத்தை மாற்றுவதற்கு உறுதியற்ற முயற்சி எடுக்கிறார் எனவும், மனிதவர்க்கத்தைக் குறித்து அவர் அக்கறையெடுப்பதில்லை எனவும், இது போன்ற மற்றவையும் சொல்லப்படுகின்றன. அவருக்காக வாதாட வருவதன் மூலமாகவும், யெகோவா உண்மையிலேயே இருக்கிறார் என்பதை நிரூபிப்பதன் மூலமாகவும், அவர் ஞானமுள்ள, நீதியுள்ள, சர்வவல்லமையுள்ள, அன்புள்ள கடவுளென்பதை நிரூபிப்பதன் மூலமாகவும், அவர் எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தை வைத்திருக்கிறார் என்பதையும் அவருடைய ஏற்ற காலம் வரும்போது, அவர் எல்லா துன்மார்க்கத்துக்கும் ஒரு முடிவை கொண்டுவந்து இந்த முழு பூமியையும் ஒரு பரதீஸாக ஆக்குவார் என்பதையும் நிரூபிப்பதன் மூலமாகவும் அவருக்கு நாம் உண்மைப் பற்றுறுதியைக் காண்பிப்போம். (பிரசங்கி 3:1) யெகோவாவின் நாமத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் சாட்சி பகருவதற்கு இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் பயன்படுத்திக்கொள்வதை இது தேவைப்படுத்துகிறது.
யெகோவாவின் அமைப்பிற்கு உண்மைப் பற்றுறுதியை காண்பித்தல்
9. எந்தக் காரியங்களின்பேரில் சிலர் தங்கள் உண்மைப் பற்றுறுதி குறைவுபடுவதை காண்பித்திருக்கின்றனர்?
9 யெகோவாவின் காணக்கூடிய அமைப்பிற்கு உண்மைப் பற்றுறுதியை காண்பிக்கும் விஷயத்திற்கு நாம் இப்பொழுது வருகிறோம். நிச்சயமாகவே, கிறிஸ்தவ சபை ஆவிக்குரிய பிரகாரமாக எதன் மூலம் போஷிக்கப்படுகிறதோ அந்த ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரரையும்’ உட்படுத்தி, அந்த அமைப்பிற்கு உண்மைப் பற்றுறுதியைக் காண்பிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். (மத்தேயு 24:45-47) ஒருவேளை நம்மால் புரிந்துகொள்ள முடியாத அல்லது அந்தத் தருணத்தில் ஒப்புக்கொள்ள முடியாத ஏதோவொன்று உவாட்ச் டவர் பிரசுரங்களில் வந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாம் என்ன செய்வோம்? இடறலடைந்து அமைப்பை விட்டு வெளியே செல்வோமா? பல வருடங்களுக்கு முன்பாக, காவற்கோபுரம் புதிய உடன்படிக்கையை ஆயிர வருட அரசாட்சிக்குப் பொருத்தியபோது சிலர் இவ்வாறுதான் செய்தார்கள். காவற்கோபுரம் ஒருமுறை நடுநிலை பிரச்சினையின்பேரில் சொன்னதைக் குறித்து மற்றவர்கள் இடறலடைந்தனர். இந்தக் காரியங்களால் இடறலடைந்தவர்கள் அமைப்பிற்கும் தங்களுடைய சகோதரர்களுக்கும் உண்மைப் பற்றுறுதியுடன் இருந்திருந்தார்களென்றால், இந்தக் காரியங்களை தெளிவாக்க யெகோவாவுக்காக காத்திருந்திருப்பார்கள், அவருடைய ஏற்ற காலத்தில் யெகோவா அதை செய்தார். இவ்வாறாக, உண்மையும் விவேகமுமுள்ள ஊழியரால் கூடுதலான புரிந்துகொள்ளுதல் பிரசுரிக்கப்படும்வரையாக பொறுமையுடன் காத்துக்கொண்டிருப்பதை உண்மைப் பற்றுறுதி உட்படுத்துகிறது.
10. எதைக் குறித்து ஆவல் உடையவர்களாக இருப்பதிலிருந்து உண்மைப் பற்றுறுதி நம்மை விலகியிருக்கச் செய்யும்?
10 யெகோவாவின் காணக்கூடிய அமைப்பிற்கு காண்பிக்கப்படும் உண்மைப் பற்றுறுதி விசுவாசதுரோகத்தை விலக்குவதையும்கூட அர்த்தப்படுத்துகிறது. உண்மைப் பற்றுறுதியுள்ள கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட விசுவாசதுரோகிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆவல் உடையவர்களாக இருக்கமாட்டார்கள். பூமியிலே தம்முடைய வேலையை வழிநடத்துவதற்காக யெகோவா தேவனால் பயன்படுத்தப்படுகிறவர்கள் பரிபூரணரில்லை என்பது உண்மைதான். ஆனால் கடவுளுடைய வார்த்தை நம்மை என்ன செய்யும்படி சொல்கிறது? கடவுளுடைய அமைப்பை விட்டுச்செல்ல வேண்டுமென்று சொல்கிறதா? இல்லை. சகோதர சிநேகம் அதற்கு நாம் உண்மைப் பற்றுறுதியுடன் இருக்கும்படி செய்ய வேண்டும், நாம் தொடர்ந்து ‘சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூரவேண்டும்.’—1 பேதுரு 1:22.
உண்மைப் பற்றுறுதியுள்ள மூப்பர்களுக்கு உண்மைப் பற்றுறுதியைக் காண்பிப்பது
11. என்ன எதிர்மறையான யோசனையிலிருந்து காத்துக்கொள்ள உண்மைப் பற்றுறுதி நமக்கு உதவும்?
11 நமக்கு புரிந்துகொள்வதற்கு கடினமாயிருக்கும் ஏதோவொன்று சபையிலே சொல்லப்பட்டால் அல்லது செய்யப்பட்டால், உண்மைப் பற்றுறுதி நாம் நியாயந்தீர்ப்பவர்களாயிருப்பதிலிருந்து நம்மை விலகியிருக்கச் செய்யும். மேலுமாக, அது ஒருவேளை சொந்த அபிப்பிராயத்தைப் பொறுத்தது என்ற நிலைநிற்கையை எடுக்க அது நமக்கு உதவும். நியமிக்கப்பட்டிருக்கும் மூப்பர்களுடைய மற்றும் மற்ற உடன் விசுவாசிகளுடைய குறைபாடுகளுக்கு பதிலாக அவர்களுடைய நல்ல பண்புகளின்பேரில் தொடர்ந்து கவனத்தைச் செலுத்துவது அதிக மேலானதாக இருக்குமல்லவா? ஆம், அப்படிப்பட்ட எல்லா எதிர்மறையான யோசனைகளுக்கு எதிராக நாம் கவனமாயிருக்க விரும்புகிறோம், ஏனென்றால் அது உண்மைப் பற்றுறுதியற்ற தன்மையோடு தொடர்புடையதாயிருக்கிறது! ‘ஒருவனையும் தூஷியாமலிருக்க வேண்டும்’ என்ற பவுலின் கட்டளைக்கு கீழ்ப்படியவும் உண்மைப் பற்றுறுதி நமக்கு உதவி செய்யும்.—தீத்து 3:1, 2.
12, 13. என்ன குறிப்பிட்ட சவால்களை மூப்பர்கள் எதிர்ப்படவேண்டும்?
12 உண்மைப் பற்றுறுதி குறிப்பிட்ட சவால்களை மூப்பர்களுக்கு அளிக்கிறது. இப்படிப்பட்ட சவால்களில் ஒன்று நம்பிக்கையுடன் தன்னிடம் சொல்லப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லாதிருப்பது. சபையின் ஒரு அங்கத்தினர் மூப்பரிடம் நம்பிக்கையுடன் சொந்த விஷயங்களை சொல்லலாம். அதைப் பிறர் அறியாமல் காத்துக்கொள்வதன்பேரிலுள்ள நியமத்தை மீறுவதிலிருந்து உண்மைப் பற்றுறுதி அந்த மூப்பரை விலகியிருக்கச் செய்யும். நீதிமொழிகள் 25:9-ல் உள்ள ஆலோசனைக்கு அவர் செவிசாய்ப்பார்: “மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.” இது சொந்த மனைவியையும் உட்படுத்துகிறது!
13 மூப்பர்கள் உண்மைப் பற்றுறுதியின் மற்ற சோதனைகளிலும்கூட வெற்றிபெறவேண்டியிருக்கிறது. அவர்கள் மனிதரை திருப்தி செய்பவர்களாக இருப்பார்களா, அல்லது சொந்த உறவினர்களாகவோ அல்லது நெருங்கிய நண்பர்களாகவோ இருந்தாலும்கூட சரிசெய்தல் தேவைப்படுவோருக்கு தைரியத்தோடும் சாந்தத்தோடும் உதவுபவர்களாக இருப்பார்களா? நம்மில் மூப்பர்களாயிருப்பவர்கள் ஆவிக்குரிய ஆதரவு தேவைப்படும் எவருக்கும் உதவி செய்வதற்கு முயற்சி செய்ய யெகோவாவின் அமைப்பிற்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதி தூண்டுவிக்கும். (கலாத்தியர் 6:1, 2) நாம் தயவாக இருந்தாலும், உண்மைப் பற்றுறுதி, அப்போஸ்தலனாகிய பேதுருவிடம் பவுல் ஒளிவுமறைவின்றி பேசினதுபோல, உடன்மூப்பர்களிடம் நம்மை பேசச் செய்யும். (கலாத்தியர் 2:11-14) மறுபட்சத்தில், ஞானமற்றவர்களாய் நடந்துகொள்வதன் மூலம் அல்லது பட்சபாதம் காண்பிப்பதன் மூலம் அல்லது அவர்களுடைய அதிகாரத்தை வேறு விதத்தில் துர்ப்பிரயோகம் செய்வதன் மூலம் தங்களுடைய பராமரிப்பின்கீழ் இருப்போர் கடவுளுடைய அமைப்பிற்கு உண்மைப் பற்றுறுதியோடிருப்பதை கடினமாக்காதபடிக்கு முன்ஜாக்கிரதையாயிருப்பதற்கு கண்காணிகள் கவனமுள்ளவர்களாயிருக்க விரும்புவர்.—பிலிப்பியர் 4:5.
14, 15. சபையிலுள்ள அங்கத்தினர்களின் உண்மைப் பற்றுறுதியை என்ன அம்சங்கள் சோதிக்கக்கூடும்?
14 சபைக்கும் அதனுடைய மூப்பர்களுக்கும் காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவதன் காரியத்தில் இன்னும் மற்ற அம்சங்கள் இருக்கின்றன. சபையிலே தொந்தரவு கொடுப்பதைப்போல தோன்றும் நிலைமைகள் இருக்குமேயென்றால், யெகோவாவிற்கும் அவரை பிரதிநிதித்துவம் செய்பவர்களுக்கும் உண்மைப் பற்றுறுதியை வெளிக்காட்ட இது நமக்கு வாய்ப்பளிக்கிறது. (ஆங்கில காவற்கோபுரம், ஜூன் 15, 1987, பக்கங்கள் 15-17-ஐ காண்க.) சபை நீக்கம் நடந்திருந்தால், எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு போதுமான காரணங்கள் இருந்தனவா என்பதை ஊகிக்க முயலாமல், மூப்பர்களை ஆதரிப்பதை உண்மைப் பற்றுறுதி தேவைப்படுத்துகிறது.
15 நம்முடைய சூழ்நிலைமைக்கும் திறமைக்கும் தக்கவாறு எல்லா ஐந்து வாராந்தர கூட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்பதை சபைக்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதி தேவைப்படுத்துகிறது. நாம் அதற்கு ஒழுங்காக செல்வது மாத்திரமல்லாமல் அவற்றிற்காக தயார் செய்வதையும் வாய்ப்பைப் பொறுத்து கட்டியெழுப்பும் குறிப்புகளை கூறுவதையும் உண்மைப் பற்றுறுதி தேவைப்படுத்துகிறது.—எபிரெயர் 10:24, 25.
திருமணத்தில் உண்மைப் பற்றுறுதி
16, 17. திருமணமான கிறிஸ்தவர்கள் என்ன உண்மைப் பற்றுறுதியின் சவால்களை எதிர்ப்பட வேண்டும்?
16 வேறு எவருக்கும் நாம் உண்மைப் பற்றுறுதியுடனிருக்க கடமைப்பட்டிருக்கிறோம்? நமக்கு திருமணமாகியிருந்தால், திருமண வாக்குறுதிகளை முன்னிட்டு, நம்முடைய திருமணத் துணைக்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதியின் சவாலில் நாம் வெற்றிபெற வேண்டும். நம்முடைய சொந்த மனைவியை அல்லது கணவனைக்காட்டிலும் வேறு பெண்களிடமோ அல்லது ஆண்களிடமோ அதிக பாசமாயிருக்கும் தவறிலிருந்து திருமணத்துணைக்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதி நம்மை விலகியிருக்கச் செய்யும். நம்முடைய துணையின் பலவீனங்களை அல்லது குறைபாடுகளைப் பகிரங்கப்படுத்தாமலிருப்பதை துணைவருக்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதி தேவைப்படுத்துகிறது. பொன் விதிக்கு ஒத்திசைவாக நாம் செய்ய வேண்டிய ஒன்றாகிய நம்முடைய துணைவருடன் பேச்சுத்தொடர்புகொள்ளும் வழிகளை திறந்துவைக்க கடினமாக உழைப்பதைப் பார்க்கிலும் மற்றவர்களிடம் குறைகூறுவது சுலபமானது. (மத்தேயு 7:12) உண்மையில், திருமணமான நிலை நம்முடைய கிறிஸ்தவ உண்மைப் பற்றுறுதிக்கு ஒரு உண்மையான சவாலை அளிக்கிறது.
17 இந்த உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவதற்கு, படுமோசமான ஒழுக்கக்கேட்டில் குற்றமுள்ளவர்களாயிருப்பதை தவிர்ப்பது மாத்திரமல்லாமல் நம்முடைய யோசனைகளையும் உணர்ச்சிகளையும் காத்துக்கொள்ளவும் வேண்டும். (சங்கீதம் 19:14) உதாரணத்திற்கு, நம்முடைய வஞ்சிக்கிற இருதயங்கள் இன்பத்துக்கும் கிளர்ச்சிக்கும் பேராசைப்பட்டால், ரசிப்பதிலிருந்து விரும்புவதற்கு சுயநலத்தோடு செல்வது நமக்கு மிகவும் சுலபமாயிருக்கும். திருமண உண்மைத்தன்மையை துரிதப்படுத்தியவராக, அடையாளப்பூர்வமாக, ‘உன் துரவில் ஊறுகிற ஜலத்தை பானம்பண்ணு,’ என்பதாக சாலொமோன் ராஜா கணவன்மாருக்கு அறிவுரை கூறுகிறார். (நீதிமொழிகள் 5:15) இயேசு சொன்னார்: “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” (மத்தேயு 5:28) பாலுறவை தூண்டக்கூடிய காரியங்களை அனுபவிக்கும் கணவன்மார் விபசாரம் செய்ய தூண்டப்படுகின்றனர், இவ்வாறாக தங்களுடைய மனைவிமாருக்கு நம்பிக்கைதுரோகம் செய்து அவர்களுக்கு உண்மைப் பற்றுறுதியற்றவர்களாக இருக்கின்றனர். அதே காரணத்திற்காக, விபசார காட்சிகளை கையாளும் டிவி சீரியலைப் பார்ப்பதில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் ஒரு மனைவி தன்னுடைய கணவனுக்கு உண்மைப் பற்றுறுதியற்றவளாக ஆகிவிட கவர்ந்திழுக்கப்படலாம். எனினும், நம்முடைய துணைவருக்கு உண்மையிலேயே உண்மைப் பற்றுறுதியுடன் இருப்பதன் மூலமாக, நாம் திருமணப் பிணைப்பை பலப்படுத்துகிறோம், மேலுமாக யெகோவா தேவனை சந்தோஷப்படுத்தும் முயற்சியில் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்கிறோம்.
உண்மைப் பற்றுறுதியுடனிருப்பதற்கான உதவிகள்
18. எதைப் போற்றுவது உண்மைப் பற்றுறுதியுடன் இருக்க நமக்கு உதவும்?
18 யெகோவாவிற்கு, அவருடைய அமைப்பிற்கு, சபைக்கு, நம்முடைய திருமண துணைவருக்கு என்ற இந்த நான்கு அம்சங்களிலும் உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெற எது நமக்கு உதவி செய்யும்? உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவது யெகோவாவின் பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்வதோடு நெருக்கமான தொடர்புடையதாயிருக்கிறது என்பதை போற்றுவது ஒரு உதவி ஆகும். ஆம், உண்மைப் பற்றுறுதியுடன் இருப்பதன் மூலமாக யெகோவாவை சர்வலோக பேரரசர் என்பதாக நோக்குகிறோம் என்பதை நாம் காண்பிப்போம். இவ்வாறாக சுயமரியாதையையும் யெகோவாவின் புதிய உலகத்தில் நித்திய ஜீவனென்னும் நம்பிக்கையையும்கூட பெற்றுக்கொள்வோம். யெகோவாவிலிருந்து ஆரம்பித்து பைபிளிலும் வருடாந்தர புத்தகத்தின் (ஆங்கிலம்) அறிக்கைகள் உட்பட நம்முடைய உவாட்ச் டவர் பிரசுரங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் உண்மைப் பற்றுறுதியின் நல்ல உதாரணங்களை கவனிப்பதன் மூலமாக உண்மைப் பற்றுறுதியுடனிருக்க நமக்குநாமே உதவிசெய்து கொள்ளலாம்.
19. நாம் உண்மைப் பற்றுறுதியுடனிருப்பதில் விசுவாசம் என்ன பாகத்தை வகிக்கிறது?
19 யெகோவா தேவன்மீது பலமான விசுவாசமும் அவரை பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற பயமும் உண்மைப் பற்றுறுதியின் சவாலை எதிர்ப்பட நமக்கு உதவி செய்யும். கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாக படிப்பதன் மூலமாகவும் கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்வதன் மூலமாகவும் யெகோவாவின்மேல் உள்ள விசுவாசத்தையும் பயத்தையும் நாம் பலப்படுத்துவோம். எபேசியர் 4:23, 24-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் பவுலின் ஆலோசனைக்கு ஒத்திசைவாக நடக்க இது நமக்கு உதவி செய்யும்: “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.”
20. எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவிற்கும் உண்மைப் பற்றுறுதியை காண்பிக்க, நாம் கடமைப்பட்டிருக்கும் மற்ற எல்லாருக்கும் உண்மைப் பற்றுறுதியுடனிருக்க எந்தக் குணாதிசயம் நமக்கு உதவும்?
20 யெகோவாவின் குணாதிசயங்களைப் போற்றுவது உண்மைப் பற்றுறுதியுள்ளவர்களாயிருக்க நமக்கு உதவும். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய பரலோக தகப்பனுக்கு சுயநலமற்ற அன்பும் அவர் நமக்கு செய்திருக்கும் எல்லாவற்றிற்காக நன்றியுணர்வும், அவரை நம்முடைய முழு இருதயத்தோடு, ஆத்துமாவோடு, மனதோடு, பலத்தோடு அன்புகூருவதும் அவருக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளவர்களாயிருக்க நமக்கு உதவும். மேலுமாக, தம்மை பின்பற்றுபவர்களை அடையாளங்காட்டும் என்பதாக இயேசு சொன்ன அன்பை கொண்டிருப்பது சபையிலும் நம்முடைய குடும்பத்திலும் இருக்கக்கூடிய எல்லா கிறிஸ்தவர்களுக்கும் உண்மைப் பற்றுறுதியை காண்பிக்க நமக்கு உதவும். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், சுயநலமுள்ளவர்களாகவோ அல்லது சுயநலமற்றவர்களாகவோ இருக்கும் ஒரு விஷயமாயிருக்கிறது. உண்மைப் பற்றுறுதியற்ற தன்மை சுயநலத்தை அர்த்தப்படுத்துகிறது. உண்மைப் பற்றுறுதி சுயநலமற்ற தன்மையை அர்த்தப்படுத்தும்.—மாற்கு 12:30, 31; யோவான் 13:34, 35.
21. உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவதன் விஷயம் எவ்வாறு சுருக்கமாக சொல்லப்படலாம்?
21 சுருக்கமாக சொன்னால்: உண்மைப் பற்றுறுதி என்பது யெகோவா தேவனாலும், இயேசு கிறிஸ்துவாலும், யெகோவாவின் எல்லா உண்மையான ஊழியர்களாலும் வெளிக்காட்டப்படும் உயர்ந்த குணாதிசயமாகும். யெகோவா தேவனோடு ஒரு நல்ல உறவை காத்துக்கொள்ள வேண்டும்; அவருடைய நீதியுள்ள தேவைகளுக்கு ஏற்றவாறு வாழ்வதன் மூலமாகவும், அவருடைய எதிரிகளோடு எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதன் மூலமாகவும், வழக்கமான மற்றும் சந்தர்ப்பசாட்சி கொடுப்பதன் மூலமாக யெகோவாவிற்காக வாதாட வருவதன் மூலமாகவும் நாம் அவருக்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெற வேண்டும். யெகோவாவின் காணக்கூடிய அமைப்பிற்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதியின் சவாலிலும்கூட நாம் வெற்றிபெற வேண்டும். நம்முடைய சபைகளுக்கும் நம்முடைய திருமணத் துணைவர்களுக்கும் நாம் உண்மைப் பற்றுறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும். உண்மைப் பற்றுறுதியின் சவாலை வெற்றிகரமாக எதிர்ப்படுவதன் மூலமாக, யெகோவாவின் பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்வதில் நாம் பங்குகொள்வோம், மேலுமாக விவாதத்தில் அவருடைய பக்கம் நிலைநிற்கை எடுப்போம். இவ்வாறாக அவருடைய தயவையும் நித்திய ஜீவனென்னும் பரிசையும் பெற்றுக்கொள்வோம். தேவபக்தியைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுலினால் சொல்லப்பட்டது, உண்மைப் பற்றுறுதியின் சவாலில் நாம் வெற்றிபெறவேண்டியதற்கும் சொல்லப்படலாம். இந்த ஜீவனுக்கும் இதற்கு பின்வரும் ஜீவனுக்கும் அது பிரயோஜனமுள்ளதாயிருக்கும்.—சங்கீதம் 18:25; 1 தீமோத்தேயு 4:8.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ கடவுளுக்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதியின் சவாலில் எந்த வழிகளில் நாம் வெற்றிபெறலாம்?
◻ யெகோவாவின் அமைப்பிற்கு உண்மைப் பற்றுறுதியைக் காண்பிப்பது எதை நம்மிடத்திலிருந்து தேவைப்படுத்துகிறது?
◻ உண்மைப் பற்றுறுதியின் சவாலில் மூப்பர்கள் எவ்வாறு வெற்றிபெற முடியும்?
◻ திருமணமான கிறிஸ்தவர்கள் உண்மைப் பற்றுறுதியை உட்படுத்திய என்ன சவாலை எதிர்ப்பட வேண்டும்?
◻ உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெற என்ன குணாதிசயங்கள் நமக்கு உதவும்?
[பக்கம் 17-ன் படம்]
சபை அங்கத்தினர்களுக்கு உண்மைப் பற்றுறுதியுடனிருப்பது இரகசியமான விஷயங்களை வெளிப்படுத்துவதிலிருந்து மூப்பர்களை விலகியிருக்கச் செய்யும்
[பக்கம் 18-ன் படங்கள்]
ஒருவருடைய துணைவருக்கு உண்மைப் பற்றுறுதியைக் காண்பிப்பது திருமணப் பிணைப்பைப் பலப்படுத்துகிறது