உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கடவுளை வணங்கும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்தல்
    காவற்கோபுரம்—1989 | ஆகஸ்ட் 1
    • “அவிசுவாசியோ சாமானியமானவனோ உள்ளே வரும்போது . . . அவன் இருதய அந்தரங்கங்களும் வெளியாகும்; அவன் முகங்குப்புற விழுந்து கடவுளைப் பணிந்துகொள்”வான்.—1 கொரிந்தியர் 14:24, 25, தி.மொ.

  • கடவுளை வணங்கும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்தல்
    காவற்கோபுரம்—1989 | ஆகஸ்ட் 1
    • ‘அவிசுவாசிகளுக்கும் சாமானியமான ஆட்களுக்கும்’ உதவிசெய்தல்

      4 இன்று யெகோவாவின் சாட்சிகளும் “சகல ஜாதிகளின் ஜனங்களையும் சீஷராக்கி, அவர்களை முழுக்காட்டுங்கள்,” என்ற இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள். (மத்தேயு 28:19, 20, NW) ஏற்கும் பாங்குள்ள இருதயங்களில் சத்தியத்தின் விதைகளை நட்ட பின்பு, அவர்கள் திரும்பிச் சென்று அவற்றிற்கு நீர்ப்பாய்ச்சுகிறார்கள். (1 கொரிந்தியர் 3:5-9; மத்தேயு 13:19, 23) ஆட்கள் தங்கள் கேள்விகளுக்குப் பதிலைப் பெற்று பைபிள் சத்தியங்களை கற்றுக்கொள்ளும்படி சாட்சிகள் வாராந்தர இலவச பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு முன்வருகின்றனர். இத்தகைய ஆட்கள், கொரிந்துவில் “அவிசுவாசிகள்” செய்ததைப்போல், அவ்விடத்து யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களுக்கு வரும்படியும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் பைபிள் படித்துக்கொண்டும் கூட்டங்களுக்கு வந்துகொண்டுமிருக்கும் ஆட்களை யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு கருதவேண்டும்?

      5 அவர்கள் கடவுளிடம் நெருங்கிவருவதைக் காண்பதில் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். எனினும், அவர்கள் இன்னும் முழுக்காட்டப்பட்ட விசுவாசிகள் அல்லர் என்பதை நாம் மனதில் வைக்கிறோம். முன்வந்தக் கட்டுரையில் ஆதாரங்கொண்ட இரண்டு பாடங்களையும் மனதில் வையுங்கள். (1) கடவுளுடைய ஜனங்களைச் சுற்றியிருந்து சில சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தபோதிலும், யூதமதம் மாறிய விருத்தசேதனஞ் செய்யப்பட்டவர்களாயிராத, வணக்கத்தில் சகோதரராயிராத அந்நிய குடியிருப்பாளர்களிடம் இஸ்ரவேலர் எச்சரிக்கையுடன் இருந்தார்கள். (2) கொரிந்திய கிறிஸ்தவர்கள், ‘அவிசுவாசிகளும் சாமானியமான ஆட்களுமான’வர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்கையில், பவுல் பின்வருமாறு சொன்ன வார்த்தைகளினிமித்தம், எச்சரிக்கையுடன் இருந்தனர்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது?”—2 கொரிந்தியர் 6:14.

      6 ஆகவே ‘அவிசுவாசிகளையும் சாமானியமான ஆட்களையும்’ நாம் வரவேற்கையில், அவர்கள் இன்னும் கடவுளுடைய தராதரங்களைப் பூர்த்தி செய்தில்லை என்ற உணர்வுடனிருக்கிறோம். 1 கொரிந்தியர் 14:24, 25-ல் பைபிள் குறிப்பிட்டுக் காட்டுகிறபடி இத்தகையோர் தாங்கள் கற்கும் காரியங்களால் ‘நுட்பமாய் ஆராயப்படவும்’ மேலும் ‘கண்டிக்கப்படவும்.’ தேவைப்படலாம். இத்தகைய கண்டனம் நீதிவிசாரணை வகையானதல்ல; அவர்கள் இன்னும் சபையின் முழுக்காட்டப்பட்ட உறுப்பினரல்லாததனால் அவர்கள் சபையின் நீதிவிசாரணைக் குழுவுக்குமுன் அழைக்கப்படுகிறதில்லை. அதற்கு மாறாக, தாங்கள் கற்பவற்றின் பலனாக, எந்தத் தன்னல மற்றும் ஒழுக்கக்கேட்டு வழிகளையும் கடவுள் கண்டனஞ் செய்கிறார் என்று இந்தப் புதியவர்கள் உறுதியுடன் நம்புவோராகின்றனர்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்