மனமகிழ்ச்சியுடன் கொடுப்போரை யெகோவா நேசிக்கிறார்
“அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; சந்தோஷமாகக் [மனமகிழ்ச்சியுடன், NW] கொடுக்கிறவனில் கடவுள் அன்புகூருகிறார்.” —2 கொரிந்தியர் 9:7, தி.மொ.
1. எவ்வாறு கடவுளும் கிறிஸ்துவும் மனமகிழ்ச்சியுடன் கொடுப்போராக இருக்கின்றனர்?
யெகோவாவே முதலாவதாக மனமகிழ்ச்சியுடன் கொடுத்தவர். அவர் சந்தோஷமாய்த் தம்முடைய ஒரேபேறான குமாரனுக்கு உயிரைக் கொடுத்து தேவதூதர்களையும் மனிதவர்க்கத்தையும் உண்டாயிருக்கச் செய்ய அவரைப் பயன்படுத்தினார். (நீதிமொழிகள் 8:30, 31; கொலோசெயர் 1:13-17) கடவுள் நமக்கு உயிரையும் சுவாசத்தையும், வானத்திலிருந்து மழை மற்றும் செழிப்புதரும் பருவங்கள் உட்பட எல்லா காரியங்களையும் கொடுத்து, நம்முடைய இருதயங்களை நல்ல மகிழ்ச்சியால் நிரப்பினார். (அப்போஸ்தலர் 14:17; 17:25) நிச்சயமாகவே, கடவுளும் அவருடைய குமாரன், இயேசு கிறிஸ்துவும், மனமகிழ்ச்சியுடன் கொடுப்பவர்கள். தன்னலமற்ற மனப்பான்மையுடன் அவர்கள் சந்தோஷமாய்க் கொடுக்கிறார்கள். யெகோவா மனிதவர்க்க உலகத்தை அவ்வளவாய் நேசித்ததனால் “தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி”னார். மேலும் இயேசு மனத்தயக்கமில்லாமல் ‘அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார்.’—யோவான் 3:16; மத்தேயு 20:28.
2 ஆகையால், கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் ஊழியராயிருப்போர், மனமகிழ்ச்சியுடன் கொடுப்போராக இருக்க வேண்டும். இத்தகைய கொடுப்பதை அப்போஸ்தலன் பவுல் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பொ.ச. 55 போல் எழுதின தன் இரண்டாவது நிருபத்தில் ஊக்கமூட்டினான். முக்கியமாய் எருசலேமிலும் யூதேயாவிலும் தேவையிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்வதற்குத் தாங்களாக மனமார்ந்து கொடுத்த மற்றும் தனிப்பட்டவர்கள் அளித்த நன்கொடைகளைக் குறித்து, பவுல் பின்வருமாறு சொன்னதாகத் தெரிகிறது: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; சந்தோஷமாகக் கொடுக்கிறவனில் கடவுள் அன்புகூருகிறார்.” (2 கொரிந்தியர் 9:7, தி.மொ.; ரோமர் 15:26; 1 கொரிந்தியர் 16:1, 2; கலாத்தியர் 2:10) கொடுக்கும் வாய்ப்புகளுக்குக் கடவுளுடைய ஜனங்கள் எவ்வாறு பிரதிபலித்திருக்கின்றனர்? கொடுப்பதன்பேரில் பவுல் கொடுத்த அறிவுரையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
விருப்பமுள்ள இருதயத்தால் தூண்டப்பட்டு
3. யெகோவாவின் வணக்கத்துக்காக ஆசரிப்பு கூடாரத்தை அமைப்பதற்கு இஸ்ரவேலர் எந்த அளவுக்கு உதவி அளித்தனர்?
3 விருப்பமுள்ள இருதயம் கடவுளுடைய ஜனங்கள் தெய்வீக நோக்கத்தை ஆதரிப்பதில் தங்களையும் தங்கள் பொருளாதார வாய்ப்புகளையும் மனப்பூர்வமாய் அளிக்கும்படி தூண்டுவிக்கிறது. உதாரணமாக, மோசேயின் நாளிலிருந்த இஸ்ரவேலர்கள் யெகோவாவின் வணக்கத்துக்காக ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்குச் சந்தோஷமாய்ப் பொருளுதவி அளித்தார்கள். வெள்ளாட்டு ரோமத்தை நூல்நூற்கும்படி பெண்கள் சிலரை அவர்களுடைய இருதயம் தூண்டுவித்தது, அதேசமயத்தில் ஆண்கள் சிலர் கைத்திறமுள்ள வேலைகளைச் செய்வோராகச் சேவித்தனர். ஜனங்கள் தாங்களாக மனப்பூர்வமாய் ‘யெகோவாவுக்கு அளிக்கும் காணிக்கையாகப்’ பொன், வெள்ளி, மரம், துணி, மற்றும் வேறு பொருட்களை மனமகிழ்ச்சியுடன் கொடுத்தார்கள். (யாத்திராகமம் 35:4-35, தி.மொ.) அவர்கள் அவ்வளவு தாராள மனப்பான்மையுடன் இருந்ததால் அவர்கள் காணிக்கையாகக் கொடுத்தப் பொருட்கள் “செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமானதாகமாத்திரமல்ல அதற்கு அதிகமாகவும் இருந்தது.”—யாத்திராகமம் 36:4-7, தி.மொ.
4. எந்த மனப்பான்மையுடன் தாவீதும் மற்றவர்களும் ஆலயத்துக்காக நன்கொடையளித்தனர்?
4 பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால், அரசன் தாவீது தன் குமாரன் சாலொமோனால் கட்டப்படவிருந்த யெகோவாவின் ஆலயத்துக்காக மிக ஏராளமாய் நன்கொடை அளித்தான். தாவீது ‘கடவுளின் ஆலயத்தின்மேல் கொண்ட ஆசையினால்,’ அவன் தனக்குச் “சொந்தமான” பொன்னையும் வெள்ளியையும் கொடுத்துவிட்டான். ராஜ சேவைத் தலைவர்களும், சேனைத்தலைவர்களும், மற்றவர்களும் ‘யெகோவாவுக்கு மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.’ இதன் பலன் என்ன? “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததுபற்றி ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; மனதார சந்தோஷமாய் யெகோவாவுக்குக் கொடுத்தார்கள்”! (1 தினவர்த்தமானம் [நாளாகமம்] 29:3-9, தி.மொ.) அவர்கள் மனமகிழ்ச்சியுடன் கொடுத்தவர்கள்.
5 நூற்றாண்டுகளினூடே, இஸ்ரவேலர் பொருளளித்து ஆசரிப்புக் கூடாரத்தையும், பிற்பட்ட ஆலயங்களையும், அங்கு செய்யப்பட்ட ஆசாரிய மற்றும் லேவிய சேவைகளையும் பேணிவரும் சிலாக்கியமுடையோராக இருந்தனர். உதாரணமாக, நெகேமியாவின் நாளில், யூதர்கள், கடவுளுடைய வீட்டைத் தாங்கள் கவனியாதுவிடக்கூடாதென உணர்ந்து, தூய்மையான வணக்கத்தைக் காத்துவருவதற்குக் காணிக்கைகளைக் கொடுக்கும்படி தீர்மானித்தார்கள். (நெகேமியா 10:32-39) இவ்வாறே இன்றும், யெகோவாவின் சாட்சிகள், கூட்டம் நடத்தும் இடங்களைக் கட்டுவதற்கும் பழுதுபார்த்துக் காப்பதற்கும் உண்மையான வணக்கத்துக்கு ஆதரவளிப்பதற்கும் தாங்களாக விரும்பி நன்கொடைகளை மனமகிழ்ச்சியுடன் அளிக்கின்றனர்.
6. கிறிஸ்தவர்கள் மனமகிழ்ச்சியுடன் கொடுத்த உதாரணங்களைக் கொடுங்கள்.
6 பூர்வ கிறிஸ்தவர்கள் மனமகிழ்ச்சியுடன் கொடுப்போராயிருந்தனர். உதாரணமாக, இப்பொழுது, உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டி அனுப்பும் பயணக் கண்காணிகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் உபசரணையளிப்பதுபோலவே, காயு, ராஜ்ய அக்கறைகளின்பேரில் பயணம் செய்துகொண்டிருந்தவர்களுக்கு உபசரணைக் காட்டிவந்ததில் “ஓர் உண்மையுள்ள ஊழியத்தைச்” செய்தான். (3 யோவான் 5-8, NW) இந்தச் சகோதரர்களைச் சபைகளுக்குப் பயணப்படச் செய்வதற்கும் அவர்களுக்கு உபசரணை அளிப்பதற்கும் செலவு ஏற்படுகிறது, ஆனால் ஆவிக்குரியபிரகாரமாய் இது எவ்வளவு நற்பயனுடையது!—ரோமர் 1:11, 12.
7. பிலிப்பியர் தங்கள் பொருளாதார வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்தினர்?
7 பொதுவாகச் சபைகள் ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்கத் தங்கள் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்தினர். உதாரணமாக, பவுல் பிலிப்பியிலிருந்த விசுவாசிகளுக்குப் பின்வருமாறு கூறினான்: “நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள். உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன்.” (பிலிப்பியர் 4:15-17) பிலிப்பியர்கள் மனமகிழ்ச்சியுடன் கொடுத்தார்கள், ஆனால் என்ன மூலக் காரணங்கள் அத்தகைய மனமகிழ்ச்சியுடன் கொடுப்பதைத் தூண்டியியக்குகிறது?
மனமகிழ்ச்சியுடன் கொடுப்பதை எது தூண்டியியக்குகிறது?
8. கடவுளுடைய ஆவி அவருடைய ஜனங்களை மனமகிழ்ச்சியுடன் கொடுப்போராக இருக்கும்படி தூண்டியியக்குகிறதென்று எவ்வாறு நிரூபிப்பீர்கள்?
8 யெகோவாவின் பரிசுத்த ஆவி, அல்லது செயல்படும் சக்தி, அவருடைய ஜனங்களை மனமகிழ்ச்சியுள்ள கொடுப்போராக இருக்கும்படி தூண்டியியக்குகிறது. யூதேய கிறிஸ்தவர்கள் தேவையில் இருந்தபோது, அவர்களுக்குப் பொருளுதவி செய்யும்படி கடவுளுடைய ஆவி விசுவாசிகளான மற்றவர்களைத் தூண்டினது. அத்தகைய நன்கொடைகளைக் கொடுப்பதில் தங்களால் இயன்றதையெல்லாம் செய்யும்படி கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களை ஊக்கமூட்டுவதற்கு, பவுல் மக்கெதோனியாவிலிருந்த சபைகளை முன்மாதிரியாக எடுத்துக் குறிப்பிட்டான். மக்கெதோனியரான விசுவாசிகள் துன்புறுத்தலையும் வறுமையையும் அனுபவித்துக்கொண்டிருந்தபோதிலும், அவர்கள் தங்களுக்கு உண்மையிலிருந்தத் திறமைக்கு மிஞ்சி கொடுப்பதன்மூலம் சகோதர அன்பைக் காட்டினர். கொடுக்கும் சிலாக்கியத்துக்காக மன்றாடியும் கேட்டனர்! (2 கொரிந்தியர் 8:1-5) கடவுளுடைய ஊழியம் செல்வந்தரின் நன்கொடைகளின்பேரில் மாத்திரமே சார்ந்தில்லை. (யாக்கோபு 2:5) பொருள்சம்பந்தமாய் ஏழைகளாயுள்ள அவருடைய ஒப்புக்கொடுத்த ஊழியர்கள் இந்த ராஜ்ய பிரசங்க ஊழியத்துக்குப் பண உதவி செய்வதில் முக்கிய ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். (மத்தேயு 24:14) எனினும், தங்கள் தயாளக் குணத்தினிமித்தம் துன்பத்துக்காளாவதில்லை, ஏனெனில் இந்த ஊழியத்தில் உட்பட்டுள்ள தம்முடைய ஜனங்களின் தேவைகளுக்கானவற்றைக் கடவுள் தவறாமல் அளிக்கிறார். அது தொடர்ந்துகொண்டும் பெருகிக்கொண்டும் இருப்பதற்கு ஆதரவாயுள்ள சக்தி அவருடைய ஆவியேயாகும்.
9. எவ்வாறு விசுவாசம், அறிவு, மற்றும் அன்பு மனமகிழ்ச்சியுடன் கொடுப்பதோடு சம்பந்தப்பட்டுள்ளன?
9 மனமகிழ்ச்சியுடன் கொடுப்பது விசுவாசத்தாலும், அறிவாலும், அன்பாலும் தூண்டியியக்கப்படுகிறது. பவுல் பின்வருமாறு கூறினான்: “அல்லாமலும், விசுவாசம், வாக்கு, வரம், அறிவு, எல்லாவித ஊக்கம், உங்கள்மேலுள்ள எங்கள் அன்பு முதலிய எல்லாக் காரியங்களிலும் நீங்கள் பெருகியிருக்கிறதுபோல இந்தக் கிருபையிலும் பெருகவேண்டும். இதை நான் கட்டளையாகச் சொல்லவில்லை. மற்றவர்களின் ஊக்கத்தினால் உங்கள் அன்பின் உண்மையைப் பரீட்சிக்கும்பொருட்டே சொல்லுகிறேன்.” (2 கொரிந்தியர் 8:7, 8, தி.மொ.) முக்கியமாய், கொடுப்பவன் குறைந்த வருவாய் உடையவனாக இருந்தால், யெகோவாவின் நோக்கத்துக்கு நன்கொடையளிப்பது கடவுளுடைய எதிர்கால ஏற்பாடுகளில் விசுவாசத்தைக் கேட்கிறது, அறிவில் பெருகியிருக்கும் கிறிஸ்தவர்கள் யெகோவாவின் நோக்கத்தைச் சேவிக்க விரும்புகின்றனர், அவர்மீதும் அவருடைய ஜனங்களின்மீதும் அன்பில் பெருகியிருப்போர் அவருடைய நோக்கத்தை முன்னேற்றுவதற்காகத் தங்கள் பொருளாதார வாய்ப்புகளை மனமகிழ்ச்சியுடன் பயன்படுத்துகின்றனர்.
10. இயேசுவின் முன்மாதிரி மனமகிழ்ச்சியுடன் கொடுக்கும்படி கிறிஸ்தவர்களைத் தூண்டியியக்குகிறதென்று ஏன் சொல்ல முடியும்?
10 இயேசுவின் முன்மாதிரி மனமகிழ்ச்சியுடன் கொடுப்பதற்குக் கிறிஸ்தவர்களைத் தூண்டுவிக்கிறது. அன்பால் ஏவப்பட்டு கொடுக்கும்படி கிறிஸ்தவர்களை ஊக்குவித்தப்பின், பவுல் பின்வருமாறு கூறினான்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.” (2 கொரிந்தியர் 8:9) கடவுளுடைய குமாரர் வேறு எவரையும் பார்க்கிலும் பரலோகத்தில் ஐசுவரியவானாக இருந்த இயேசு அந்த எல்லாவற்றிலிருந்தும் தம்மை வெறுமையாக்கி மனித வாழ்க்கையை ஏற்றார். (பிலிப்பியர் 2:5-8) எனினும், இந்தத் தன்னலமற்ற முறையில் ஏழையாவதன்மூலம், இயேசு யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்கு உதவியளித்து, மீட்பை ஏற்க மனமுள்ள மனிதரின் நன்மைக்காகத் தம்முடைய உயிரை மீட்கும் பலியாகச் செலுத்தினார். இயேசுவின் முன்மாதிரிக்கு ஒத்திசைய, நாம் மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கும் யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதற்கு நம் பங்கைச் செய்வதற்கும் மனமகிழ்ச்சியுடன் கொடுக்கவேண்டுமல்லவா?
11, 12. நல்ல திட்டமிடுவது எவ்வாறு நம்மை மகிழ்ச்சியுடன் கொடுப்போராகும்படி செய்யலாம்?
11 நல்ல திட்டமிடுவது மனமகிழ்ச்சியுடன் கொடுப்பதைக் கூடியதாக்குகிறது. பவுல் கொரிந்தியருக்குப் பின்வருமாறு கூறினான்: “நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 16:1, 2) இன்று ராஜ்ய ஊழியத்தை விரிவாக்குவதற்கு நன்கொடைகளைக் கொடுக்க விரும்புவோர், இதைப்போன்ற தனிப்பட்ட மற்றும் தாங்களாக மனமுவந்த முறையில், இந்த நோக்கத்துக்காகத் தங்கள் சம்பாத்தியங்களில் சிறிதை ஒதுக்கிவைப்பது நலமாயிருக்கும். இத்தகைய நல்ல திட்டத்தின் பலனாக, சாட்சிகள் ஒவ்வொருவரும், குடும்பங்களும், சபைகளும் உண்மையான வணக்கத்தை முன்னேற்றுவிக்க நன்கொடைகள் கொடுக்க முடியும்.
12 நன்கொடையளிப்பதற்கானத் திட்டங்களை நிறைவேற்றுவது நமக்கு மனமகிழ்ச்சிதரும். இயேசு சொன்னபடி, “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [மகிழ்ச்சி].” (அப்போஸ்தலர் 20:35) ஆகவே கொரிந்தியர்கள் எருசலேமுக்குப் பணநிதிகளை அனுப்புவதற்கான தங்கள் ஓராண்டு திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பவுலின் ஆலோசனையைப் பின்பற்றுவதால் தங்கள் சந்தோஷத்தை அதிகரிக்க முடியும். “ஒருவனுக்கு . . .. இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்,” என்று அவன் கூறினான். ஒருவர் தனக்கு உள்ளதன்படி நன்கொடைகள் கொடுத்தால் அவற்றை உயர்வாய் மதிக்க வேண்டும். நாம் கடவுளில் நம்பிக்கை வைத்தால், அவர் காரியங்களைச் சமநிலைப்படுத்த முடியும், இவ்வாறு அதிகமுடையோர் தயாள குணமுடையோராயும், வீணாக்காதவர்களாயும் இருப்பர், கொஞ்சமே உடையோர், அவரைச் சேவிப்பதற்கான தங்கள் பலத்தையும் திறமையையும் குறைக்கும் குறைபாடுகள் இல்லாதிருப்பர்.—2 கொரிந்தியர் 8:10-15.
கொடுப்பது கவனமாய்க் கையாளப்படுதல்
13. பவுல் நன்கொடைகளை மேற்பார்வையிடுவதில் கொரிந்தியர் ஏன் நம்பிக்கை கொண்டிருக்கலாம்?
13 தேவையிலிருந்த விசுவாசிகள் தங்கள் பொருள் தேவை தீர்க்கப்பட்டு பிரசங்க வேலையில் மேலுமதிக ஊக்கத்துடன் ஈடுபடும்படி அந்த நன்கொடையளிப்பு ஏற்பாட்டைப் பவுல் மேற்பார்வையிட்டபோதிலும், அவனோ அல்லது மற்றவர்களோ தங்கள் சேவைகளுக்காக அந்தப் பணநிதிகளிலிருந்து எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. (2 கொரிந்தியர் 8:16-24; 12:17, 18) எந்தச் சபையின்மீதாவது பணச்செலவுக்குரிய பாரங்களைச் சுமத்துவதற்குப் பதிலாகப் பவுல் தன் சொந்த பொருளாதாரத் தேவைகளைத் தாங்க வேலைசெய்தான். (1 கொரிந்தியர் 4:12; 2 தெசலோனிக்கேயர் 3:8) ஆகையால், நன்கொடைகளை அவனிடம் கொடுக்கையில், கொரிந்தியர்கள் அவற்றைக் கடவுளுடைய நம்பத்தகுந்த, கடினமாய் உழைக்கும் ஊழியனிடம் ஒப்படைத்தார்கள்.
14. நன்கொடைகளைப் பயன்படுத்துவதைக் குறித்ததில், உவாட்ச் டவர் சொஸையிட்டி என்ன பதிவை உடையது?
14 1884-ல் தி உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டி சட்டப்படி சங்கமாக அமைக்கப்பட்டது முதற்கொண்டு, யெகோவாவின் ராஜ்ய ஊழியத்துக்காக அதனிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லா நன்கொடைகளுக்கும் அது நம்பத்தக்க மேற்பார்வையாளனாக இருந்துவந்திருக்கிறதென்ற அத்தாட்சியை நன்கொடையாளர்கள் கொண்டுள்ளனர். அதன் தனியுரிமை பத்திரத்தின்படி, இந்தச் சங்கம், எல்லா ஜனங்களின் மிகப் பெரிய தேவையாகிய, ஆவிக்குரிய காரியங்களுக்கானத் தேவையை நிறைவாக்கும்படி நாடி முயற்சி செய்கிறது. இது பைபிள் இலக்கியங்களும் இரட்சிப்படைவது எவ்வாறென்பதன்பேரில் போதனையும் அளிப்பதன் முறையில் செய்யப்படுகிறது. இன்று, யெகோவா, தம்முடைய விரிவாகிக்கொண்டேயிருக்கும் அமைப்புக்குள் செம்மறியாட்டைப்போன்றோரைக் கூட்டிச் சேர்ப்பதை விரைவாக்குகிறார், மற்றும் ராஜ்ய பிரசங்க ஊழியத்தில் நன்கொடைகளை ஞானமாய்ப் பயன்படுத்துவதன்பேரில் அவருடைய ஆசீர்வாதம் இருப்பது தெய்வீக அங்கீகாரத்தின் தெளிவான அத்தாட்சியாக உள்ளது. (ஏசாயா 60:8, 22) மனமகிழ்ச்சியுடன் கொடுப்போரின் இருதயங்களை அவர் தொடர்ந்து தூண்டுவிப்பாரென்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
15. இந்தப் பத்திரிகை ஏன் நன்கொடைகளைப்பற்றி எப்போதாவது குறிப்பிடுகிறது?
15 இந்த உலகளாவிய ராஜ்யபிரசங்க ஊழியத்துக்குத் தாங்களாக விரும்பி நன்கொடைகளை அளிக்கும் தங்கள் சிலாக்கியத்தை வாசகருக்கு நினைப்பூட்ட சங்கம் இந்தப் பத்திரிகையின் பத்திகளை எப்போதாவது ஒரு முறை பயன்படுத்துகிறது. இது வருந்திக் கேட்பதல்ல, கடவுள் தங்களை வளம்பெறச் செய்வதற்கேற்ப “நற்செய்தியின் இந்தப் பரிசுத்த ஊழியத்தை” ஆதரிப்பதற்கு விருப்பமுள்ள எல்லாருக்கும் இது ஒரு நினைப்பூட்டுதலேயாகும். (ரோமர் 15:16, NW; 3 யோவான் 2) நன்கொடையாக அளிக்கப்படும் எல்லா பணத்தையும் சங்கம் யெகோவாவின் பெயரையும் ராஜ்யத்தையும் அறியச் செய்வதற்கு மிக அதிக சிக்கனமான முறையில் பயன்படுத்துகிறது. எல்லா நன்கொடைகளும் நன்றியோடு ஏற்கப்பட்டு, நன்றி தெரிவிக்கப்பட்டு கடவுளுடைய ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப் பரவச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, இந்த வருவாய்களைக் கொண்டு பல நாடுகளில் மிஷனரி நடவடிக்கைகள் ஆதரித்துக் காத்து வரப்படுகின்றன, மேலும் பைபிள் அறிவை அளிப்பதற்கு இன்றியமையாத அச்சு நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்பட்டும் விரிவாக்கப்பட்டும் வருகின்றன. மேலும், உலகளாவிய இந்த ஊழியத்துக்குக் கொடுக்கப்படும் நன்கொடைகள் பைபிள்களையும் பைபிள்சார்ந்த பிரசுரங்களையும் மேலும் ஒலிப்பதிவு காசட்டுகளையும் காட்சிப்பதிவு காசட்டுகளையும் உண்டுபண்ணுவதற்கு ஏற்படும் உயர்ந்துகொண்டேபோகும் செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய வழிகளில் ராஜ்ய அக்கறைகள் மனமகிழ்ச்சியுடன் கொடுப்போரால் முன்னேற்றுவிக்கப்படுகின்றன.
கட்டாயத்தினால் அல்ல
16. யெகோவாவின் சாட்சிகளில் சிலரே பொருள்சம்பந்தமாய்ச் செல்வந்தராக இருப்பினும், அவர்களுடைய நன்கொடைகள் ஏன் நன்றியோடு மதிக்கப்படுகின்றன?
16 யெகோவாவின் சாட்சிகளில் சிலரே பொருள்சம்பந்தமாய்ச் செல்வந்தராயுள்ளனர். ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க அவர்கள் சிறிதளவான தொகையே கொடுப்பினும், அவர்களுடைய நன்கொடைகள் குறிப்பிடத்தக்கவை. வறுமையிலிருந்த ஒரு விதவை குறைந்த மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளை காணிக்கைப் பெட்டியில் போடுவதை இயேசு கண்டபோது, அவர் பின்வருமாறு கூறினார்: “இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் [காணிக்கைப்போட்ட மற்றவர்கள்] தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.” (லூக்கா 21:1-4) அவளுடைய நன்கொடை சிறுமதிப்புடையதாயினும், அவள் மனமகிழ்ச்சியுடன் கொடுத்தவளாக இருந்தாள்—அவளுடைய காணிக்கை நன்றியோடு மதிக்கப்பட்டது.
17, 18. இரண்டு கொரிந்தியர் 9:7-ல் பவுலின் வார்த்தைகளின் உட்பொருள் என்ன? “மனமகிழ்ச்சி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல் எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது?
17 யூதேய கிறிஸ்தவர்களுக்காகச் செய்த நிதி-உதவி வேலையைக் குறித்து பவுல் பின்வருமாறு கூறினான்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; சந்தோஷமாகக் [மனமகிழ்ச்சியுடன், NW] கொடுக்கிறவனில் கடவுள் அன்புகூருகிறார்.” (2 கொரிந்தியர் 9:7, தி.மொ.) அப்போஸ்தலன் ஒருவேளை செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில் நீதிமொழிகள் 22:8-ன் ஒரு பாகத்தைக் குறிப்பிட்டிருக்கலாம், அது சொல்வதாவது: “மனமகிழ்ச்சியுடன் கொடுப்பவனைக் கடவுள் ஆசீர்வதிக்கிறார்; அவனுடைய வேலைகளின் குறைபாடுகளை நிரப்புவார்.” (தி செப்டுவஜின்ட் பைபிள், சார்ல்ஸ் தாம்ஸன் மொழிபெயர்த்தது) “ஆசீர்வதிக்கிறார்” என்றிருந்த இடத்தில் “நேசிக்கிறார்,” என பவுல் குறிப்பிட்டிருக்கலாம், ஆனால் ஓர் இணைப்பு அங்குள்ளது, எப்படியெனில் ஆசீர்வாதங்களைப் பெறுவது கடவுளுடைய அன்பின் பலனாக உண்டாகிறது.
18 மனமகிழ்ச்சியுடன் கொடுப்பவன் உண்மையாகவே கொடுப்பதற்குச் சந்தோஷப்படுகிறான். 2 கொரிந்தியர் 9:7-ல் “மனமகிழ்ச்சி” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கப் பதம் “களிப்பு” என்ற சொல்லிலிருந்து வருகிறது! இதைக் குறிப்பிட்டுக் காட்டினபின், புலவர் R. C. H. லென்ஸ்கி பின்வருமாறு கூறினார்: “கவலையற்ற, மகிழ்ச்சியுள்ள, சந்தோஷமான கொடையாளியைக் கடவுள் நேசிக்கிறார் . . . கொடுப்பதற்கான மற்றொரு வாய்ப்பு அவனை வரவேற்கையில் [அவனுடைய] விசுவாசம் புன்சிரிப்புகளால் சூழப்படுகிறது.” இத்தகைய சந்தோஷமுள்ள மனப்பான்மையுடைய ஒருவன் விருப்பமில்லாது விசனத்துடன் அல்லது கட்டாயத்துடன் கொடுப்பதில்லை, மாறாகக் கொடுப்பதில் அவன் இருதயம் ஊன்றியுள்ளது. ராஜ்ய அக்கறைகளுக்கு உதவியளிப்பதில் நீங்கள் அவ்வாறு மனமகிழ்ச்சிகொள்கிறீர்களா?
19. பூர்வ கிறிஸ்தவர்கள் எவ்வாறு நன்கொடையளித்தனர்?
19 பூர்வ கிறிஸ்தவர்கள் காணிக்கைத் தட்டுகளைச் சுற்றி அனுப்பவில்லை அல்லது மதக் காரியங்களுக்காகத் தங்கள் வருவாயில் பத்திலொரு பாகத்தை நன்கொடையாக அளிப்பதால் தசமபாகம் செலுத்துவதைக் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, அவர்களுடைய நன்கொடைகள் முற்றிலும் தங்கள் விருப்ப அளிப்பாயிருந்தது. பொ.ச. 190 போல் கிறிஸ்தவத்துக்கு மதமாற்றப்பட்ட டெர்ட்டுல்லியன், பின்வருமாறு எழுதினான்: “எங்களுக்குக் காணிக்கைப் பெட்டி இருந்தபோதிலும், மதத்துக்கு அதன் விலை இருப்பதுபோல், அது வாங்கிய [இரட்சிப்பை வாங்க செலுத்திய] பணத்தால் நிரப்பப்பட்டில்லை. அந்த மாதாந்தர நாளிலே, தனக்கு விருப்பமானால், ஒவ்வொருவனும் ஒரு சிறிய நன்கொடையை அதற்குள் போடுகிறான்; ஆனால் அவனுக்கு விருப்பமானால் மாத்திரமே, மேலும் அவனால் கூடுமானால் மாத்திரமே; ஏனெனில் கட்டாயப்படுத்துவது இல்லை; எல்லாம் தாங்களாக விரும்பி செலுத்துவதே.”—அப்பாலஜி, அதிகாரம் XXXIX.
20, 21. (எ) கடவுளுடைய காரியத்துக்குப் பணசம்பந்தமாய் ஆதரவளிப்பதன் சிலாக்கியத்தைப் பற்றி இந்தப் பத்திரிகையின் தொடக்கக் கால பிரதி ஒன்றில் என்ன சொல்லப்பட்டது? இது எவ்வாறு இப்பொழுதும் பொருந்துகிறது? (பி) நம்முடைய விலைமதிப்புள்ள பொருட்களால் யெகோவாவைக் கனம்பண்ணுகையில் என்ன ஏற்படுகிறது?
20 தாங்களே மனமுவந்து கொடுப்பது யெகோவாவின் தற்கால ஊழியர்களுக்குள் எப்பொழுதும் வழக்கமாய் இருந்துள்ளது. எனினும், சில சமயங்களில், சிலர், நன்கொடை அளிப்பதன்மூலம் கடவுளுடைய காரியத்துக்கு ஆதரவளிக்கும் தங்கள் சிலாக்கியத்தின் முழு அனுகூலத்தையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. உதாரணமாக, பிப்ரவரி 1883-ல், இந்தப் பத்திரிகை பின்வருமாறு கூறியது: “சிலர் மற்றவர்களுக்காக அவ்வளவு அதிக பணசம்பந்த பாரத்தைச் சுமப்பதால், மட்டுக்குமீறிய வேலையாலும் முழுச்சோர்வினாலும் அவர்களுடைய பண மூலக்கையிருப்புகள் குறைந்துகொண்டிருக்கின்றன, இவ்வாறு அவர்களுடைய பயனுடைமை கெடுக்கப்படுகிறது; அதுமட்டுமல்லாமல், . . . இந்நிலைமையை முற்றிலும் புரிந்துகொள்ளாதவர்கள், இந்தக் காரியத்தில் உதவியாகச் செயல்படாததால் இழப்போராயுள்ளனர்.”
21 இன்று திரள் கூட்டம் யெகோவாவின் அமைப்புக்குள் ஓடிவந்துகொண்டிருப்பதாலும், கடவுளுடைய ஊழியம் கிழக்கத்திய ஐரோப்பாவுக்குள்ளும் முன்னால் தடையுத்தரவுபோடப்பட்டிருந்த மற்ற இடங்களுக்குள்ளும் விரிவாகிக்கொண்டிருப்பதாலும், அச்சாலைகளையும் தேவைப்படும் மற்ற வாய்ப்புநலங்களையும் விரிவாக்குவதற்கான பெருகிக்கொண்டேயிருக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. மேலுமதிக பைபிள்களும் மற்றப் பிரசுரங்களும் அச்சடிக்கப்பட வேண்டும். தேவாட்சிக்குரிய செயல்முறை ஏற்பாடுகள் பல நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன; எனினும், போதிய பணவசதிகள் இருந்தால் இவற்றில் சில இன்னுமதிக விரைவில் நடைபெறும். நிச்சயமாகவே, தேவைப்படுவதைக் கடவுள் அளிப்பாரென்ற விசுவாசம் நமக்கு இருக்கிறது, மேலும் ‘விலைமதிப்புள்ள பொருட்களால் யெகோவாவைக் கனம்பண்ணு’கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களென்று நாம் அறிந்திருக்கிறோம். (நீதிமொழிகள் 3:9, 10, தி.மொ.) நிச்சயமாகவே, “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.” யெகோவா, ‘எல்லாவித உதாரகுணத்துக்காகவும் நம்மைச் சம்பூரணமுள்ளவர்களாக்குவார்,’ மேலும் நாம் மனமகிழ்ச்சியுடன்கொடுப்பது பலர் அவருக்கு நன்றிசெலுத்தவும் அவரைத் துதிக்கவும் செய்யும்.—2 கொரிந்தியர் 9:6-14.
கடவுளுடைய ஈவுகளுக்காக அவருக்கு நன்றியைக் காட்டுங்கள்
22, 23. (எ) கடவுள் கொடுத்துள்ள விவரித்துச்சொல்லமுடியாத இலவச ஈவு எது? (பி) யெகோவாவின் ஈவுகளை நாம் நன்றியோடு மதிப்பதால், நாம் என்ன செய்ய வேண்டும்?
22 “தேவன் அருளிய சொல்லிமுடியாத [இலவச, NW] ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்,” என்று பவுல்தானே ஆழ்ந்த நன்றியறிதலால் உள்ளந்தூண்டப்பட்டு கூறினான்: (2 கொரிந்தியர் 9:15) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் பாவங்களுக்காகவும் உலகத்தினரின் பாவங்களுக்காகவும் “பிராயச்சித்தபலி”யாக இயேசுவே யெகோவா அருளிய சொல்லிமுடியாத இலவச ஈவுக்கு ஆதாரமாகவும் வழியாகவும் இருக்கிறார். (1 யோவான் 2:1, 2, தி.மொ.) அந்த ஈவு, இயேசு கிறிஸ்துவின் மூலம் பூமியிலுள்ள தம்முடைய ஜனங்களுக்கு அவர் காட்டியிருக்கிற “கடவுளுடைய மிக மேம்பட்ட தகுதியற்ற தயவாகும்,” மேலும் அது அவர்களுடைய மீட்புக்கும் யெகோவாவின் மகிமைக்கும் நியாய நிரூபணத்துக்கும் ஏதுவாக மிகுதியாய்ப் பெருகுகிறது.—2 கொரிந்தியர் 9:14, NW.
23 யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு அளித்துள்ள விவரித்துச்சொல்ல முடியாத இலவச ஈவுக்காகவும் ஆவிக்குரிய மற்றும் பொருள்சம்பந்த மற்றப் பல ஈவுகளுக்காகவும் நம்முடைய ஆழ்ந்த நன்றியறிதலை அவருக்குச் செலுத்துகிறோம். நம்முடைய பரலோகத் தகப்பன் நமக்குக் காட்டியிருக்கிற நற்குண வெளிக்காட்டு அவ்வளவு மிக அதிசயமாயிருப்பதால் அதை விவரித்துச் சொல்லுதல் மனித சக்திகளுக்கு மிஞ்சியது! நிச்சயமாகவே இது நம்மை மகிழ்ச்சியுள்ள கொடுப்போராக இருக்கும்படி தூண்டவேண்டும். அப்படியானால், நம்முடைய முதல் மற்றும் முதன்மையான மனமகிழ்ச்சியுள்ள கொடையாளியாகிய தயாள குணாமுள்ள நம்முடைய கடவுளின் ஊழியத்தை முன்னேற்றுவிக்க இருதயப்பூர்வ நன்றியறிதலுடன், நம்மால் கூடியதையெல்லாம் செய்வோமாக! (w92 1/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ விருப்பமுள்ள இருதயம் என்ன செய்யும்படி யெகோவாவின் ஜனங்களைத் தூண்டியிருக்கிறது?
◻ மனமகிழ்ச்சியுடன் கொடுப்பதை எது தூண்டியியக்குகிறது?
◻ உவாட்ச் டவர் சொஸையிட்டி தான் பெறும் எல்லா நன்கொடைகளையும் எவ்வாறு பயன்படுத்துகிறது?
◻ எவ்வகையான கொடுப்பவரைக் கடவுள் நேசிக்கிறார்? அவருடைய பல ஈவுகளுக்காக நன்றியறிதலை நாம் எவ்வாறு காட்ட வேண்டும்?
2. பவுல் சொன்னபடி, எவ்வகையான கொடுப்போரைக் கடவுள் நேசிக்கிறார்?
5. நூற்றாண்டுகளினூடே இஸ்ரவேலர் உண்மையான வணக்கத்துக்கு எவ்வாறு ஆதரவளித்தனர்?
பக்கம் 15-ன் படம்]
ஆசரிப்புக் கூடாரம் அமைக்கப்படுகையில், இஸ்ரவேலர் ஊக்கமாய் உழைத்தனர், மேலும் யெகோவாவுக்காக தாராளமாய் நன்கொடைகள் அளித்தனர்
பக்கம் 18-ன் படம்]
இந்த ஏழை விதவையினுடையதைப்போன்ற நன்கொடைகள் நன்றியோடு மதிக்கப்படுகின்றன மற்றும் குறிப்பிடத்தக்கவை