வாலிபர்களே—வஞ்சிக்கப்படாதிருங்கள்
“சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்துக்கொள்வானே.”—2 கொரிந்தியர் 11:14.
நாம் அனைவருமே எப்போதாவது ஒரு சமயம் வஞ்சிக்கப்பட்டிருப்போம் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை நீங்கள் ஒரு ஆட்டத்தை ஆடும் போது, எதிர் பக்கத்திலுள்ள ஆட்டக்காரர், கள்ளத்தனமாக இடத்தை மாற்றி உங்களைத் தடுமாறச் செய்து, அவர் வெற்றி பெற்றிருக்கலாம். அல்லது நேர்த்தியான தோற்றமுள்ள ஒரு துணியை வாங்கி, கொஞ்சநாட்கள் உடுத்திக்கொண்டிருந்து விட்டு அதை துவைத்துப் பின்பு, அது தோற்றமளித்ததுபோல அத்தனை தரமானதில்லை என்பதை நீங்கள் கண்டுபிடித்திருக்கலாம். பொதுவாக அதிக எளிதாக வஞ்சிக்கப்படும்போது, அதாவது ஏமாற்றப்படுவது அல்லது மோசஞ்செய்யப்படுவது யார்? குறைந்த அனுபவமுள்ளவர்களே அல்லவா? அநேகமாக பின் விளைவுகள் வெறுமென ஒரு ஆட்டத்தில் தோல்வியடைவதை அல்லது ஏதாவது ஒன்றை வாங்கும் போது ஏமாற்றப்படுவதைக் காட்டிலும் அதிக வினைமையானதாக இருக்கிறது.
2. உதாரணமாக, உயர்நிலைப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மாணவியாக இருந்த ஜூலி, அவள் சொன்ன விதமாக, “முழுபள்ளியிலும் மிகவும் அழகானவனாகவும் பிரபலமாகவும் இருந்த ஒரு பையனிடம் அவள் காதல்” கொண்டிருந்தாள். அவள் பின்வருமாறு விளக்கினாள்: “அவன் கேட்கும் காரியத்துக்கு நான் தயாராக இல்லை என்பதாக நான் அவனிடம் சொன்னேன். ஆனால் அவன் என்னை எவ்வளவாக நேசித்தான் என்பதாகவும், அதனால் ஒன்றும் இல்லை என்பதாகவும் சொல்லிக்கொண்டே இருந்தான். அப்பொழுதும் கூட நான் மாட்டேன் என்று சொன்னபோதுதானே, அவன் மிகவும் ஆத்தரப்பட்டு, “நான் உண்மையாக உன்னை நேசித்தேன், நீயும் அவ்விதமாகவே உணர்ந்ததாக நான் நினைத்துக்கொண்டிருந்தேன், அதை நீ எனக்கு நிரூபிக்கவில்லையென்றால், நாம் ஒருவரையொருவர் சந்திப்பதையே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்பதாகச் சொன்னான். ஆகவே ஜூலி அதற்கு இசைந்து, வேசித்தனம் செய்து விட்டாள். அடுத்த நாள், அந்த பையன் தன்னுடைய “சாதனை”யைக் குறித்து பெருமையடித்துக் கொண்டதை கேள்விப்பட்டபோதுதானே தான் எவ்வளவு முழுமையாக ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை அவள் உணர்ந்தாள். அந்தப் பையன் உண்மையில் அவளை நேசித்திருந்தால் அவன் இவளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
3. ஜூலி எதைச் செய்யும்படியாக ஏமாற்றப்பட்டு அல்லது மோசஞ் செய்யப்பட்டாளோ அது கடவுளுடைய கட்டளையை மீறிய வினைமையான காரியமாக இருந்தது. அதன் காரணமாக பைபிள் இவ்விதமாக துரிதப்படுத்துகிறது: “வேசித்தனத்திற்கு விலகி யோடுங்கள்.” மேலும் அது தெளிவாக இவ்விதமாகச் சொல்லுகிறது: “விபச்சாரக்காரன். . .தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்திரமடைவதில்லை.” (1 கொரிந்தியர் 6:18; எபேசியர் 5:5) ஆகவே ஒரு பந்தாட்டத்தில் நீங்கள் வெற்றி பெறுகிறீர்களா அல்லது தோல்வியடைகிறீர்களா என்பதைப்பற்றியோ அல்லது நீங்கள் ஞானமாகவோ அல்லது ஞானம்மில்லாமலோ வாங்குகிறீர்கள் என்பதைப்பற்றியோ பிசாசாகிய சாத்தான் அக்கறையற்றவனாக இருந்தாலும், கடவுளுடைய கட்டளையை நீங்கள் மீறும்படியாக நிச்சயமாகவே உங்களைத் தவறாக நடத்திச்செல்ல அவன் முயற்சிக்கிறான். “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித்திரிகிறான் என்பதா பைபிள் எச்சரிக்கிறது. (1 பேதுரு 5 :8) யெகோவா தேவனை சேவிப்பதிலிருந்து நம்மை விலகிப்போகச் செய்ய, ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்துக்கொள்வது உட்பட, தன்னுடைய தந்திரமான எல்லா சிந்தனைகளையும் அவன் பயன்படுத்துகிறான். அது வினைமையான ஒரு காரியமாக இல்லையா?—2 கொரிந்தியர் 11:14.
ஏவாளுக்கு சம்பவித்ததிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
4. ஆனால் இளைஞர்களாகிய உங்களுக்கு இது இன்னும் அதிக வினைமையான காரியமாக இருக்கிறது. நீங்கள் சாத்தானின் விசேஷித்த குறியிலக்காக இருக்கிறீர்கள். ஏன் அவ்விதமாக? உங்களுடைய இளமையின் காரணமாக, அறிவையும் ஞானத்தையும் பெற்றுக்கொள்ள உங்களுக்கு கொஞ்ச காலமே இருந்திருக்கிறது. சாத்தான் குறைந்த அனுபவமுள்ளவர்களையே தெரிந்துகொள்கிறான் கலகத்தை அவன் ஆரம்பித்த சமயத்திலேயே அதைத்தானே அவன் செய்தான். ஏதேன் தோட்டத்தில், ஏவாளுக்கு முன்னால் சிருஷ்டிக்கப்பட்ட அவளுடைய கணவனாகிய ஆதாமை அல்ல, ஏவாளைத்தானே அவன் அணுகியதை நினைவுப்படுத்திப் பாருங்கள். சாத்தான் அதில் வெற்றிபெற்றான். அவன் வஞ்சித்தான், ஆம், மெய்யான தோற்றங்களின் மூலமாக, இளையவனாகவும் குறைந்த அனுபவமுள்ளவளாகவும் இருந்த ஏவாளை தவறாக வழிநடத்தினான். “முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான். பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு, மீறுதலுக்கு உட்பட்டாள்.”—1 தீமோத்தேயு 2:13,14.
5. சாத்தானின் வழிமுறைகள் உங்களிடம் செல்லாது என்றும் நீங்கள் கடவுளுடைய கட்டளைகளை மீறும்படியாக உங்களை ஒருபோதும் அவனால் செய்ய முடியாது என்றும் ஒருபோதும் நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே” என்ற தெய்வீக எச்சரிப்பை நினைவில் கொள்ளுங்கள். (2 கொரிந்தியர் 11:14) வஞ்சிப்பதில் தேர்ச்சிப்பெற்றவனாக இருக்கும் இவன், குறைந்த அனுபவமுள்ளபவுலின் உடன் கிறிஸ்தவர்களை அணுகுவதில் வெற்றியடைந்து விடுவானோ என்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் சரியாகவே அவர்களைக் குறித்து கவலையுள்ளவனாக இருந்தான். பவுல் இவ்விதமாக எழுதினான்: “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.”—(2 கொரிந்தியர் 11:13)
6. ஏவாள் வெறுமென வஞ்சிக்கப்படவோ அல்லது மோசஞ் செய்யப்படவோ இல்லை என்பதை கவனியுங்கள்; அவள் கெடுக்கப்பட்டாள். அப்படியென்றால், கவர்ச்சி வாய்ந்த ஆசை அல்லது சோதனையின் மூலமாக அழிவுக்குப் போகும் ஒரு பாதைக்குள் இழுத்துச் செல்லப்பட்டாள் என்று அர்த்தமாகிறது. வெப்ஸ்டரின் மூன்றாவது புதிய சர்வதேச அகராதியின்படி, கொடுப்பது என்பதன் பொருள் “கீழ்படியாமைக்குள் இணங்கவைப்பது”, “அமைதியாக தந்திரமான கவர்ச்சியால் கவர்ந்து அல்லது ஆதாயம் பெறுவது” என்பதாகும். குறிப்பாக இதன் பொருள், “முதல்முறையாக உடலுறவுக்கொள்ளும்படியாக (ஒரு பெண்ணை) இணங்க வைப்பது” என்பதாக அகராதி குறிப்பிடுகிறது. சாத்தான் ஏவாளை கெடுத்த முறையையும் (இந்த இடத்தில் உடலுறவு உட்படாவிட்டாலும்) இன்று அவன் பயன்படுத்தும் இதை ஒத்த முறைகளையும்கூட விமர்சிப்பது நமக்கு பிரயோஜனமாக இருக்கும்.
7. சாத்தான் ஏவாளை அணுகியபோது, தந்திரமான முறையில், அவள் கடவுளுடைய கட்டளையை சந்தேகிக்க ஆரம்பிக்கும்படியாக ஒரு சர்ப்பத்தை பயன்படுத்தினான். சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் எழுப்புவதற்காக, கவனமாக திட்டமிடப்பட்ட வார்த்தைகளில், அவன், “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?“ என்று கேட்டான். கபடமுள்ள இந்த கேள்வியின் மூலமாக, தோட்டத்திலுள்ள எல்லா விருட்சங்களின் கனியையும் அவளால் புசிக்க முடியாமல் இருப்பது பரிதாபமானது என்பதாக அவன் மறைமுகமாக குறிப்பிட்டான். உண்மையில், கடவுள் சொல்லியிருந்த விதமாக, அவள் மரிப்பதற்கு பதிலாக, விலக்கப்பட்ட விருட்சத்திலிருந்து புசிப்பதன் மூலம் உண்மையில் நன்மையடைவாள் என்பதாக அவன் விவாதித்தான். “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்று நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்று சாத்தான் அவளிடம் உறுதியாகச் சொன்னான்.—ஆதியாகமம் 3:1-5.
8. இவ்விதமாக, ஏவாளிடமிருந்து பிரயோஜனமான அறிவை கடவுள் மறைத்துவிட முயற்சிக்கிறார் என்று சொல்வது சாத்தானுடைய பங்கில் எத்தனை பொல்லாத தந்திரமாக இருக்கிறது! அவள் சுயமாக தீர்மானிக்கும் திறமையை பயன்படுத்தாதபடி கடவுள் வீணாக மரணத்தை வைத்து பயமுறுத்துவதாகவும் கூட சாத்தான் சொன்னான். “இதோ பார் நீ இதையெல்லாம் இழக்கிறாய்!” என்பதாக அவன் ஏவாளிடம் உண்மையில் சொன்னான். ‘சாகமாட்டாய். கடவுள் தாமே அனுபவித்துக்கொண்டிருப்பதை நீயும் அனுபவிக்கலாம். எது நன்மை அல்லது எது தீமை என்பதை நீயே தீர்மானித்துக் கொள்ளலாம்! எவருக்கும் பதில் சொல்லவேண்டிய நிலை இல்லாமல், தன்னுடைய சொந்த தீர்மானங்களைச் செய்யக்கூடியவளாக இருப்பது ஏவாளுக்கு கவர்ச்சியாக இருந்தது.
9. இதன் விளைவாக ஏவாள் விருட்சத்தை இச்சையோடு பார்க்க ஆரம்பித்தாள். “அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து புசித்து தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.” (ஆதியாகமம் 3:6) ஆனால் அதற்குப் பின்னால், தனக்கு உறுதியளிக்கப்பட்டதை தான் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை ஏவாள் உணர்ந்தபோது அவள் “சர்ப்பம் என்னை வஞ்சித்தது” என்று விளக்கினாள். (ஆதியாகமம் 3:13) உண்மையில் அவன் அவளை கெடுத்தும்கூட விட்டிருந்தான். கவர்ச்சியான ஆசை அல்லது சோதனையின் மூலமாக, தன்னலமான இச்சை பாவம் செய்யும்படியாக தூண்டவும் இதன் விளைவாக கடைசியாக மரிக்கும்படியாகவும் அவளை வழிநடத்திச் சென்றான்.—யாக்கோபு 1:14,15.
சாத்தானின் தந்திரங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
10 இன்று வாலிபர்களை வஞ்சித்து, அவர்களை கெடுப்பதற்கு சாத்தான் அதேவிதமான தந்திரங்களை அதாவது சூழ்ச்சி முறைகள், நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை பயன்படுத்துகிறான். ஆனால் சாத்தானுடைய தந்திரமான வழிகளைப் பற்றிய முழு சரித்திரத்தையும் பைபிள் கொடுப்பதன் காரணமாக அவனுடைய தந்திரங்களை நீங்கள் அறியாதிருக்க வேண்டிய அவசியமில்லை. (2 கொரிந்தியர் 2:11) யெகோவா தேவன் அவருடைய வார்த்தையின் மூலமாகவும் அமைப்பின் மூலமாகவும் கொடுத்துவரும் எச்சரிப்புகளுக்கும் அறிவுரைகளுக்கும் செவிகொடுப்பதற்கு உங்களுக்கு அவசியமாயிருப்பது நல்லறிவே ஆகும்.—நீதிமொழிகள் 2:1-6; 3:1-7; 11, 12;4:1, 2; 20-27; 7:1-4.
11. சாத்தான் அநேகமாக எவ்விதமாக இளைஞர்களை ஒரு குற்றத்துக்குள் சிக்கிக்கொள்ளச்செய்கிறான் அல்லது கவர்ச்சியூட்டி இழுக்கிறான்? கடவுளுடைய தயவை இழந்து விடுவதற்கு வழிநடத்தக்கூடிய, கடவுள் கண்டனம் செய்யும் நடவடிக்கைகளை மிகவும் கவர்ச்சியானதாகவும் அதே சமயத்தில் விருட்சம் ஏவாளுக்கு காட்சியளித்தது போல தீங்கற்றதாகவும் தோன்றச் செய்வதன் மூலம் இதைச் செய்கிறான். மேலும் ஏவாளுடைய விஷயத்தில் செய்ததுபோலவே, நீங்கள் இன்பமான ஒன்றை அனாவசியமாக அனுபவியாதிருக்கிறீர்கள் என்ற எண்ணத்தை வளர்க்க அவன் முயற்சி செய்வான். இவ்விதமாக, யெகோவாவின் வார்த்தையினிடமாகவும், கடவுள் பயமுள்ள உங்களுடைய பெற்றோர்களாலும் கடவுளுடைய அமைப்பின் மூலமாகவும் கொடுக்கப்பட்டுவரும் அறிவுரைகளிடமாகவும் உங்களுக்கிருக்கும் மதிப்பை சாத்தான் தந்திரமாக, சூழ்ச்சி மிக்க வழியில் அழித்துவிட முயற்சிக்கிறான். ஆகவே நல்லகாரணத்தோடு தானே, பைபிள் “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு [அல்லது கிரேக்க வேதாகமத்தின் தி கிங்டம் இன்டர்லீனியர் மொழிபெயர்ப்பின்படி சூழ்ச்சியுள்ள செயல்களோடு] எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகுங்கள்” என்று துரிதப்படுத்துகிறது.—எபேசியர் 6:11.
12. சாத்தானின் பொய்யை நம்புவதற்கு ஏவாள் முட்டாளாக இருந்தாள் என்பது தெளிவாக இருக்கிறது. இன்று அநேக இளைஞர்கள் அதேவிதமாகவே, யெகோவாவின் வார்த்தையிலுள்ள எச்சரிப்புக்களை அல்லது அவர்களுடைய பெற்றோரால் அல்லது கிறிஸ்தவ மூப்பர்களால் அளிக்கப்படும் எச்சரிப்புக்களை அசட்டையான மனநிலையுடன் கருதுகிறார்கள் அல்லவா? உங்களைப்பற்றியதென்ன? உதாரணமாக, பிசாசாகிய சாத்தானே இந்த உலகத்தின் அதிபதி என்பதையும், இந்த ஒழுங்கு முறையின் கடவுளாக அவன் ஜனங்களுடைய மனங்களைக் குருடாக்கிக் கொண்டிருக்கிறான் என்பதையும் நீங்கள் உண்மையாக ஏற்றுக்கொள்கிறீர்களா? (1 யோவான் 5:19; யோவான் 12:31; 14:30; 16:11; 2 கொரிந்தியர் 4:4) “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்” என்ற கடவுளுடைய கட்டளைக்கு உண்மையாக கீழ்ப்படிய நீங்கள் முயற்சிக்கிறீர்களா? (யோவான் 2:15) உங்களை இவ்விதமாகக் கேட்டுக்கொள்ளுங்கள்: “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாயிருக்கிறான்” என்ற வேதப்பூர்வமான கூற்றை நான் உண்மையில் நம்புகிறேனா? (யாக்கோபு 4:4) உலகத்தில் எந்த ஆபத்தும் இல்லை என்றும் அது ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தீங்கற்றவை என்றும் நம்பும்படியாக சாத்தான் உங்களை வஞ்சிக்க முயற்சிப்பான். ஆனால் எச்சரிக்கையாயிருங்கள்! வஞ்சிக்கப்படாதிருங்கள்!
இன்று ஏமாற்றக்கூடிய கவர்ச்சிகள்
13. சாத்தான் அநேகமாக, அவைகளில் தாமே தவறானதாக இல்லாத அல்லது பைபிளில் வெளிப்படையாக கண்டனம் செய்யப்பட்டில்லாத காரியங்களின் மூலமாக, தவற்றிற்குள் ஜனங்கள் கவர்ந்திருக்கிறான். உதாரணமாக அநேக விவாகமான தம்பதிகள், காதலீடுபாடு கொண்டிருந்த நாட்களில் அவர்கள் அனுபவித்த ஆரோக்கியமான சமயங்களைப் பற்றிய இனிய நினைவுகளை மனதில் கொண்டிருந்தாலும், நாட்குறித்தலின்போது இருவர் தனியாக ஒன்றாக இருக்கையில் ஆபத்துக்களுக்கு வாய்ப்பிருக்கின்றன. உண்மையில் நாட்குறித்தல் என்பது முதல் உலக யுத்தத்துக்குப் பின்பு தானே அநேக இடங்களில் பிரபலமாயிருக்கும் நவீன நாளைய பழக்கமாக இருக்கிறது. இந்த பழக்கமானது, எதிர்பாலினத்தவரோடு அறிமுகமாவதற்கு உதவி செய்யும் தீங்கற்ற ஒரு பொழுது போக்கு மட்டுமே என்பதாக நீங்கள் நம்பவேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். ஆனால் உண்மையில் இந்த பழக்கம் ஒழுக்க சம்பந்தமான ஆபத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது.
14. வயதான முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் அவர்களுடைய அனுபவத்தின் காரணமா, இந்த ஆபத்துக்களை அதிகமாக உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களால் பயனுள்ள அறிவுரைகளை கொடுக்க முடியும் (நீதிமொழிகள் 27:12) ஆனால் ஒருவேளை நாட்குறித்தலில் ஆபத்து இல்லை என்றும் உங்களுடைய பெற்றோர்கள் மட்டுக்குமீறிய வகையில் உங்களை கட்டுப்படுத்தி, வேடிக்கையான விளையாட்டை பறித்துவிடுவதாக நீங்கள் நினைக்கலாம். என்றபோதிலும் ஜனங்களை அவர்கள் பிறப்பிக்கும் கனிகளினால் மதிப்பிடமுடியாது போலவே, நாட்குறித்தல் போன்ற பழக்கங்ளையும்கூட அவ்விதமாகவே மதிப்பிடமுடியும். (நீதிமொழிகள் 20:11; மத்தேயு 7:16) உதாரணமாக வழக்கமாக நாட்குறித்தலில் ஈடுபட்ட, கர்ப்பமாகிவிட்ட 18 வயது பெண் இவ்விதமாகச் சொன்னாள்: “எனக்கு அது நேரிடாது என்பதாக நினைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். கொஞ்ச நாட்களாக நாட்குறித்துக் கொண்டிருந்துவிட்டபிறகு, “கை கோத்துக்கொள்வதும் முத்தமிடுவதும்” சலிப்பாகிவிடுகிறது என்பதாக அவள் ஒப்புக்கொள்கிறாள். அதேவிதமாக, அடிக்கடி நாட்குறித்த 17 வயது பெண் இவ்விதமாகச் சொன்னாள்: “அவர்கள் என்னோடு உடலுறவுக்கொள்ள வேண்டும் என்று நான் ஏங்கும் வரையாக முத்தமிடுவது அணைத்துக்கொள்வதும் படிப்படியாக வளர்ந்துவிடுகிறது.” அசாதாரணமான ஒரு உணர்ச்சியா? நிச்யமாகவே இல்லை.
15. சரீரப்பிரகாரமான கவர்ச்சியால் கவர்ந்திழுக்கப்படும் இளைஞர்கள், நாட்குறித்தலின்போது, பொதுவாக இருப்பதுபோல, தனிமையில் இருக்கும்போது நல்லெண்ணமுள்ள வாலிபர்களிலும்கூட கடவுளுடைய கட்டளையை மீறுவதற்கு வழிநடத்தும் வரையாக பாலுறவு ஆசைகள் வளர்க்கூடும். ஐக்கிய மாகாணங்களில், 10 லட்சத்திற்கும் அதிகமான பருவவயது பெண்கள் ஒவ்வொரு வருடமும் கர்ப்பமாகிவிடுவதையும் அவர்களில் நூறாயிரக்கணக்கானோர் கருச்சிதைவை செய்துகொள்வதை அல்லது விவாக உறவுக்கு புறம்பாக பிள்ளைகள் பிறப்பிப்பதையும் பற்றி சிந்தித்துப் பாருங்கள். விசனத்துக்குரிய காரியம், சிலசமயங்களில், இந்த பருவ வயது பெண்களில் சிலரும், அவர்களோடு ஈடுபாடுகொள்ளும் பையன்களும் யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். இந்த அவல நிகழ்ச்சிகளுக்கும் ஒவ்வொரு வருடமும் புதிதாக பல லட்சக்கணக்கானோருக்கு பாலுறவுகளினால் கடத்தப்படும் நோய்கள் வருவதற்கும் நவீனநாளைய பழக்கமாகிய நாட்குறித்தல், கணிசமான அளவு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
16. பாலுறவு ஆசையானது விவாகபந்தத்துக்குள் நிறைவேற்றிக்கொள்ளப்பட வேண்டும் என்று கடவுள் நோக்கங்கொண்டிருக்கிறார். இங்குதானே அது ஆரோக்கியமான இன்பத்தையும் மனநிறைவையும் கொண்டுவர முடியும். (எபிரேயர் 13:4; நீதிமொழிகள் 5:15-19) என்றபோதிலும் கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஈவை, பாலுறவில் தவறாக பயன்படுத்துவதற்கும் வேசித்தனம் செய்வதற்கு பயன்படுத்துவதற்கும் சாத்தான் தந்திரமாக தூண்டியிருக்கிறான். பூர்வ காலங்களில், 24,000 இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு எதிராக இந்த குற்றத்தைச் செய்வதற்காகவே ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள். இன்று வேசித்தனத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவ சபையிலிருந்து சபை நீக்கம் செய்யப்படுகிறார்கள். ஆகவே ஞானமாயிருங்கள், புத்திமதிக்கும் ஆலோசனைக்கும் செவிகொடுங்கள். வஞ்சிக்கப்பட உங்களை அனுமதியாதேயுங்கள்.—எண்ணாகமம் 25:1-9,16-18; 31:16.
17. சாத்தானின் மற்ற தந்திரங்களைக் குறித்துக்கூட விழிப்புள்ளவர்களாயிருங்கள். உதாரணமாக, விளையாட்டு, இசை மற்றும் நடனம் ஆகியவை அவனுடைய உலகின் பொழுதுபோக்கில் முக்கியபங்கை வகிக்கின்றன உண்மையில், இந்த காரியங்கள், அவைகளில் தாமே கட்டாயமாகவே தவறானவையாக இல்லாமலும், இன்பந்தருவதாகவும் பிரயோஜனமாகவும்கூட இருக்கலாம். (1 தீமோத்தேயு 4:8; சகரியா 8:15; லூக்கா 15:25) என்றபோதிலும் உலகத்திலுள்ள ஆட்களோடு இவற்றில் வழக்கமாக பங்கு கொண்டாலும்கூட அவை ஆபத்தானவை இல்லை என்ற கருத்தை தந்திரமாக சாத்தான் உற்சாகப்படுத்தியிருக்கிறான். ஆனால் கடவுளுடைய வார்த்தை, “மோசம் போகாதிருங்கள்; ஆகாத கூட்டுறவுகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என்பதாக எச்சரிக்கிறது. (1 கொரிந்தியர் 15:33) இதை சிந்தித்துப்பாருங்கள். மதமும் அரசியலும் சாத்தானுடைய ஒழுங்கின் பாகமாக இருக்குமானால், உலத்தினால் உற்சாகப்படுத்தப்படும் பொழுதுபோக்கில் அதனுடைய சொந்த வாய்ப்புக்கள் திணித்து” விடாதபடிக்கு நீங்கள் எப்பொழுதும் விழிப்புள்ளவர்களாயிருப்பது அவசியமாகும்.—ரோமர் 12:12; J.B. பிலிப்ஸின் நவீன ஆங்கிலத்தில் புதிய ஏற்பாடு.
வாலிபர்களை பாதுகாப்பதற்கு ஏற்பாடுகள்
18. இளைஞர்களாகிய நீங்கள் வஞ்சிக்கப்படாதபடி உங்களை பாதுகாக்க யெகோவாதேவன் அன்பாக ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் முதலாவதாக, உங்களுக்கு கற்பித்து வழிகாட்ட பெற்றோர்களை உங்களுக்கு கொடுத்திருக்கிறார். அவர்கள் அதைச் செய்யும்போது நீங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கலாம். விவாக உறவுக்கு புறம்பாக கர்ப்பமாகிவிட்ட 18 வயது பெண், “என்னுடைய பெற்றோர்களாக அவர்கள் செய்திருக்கவேண்டிய கடமைகளைச் செய்து, எப்பொழுதும் ஒரே பையனோடு சிநேகம் வைத்திருப்பதிலுள்ள படுகுழிகளைப் பற்றி எனக்குச் சொல்லி, அவ்விதமாகச் செய்வதை தடை செய்திருந்தால்” இந்நிலை ஏற்பட்டிருக்காது என்று வருத்தமாகச் சொன்னாள். ஆகவே கடவுள் பயமுள்ள பெற்றோர் உங்களுக்கிருந்தால் நன்றியுள்ளவர்களாயிருங்கள். அவர்கள் உங்கள்மீது வைக்கும் கட்டுப்பாடுகளின் மூலமாக, உங்களை அடைத்துவைக்கவோ அல்லது உங்களுடைய வாழ்க்கையை வெறுப்பாக்கவோ அவர்கள் முயற்சிப்பதில்லை. மாறாக, அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள். உங்களை பாதுகாக்க அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களிடம் ஆலோசனைக் கேட்பதன் மூலம் அவர்களுடைய அனுபவத்தையும் ஞானத்தையும் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.
19. மேலுமாக, உங்களுக்கு உதவிசெய்ய, யெகோவா அவருடைய பூமிக்குரிய அமைப்பை ஏற்பாடு செய்திருக்கிறார். உதாரணமாக, ஒவ்வொரு விழித்தெழு பிரதியிலும், யெகோவாவின் தராதரங்களின் நியாயமானத் தன்மையைக் காண்பிக்கும் “இளைஞர் கேட்கின்றனர். . .”பகுதி இடம் பெறுகிறது. அதேவிகமாகவே, பள்ளியும் யெகோவாவின் சாட்சிகளும் என்ற புரோஷீர், பள்ளி சூழ்நிலையில் கடவுளுடைய கட்டளைகளுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிந்திருக்க உங்களுக்கு உதவி செய்யவே தயாரிக்கப்பட்டது. மேலுமான ஊக்குவிப்பும் புத்திமதியும் காவற்கோபுரம் பக்கங்களின் மூலமாகவும், சபை கூட்டங்களிலும் வட்டார அசெம்பிளிகளிலும், மாவட்ட மாநாடுகளிலும் கிடைக்கின்றன. ஆம், “வாலிபர்களே வஞ்சிக்கப்படாதிருங்கள்” என்பதே அண்மையில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் கொடுக்கப்பட்ட பேச்சாகவும், ஊழியக் கூட்டத்தில் ஒரு பேச்சின் தலைப்பாகவும் இருந்தது.
20. இந்த எல்லா கவனத்தின் மூலமாகவும்-உங்களுடைய சந்தோஷத்தைப் பறித்துவிட நாங்கள் மொத்தமாக வந்து தாக்க முயற்சிக்கிறோம் என்பதாக ஒருபோதும் நினைத்துவிடாதீர்கள். மாறாக, கடவுளுடைய அமைப்பு உங்களை பாதுகாப்பதற்காக உங்களுடைய ஜீவனை இரட்சிப்பதற்காக-நல்லெண்ணத்தோடு சொல்லப்பட்டவையாக இருக்கின்றன. இந்த ஏற்பாடுகளை போற்றுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். சங்கத்தின் பிரசுரங்களின் உதவியோடு பைபிளை படிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். பைபிள் சத்தியங்கள், போற்றுதலால் உங்களை கிளர்ச்சியடையச் செய்யட்டும். வாலிபர்களுக்கு கொடுக்கப்படும் திட்டவட்டமான புத்திமதியை சிந்தித்துப் பார்த்தபின்பு, 18 வயது பெண் கொண்டிருந்த அதே மனநிலையை நீங்கள் கொண்டிருப்பீர்களா: “இளைஞர்களாகிய நாங்கள் சத்தியத்தில் இருப்பதால் எத்தனை பாக்கியசாலிகளாக இருக்கிறோம் என்பதை இது உணரச்செய்தது! பூமி முழுவதிலுமே தன்னுடைய இளைஞர்களில் இத்தனை அக்கறைக்கொண்டு, அதை நேசிக்கும் அமைப்பு சேர்ந்து நிலைத்திருந்து நம்மை வஞ்சிப்பதற்காக பிசாசு செய்யும் முயற்சிகளை எதிர்ப்போமாக. ஏனென்றால் அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே!—W86 8/1
விமர்சனப்பெட்டி
◻ இளைஞர்கள் ஏன் சாத்தானின் விசேஷித்த குறியிலக்காக இருக்கிறார்கள்?
◻ சாத்தான் எவ்விதமாக ஏவாளை ஒரு தவறிற்குள் வழிநடத்தினான்?
◻ இன்று எவ்விதமாக சாத்தான் வாலிபர்களை தவறு செய்ய தூண்டுகிறான்?
◻ இளைஞர்களை பாதுகாப்பதற்கு என்ன ஏற்பாடுகள் இருக்கின்றன?
[கேள்விகள்]
1. (எ) என்ன விதங்களில் நம்மில் அநேகர் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம்? (பி) பொதுவாக எளிதில் வஞ்சிக்கப்படுவது யார்?
2. சில வாலிபர்கள் எவ்விதமாக வினைமையான குற்றத்துக்குள் வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள்?
3. (எ) வேசித்தனம் ஏன் அத்தனை வினைமையான குற்றமாக இருக்கிறது? (பி) பிசாசாகிய சாத்தானின் நோக்கம் என்ன?
4. வாலிபர்கள் சாத்தானின் விசேஷித்த குறியிலக்காக இருக்கிறார்கள் என்று ஏன் சொல்லப்படலாம்?
5. (எ) நாம் எவ்விதமாக ஒருபோதும் நினைத்துக்கொண்டிருக்கக்கூடாது? (பி) அப்போஸ்தலனாகிய பவுலின் கவலை என்னவாக இருந்தது? அது ஏன் பொருத்தமாக இருந்தது?
6. கெடுக்கப்படுவது என்பதன் பொருள் என்ன?
7, 8. (எ) ஏவாளிடம் சாத்தான் கேட்ட கேள்விகள் நோக்கம் என்னவாக இருந்தது? (பி) விருட்சத்திலிருந்து புசிப்பதை சாத்தான் எவ்விதமாக அவ்வளவு கவர்ச்சிகரமானதாகச் செய்தான்?
9. யாக்கோபு 1:14, 15-ல் காண்பிக்கப்பட்டுள்ளபடி, தொடர்ச்சியாக என்ன சம்பவங்கள், ஏவாள் பாவம் செய்வதற்கும் கடைசியாக மரிப்பதற்கும் வழிநடத்தின?
10. நாம் ஏன் சாத்தானின் தந்திரங்களை அறியாதிருக்க வேண்டிய அவசியமில்லை? என்ன அறிவுரைகளை நாம் பின்பற்றுவது ஞானமாக இருக்கும்?
11. சாத்தான் அநேகமாக இளைஞர்களை எவ்விதமாக கெடுக்கிறான் அல்லது ஒரு குற்றத்தைச் செய்யும்படியாக ஏமாற்றுகிறாள்?
12. (எ) சாத்தானைப்பற்றிய என்ன உண்மையை நாம் அனைவரும் உண்மையாக ஏற்றுக்கொள்ளவேண்டும்? (பி) 1 யோவான் 2:15 மற்றும் யாக்கோபு 4:4-ல் சொல்லப்பட்டிருப்பவற்றை நீங்கள் எவ்விதமாக கருதுகிறீர்கள்? (பி) எதை நம்பும்படியாக சாத்தான் உங்களை வஞ்சிக்கமுயற்சிப்பான்?
13. என்ன பழக்கமான அநேக இடங்களில் பிரபலமாகியிருக்கிறது? அதைக் குறித்து நாம் என்ன நம்பவேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான்?
14. (எ) நாட்குறிக்கும் பழக்கத்தை எவ்விதமாக மதிப்பிடமுடியும்? (பி) நாட்குறிக்கும் நிலையில் என்ன உணர்ச்சிகள் வளரக்கூடும்?
15. என்ன அவல நிகழ்ச்சிகளுக்கு, நாட்குறித்தல் கணிசமான அளவு பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்?
16. (எ) பாலுறவு ஆசைகள் எங்கே மட்டும் சரியாக நிறைவேற்றிக் கொள்ளப்படுகிறது? (பி) கடவுளுடைய ஜனங்களில் அநேகருக்கு என்ன சம்பவிக்கிறது?
17. விளையாட்டு, இசை நடனம் போன்ற காரியங்களின் சம்பந்தமாக, என்ன தந்திரமான கருத்தை சாத்தான் உற்சாகப்படுத்தியிருக்கிறான்?
18. உங்களுக்கு கற்பித்து வழிகாட்டும் பெற்றோர்களை நீங்கள் ஏன் போற்ற வேண்டும்?
19. வாலிபர்களை பாதுகாக்க என்ன கூடுதலான உதவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
20. (எ) இளைஞர்களுக்கு ஏன் இவ்வளவு உதவி கொடுக்கிறது? (பி) உங்களை வஞ்சிப்பதற்கு சாத்தான் எடுக்கும் முயற்சிகளை எதிர்ப்பதற்கு என்ன மனநிலை உங்களுக்கு உதவி செய்யும்?
“என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்ள. அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம், எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.”—நீதிமொழிகள் 4:20-23.
[பக்கம் 18-ன் படம்]
ஆதாமைவிட அனுபவத்தில் குறைந்தவளாயிருந்த ஏவாளை சாத்தான் மோசம் போக்கினது போல வாலிபர்களும் சாத்தானின் விசேஷ குறியிலக்காக இருக்கிறார்கள்.
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
இளைஞர்கள் மற்றவர்களிடமிருந்து தங்களை பிரித்துக்கொண்டு தனிமையில் இருக்கையில், பாலுறவு ஆசைகள் படிப்படியாக வளர்ந்து, கடவுளுடைய கட்டளையை மீறுவதற்கு வழிநடத்தக்கூடும்.